02-14-2005, 04:42 PM
Mathan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen:
வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...!
தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink:
நாம் உள்வாங்கி கொண்ட நிறைய விடயங்கள் தமிழருடையது அல்ல. அவற்றின் நதிமூலம் ரிஷிமூலம் பார்பதிலும் பார்க்க அவற்றில் நல்லவற்றை நமக்கு ஏற்றவாறு உபயோகிக்கலாம். காதலர் தினத்தில் எந்த தவறும் இல்லை. அவற்றை தமிழர்கள் கொண்ட்டாடும் விதத்தில் தவறாக இருந்தால் அவற்றை குறித்து பேசுவதே நலம். இங்கு காதலர் தினம் கூடாது என்பதற்கு சரியான காரணம் எதனையும் நான் காணவில்லை. அவை கொண்டாடப்படும் முறை தவறூ என்றும் அவை தமிழருடையது அல்ல என்றூமே கூறியுள்ளீர்கள்.
காதலர் தினம் கூடாது என்றால் அது வலண்டைன் எனும் தனிமனிதனை அகெளரவப்படுத்தும்...அவரின் சிந்தனையில் இந்தத்தினம் புனித தினமாக இருந்திருக்கும்...ஆனால் இன்றைய உலகில் அதன் தோற்றம்...மேற்குலக வியாபார விளம்பரமானதும்...தமிழர்கள் ஆகிய நாமும் அதை அப்படியே உள்வாங்க நினைப்பதுவும்...அதற்கு காதலர் தினம் என்று பெயர்சூட்டி கேளிக்கை புரிவதும் அவசியா என்பதே கேள்வி....அது எந்த வகையில் தமிழர்களுக்கு உதவப் போகிறது..???! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>