Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது தமிழர் பாரம்பரியம்?
#21
ஈழவன் அண்ணா என்ன குழப்புறீங்கள் முதல்ல சீலை பொட்டு எல்லாம் தமிழற்ற இல்லையெண்டீங்கள் பிறகு தமிழற்ற அடையாளங்கள் எண்டுறீங்கள். இப்ப என்னடாவெண்டா திராவிடர் வேற தமிழர் வேற எண்டுற மாதிரி சொல்லுறீங்கள் :roll: குழம்பிட்டீங்களோ?

சரி அத விடுங்கோ இப்ப என்ன பிரச்சினை எண்டு எனக்கு ஒண்டுமா விளங்கேல? கொண்டாட்டங்கள் விழாக்கள் நிகழ்ச்சியளில மட்டுந்தான் தமிழர் தாங்கள் தமிழர் எண்டுற அடையாளத்த காட்டோணும் மற்றும்படி காட்டக்கூடாதா? அதானா பிரச்சினை?<b>எனக்கென்னவோ வேட்டி சீலைல கட்டுற தமிழர் எல்லாம் வெளில தமிழர் எண்டு காட்டிக்கொண்டு உள்ளுக்க இங்கிலீஸ்காரனா வாழுகினம் எண்டு தோன்றுது.</b> விளங்கலயோ? அதான் வெளில வேட்டி கட்டிக்கொண்டு சீலை கட்டிக்கொண்டு உள்ளுக்க போடுற உள்ளாடையள் எல்லாம் உந்த வெளிநாட்டுக்காரற்ற தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ ஐயோ குருவியண்ணா இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கிறார். குருவியண்ணா வேலைக்கு கோவணத்தோட தான் போறவராம் தமிழற்ற அடையாளங்கள கட்டிக் காக்குற ஆக்களப் பாரன் அச்சோ அச்சோ

என்று திருந்தும் இந்த குருவிகள் சாதி அன்று அழியும் இந்த கருத்துக்களில் பாதி
Reply
#22
poonai_kuddy Wrote:ஈழவன் அண்ணா என்ன குழப்புறீங்கள் முதல்ல சீலை பொட்டு எல்லாம் தமிழற்ற இல்லையெண்டீங்கள் பிறகு தமிழற்ற அடையாளங்கள் எண்டுறீங்கள். இப்ப என்னடாவெண்டா திராவிடர் வேற தமிழர் வேற எண்டுற மாதிரி சொல்லுறீங்கள் :roll: குழம்பிட்டீங்களோ?

சரி அத விடுங்கோ இப்ப என்ன பிரச்சினை எண்டு எனக்கு ஒண்டுமா விளங்கேல? கொண்டாட்டங்கள் விழாக்கள் நிகழ்ச்சியளில மட்டுந்தான் தமிழர் தாங்கள் தமிழர் எண்டுற அடையாளத்த காட்டோணும் மற்றும்படி காட்டக்கூடாதா? அதானா பிரச்சினை?<b>எனக்கென்னவோ வேட்டி சீலைல கட்டுற தமிழர் எல்லாம் வெளில தமிழர் எண்டு காட்டிக்கொண்டு உள்ளுக்க இங்கிலீஸ்காரனா வாழுகினம் எண்டு தோன்றுது.</b> விளங்கலயோ? அதான் வெளில வேட்டி கட்டிக்கொண்டு சீலை கட்டிக்கொண்டு உள்ளுக்க போடுற உள்ளாடையள் எல்லாம் உந்த வெளிநாட்டுக்காரற்ற தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயோ ஐயோ குருவியண்ணா இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கிறார். குருவியண்ணா வேலைக்கு கோவணத்தோட தான் போறவராம் தமிழற்ற அடையாளங்கள கட்டிக் காக்குற ஆக்களப் பாரன் அச்சோ அச்சோ

