Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
தென்னிந்தியத்தமிழ்ச் சினமாத்திரைப்படங்கள் எம்தமிழ்க்குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க உதவுகிறதா ? உதவுகிறது எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி களமாடும் பெற்றோர்கள் , இளையவர்கள் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
என்னது ????
எனக்கு காது கேக்கல . . .
தமிழை . . .
மறக்காமல் . . .
வேற . . .
பிள்ளைகள் தமிழை மறந்தாலும் பரவால்ல . .
இந்தியா காரன்களின்ட பக்கம் தலைவைச்சு படுக்காம இருந்தா போதும் . .
அது சரி . .தென்னிந்திய சினிமால தமிழிலையோ கதைக்கிறாங்கள் . .
எனக்கெண்டா அது தமிழ் மாதிரி தெரியல.
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
எனது நண்பர்கள் சிலர் நேரில் கண்ட காட்சியொன்று:
சிறந்த பாடகரைத் தெரிவு செய்யும் ஒரு மேடை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது நிகழ்ச்சிக்கு ஒரு இடைவேளை வழங்குவதற்காக அறிவிப்பாளர் ஒருவர் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.அவர் அந்த இடைவெளியில் மிகவும் ஆர்வத்தோடு தமிழ் சம்பந்தமான ஒரு போட்டி நிகழ்ச்சியை நடாத்தினார்.மிகவும் இலகுவான ஒத்த சொல் எதிர்ச்சொல் போட்டிதான் அது.
அப்போது அவர்களுக்கு அருகில் ஆறு பள்ளி மாணவர்கள் (சிறியவர்கள்) அமர்ந்திருந்தனராம்.அதில் ஒருவருக்கு அங்கு என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை.புரியவும் இல்லை.அப்போது அருகில் இருந்த தனது நண்பரைப் பார்த்து
அவர் : (ஆங்கிலத்தில்) நீங்கள் வீட்டில் தமிழ் கதைப்பதுண்டா
மற்றவர் : ஆம் தமிழ்தான் கதைப்பது.
முதலாமவர் : அப்படியானால் அந்த மேடையில் அவர் ஏதோ கதைக்கிறாரே அது என்ன
சற்று அவதானித்து விட்டு மற்றவர் :
<b>It's a Different Tamil man.. I'm sure he is not speaking proper Tamil என்று பதில் சொன்னாராம்.
ஆக இளையவர்களின் தமிழ் அறிவினை வளர்க்க, புலம் பெயர் நாடுகளில் சில பெற்றோர்கள் காட்டும் ஆர்வத்தினை பல பெற்றோர்கள் ஆதரிப்பதே இல்லை.
இப்போதெல்லாம் தென்னிந்தியத் தொலைக்காட்சிகளின் நாடகப் பெயர்கள் தெரிந்திருந்தாலே போதும் என்று ஆகிவிட்டது.
நமது பெற்றோர்களுக்கு இப்போது அவற்றின் பாதிப்பு அதிகம் இருப்பதனால் எந்த நேரமும் வீட்டில் வேலைசெய்யும் அந்தத் தொலைக்காட்சிகளில் அவற்றில் ஒளிபரப்பப்படும் சினிமாக்களில் அல்லது நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் வலுவடைந்து நாளை நமது குழந்தைகளும் ஒரு மார்க்கமாக அல்லது [b]STYLE TAMIL</b> கதைப்பதுதான் எதிர்காலமாகலாம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 5
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
நான் லண்டன் சென்றிருந்தேன்.அங்கு தாய்க்கும் மகனுக்கும்நடந்த ஓரு உரையாடல்
மகனுக்கு தமிழில் கதைக்க ஆசை
பக்கத்தில் நின்ற தன் நண்பனைக் காட்டி
" அவன் என்னுடைய நண்பன் - அவனுக்குப் பக்கத்தில் நிப்பது அவனுடைய கொப்பன்."
தமிழ்ப் படம் பார்த்து இப்படித் தான் கதைப்பார்கள்
இது உண்மைச் சம்பவம்
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
shanthy Wrote:தென்னிந்தியத்தமிழ்ச் சினமாத்திரைப்படங்கள் எம்தமிழ்க்குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க உதவுகிறதா ? உதவுகிறது எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி களமாடும் பெற்றோர்கள் , இளையவர்கள் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
சினிமா பார்ப்பது மொழி கற்பதற்கல்ல. முக்கியமாக அது ஒரு பொழுது போக்கு........................
