Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்திலே தமிழ் பிள்ளைகள்
#5
நிதர்சன் உங்கள் பார்வை வோறொரு கோணத்தில் இக்கருத்தை அணுகி இருக்கிறது... நல்ல பல கருத்துக்களை வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்....

உங்கள் பார்வையோடு எமது சில கருத்துக்கள்...

நீங்கள் குறிப்பிட்டது போல இளைஞர்கள் தானே நாளை குடும்பத்தை அமைக்கப் போகிறார்கள்... இவர்கள் எந்த அளவுக்கு குடும்பத்தின் மீது அதன் சமூகத்தாக்கத்தின் மீது தெளிவு கொண்டவர்களாக இருப்பர்...!

முதலில் இப்படியான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்... திருமண வாழ்வென்பது ஏதோ பெட்டை/பொடி தேடிவதும் கையெழுத்துப் போடுவதும் பிள்ளை குட்டி பெறுவதென்பதும் அல்ல....! குடும்பம் ஒரு சமூக நிறுவனம் போன்றது அதை கொண்டு நடாத்துவதற்கும் உயர்ந்த பலனை எட்டுவதற்கும் ஒரு வழிமுறை நெறிமுறை இருக்கு அவை பல இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தெரியாது...! மேற்கில் இவைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.... தனிப்பட்ட குடும்ப நல ஆலோசனைகள் மூலம் அறிவுறுத்துகின்றனர்...ஆனால் எங்கள் இளைஞர்களுக்கு அதில் எல்லாம் அக்கறை கிடையாது.... இவர்கள் பாடம் படிப்பது அடுத்த குடும்பங்களைப் பார்த்து.... இவைதான் ஒருவர் செய்யும் பிழையை (உணர்ச்சி வசப்பட்ட விவாவகரத்துக்கள் ) மற்றவரும் செய்ய...செய்யும் பிழைகளை நாகரிகமாக காட்டவும் காரணமாகிறது...!

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் குடும்பங்களை அமைக்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ( அவர்கள் படித்துப் பட்டம் கூடப் பெற்றிருக்கலாம்....) குடும்பம் என்பதன் அடிப்படை சித்தாத்தம் தெரியாமையே....! குடும்பம் அதை எப்படி அமைப்பது நிர்வகிப்பத்து என்ற திட்டமிடல் இன்மை...இன்று ஒரு நிறுவனத்துக்குச் சமனான திட்டமிடல் இன்றி குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலை...காரணம்... சமூகத்தில் உயர் வாழ்வுத் தகமை தேடும் வெறி... பெரியோரின் ஆதரவும் வழிகாட்டலும் இல்லாத நிலை... பொருளாதாரக் காரணிகள் என்று பல....ஆனால் இன்று புலத்து இளைஞர்களிடமும் யுவதிகளிடமும் உள்ள பலவீனம் என்பது திட்டமிடல் இன்மை....!

அன்று புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் பொறுப்புணர்வோடு தாயகத்தில் இருந்த தங்கள் குடும்பங்களை கவனித்தது போல் அவர்களின் பிந்தைய சகோதரங்களோ...இல்ல அவர்களின் வாரிசுகளோ இல்லை....ஏன்...????! இதற்கு விடை கண்டால் இவர்களின் பலவீனம் புரியும்...அதுதான் குடும்பங்கள்.... குழந்தைகள் சீரழிய முக்கிய காரணம்....! Idea

இக்கருத்துக்கள் குடும்பஸ்தர்களைவிட இன்றைய இளைஞர்களுக்கு யுவதிகளுக்கும் தான் முக்கிய தேவையாகும்.... அவர்கள் தான் நாளைய குடும்பங்களின்... சமுதாயத்தின் தோற்றுவாய்கள்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-23-2004, 04:52 PM
[No subject] - by tamilini - 11-23-2004, 06:03 PM
[No subject] - by kuruvikal - 11-23-2004, 06:27 PM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:45 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 01:49 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 01:57 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:08 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:17 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:22 AM
[No subject] - by kuruvikal - 11-24-2004, 03:58 AM
[No subject] - by MEERA - 11-25-2004, 02:43 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:33 AM
[No subject] - by sinnappu - 11-28-2004, 12:30 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 02:57 PM
[No subject] - by வெண்ணிலா - 11-28-2004, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)