Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிற மொழிச் சொற்கள்
#2
Eswar Wrote:பிற மொழிச் சொற்கள்
பண்டைக் காலத்திலிருந்து இன்றைக் காலம் வரை எமது மொழி பிற மொழிகளிலிருந்து பல சொற்களை இரவல் வாங்கிப் பாவித்து வந்துள்ளது நாம் அறிந்ததே. எம்மிடம் அவற்றுக்கு இணையான சொற்கள் இல்லையென்று பொருளல்ல. ஏதோ காரணங்களால் எம் முன்னோர்கள் காலம்காலமாக அத்தவற்றைச் செய்து வந்துள்ளார்கள்.
அது அவர்கள் செய்த தவறல்ல. உலகின் வாழும் மொழிகள் அனைத்தும் மற்ற மொழிகளில் இருந்து சொற்களை பெற்று தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன. அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகள் அதிக சொற்களை பெற்று வளர்ச்சியடைந்து வறந்திருக்கின்றன. தமிழ் முதலில் கோலெழுத்து வட்டெழுத்து என இரு வகையாக சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் பயன்பட்டு வந்தது. பின்னர் தான் இரண்டும் இணைந்து தமிழ் எல்லோரும் படிக்கத்தக்கதாக மாற்றப்பட்டது. அந்த தமிழிலும் நாம் இன்று மெய்யெழுத்துக்களில் பயன் படுத்தும் குற்றுக்களும் கமா முழுத்தரிப்பு போன்றவையும் இருக்கவில்லை. மதம் பரப்ப வந்த இத்தாலிய பாதிரி பெஸ்கி தான் வீரமாமுனிவர் என்ற பெயருடன் இவற்றை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

தமிழ் வாழும் வளரும் மொழி. வேற்று மொழி பேசுபவர்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியல் வாழ வருவதும் தமிழும் தமிழரும் கலப்பதற்கு காரணம். ஆனால் வாழும் வளரும் சமுதாயத்தில் மற்றவர்கள் வந்து இணைவதும் அனைவரும் சேர்ந்து மாற்றம் அடைவதும் தவிர்க்க முடியாதது. இது இயற்கை.
Reply


Messages In This Thread
Re: பிற மொழிச் சொற்கள் - by Jude - 02-02-2005, 04:38 AM
[No subject] - by Vasampu - 02-02-2005, 05:10 PM
[No subject] - by muzhakkam thiru - 02-02-2005, 11:06 PM
[No subject] - by Eswar - 02-03-2005, 12:30 AM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:49 AM
[No subject] - by Eswar - 02-03-2005, 12:45 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:58 PM
[No subject] - by Eswar - 02-03-2005, 01:27 PM
[No subject] - by Jude - 02-05-2005, 10:08 AM
[No subject] - by Mathan - 02-05-2005, 03:11 PM
[No subject] - by Eswar - 02-05-2005, 05:48 PM
[No subject] - by Jude - 02-06-2005, 10:34 AM
[No subject] - by Mathuran - 02-06-2005, 11:20 AM
[No subject] - by Eswar - 02-06-2005, 02:57 PM
[No subject] - by Jude - 02-07-2005, 01:21 AM
[No subject] - by tamilini - 08-12-2005, 03:10 PM
[No subject] - by Mathuran - 08-17-2005, 11:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)