எந்த நாட்டவரும் சினிமா பார்த்து மொழி கற்பதில்லை. அதற்கு ஒரு பாடசாலைக்குப் போக வேண்டும்.
நாம் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளைக் கற்க அந்தந்த மொழி சினிமா பார்த்து கற்கலாமே? அவை கொஞ்சம் உறுதுணையாகலாம். நாம் வாழும் நாடுகளிலேயே ஒரே மொழிக்குள் எத்தனையோ வித்தியாசங்கள்-ஒயில்கள்(சிலாங்).
நமது நாட்டில் கூட யாழ்பாணம்-மட்டக்களப்பு - மலைநாடு - மன்னார் -திருகோணமலை- கொழும்பு ............................. இப்படி எத்தனையோ பேச்சுவழக்கு தன்மைகள்................. இது போல் இந்திய தமிழிலும் எத்தனையோ பேச்சு வழக்குகள். இவற்றை பாகுபடுத்த அடிப்படை மொழிக் கல்வி அவசியம். இது ஆங்கிலத்துக்கும் இருக்கிறது , ஏனைய மொழிகளுக்கும் இருகக்கிறது.
நாங்களும்தான் சினிமா பார்க்கிறோம், ஆனால் பரதம் ஆடவோ , சங்கீத கச்சேரிகள் செய்யவோ,இசையமைக்கவோ முடியவில்லை. சினிமா பார்ப்பது மொழி கற்க என்றால் பாவம்...............எனவே முறையான ஒருவரிடம் கற்பது அறிவுடமை.
நீங்கள் சொல்வது போல் நினைப்பது , தண்ணீரில் தள்ளி விட்டால் நீந்த முடியும் என்பது போல் இருக்கிறது. தத்தளித்து சில வேளை உயிர் தப்பலாம்,தள்ளிவிடும் இடத்தைப் பொறுத்து. அது நீச்சல் தெரிந்த நிலையாகாது.
ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால் மட்டுமே அதை பாகு படுத்திப் பார்க்க இயலும். அவரவர் நாடுகளில் அவரவர் படைப்புகளை அவரவருக்காகத்தான் படைக்கிறார்கள். அதை நாம் மடியில் துாக்கி வைத்துக்கொண்டு குத்துது, குடையிது என்றால் யார் பொறுப்பு?
[size=15]
இவற்றை விட்டால்,நாங்கள் எதைப் பார்ப்பது என்று சொல்லுங்கள்?
பிரயோசனமாய் இருக்கும்..
எம்மால் முடியாத ஒன்றை நினைத்து வெட்கப்பட வேண்டுமே தவிர ,
அடுத்தவனை நிந்தித்து , அடுத்தவன் பெயர் பாடி நம் வயிறை வளர்ப்பது போன்ற கேவலம் அளவுக்கு படு கேவலமான செயல் வேறொன்றுமில்லை..........
-அஜீவன்
[scroll:869874d0bd][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kolumban Wrote:நான் லண்டன் சென்றிருந்தேன்.அங்கு தாய்க்கும் மகனுக்கும்நடந்த ஓரு உரையாடல்
மகனுக்கு தமிழில் கதைக்க ஆசை
பக்கத்தில் நின்ற தன் நண்பனைக் காட்டி
" அவன் என்னுடைய நண்பன் - அவனுக்குப் பக்கத்தில் நிப்பது அவனுடைய கொப்பன்."
தமிழ்ப் படம் பார்த்து இப்படித் தான் கதைப்பார்கள்
இது உண்மைச் சம்பவம். ஏனப்பு நீங்கள் தமிழ்ப்படம் பார்க்கிறேல்லையோ..?
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்புகிறோம் என சிலர் கூறுவதுண்டு. சினிமா தமிழ் மொழி உச்சரிப்பை உள்வாங்க உதவுகிறது என சிலர் கூறுவதுண்டு: எங்கு அனுப்பினாலும் எதைப்பாற்தாலும் வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும். குழந்தை தானாக உணர்கிற பருவம் வருகிறபோது தமிழை அறிய பேச எழுத முற்படுகிறது.
எப்போது அக்குழந்தை உணர முற்படுகிறது என்றால் தனதொத்த பாசை தெரியாத இன்னொரு பிள்ளையோடு உரையாட முற்படுகிறபோது அதை உணர தொடங்குகிறது. எனவே இருவருக்குமே தெரிந்த பாசை தமிழ் அதன் தேவை புரிகிறது மிகுந்த ஆசையுடன் தமிழை கற்க தொடங்குகிறது.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இதுவே போதும்
Quote:சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
[b] ?
