02-14-2005, 03:38 PM
tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen:
வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...!
தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink:
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>