Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிற மொழிச் சொற்கள்
#4
தமிழன் நாடு தமிழனின் முழுமையான ஆட்சிக்கு கீழ் இருந்த நாள் வரையில் தமிழ் எந்த மொழியிடமும் இருந்து சொற்களை இரவல் வாங்கியதாக வரலாற்றில் எங்கேணும் காணோம் என்கிறார் பாவாணர்.
ஆரியப்படையெடுப்பு மற்றும் ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பை அடுத்து பல அரிய செல்வங்களை தமிழ் ஆரியரிடம் கொள்ளை கொடுத்தது உண்மை. அதேநேரத்தில் ஆரியரின் சூழ்சியால் அறிமுகமான மணிப்பிரவாள நடை( சமசுக்கிருதம்ää தமிழ்) அறிமுகத்திற்கு வந்தபோது போச்சு வழக்கில்ää எழுத்து வழக்கில் வடமொழி (சமசுகிருதம்) கலந்து விட்டது. விலங்கொடிக்க போராடும் இவ்வேளையில் அந்த வடமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லை மீண்டும் நடைமுறை கொண்டுவருவதில் தவறேதும் இல்லை.
காலவேட்டத்தில் பலமாறுதல்கள் வரும் பல புதிய செயல்கள் ஆக்கங்கள் தோன்றுவது பேலவே சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றது. வினைääஓசை...மற்றும் தமிழ் இலக்கண வரபிற்கு உட்பட்டு சொல்லாக்கங்கள் இடம்பெறுகின்றன.
இற்றைக்கு 400 ஆண்டுகாலத்திற்கு முன்னர் சிலி நாட்டில் இருந்து தமிழன் நாட்டிற்கு மிளகாய் வந்தது. அது நாள் வரையில் மிளகையே உபயோகித்து வந்த தமிழர்கள்ää அதன் பயன்பாட்டிற்கும் வினைக்கும் ஏற்றாற்போல் அதற்கு மிளகாய் என்று பெயரிட்டனர்.
அதுபோலவே
ஐரோப்பியர் கந்தேர் என்ற சொல்லை கொண்டு வரமுன்னர் தமிழர்கள் கந்தோர் எதனையும் வைத்திராமலா இருந்தனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழன் பணிகள் செய்யும் இடத்தை பணிமனை என்று அழைத்தான். அல்லது
அலுவல்கள் செய்யும் இடத்தை அலுவலகம் என்று அழைத்தான்.
அதேபோல போத்தல் என்ற ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ் சொல் புட்டில் ஆகும்.

'ழ்" என்கிற சிறப்பு ழகரம் தமிழுக்கே உரித்தான சிறப்பு. இதனை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. ஆங்கில 26 எழுத்துக்களுடன் இதனையும் இணைத்தால் ஆங்கிலத்திற்கு சிறப்பாக இருக்கும் ஆங்கிலேயர்கள் இணைக்க சம்பமதிப்பார்களா....? அதுபோலவே எல்லா ஓசைகளையும் அது எந்த மொழியாக இருந்தாற் கூட உச்சரிக்க முடியாது. அது அந்தந்த மொழிக் குடும்பங்களின் தனி இயல்பு எனலாம். ஆகவே ஸääஜääஹ... என்கின்ற கிரந்த எழுத்துக்கள் தேவை இல்லை என்கின்றனர் தமிழறிஞர்கள்.
மண்ணின் விலங்கொடிக்க மட்டுமல்ல மொழியின்ää பண்பாண்டின்ää சமூகத்தின் விலங்கொடிக்கவும்தான் போராடுகின்றோம் என்று கூறும் புலிகள் 46ää000 தமிழ் பெயர்கள் அடங்கிய அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அகாரதியில் இருந்து போராளிகளுக்கும் பிறந்த மகவுகளுக்கும் பெயர்கள் வைக்கப்படுகின்றன. தமிழன் ஆட்சி அதிகாரம் அரசியல் உரிமை இழந்து 400 ஆண்டுகள் ஆகின்றன. ஆகையால் தமிழில் பயன்பாடு இழந்த ஆட்சி மொழிச் சொற்களை மீட்டு தமது நிழல் அரசில் பயன்படுத்துகின்றார்கள் விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் தமிழ் வளர்ச்சிக் கழகம் பொதுவான சொற்பிரயோகம் போன்ற பல சிக்கல்களுக்கு முடிவகாண உழைக்கின்றதாக செய்திகள் வாயிலாக அறிகின்றோம்.

விழிப்பும் பயன்பாடும் இருப்பின் மொழி மிளிரும்.
-முழக்கம் திரு
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 02-02-2005, 05:10 PM
[No subject] - by muzhakkam thiru - 02-02-2005, 11:06 PM
[No subject] - by Eswar - 02-03-2005, 12:30 AM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:49 AM
[No subject] - by Eswar - 02-03-2005, 12:45 PM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 12:58 PM
[No subject] - by Eswar - 02-03-2005, 01:27 PM
[No subject] - by Jude - 02-05-2005, 10:08 AM
[No subject] - by Mathan - 02-05-2005, 03:11 PM
[No subject] - by Eswar - 02-05-2005, 05:48 PM
[No subject] - by Jude - 02-06-2005, 10:34 AM
[No subject] - by Mathuran - 02-06-2005, 11:20 AM
[No subject] - by Eswar - 02-06-2005, 02:57 PM
[No subject] - by Jude - 02-07-2005, 01:21 AM
[No subject] - by tamilini - 08-12-2005, 03:10 PM
[No subject] - by Mathuran - 08-17-2005, 11:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)