Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி
#6
இந்த உலகத்தில் ஆண் தெய்வங்கள் இருக்கும் அனைத்து கோயில்களிலும் சக்தியும் இருக்கும். ஆனால் பெண் தெய்வங்கள், ஆண் தெய்வங்களின் துணை இல்லாமல் தனித்து இருப்பதை காண முடியும். ஆண்களால் முடியாததை பெண்கள் சாதித்துக் காட்ட இயலும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு வீட்டில், பெண்ணின் துணை இல்லாமல் ஆண்களால் சரிவர இயங்க முடியாது. எனவேதான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் விழா எடுக்கப்பட்டது.

சக்திக்குரிய விழா "நவராத்திரி' என வழங்கப்பட்டது.

சகல செல்வங்களையும் தரும் மகா சக்தியான அன்னையை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற பெயர்களில் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபடுகிறோம். கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

ஆதிபராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள். இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.

(இன்று நவராத்திரி முதல்நாள்)
நன்றி: தினமலர் http://www.dinamalar.com/index.asp
Reply


Messages In This Thread
நவராத்திரி - by Kanani - 09-27-2003, 12:25 AM
[No subject] - by Mullai - 09-27-2003, 07:21 AM
[No subject] - by yarl - 09-27-2003, 08:22 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 08:28 AM
[No subject] - by சாமி - 09-27-2003, 08:42 AM
[No subject] - by சாமி - 09-27-2003, 08:45 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:23 AM
Re: நவராத்திரி - by kuruvikal - 09-27-2003, 09:59 AM
[No subject] - by S.Malaravan - 09-28-2003, 10:18 AM
[No subject] - by Mathivathanan - 09-28-2003, 11:12 AM
[No subject] - by TMR - 09-30-2003, 12:57 PM
[No subject] - by Mathivathanan - 09-30-2003, 01:30 PM
[No subject] - by P.S.Seelan - 10-14-2003, 01:04 PM

Forum Jump:


Users browsing this thread: 11 Guest(s)