Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணபெண்கள் கவனிப்பார்களா?
#12
SUNDHAL Wrote:அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த சில திருமண வைபவங்களுக்குச் சென்றிருந்த அன்பர் ஒருவர், குறைபட்டுக் கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார்.

இரண்டொரு திருமண வைபவங்களில் மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரத்தைப் பார்த்தபோது வேதனை தான் ஏற்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும் தமிழ் கலாசார முறைப்படியே நடந்தன. ஆனால், மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரம் வேற்று இன கலாசாரப் பாணியில் இருந்தது.

சபையில் பலர் இது பற்றி முணுமுணுத்துக் கொண்டதை அவதானித்தேன்.

தமிழ் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவரிடம் ஏன் இவர்கள் சென்று இப்படி நமக்கு ஒவ்வாத முறையில் ஒப்பனை செய்து கொள்கிறார்கள்? என்று அவர் கேட்டார்.

வருங்கால மணப்பெண்களே கவனித்துக் கொள்ளுங்கோ!

Thanks:Thinakural

சடங்குகள் சம்பிரதாயங்கள் யாவும் தமிழ்க் கலாசாரப் பாணியில் இருந்தது என்று தினக்குரல் குறிப்பிடுவதே பிரச்சனையான விடயம். இன்று தமிழ்க்கலாசாரம் என்று குறிப்பிடப்படுபவையே விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறதே.

ஓமோம் தமிழ்க் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவர்கள் தான் அவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும். திருமணவிழாக்களிலும், சாமத்தியச் சடங்குகளிலும் தான் தமிழர் கலாசாரம் வாழ்வதாக, காப்பாற்றப்படவேண்டியவையாக இவர்கள் எண்ணுவதை பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. தினக்குரல் நாளிதழை அச்சிடுவதும், இணையத்தளத்தில் அவர்களுடைய செய்திகளை ஆவணப்படுத்துவதும் (வடிவமைப்பு) எல்லாம் தமிழர் கலாசாரம் சொல்லிக்கொடுத்த முறைதான் பாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சடங்குகளும் சம்பிரதாயங்களும் தான் இவர்களுக்கெல்லாம் கலாசாரமாகி நிற்கிறது. அதற்கு அங்கால் சென்று கலாசாரத்தை பார்க்கமுடியவில்லை இவர்கள் கண்களால். இதற்கு மேல எதை சொல்வது? எத்தனை தடவை தான் சொல்வது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இன்னொன்று இவர்களின் கண்களில் தெரிந்தது மணப்பெண்ணும் அவரது தோழிகளும் தான். இவர் என்ன உடை அணிந்து சென்றாரோ, இவரது நண்பர்கள் என்ன உடை அணிந்து சென்றார்களோ அதெல்லாம் கணக்கில் எடுக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கலாசாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். காலம் காலமாக பெண்கள் தானே "கலாசாரக் காவிகளாகக்" காணப்படுகிறார்கள். பெண்கள் சேலை உடுப்பதும், பொட்டு வைப்பதும் தான் தமிழ்க் கலாசாரம். பொட்டு வைக்கிறதையும், சேலை கட்டுவதையும் யாரிடம் கடன் வாங்கினார்களோ எல்லாம் அந்த கலாசாரக் கடவுளுக்கே வெளிச்சம்.


Reply


Messages In This Thread
[No subject] - by SUNDHAL - 07-16-2005, 04:40 PM
[No subject] - by MUGATHTHAR - 07-16-2005, 07:25 PM
[No subject] - by kuruvikal - 07-17-2005, 06:24 AM
[No subject] - by Rasikai - 07-23-2005, 04:35 PM
[No subject] - by Rasikai - 07-23-2005, 04:42 PM
[No subject] - by vijitha - 07-23-2005, 05:00 PM
[No subject] - by sinnappu - 07-24-2005, 06:22 AM
[No subject] - by sinnappu - 07-24-2005, 06:30 AM
[No subject] - by Mind-Reader - 07-24-2005, 10:08 AM
Re: மணபெண்கள் கவனிப்பார்களா? - by இளைஞன் - 07-24-2005, 11:37 AM
[No subject] - by Mind-Reader - 07-24-2005, 04:30 PM
[No subject] - by Rasikai - 07-24-2005, 06:33 PM
[No subject] - by MUGATHTHAR - 07-24-2005, 07:49 PM
[No subject] - by Rasikai - 07-24-2005, 09:23 PM
[No subject] - by Thala - 07-24-2005, 09:40 PM
[No subject] - by narathar - 07-25-2005, 10:44 AM
[No subject] - by aswini2005 - 07-25-2005, 11:13 AM
[No subject] - by Niththila - 07-25-2005, 11:42 AM
[No subject] - by Malalai - 07-25-2005, 01:06 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 01:32 PM
[No subject] - by narathar - 07-25-2005, 04:01 PM
[No subject] - by stalin - 07-25-2005, 04:19 PM
[No subject] - by Rasikai - 07-25-2005, 07:24 PM
[No subject] - by Sooriyakumar - 07-25-2005, 07:35 PM
[No subject] - by aswini2005 - 07-26-2005, 08:58 AM
[No subject] - by aswini2005 - 07-26-2005, 08:59 AM
[No subject] - by stalin - 07-26-2005, 10:12 AM
[No subject] - by தூயா - 08-04-2005, 10:18 AM
[No subject] - by Rasikai - 08-04-2005, 09:55 PM
[No subject] - by narathar - 08-04-2005, 10:50 PM

Forum Jump:


Users browsing this thread: 19 Guest(s)