01-20-2005, 12:38 PM
kavithan Wrote:மூன்று மாதத்தின் பின் இம்மடல்
உனக்கு முகவரி இன்றி வருகிறது.
மூன்றுவயது சின்ன மருமகள் கேட்டாள்
மாமா[மாமி] மாமியின்[மாமாவின்] நலம் எப்படி என.!
எதுவும் சொல்ல முடியவில்லை
சென்ற முறை காத்திரு
மடல் கைசேரும் என வாழ்த்திய அக்காவுக்கு
பதில் சொல்லி கட்டுது இல்லை.
வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.
உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?
இப்படி ஆளுக்கு ஆள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
ஆனால் உன் பதில் மட்டும்
இன்னும் என் கை சேரவில்லை.
இத்தோடு முடிக்கிறேன் இம் மடலை.
உன் மடலை எதிர்பார்த்து
தினம் தினம் துடிக்கும்
தூய்மையான உள்ளம்
துக்கத்துடன்
மாமா கவிதைக்கு வாழ்த்துக்கள்.
இவங்களெல்லாம் யாருங்க?
----------