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
nalayiny Wrote:பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்புகிறோம் என சிலர் கூறுவதுண்டு. சினிமா தமிழ் மொழி உச்சரிப்பை உள்வாங்க உதவுகிறது என சிலர் கூறுவதுண்டு: எங்கு அனுப்பினாலும் எதைப்பாற்தாலும் <span style='color:red'>வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும். குழந்தை தானாக உணர்கிற பருவம் வருகிறபோது தமிழை அறிய பேச எழுத முற்படுகிறது.
வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாட எங்கு நேரம்?
தமது குற்றங்களை எவர் மீதாவது திணித்து விட்டு தப்புவது , இதைவிட இலகுவானதே...........
[size=15]வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
(நன்றி:நளாயினி)
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.....................
[b][size=18]தயவு செய்து வீட்டில் தமிழில் உரையாடுங்கள்.
வீட்டில் தமிழில் உரையாடுவோம்.
வீட்டில் தமிழில் உரையாடுவோம்.
வீட்டில் தமிழில் உரையாடுவோம்.</span>
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
அண்மையில் பலரிடமிருந்து வந்த வார்த்தைகளையே இங்கு களமாடவும் நல்ல கருத்துப்பரிமாற்றத்துக்காகவும் கேள்வியாகக் கேட்டுள்ளேன்.
வீரா தாங்கள் கூறுவது போல் நம் குழந்தைகளிடம் இனிவரும்காலங்களில் STYLE TAMIL நடைமுறைக்கு வந்தாலும் வரலாம். அதைத்தீர்மானிப்பது யார்கையில் என நீங்கள் கருதுகிறீர்கள்.....?
அவன் என்னுடைய நண்பன் - அவனுக்குப் பக்கத்தில் நிற்பது அவனது கொப்பன்.
உண்மைச்சம்பவத்தை எழுதிய நண்பரே அந்தக்குழந்தையின் ஆர்வத்தைப் புரிந்து நெறிப்படுத்தினால் நிச்சயம் அந்தக்குழந்தை தமிழ் நன்றாகப் பேச எழுதக்கூடிய அளவுக்கு முன்னேற்றலாம்.
இன்னும் ஆழமாக இவ்விடயத்தை ஆராய்ந்து உங்கள் கருத்தைத்தாருங்கள் பயனாகும்.
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
வணக்கம் அஜீவன் ! சினிமா பார்ப்பது பொழுது போக்கிற்குத்தான். ஆனால் இங்கு தமிழைக்காக்க , எமது குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்கச் சினிமா உதவுகிறதெனப் பலரது நினைப்பு. உங்களைப்போன்ற சிலர் மட்டுமே சினிமாவைப் பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கிறார்கள். ஏனெனில் நீங்கள் அந்தத்துறைக்குள் இருக்கிறீர்கள்.
சரி நீங்கள் சொல்வது போல் அது பொழுது போக்குச்சாதனம் என எத்தனைபேரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது....? தொலைக்காட்சியென்ற ஊடகம் இன்றைய உலகின் தலைவிதியையே மாற்றும் வல்லமையைப் பெற்றுள்ளது. இங்கெல்லாம் பொழுது போக்கு மட்டுமா முக்கியம் பெறுகிறது ?
அவரவர் நாடுகளில் அவரவர் படைப்புக்களை அவரவருக்காகத்தான் படைக்கிறார்கள். ஆனால் தமிழ்ச்சினிமா தமிழகத்துக்காகவோ , இந்தியாவுக்காகவோ படைக்கப்படுவதில்லையே. அதை நம்மடியில் து}க்கிவைத்து நமக்கானது அதுதான் எனத்திணிப்போர் யார் ? இங்கு குடைவது , குத்துவது , வலிப்பது எல்லாவற்றிற்கும் பொறுப்பானவர்கள் யார் ?
கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
அந்தப்14 வயதுப்பெண்பிள்ளை தனது தமிழ் ஆசிரியரிடம் கேட்டாள் ஏன் நாம் தமிழ் கற்க வேண்டும் என.