என்று திருந்தும் இந்த குருவிகள் சாதி அன்று அழியும் இந்த கருத்துக்களில் பாதி
பிள்ளை நீ சொல்ற மாதி.....வெளிய தெரியாமல் இருக்கிற உள்ளுக்கு போடுற வெள்ளைக்கார ஆடைகளை விதம் விதமாக உந்த விலைக்கு போடினம் ஏனென்று கேட்கிறன்...ஏதாவது பிரயோசனம். இருக்குமோ..... வெளியிலை சேலையாம் சட்டையாம் எனக்கும் விளங்கல்லை
Reply
#23
ஐயோ ஏன் எல்லாரும் குருவி அண்ணவைப் பற்றி இப்படிக் கதைக்கிறியள்,
அவர் ' தனக்குள்ளேயே' புரட்சி செய்யிறவர்,என்ற படியால் தமிழர் பாரம்பரிய உடயைத் தான் உள்ளுக்க அணியிறவர்.அவர் என்ன அணியிறவர் என்றது புனைக் குட்டி உங்களுக்கு எப்படித் தெரியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#24
அன்பின் பூனைக்குட்டி.நான் கொஞ்சம் அதிகமாகக் குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்.அல்லது எங்களின் கருத்தியற் தளத்திற்கு இந்தக் கேள்விகள் கொஞ்சம் அதிகப்படியோ என்று அஞ்சுகிறேன்.

ஆகவே எளிமைப்படுத்தி

நாங்கள் திராவிடர் தானே அப்போது ஏன் எப்போதும் எம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவதில்லை.தமிழர் என்று கூறிக்கொள்கிறோம்.

திராவிடர் தான் தமிழர்.தமிழர் தான் திராவிடர் என்றால்
நாங்கள் இன்னமும் திராவிடராகத் தான் இருக்கிறோமா?

என்னப்பா இந்தக் கேள்விகளுக்கு யாராவது விளக்கம் கொடுங்களேன்
\" \"
Reply
#25
பொறுங்கோ ஈழவனண்ணா குருவியண்ணா இதபத்தி புத்தகங்கள தேடிக்கொண்டிருக்கிறார் இன்ரர்நெற்றிலயும் தேடுறார் கெதில வந்து உங்கட கேள்விக்கு பதில் தருவார்

அவர் வருமட்டும் நீங்கள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோவன் தமிழற்ற உடுப்புகள் என்னென்ன எண்டு. நானும் நிகழ்சியளுக்கு போகேக்க மட்டும் தமிழச்சியா போவம் எண்டு பாக்கிறன்
Reply
#26
Mathana Wrote:வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம்
திராவிடர் என்றால் தமிழர் தானே?
ஆரியார் என்றால் சிங்களவர் தானே?

ஆரியர், திராவிடர் என்ற பிரிவுகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதி மொழி இன குழுக்களை அடையாளம் காண உருவாக்கிய பெயர்கள். சிந்து நதிப்பள்ளத்தாக்கில் உருவாகிய நாகரிகத்தில் தோன்றி இந்தியாவின் வடக்கிலும் ஐரோப்பாவிலும் பரவிய மக்கள் ஆரியர் என அழைக்கப்பட்டனர். இவர்களது மொழிகளின் தாய் மொழி சமஸ்கிருதம். ஜேர்மனியர் தாம் ஆரியர் எனவும் உயர்ந்த குலத்தோர் எனவும் கருதுவர். அவ்வாறே வடக்கு இந்தியரும்.

திராவிட மொழிகள் சிந்து நதிப்பள்ளத்தாக்குக்கு முற்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோ பள்ளத்தாக்கு நாகரீகத்தை சேர்ந்தது என்பர். தமிழ் இந்த திராவிட மொழிகளுள் முதன்மையான ஒன்று என கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிரகிருதி ஆகியன மற்ற திராவிட மொழிகள்.

இந்தியாவில் இ. வெ. ராமசாமி நாயுடு என்ற பெரியார் தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து பெரும் வெற்றி கண்டார். அவர் தமிழரல்ல. ஆகவே திராவிடரை, ஆரியரான பிராமணருக்கெதிராக ஒன்று திரட்ட முயற்சித்தார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால்; திராவிட கட்சிகளும், கொள்கைகளும், திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டன.

