Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!
#2
அத்தோடு இதையும் கொஞ்சம் படியுங்கள்....

இன்றைய இளம் சமுதாயம் எங்கே போகிறது? என்ன நடக்கிறது? எங்கோ தவறு நடக்கிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரியதாக இருக்கப் போகிறது. இதனை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு, விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற அன்டன் பாலசிங்கம் எழுதிய விடுதலை நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

புதுவை இரத்தினதுரை உரையாற்றும்போது, இன்றைய இளைய சமுதாயத்தினர் சுகமாக வாழலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எமக்கு என்ன பிரச்சனை தாம் உண்டு தமது வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். எமது சமுதாயத்தை கெடுப்பதில் தொலைக்காட்சி தொடர்களும், சினிமாக்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக எமது பாரம்பரியம் - கலை - கலாசாரம் சீரழிந்துகொண்டு போகிறது.

கணணிக்கு முன்னால் இருந்து பிள்ளை படிக்கிறது என்று பெற்றோர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் கணணிக்கு முன்னால் இருந்து படிக்கிறார்களா அல்லது பாழாகிப் போகிறார்களா என்று பார்ப்பது இல்லை. பாலியல் சம்பந்தமான இணையத்தளங்கள் இன்று உலகில் 36 இலட்சம் இருக்கின்றன. இவைகளைத்தான் பிள்ளைகள் பார்க்கின்றனர். இதனை பெற்றோர் கவனிப்பதாக இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.............. :!: :twisted:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் விநோகராதலிங்கம் முதற்பிரதியை வழங்க, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.

இந்நூலின் சிறப்புப் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் வெளியிட்டு வைக்க, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைவர் செந்தில்நாதனும், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பீடாதிபதி நந்தகோபாலும், வவுனியா வடக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆலோசகர் ஜெயச்சந்திரனும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, புத்தகத்தின் மதிப்பீட்டு உரையினை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பீடாதிபதி நந்தகோபால் மற்றும் வவுனியா வடக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆலோசகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள். நன்றி உரையினை எஸ்.என்.ஜீ நாதனும் வழங்கினார்.

வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானவேலு உரையாற்றும்போது வவுனியா மாவட்டத்தில் இளம் சமுதாயத்தின் நிலை படு மோசமாக இருக்கின்றது. அவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்று இங்கு உள்ள பிரதான பிரச்சனை குடும்பப் பிரச்சனை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை. கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு மனைவி வேறு ஆணோடு தொடர்பு இது தான் எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளாக இருக்கின்றது.

இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எமது சமுதாயம் அதள - பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. எமது சமுதாயத்திற்கு என்று ஒரு விழுமியம் பாரம்பரியம் உண்டு. இதனை இன்றைய இளம் சமுதாயம் மறந்து மிகவும் கேவலமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவு எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியாமல் உள்ளது. இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையெனில் இதன் விளைவுகள் பாரதூரகமாக இருக்கும் என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-13-2004, 07:33 PM
[No subject] - by Mathivathanan - 06-13-2004, 07:48 PM
[No subject] - by kavithan - 06-14-2004, 03:13 AM
கஸ்டம்,கடன் - by kavithan - 06-14-2004, 03:32 AM
[No subject] - by Eelavan - 06-14-2004, 08:18 AM
[No subject] - by kuruvikal - 06-14-2004, 03:33 PM
[No subject] - by tamilini - 06-14-2004, 10:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:06 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:19 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:28 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:42 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:51 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:32 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:37 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:50 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:57 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 09:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 09:48 PM
[No subject] - by vallai - 06-16-2004, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 06-16-2004, 07:36 PM
[No subject] - by tamilini - 06-16-2004, 10:09 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 12:44 AM
[No subject] - by vallai - 06-17-2004, 12:41 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:03 PM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 02:11 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:29 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:45 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 03:57 PM
[No subject] - by tamilini - 06-17-2004, 09:37 PM
[No subject] - by kavithan - 06-17-2004, 10:36 PM
[No subject] - by vallai - 06-18-2004, 06:16 AM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:47 AM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:16 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:19 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:26 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:33 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 07:56 PM

Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)