ஆசிரியர் தத்துவம் பேசித்தமிழ் எம்முயிர் , மூச்சு என்றெல்லாம் முழக்கவில்லை. தமிழ்மொழி அவளுக்குத் தேவையேன் என்பதற்குச் சுருக்கமாகப் பதில் கொடுத்தார். ஆனால் அவளோ எனக்குத்தமிழ்ப்படமே போதும் நான் தமிழைப்பேச என்றாள். எத்தனை காலம்தான் படத்தையே பார்ப்பாய் அதுவும் ஒரு கட்டத்தில் உனக்குச் சலித்துவிடும் என்ற ஆசிரியருக்கு அவள் சொன்னாளே ஒரு தத்துவம் விஜஜ் உயிருடன் உள்ளவரை நான் சினிமா பார்ப்பேன். தமிழை மறவேன் என்றாள். விஜஜ் போல் பலபுதியவர்கள் வருவார்கள் அவர்கள் வரும்போது நீங்கள் நேசிக்கும் விஜஜ்கூட மறைந்து விடுவார் என்றதற்கு அவள் அப்பிடியொரு நிலைவந்தால் நான் தமிழையே மறந்து விடுவேன் என்றாள்.
இச்சம்பவம் தமிழ்ச்சினிமா எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிவீர்கள்.
எம்மால் முடியாததைக்கூட முயன்றால் வெல்லலாம். காலம் சிலவானாலும் கற்றிடலாம். அடுத்தவன் பெயர்பாடினால் சந்தர்ப்பங்கள் வாங்குவது இக்காலத்தில் சுலபம். அதற்காக கண்டதையெல்லாம் விழுங்கி வாந்தியெடுத்தாலும் பறவாயில்லை என வக்காளத்து வேண்டுவது உயர்ந்த செயலா ?
சினிமா என்ற ஊடகத்துக்கு வெளியில் வந்து சற்றுநேரம் புலத்தில் வேரூன்றியுள்ள இளம் தலைமுறையின் நாளையை மனதில் கொண்டும் கருத்துத்தாருங்கள். பயனடையப் பல லட்சம்பேர் இருக்கிறோம். எனது துறை சினிமாவாகலாம் அதற்காக அங்கு தரப்படுவதெல்லாம் அமுதம் என்று வாதிடுவதால் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பயனடைய முடியும்.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. பழமொழியை வைத்து புது யுகத்தை கணிப்பிடல் தவறு.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
படம் பார்த்து தமிழ் வருதோ . .இல்லையோ . .
எனக்கு என்ட தமிழ் மறந்து போட்டுது . . .
பனங்கொட்டை தமிழ் தான் வருது . .
ஊருக்குப் போக சனம் எல்லாம் ஒரு மாதிரி பார்க்குது.
Posts: 64
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
எனது கருத்துப் படி திரைபடங்கள் (எத் தேயத்ததுவானாலும்) தமிழ் கற்க உதவுவதில்லை. அதுவும், இக்காலகட்டத்தில் வெளிவரும் தென்னிதியப் திரைகள், சிறிதேனும் உதவாது, மாறக பார்க்கும் குழந்தைகளின் தமிழ் அறிவைக் கெடுக்க வல்லது. எடுத்துக்காட்டாக 'போய்சு' (Boys) படத்தில் வரும் இள நடிகர்கள் ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பேசுவது, மூத்தவருடன் ஒருமையில் பேசுவது, 'போடாங்கோ' போன்ற பண்பிலாச் சொற்பயன்பாடு, முதலியன்.
Quote:" அவன் என்னுடைய நண்பன் - அவனுக்குப் பக்கத்தில் நிப்பது அவனுடைய கொப்பன்."
தமிழ்ப் படம் பார்த்து இப்படித் தான் கதைப்பார்கள்
'கொப்பன்' என்பது யாழ் மாவட்டத்து வட்டார வழக்கில் மட்டும் பயன்பட்டுத்தப்படும் சொல், ஆதலால் அது தெனிந்தியத்திரைப்படத்தின் பாதிப்பு அல்ல. சிலவேலை அந்தப் பிள்ளை வளரும் சூழலின் பாதிப்பாக இருக்கலாம்.
