Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு பொய்
#1
<img src='http://img123.exs.cx/img123/1167/ni6kl.jpg' border='0' alt='user posted image'>

http://img123.exs.cx/img123/9118/nitharsanam7oq.jpg

இந்தச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை.

ஜேர்மனியில் நீல கடவுச்சீடுக்களை வைத்திருப்புபவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களமே நாடு கடத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரசபையினர் அல்ல. இப்பொழுது.......... அகதிகளாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டோர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு நீங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியுமா? என வினாவப்படுகிறது. அவ்வாறு முடியாவிட்டால் அதற்கான நாம் தெரிவிக்கும் காரணங்களை அவர்கள் ஆராய்ந்து அது உறுதிப்படுத்தப்படும் கட்டத்தில் அவர்கள் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு விதிவிலக்கு:

குடும்பப் பின்னணி உ+ம் மனைவிக்கு இலங்கை கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதி இருப்பின் ( எல்லைப்படுத்தப்பட்ட / எல்லையற்ற )

பிள்ளைகளுக்கு ஜேர்மானிய குடியுரிமை இருந்து அவர்கள் 18 வயதுக்கு உட்பட்டிருந்தால்

நீல கடவுச்சீட்டைவைத்திருப்போர் இங்கு வேறு ஒருசட்டத்தின் கீழ் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு நீல கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு சில ஜேர்மானிய நகரங்கள் சில சலுகைகளை வழங்கிவருகின்றன.

Oberhausen:

இந்த நகரம் அங்குள்ள சில குடும்பங்களுக்கு அதாவது சமூக உதவிகளை பெறாமல் தங்கள் சொந்தப்பணத்தில் வாழ்பவர்களுக்கு உ+ம் மருத்துவகாப்புறுதி, ஓய்வூதியக்காப்புறுதி, சமூகக்காப்புறுதி, வீட்டுவாடை என்பவறை தாமே சுயமாக செலுத்துபவர்களுக்கு ஓர் சலுகையை முன்வைத்துள்ளது. அதாவது அவர்கள் தமது அடைக்கல விண்ணப்பத்தை மீளப்பெற்று சொந்தநாட்டு கடவுச்சீட்டை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அந்தக் கடவுச்சீட்டில் ஜேர்மானிய வதிவிட அனுமதியோ அல்லது வதிவிட அங்கீகாரமோ வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

இதுபோன்றே

Muelheim/Ruhr:

இந்த நகரசபையினர் Muelheim/Ruhr வாழ் தமிழ் மக்களுக்கு அங்குள்ள முருகன் கோவிலில் ஓர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து Oberhausen இல் செய்யப்படுவது போன்று இங்கும் செய்யப்படும் என அறிவித்தனர்.
அத்தோடு முன்னர் எல்லையற்ற வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டவர்களை 31.12.2004 ற்கு முன்னர் கூப்பிட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியை தாமாகவே வழங்கினார்கள். ஏனெனில் 01.01.2005 இல் இருந்து இங்கு குடிவரவுச் சட்டம் மிகுந்த கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆனால் நிதர்சனம் கூறும் போல் இங்கு எதுவுமே நடைபெறவில்லை.

<b>நான் நிதர்சனம் இணையத்திடம் ஒர் வினாவை முன்வைக்க விரும்புகிறேன்</b>.

அதாவது ஜேர்மனியில் அரசியல்த்தஞ்ச நீல கடவுச்சீட்டை மீளப்பெற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களை ஆதாரபூர்வமாக காட்டமுடியுமா ?

இங்கு Abschiebung என நாடுகடத்தும் முடிவு அறியிக்கப்பட்டு அதற்குரிய பூர்வாங்க வேலைகளை செய்யும் வரை வழங்கப்படும் Duldung எனும் வதிவிட அனுமதி பெற்றவர்களே இதுவரை இங்கு அவர்களின் சுயவிருப்பிலோ அல்லது வலுக்கட்டாயமாக போலீசாரால் கைதுசெய்தோ நாடு கடத்தப்பட்டனர்.
Reply


Messages In This Thread
மீண்டும் ஒரு பொய் - by ஊமை - 01-10-2005, 07:03 PM
[No subject] - by Danklas - 01-10-2005, 07:07 PM
[No subject] - by Thevajani - 01-11-2005, 11:41 PM
[No subject] - by Thevajani - 01-11-2005, 11:42 PM
[No subject] - by Nanthaa - 01-11-2005, 11:54 PM
[No subject] - by sOliyAn - 01-13-2005, 05:21 AM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:40 PM
[No subject] - by Bond007 - 01-13-2005, 01:49 PM
[No subject] - by Bond007 - 01-13-2005, 01:49 PM
[No subject] - by ஊமை - 01-14-2005, 07:48 PM
[No subject] - by sinnappu - 01-20-2005, 12:00 PM
[No subject] - by Kishaan - 01-20-2005, 12:40 PM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 06:00 AM
[No subject] - by Thaya Jibbrahn - 01-29-2005, 06:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)