Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்திலே தமிழ் பிள்ளைகள்
#2
இந்த விடயம் முன்னரும் களத்தில் ஆராயப்பட்டிருந்தாலும் உங்கள் ஆர்வத்தை மதிக்கும் முகமாக எங்கள் பதில்...

வன்ம வழியைத் தேடாமல் அன்பு வழியில் சென்றால் அனைத்தும் சுபம்...!

பெரியவர்களை விடக் குழந்தைகளை அன்பால் கட்டுப்படுத்துவது மிக இலகு.....! பெரியவர்கள் அன்பின் மீதே சந்தேகம் வைப்பர் அது போலியா உண்மையா என்று...ஆனால் குழந்தைகள் அப்படியல்ல அன்புக்காய் ஏங்கும் உள்ளங்கள்...அவர்கள் அன்பையும் அரவணைப்பையும் தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.. ஆனால் பெற்றோரோ அவற்றை தேவைக்கு ஏற்ப வழங்கத் தவறுகின்றனர்...! அப்படி அன்பு செலுத்தும் பெற்றோர் கூட அளவுக்கு அதிகமாக கொடுக்க... அது செல்லமாக பிள்ளை அதையே எங்கும் எதிர்பார்க்க... பிரச்சனைகள் புதிய வடிவம் எடுக்கும்...!

எனவே கண்டிப்போடு (அடித்து உதைப்பதல்ல... உதாரணமாக குழந்தைகள் விரும்புவதை தரமாட்டேன் தொடக்கூடாது என்று கூறுவதன் மூலம் அப்பாவோ அம்மாவோ இப்படிச் செய்தா இதைச் செய்ய விடமாட்டார்கள்...அது அவர்களுக்குப் பிடிக்காதது என்பதை குழந்தைகள் இயல்பாகப் புரிந்து கொள்வர்... அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் அது மனதில் இருக்கும்.... எங்கள் பெற்றோர் செய்தவை இன்றும் எம்மோடு இருக்கிறது...எம்மை வழிநடத்துகிறது போல...) அன்பையும் அரவணைப்பையும் தேவைக்கு ஏற்ப வழங்கி குழந்தைகள் தாங்களாக சிந்தித்து தீர்மானம் எடுக்கும் வரை அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பதுதான் சிறந்தது...!
அதேபோல் குழந்தைகள் வளர வளர பெற்றோர் சரியான பாதையில் தாமும் நடந்து பிள்ளைகளுக்கும் சரியான வழி காட்ட வேண்டும்...இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு....!

பலர் சொல்கிறார்கள் தங்களுக்கு குழந்தைகளோட செலவு செய்ய நேரம் இல்லை என்று அது வெறும் சாட்டு...! உண்மையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு இரண்டு மணித்தியாலத்தைக் கழித்தாலும் இயல்பாக நீங்கள் அன்புள்ளவராக இருந்தால் அந்த இரண்டு மணி நேரம் போதும் உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கு உங்கள் அன்பின் பரிமானத்தைக் காட்ட....நீங்கள் புலத்தில் தான் இந்தப் பிரச்சனை என்று பார்க்கிறீர்கள்... தாயகத்தில் கூட தென்னிலங்கைக்கோ இல்ல தூர இடங்களுக்கோ சென்று தனிமைப்பட்ட சூழலில் வேலை பார்க்க வேண்டி வரும் சந்தர்ப்பத்தில் கூட இதே நிலையை பல பெற்றோர் அனுபவித்துள்ளனர்...! Idea

குழந்தைகளுக்காக விவாகரத்தென்பது விளக்கம் இல்லாத் தன்மை...அப்படியானவர்கள் ஏன் தான் குழந்தைகளை உருவாக்கின்றனரோ...!!! Idea :roll:

அன்பும் பாசமும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் எங்கும் எதையும் சாதிக்க உதவும்...! இவற்றை சரியாக பயன்படுத்தத் தவறுவோரே மனிதனில் சமூகவாழ்வில் தோல்வியடைகின்றனர்....! Idea

கணவன் மனைவிக்காவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக் கொடுப்பத்தில் என்ன குறையோ தெரியாது... ஆனால் அநேகர் அதைச் செய்ய விளைவதில்லை...! ஏனோ... யாம் அறியோம்....! இதற்கு ஈகோ (Eco) தான் முக்கிய காரணம் என்றால்...ஏன் அதைக் கைவிடத் தவறுகின்றனர்... ஈகோ அது குடும்பத்துக்கோ சமூகத்துக்கோ நல்லதல்ல என்பது தெளிவு...! குடுமபஸ்தர்கள் தான் மிச்சம் மீதி விளக்க வேண்டும்... வாழ்கைப் படிப்பினைகளை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-23-2004, 04:52 PM
[No subject] - by tamilini - 11-23-2004, 06:03 PM
[No subject] - by kuruvikal - 11-23-2004, 06:27 PM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:45 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 01:49 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:57 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:08 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:17 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:22 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 03:58 AM
[No subject] - by MEERA - 11-25-2004, 02:43 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:33 AM
[No subject] - by sinnappu - 11-28-2004, 12:30 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)