Quote:எங்கு அனுப்பினாலும் எதைப்பாற்தாலும் வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும்
வீட்டில் தமிழில் உரையாடினால் மட்டும் போதாது, அது உரையாடல் மொழித் திறமையை மட்டும் வளர்கும் (அதுவும் பல இல்லக்கணப் பிழைகளுடனும், பிற மொழிச்சொற்கலபுடனும்). சிறந்த ஒரு தமிழ்ப் பாடசாலையிற் சேர்த்துவிட வேண்டும். அதோடுமடுமல்லாமல் கிழமையில் அல்லது, திங்களில் ஒருமுறையாவது தமிழ்ப் பாடங்களில் பெறோர் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும். திணிப்பது...என்பது பிழையான பார்வை, ஏனெனில் ஒரு குழந்தைக்கு பெற்றோர் வழிகாட்டும் பொருட்டு சில சமயம் சிலவற்றில் கட்டாயப் படுத்தி ஈடுபடுத்த வைக்கவேண்டும். அதேன் பாடசாலை போவதையோ, கணிதம், உடொச்சு போன்ற பாடங்களைத் திணிப்பதாகக் கருதுவதில்லை. அதேனேரம் தமிழ் பயில்வதை பெறோரும் தமிழ்ப் பள்ளிகளும் சுவயாக்கலாம், அதன் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தைக் கூட்டி, எளிதில் அவர்கள் தமிழ் கற்க உதவலாம். படுக்கைக்கு முன் தமிழ்க் கதை கூறல், பரிசில் வழங்கும் தமிழ் விளையாட்டுக்கள் முதலியன மூலம் தமிழ்ப் பாடத்திற்கு சுவையூட்டலாம்.
பி.கு:
தமிழ்நாட்டுத்திரையுலகு தமிழ் நாட்டுக்கு மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல் உலகதிற்கே தமிழ்த் திரைகளைப் படைக்கின்றனர். ஆனால் நற்றமிழையும் நற்றமிழ்ப்பண்பாட்டையும் கலை என்ற பெயரில் காசுக்காக சீரழிக்கின்றனர். இவர்களின் இத்தகைய சீரழிப்பால், இவர்களெ ஃகொலிவூட்டை வரவழைத்து தெரியாமற் தற்கொலை செய்யப்போகிறார்கள். :?
திருவாளர் சனியன் (உங்கள் பயனர்ப்பெயரை உரியமுறையில் தான் உச்சரிகிறேனோ?) அவர்களே,
நீங்கள் உங்கள் இடம் (Location) அம்பாறை என எழுதியிருக்கிறீர்கள். இங்கு நீங்கள் 'பனங்கொட்டைத் தமிழ்' எனக் குறிபிடுவது யாழ் மாவட்டத் தமிழையோ? நீங்கள் நகைச்சுவையெனக் கருதிக் கூறியிருக்கலாம், ஆனால் அது எனக்கு நகைச்சுவையாகப் படவில்லை. தயவுசெய்து எதிர்வரும் இடுகைகளில், யாழை, 'பனங்கொட்டை' எனச் சிங்களவர் போல் ஏளனஞ்செய்யாதீர்கள்.
-
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
Quote:வீரா தாங்கள் கூறுவது போல் நம் குழந்தைகளிடம் இனிவரும்காலங்களில் STYLE TAMIL நடைமுறைக்கு வந்தாலும் வரலாம். அதைத்தீர்மானிப்பது யார்கையில் என நீங்கள் கருதுகிறீர்கள்.....?
தாய் மொழிப் பற்று என்பது அனைத்து வகை மழுப்பல் காரணங்களுக்கும் அப்பாற்பட்டதாக வரவேண்டிய ஒன்று.அதனை சரியான முறையில் பிள்ளைகளுக்கு வழங்குவதும் அவர்களிடத்தில் உருவாக்குவதும் அவர்களைப் பின்பற்ற செய்ய வேண்டியதுமான தார்மீகக் கடமை பெற்றோர்களுடையதுதான்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
shanthy Wrote:1. சினிமா பார்ப்பது பொழுது போக்கிற்குத்தான். ஆனால் இங்கு தமிழைக்காக்க , எமது குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்கச் சினிமா உதவுகிறதெனப் பலரது நினைப்பு.
2.சொன்னாளே ஒரு தத்துவம் விஜஜ் உயிருடன் உள்ளவரை நான் சினிமா பார்ப்பேன். தமிழை மறவேன் என்றாள். விஜஜ் போல் பலபுதியவர்கள் வருவார்கள் அவர்கள் வரும்போது நீங்கள் நேசிக்கும் விஜஜ்கூட மறைந்து விடுவார் என்றதற்கு அவள் அப்பிடியொரு நிலைவந்தால் நான் தமிழையே மறந்து விடுவேன் என்றாள்.
இச்சம்பவம் தமிழ்ச்சினிமா எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிவீர்கள்.
நம்மவர்கள் கலைஞர்களை உருவாக்கவில்லை. இந்தியாவிலும் ஆரம்ப காலத்தில் கூத்தாடிகள் என்றுதான் கூறினார்கள். ஆரம்ப காலத்துக் கலைஞர்களை தீண்டாதவர்கள் , தாசிகள் போல்தான் பார்த்தார்கள்..................ஆனால் இன்று உலக அரங்கில் முகம் தெரியும் ஊடகம் சினிமா-தொலைக்காட்சி என்றாகிவிட்டது.
