Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சிந்து மரணம்
#1
ஜனவரி 07, 2005

சுனாமிக்காக நிதி திரட்டிய நடிகை சிந்து மரணம்

சென்னை:

இணைந்த கைகள் உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள நடிகை சிந்து மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார்.

இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி மகளாவார். இணைந்த கைகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகுலம் வீடு, எங்க குடும்பம்,தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார்.

இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார். நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

சிந்துவுக்கு வயது 33. கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சிந்து அவரை பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர் மூலம் சிந்துவுக்கு 9 வயதில் மகள் உள்ளார்.

இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் டிவி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

மறைந்த சிந்துவுக்கு ஏராளமான தொøக்காட்சி நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் அவரது உடலை மஞ்சுளாவின் கணவரான நடிகர் விஜய்குமார் குடும்பத்தினர் வந்திருந்தார்.

<b>பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ். கருப்பையா மரணம்:</b>
பழம் பெரும் நடிகரான டி.கே.எஸ். கருப்பையா மரணடைந்தார்.

எம்ஜிஆரின் பல படங்களில் நடித்த கருப்பையா சமீபத்திய எஜமான், முதல்வன் உள்பட 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கலைமாமணி பட்டம் பெற்ற அவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Reply


Messages In This Thread
நடிகை சிந்து மரணம் - by Vaanampaadi - 01-07-2005, 09:01 AM
[No subject] - by kuruvikal - 01-07-2005, 12:57 PM
[No subject] - by AJeevan - 01-07-2005, 02:18 PM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:36 PM
[No subject] - by thamizh.nila - 01-07-2005, 03:26 PM
[No subject] - by வெண்ணிலா - 01-07-2005, 03:35 PM
[No subject] - by KULAKADDAN - 01-07-2005, 03:36 PM
[No subject] - by shanmuhi - 01-07-2005, 06:10 PM
[No subject] - by ஊமை - 01-07-2005, 06:36 PM
[No subject] - by ஊமை - 01-07-2005, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)