Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்
#7
ரத்திவாத்தியாரின் பிரம்படி
எழுதவாராத எழுத்தும் உறுப்பாகி
எத்தனை எழுத்துத்திறன் போட்டிகள்
எத்தனை பரிசில்கள்.....? இப்பவும் நினைவாய்....!

கணணியைக் கண்ட பின்னால்
கையாலெழுதிக் கனகாலம்
பரிசுபெற்ற உறுப்பெழுத்து
பார்க்கவே சகிக்கவில்லை.

ஊர்போன போது நண்பரொருவர்
உருக்கமாகவும் , உரிமையுடனும்
உரைத்த வரிகளிவை....

'உன்ர கையெழுத்திலை வாற கடிதமே
எங்களை உன் கல்லு}ரி நாளை நினைக்க வைக்கிறது
உந்தக் கணணியிலை பதிஞ்சனுப்பிற எழுத்து
கடவுளாணைச் சகிக்;கேல்ல"

கனடாவிலையிருக்கிற எங்கடை ரத்திவாத்தியார்
இதைக் கேள்விப்பட்டா கடவுளாணாச் சொல்றன்
கத்தியோடைதான் வருவார்.
ஏனெண்டா உறுப்பெழுத்துக்கு உதாரணம் காட்டின
என்ர கையெழுத்துக் ணணியுக்கை புதைஞ்சு போச்சு.

கவிப்பரணி ! நான் மட்டும்தானெண்டு நாவடக்கியிருந்தன். ஓ...அலை....பரணி....இன்னும் எத்தனைபேரோ.....கடதாசியிலை எழுதுறதெண்டா கனநேரம் செல்லுது. என்ரை கடைக்குட்டி கூடச் சிரிக்குது. அம்மாக்கு எழுதத்தெரியாதாம். இதைக்கெதியாய் மாத்தவேணும். ஏனெண்டா என்ரை எழுத்து எனக்கும் சகிக்குதில்லை.
Reply


Messages In This Thread
அனுபவம் - by Paranee - 07-24-2003, 09:51 AM
[No subject] - by Alai - 07-24-2003, 11:43 AM
[No subject] - by Guest - 07-24-2003, 12:03 PM
[No subject] - by Alai - 07-24-2003, 12:52 PM
[No subject] - by Paranee - 07-24-2003, 03:41 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 04:25 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 12:35 PM
[No subject] - by Manithaasan - 07-25-2003, 04:39 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:39 PM
[No subject] - by Paranee - 07-26-2003, 06:23 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 03:00 PM
[No subject] - by sethu - 07-27-2003, 08:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)