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
என்பது போலாகியது.இவை காலத்தின் மாறுதல்.
அந்தக் குழந்தை மட்டுமல்ல ,ஊரில் எங்கள் வீடுகளிலும் சிவாஜி - MGR போட்டோக்கள் இருந்தனவே அதை நாங்களா வைத்தோம்?
நமது வீடுகளில் என்ன நடக்கிறதோ அதை வைத்துத்தான் குழந்தைகள் அடுத்த அடியை நகர்த்துகிறார்கள்.
சில தமிழ் வீடுகளில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரமாவது தமிழ் TV ஓடிக் கொண்டேயிருக்கிறது. பெற்றோர் சீரியல் பார்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் Viva.Mtv,Music chanel போன்றவற்றை பார்த்து ரசிக்கிறார்கள்.அது போல ஆடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட பெற்றோருக்கு நேரமில்லை. சீரியலில் ராதிகாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விடும்.
சீரியல் முடியும் வரை என்னோடு கூட சரியாகப் பேசவில்லை. இவை யாருடைய தவறு?
நீங்கள் சொல்வது போல விஜயின் ரசிகையாக அந்தக் குழந்தை இருப்பது தவறென்றால் இப்படிப் பட்டவர்களை எங்கு கொண்டு போய் விடுவது?
X Wrote:விஜய் அஜித்தை ஏன் சொன்னேன் என்றால் அவர்களை உமக்கு தெரியுமென்பதால் விஜய் திருமணம் முடித்திருப்பது தாயகத்தில் எனது பக்கத்து ஊர் பெண்தான். அஜித் வெளிநாடு வந்திருந்தால் அவரும் எங்கள் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருப்பார்.
உமக்;கு ஈழத்து கலைஞர்களை தெரியுமா? உமக்;கு தெரியாது என்பதாலேயே அவர்களின் பெயரை சொல்லவில்லை.
உமக்கு ரமணனைத்தெரியுமா? தர்சனைத்தெரியுமா? அல்லது ராஜா அண்னனைத்தெரியுமா? இவர்கள் பற்றி உமக்குதெரிந்திருந்தால் தானே அவர்கள் பெயரை உமக்கு நான் சொல்லலாம்.
ரமனனுடன் தனிப்பட்ட ரீதியில் நான் பேசியிருக்கிறேன் என்பது உமக்குத்தெரியுமா? அவரின் கைத்தொலைபேசி இலக்கம் கூட என்னிடமுள்ளது.
உமது நன்மைக்கு அறிவுரைச்சென்னது எனது தப்பு
என்னை டாக்குதரிடம் போகசொல்லும் அளவுக்கு எனது மனதை புண்படுத்திவிட்டீர்.
??????????????????????????
அஜீவன்
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
வணக்கம் அஜீவன் ! தங்கள் ஆதங்கம் புரிகிறது. நம்மவர்கள் கலைஞர்களை உருவாக்கில்லை என்பதை விட கலைஞர்களை உருவாகவிடவில்லை என்பது பொருத்தம் எனக்கருதுகிறேன்.
உலகின் முகம் தெரியும் சினிமாவுக்குள்ளிருந்து உலகத்தையும் பார்க்க வேண்டும் எம் இளையதலைமுறை.
சினிமா ஒரு கனவுலகு , பொழுது போக்குச் சாதனம் அது அப்படித்தான் இருக்கும் என்கின்ற வாதத்தைக்கூட ஏற்க நான் தயாரில்லை. கனவில் மட்டும் எத்தனை காலம் சினிமாவை வைத்திருக்கப் போகிறார்கள் இந்தச் சினிமாக்காரர்கள் ? தற்போது உலகு எத்தனையோ சுருங்கிவிட்டது.(உருண ;டையான உலகம் சுருங்கியதாக கருத்து இல்லை) உலக நடப்பை , உலகின் நிலவைரத்தைத் தொலைக்காட்சிகள் சொல்லும் வரை வளர்ந்துள்ளது. அத்கைய தொலைக்காட்சிகள் மனிதiனை மனநோயாளியாக்கும்படியாகச் சினிமாவைவோ சீரியல்களைளோ தருவதில் அதற்கு அடிமைகளாக நமது தலைமுறையை உருவாக்குவது கணணியுகத்துக் குழந்தைகளை எங்கே கொண்டு போகிறது ?
