Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!
#8
இது எமது கருத்தல்ல..... ஆதங்கம்....உண்மையில் லண்டனை எடுத்துப் பார்ப்பீர்கள் என்றால் எத்தனை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகப் பிரச்சனை பற்றிய தெளிவு... அதன் தற்போதைய நிலை....அதன் இன்றைய, நாளைய சமூகத்தாக்கங்கள் என்று சிந்திப்பவர்களாக இருக்கின்றனர்.....மிகச் சிலரே என்பது தான் கசப்பான உண்மை.......அதுதான் நிதர்சனமும் கூட.......!

மற்றவர்கள் எல்லோரும் தாம் ஒன்று தம்பிழைப்பென்றும் தங்கள் குடும்பம் குட்டி என்றும்....சுகமும் சுகபோகமும் என்று வாழ்வதையே காண்கிறோம்....இதே நிலைதான் பெரும்பாலான புலம்பெயர்ந்த நாடுகளிலும் ...அப்பப்ப தாம் வெறுமையானவர்கள் என்று உணரும் போது மட்டுமே...தாயகம் தொடர்பான நிகழ்வுகளில் கவனம் செலுத்துகின்றனர்....தாயகம் தொடர்பான நினைவு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்...அதிலும் இளையவர்களை காண்பதென்பது அரிது...அப்படி வந்தாலும் ஏதோ வேடிக்கைக்காகத்தான் வருகின்றனர்....அண்மையில் ஒரு நெருங்கிய நண்பர் ஒருவருடன் புகைவண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது எதேட்சையாக அவரின் தாயக உறவுகள் மற்றும் நெருக்கடிகள் பற்றி கேட்ட போது அவை பற்றி கதையாதேங்கோ...அதைக் கதைச்சு ஆகிறது என்ன...எங்களுக்கு அதனால் என்ன கிடைக்கப் போகிறது என்று தாம் ஏதோ உறவுகள் அறுத்துவிட்டு புதிய உலகில் வாழ்பவர் போல் பதில் சொன்னார்....நாமும் அதோடு நிறுத்தி மேற்குலக டாம்பீகம் பற்றிக் கதைக்க மனிதர் விளாசித்தள்ளினார்....அதில் இருந்து அவருடைய தற்போதைய மனநிலையை நன்கறிய முடிந்தது...இதே நிலையை நாம் பலரிலும் அவதானித்தோம்...!!!!!

உதாரணத்துக்கு இன்னொன்று....இன்னொருவர் சொன்னார் எங்கட குடும்பத்தை எடுக்க வேணும் சகோதரிகளுக்கு இங்க பி.ஆர் மாப்பிள்ளை பாக்கிறன் அவையை எடுக்கிறதில பிரச்சனையில்ல.... தம்பிமார் இரண்டு பேரையும் இப்ப எடுக்கிறதுதான் கஸ்டமாக்கிடக்கு....உங்க அசைலமும் அடிக்கேலாது...பாப்பம் கனடா பக்கம் தான் எடுக்க வேணும் சிலபேரோட கதைச்சுக் கொண்டிருக்கிறன் எண்டு சொன்னார்....இத்தனைக்கும் அந்தக் குடும்பம் 90இல் இருந்து கொழும்பில் நல்ல வசதி வாய்ப்போடதான் இருக்கிறது....!!!! இப்படிப் பலதும் இருக்கிறது தொடர்கதையாய்.....

எமது கேள்வி இதுதான்.... எத்தனை தமிழர்கள் இதய சுத்தியுடன் தெளிவான பார்வையுடன் தாயகப்பிரச்சனையை தங்களின் சொந்தப் பிரச்சனை போல் அணுகுகின்றனர்....அப்படி அணுகுபவர்களை கைவிரல் விட்டு எண்ணலாம் மற்றவர்கள் எல்லோரும் சந்தர்ப்பத்தையும் பிரச்சனையையும் பாவித்து பயன்பெற்று நழுவ நினைக்கும் மனிதர்கள் என்பதே உண்மை......! உண்மையில் தாயகப் பிரச்சனை தொடர்பாக மேற்கில் செங்கொடி பிடிப்பவர்களில் பலரும் அதே நிலையில் தான் இருந்தாலும் ஏதோ கொடியாவது பிடிக்கிறார்களே என்று திருப்திப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது தோன்றவில்லை.....!!!!

இப்படியாக யதார்த்தச் சூழலை உணர்ந்து கொள்ளாது தாம் ஒன்று தம்பாடு ஒன்று என்று சமூகம் அறுத்து வாழ விளைவது தான் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி சமூக அக்கறையற்ற சமூகக் குற்றவாளிகள் பெருக இடமளிக்கின்றது......!

எனவே இவற்றிற்கான தீர்வு என்ன...அதை எப்படி மாயையில் கட்டுண்டு உளலும் தமிழர்களுக்கு மத்தியில் உணர்த்துவது.....?????! Idea

இதை எந்த வழியைக் கையாண்டும் செய்யத் தவறின் வெறும் குற்றம் சுமத்தல்களோடு குற்றவாளிகள் கண்முன் பெருக பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் மிஞ்சும்...அது தமிழர்கள் போன்ற சிறிய சமூகம் ஒன்றில் பாரிய பாதிப்பை உண்டு பண்ணும் என்பது மட்டும் நிச்சயம்....!

:twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 06-13-2004, 07:33 PM
[No subject] - by Mathivathanan - 06-13-2004, 07:48 PM
[No subject] - by kavithan - 06-14-2004, 03:13 AM
கஸ்டம்,கடன் - by kavithan - 06-14-2004, 03:32 AM
[No subject] - by Eelavan - 06-14-2004, 08:18 AM
[No subject] - by kuruvikal - 06-14-2004, 03:33 PM
[No subject] - by tamilini - 06-14-2004, 10:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:06 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:19 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:28 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:42 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:51 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:32 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:37 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:50 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:57 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 09:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 09:48 PM
[No subject] - by vallai - 06-16-2004, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 06-16-2004, 07:36 PM
[No subject] - by tamilini - 06-16-2004, 10:09 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 12:44 AM
[No subject] - by vallai - 06-17-2004, 12:41 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:03 PM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 02:11 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:29 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:45 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 03:57 PM
[No subject] - by tamilini - 06-17-2004, 09:37 PM
[No subject] - by kavithan - 06-17-2004, 10:36 PM
[No subject] - by vallai - 06-18-2004, 06:16 AM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:47 AM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:16 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:19 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:26 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:33 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 07:56 PM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)