சிலவீடுகளில் நீங்கள் கூறியது போல் நடக்கிறது. அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது எது அல்லது யார் ?
நான்சொன்ன சம்பவத்துக்குரிய பிள்ளையில் நான் கோபப்படவில்லை. ஏனெனில் அவளை வழிநடத்தவேண்டியவர்கள் விழிஒளிக்காட்சிப்பெட்டிக்குள் ஒளிந்துள்ளதே காரணம். ஆனால் அவர்களை அடிமையாக்கி வைத்திருப்போர் எங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புவதாய்க் கூறும் வீடியோக்கடைகளும் வியாபர ஊடகங்களுமே.
இன்று ஜெயா ரீவியில் ஒரு பட்டிமன்றம் போனது அதன் தொடக்கம் முடிவு தெரியாது. அதில் பாடலாசிரியர் சினேகனும் பங்குபற்றியிருந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னார். நல்ல பாடல்களையும் , நல்ல ரசனையையும் பெறவேண்டியவர்கள் மக்கள் என்றார். ஏனெனில் நல்ல பாடல்களை மக்கள் கேட்கிறார்களில்லை. தனக்கு விருதைப்பெற்றுத்தந்த பாடலை யாரும் ரசிக்கவில்லையாம். ஆனால் கல்யாணம் கட்டிப்போட்டு ஓடுவோம் என் பாடலை கோழிகொண்டைக்கோழி மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றதாம். எனவே நல்லதை ஏற்பது மக்கள் கையில் உள்ளது எனச்சொன்னார். இதையெல்லாம் நொண்டிச்சாட்டென்றே நான் சொல்கிறேன். மக்களுக்கு நல்ல பாடலை , நல்ல சினிமாவைக் கொடுங்கள் அவர்கள் நிச்சயம் நல்ல ரசனையாளர்களாவார்கள். ரசிப்பார்கள். அதற்காக ஓடிட்டுக்கட்டுவோமைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள் ஆகவேதான் அத்தகைய பாடல்களைக் கொடுக்கிறோம் என்பது என்ன நியாயம் ? இதை ஆரம்பித்து வைத்தவர்கள் சினிமா வியாபாரிகள்.
(கருத்தாளர்கள் மன்னிக்கவும் கருத்தாட எடுத்த விடயத்தைத்தாண்டிக் கருத்து எழுத வேண்டியதற்கு)
X Wrote:விஜய் அஜித்தை ஏன் சொன்னேன் என்றால் அவர்களை உமக்கு தெரியுமென்பதால் விஜய் திருமணம் முடித்திருப்பது தாயகத்தில் எனது பக்கத்து ஊர் பெண்தான். அஜித் வெளிநாடு வந்திருந்தால் அவரும் எங்கள் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருப்பார்.
உமக்;கு ஈழத்து கலைஞர்களை தெரியுமா? உமக்;கு தெரியாது என்பதாலேயே அவர்களின் பெயரை சொல்லவில்லை.
உமக்கு ரமணனைத்தெரியுமா? தர்சனைத்தெரியுமா? அல்லது ராஜா அண்னனைத்தெரியுமா? இவர்கள் பற்றி உமக்குதெரிந்திருந்தால் தானே அவர்கள் பெயரை உமக்கு நான் சொல்லலாம்.
ரமனனுடன் தனிப்பட்ட ரீதியில் நான் பேசியிருக்கிறேன் என்பது உமக்குத்தெரியுமா? அவரின் கைத்தொலைபேசி இலக்கம் கூட என்னிடமுள்ளது.
உமது நன்மைக்கு அறிவுரைச்சென்னது எனது தப்பு
என்னை டாக்குதரிடம் போகசொல்லும் அளவுக்கு எனது மனதை புண்படுத்திவிட்டீர்.
??????????????????????????
அஜீவன்[/quote][/quote]
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
shanthy Wrote:வணக்கம் அஜீவன் ! தங்கள் ஆதங்கம் புரிகிறது. நம்மவர்கள் கலைஞர்களை உருவாக்கில்லை என்பதை விட கலைஞர்களை உருவாகவிடவில்லை என்பது பொருத்தம் எனக்கருதுகிறேன்.
நான்சொன்ன சம்பவத்துக்குரிய பிள்ளையில் நான் கோபப்படவில்லை. ஏனெனில் அவளை வழிநடத்தவேண்டியவர்கள் விழிஒளிக்காட்சிப்பெட்டிக்குள் ஒளிந்துள்ளதே காரணம். ஆனால் அவர்களை அடிமையாக்கி வைத்திருப்போர் எங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை விரும்புவதாய்க் கூறும் வீடியோக்கடைகளும் வியாபர ஊடகங்களுமே.
<span style='font-size:22pt;line-height:100%'>இன்று ஜெயா ரீவியில் ஒரு பட்டிமன்றம் போனது அதன் தொடக்கம் முடிவு தெரியாது. அதில் பாடலாசிரியர் சினேகனும் பங்குபற்றியிருந்தார். அவர் ஒரு கருத்தைச் சொன்னார். நல்ல பாடல்களையும் , நல்ல ரசனையையும் பெறவேண்டியவர்கள் மக்கள் என்றார். ஏனெனில் நல்ல பாடல்களை மக்கள் கேட்கிறார்களில்லை. தனக்கு விருதைப்பெற்றுத்தந்த பாடலை யாரும் ரசிக்கவில்லையாம். ஆனால் கல்யாணம் கட்டிப்போட்டு ஓடுவோம் என் பாடலை கோழிகொண்டைக்கோழி மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றதாம். எனவே நல்லதை ஏற்பது மக்கள் கையில் உள்ளது எனச்சொன்னார்.</span>
[size=16]பாருங்கள் சாந்தி, நீங்கள் இந்திய தமிழ் சினிமாவுக்கும் ,தொலைக் காட்சிக்கும் எதிராக பேசிக் கொண்டே ஜெயா டீவி பார்த்து விட்டு அதில் வரும் விடயம் பற்றி கூறுகிறீர்கள்.
[size=18][u]இது வேலியே பயிரை மேய்வது போலில்லையா?
நமக்கு தெரியாமல் நாம் தவறுகளை செய்து கொண்டே அடுத்தவர்களை குற்றம் சொல்லுகிறோமே?
அஜீவன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஒருவர் சினிமாவை அதன் கருத்துக் வெளிக்கொணரும் வடிவத்தைக் கொண்டு எதிர்கிறார் என்பதற்காக அவர் சினிமாவை எதிர்க்கின்றார் என்பது சரியாகாது...ஒரு விமர்சகன் என்பவன் உண்மையான சினிமாப்பக்தியாளனாக இருந்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதல்ல வெறும் பார்வையாளனாக இருந்து சமூகத்திற்கு சினிமாவில் உள்ள தீங்குகளை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறில்லை....அதேவேளை அங்குள்ள நல்லவற்றையும் சுட்டிக்காட்டத் தவறக்கூடாது...! உங்கள் கருத்திலிருந்து எங்கள் பார்வையில் சாந்தியக்கா ஒரு சினிமாப்பைத்தியமில்லாத பார்வையாளராக இருந்துதான் கருத்துப் பகர்கிறார் எனத் தோன்றுகிறது....ஏன் நாங்களும் சினிமா பார்க்கின்றோம் அதற்காக எல்லாப் படங்களையும் தரமென ஏற்றுக் கொள்கிறோமா....ஆனால் ஒரு தயாரிப்பாளனுக்கு அவனின் படம் முற்றுமுழுதாக பயனுள்ளதான கலைப்படைப்பாகவே தோன்றும்....பார்வையாளன் எதிர்க்கிறான் என்பதற்காக அவனை சினிமா எதிர்ப்பாளன் என அத்தயாரிப்பாளர் கருதமுடியுமா....???!!!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு விழைவிக்கும்.</span>
<span style='font-size:25pt;line-height:100%'>குடி குடியைக் கெடுக்கும்.</span>
<span style='color:darkred'>என்று மதுபான - சிகரட் விற்பனையாளர்கள் எழுதியிருக்கும் வாசகங்களுக்கும் உங்கள் வாசகங்களுக்கும் வேறுபாடே கிடையாது.
அன்புடன்
-அஜீவன்
_____________________________________________________________________________________________________________________________________________________________________
<img src='http://www.yarl.com/forum/files/chidren.jpg' border='0' alt='user posted image'>
(பத்திரிகையாளர் S.K.காசிலிங்கம் அவர்களின்
[size=15]என்னுள்....... என்னோடு.......
</span>புத்தக வெளியீட்டு விழாவில் என்னுள் உறைந்த
<span style='font-size:21pt;line-height:100%'>இரு மலர்கள்
</span>என் கமராவுக்குள் புகுந்து....கதை ஒன்று சொன்னது........
<span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயத்துக்குள் வேற்றுமைகள் இல்லை..........</span>
[scroll:a5dd19923b][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
|