இலங்கையில் சிங்களவர்கள் மகாவம்சத்தின் படியும், மற்ற இன அடிப்படையிலும் வடஇந்திய கலப்பு கூடியவர்கள். இவர்களை மறைந்த இனவாதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜேயவர்த்தன ஆரியர்கள் என அழைத்து தன்தை ஒரு ஹிட்லராக்கி கொண்டார். உண்மையில் தமிழர்கள் சிங்களவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்ட பிரிட்டிஷ் காலம் முடிந்து சில வருடங்களாகி இருந்த நிலை. சிங்களவர்கள் தமிழரிலும் பார்க்க பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்ட ஜெயவர்த்தன செய்த அரசியல் சதி இந்த ஆரியர், திராவிடர் என்ற வார்த்தை பிரயோகங்கள். சிங்கள மொழியில் தமிழனை 'தெமிழ' என்றால் இழிவாக குறிப்பிடுவதாகவும் 'திரவிட' என்றால் மதிப்புடன் குறிப்பிடுவதாகவும் கூறுவார்கள்.
Reply
#27
யூட் ஆரியர் சிந்து நதியில் தோன்றி ஐரோப்பாவுக்குப் போகவில்லை.வால்கா நதியோரம் தோன்றி ஈரானுக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் பரவினார்கள் என்கிறது வரலாறு.அவர்களின் ஆதித் தாய்மொழியாக தேவநகரி என்னும் பிராகிருத மொழி இருந்தது.அதுவே பின்னால் திரிப்புற்றும் கலப்புற்றும் சமஸ்கிருதம் ஆயிற்று.

திராவிடக் குடும்பத்தின் மொழிகளுள் தமிழும் ஒன்று.

இராமசாமி நாயக்கர்தான் பெரியாரின் இயற்பெயர்.நாயுடு அல்ல.நாயுடுக்கள் மலையாளிகள் நாயக்கர் தெலுங்கர்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி
\" \"
Reply
#28
திராவடனும் தமிழனும் ஒண்ணா என்று குழம்பியிக்கிறிங்களா..அது இருக்கட்டும் தமிழ்நாட்டிலுள்ள பாலக்காடு கோழிமேடு கேரளத்துக்குள் போகிறதே என்று சொன்ன போது ....மேடாவது பள்ளமாவது எல்லாம் திராவிட நாட்டுக்குளை கிடக்கிறதென்று சொன்ன தீர்க்க தரிசன மற்ற அந்த தலைவர்களினால் கேரள தமிழ் நாட்டு எல்லை முல்லை பெரியாற்று அணைக்கட்டு பிரச்சனை இன்று தொடரகிறது..மற்றதுங்க கோகலுனூர் தங்கசுரங்கப்பகுதி தமிழர் பகுதி கன்னடப்பகுதிக்கு போனபோது அதுவும் திராவிட நாட்டுக்குள்ளை இருக்கென்றாங்கள்..அதன் பலனை காவரிபிரச்சனையில் இன்று அநுபவிக்கிறம் தமிழை திராவிடநாட்டுக்குளை அடக்கிய தீர்க்க தரிசனமற்ற தலைவர்களால்



Reply
#29
Eelavan Wrote:யூட் ஆரியர் சிந்து நதியில் தோன்றி ஐரோப்பாவுக்குப் போகவில்லை.வால்கா நதியோரம் தோன்றி ஈரானுக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் பரவினார்கள் என்கிறது வரலாறு.அவர்களின் ஆதித் தாய்மொழியாக தேவநகரி என்னும் பிராகிருத மொழி இருந்தது.அதுவே பின்னால் திரிப்புற்றும் கலப்புற்றும் சமஸ்கிருதம் ஆயிற்று.

திராவிடக் குடும்பத்தின் மொழிகளுள் தமிழும் ஒன்று.

இராமசாமி நாயக்கர்தான் பெரியாரின் இயற்பெயர்.நாயுடு அல்ல.நாயுடுக்கள் மலையாளிகள் நாயக்கர் தெலுங்கர்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி

திருத்தத்துக்கு நன்றி ஈழவன். இந்த வால்கா நதி எங்கே இருந்தது? இது பற்றிய இணைப்புகள் ஏதாவது தரமுடியுமா? வால்கா நதி நாகரிகத்துக்கும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஏதாவது தொடர்புகள் உண்டா?
Reply
#30
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகத்தை எடுத்து வாசிச்சு பாருங்கள்
Reply
#31
இந்தியாவின் சிறந்த தத்துவ அறிஞர்களுள் ஒருவரான ராகுல்ஜி என்று அழைக்கப்படும் ராகுல சங்கிருத்தியாயனால் எழுதப்பட்ட நூல் வால்காவிலிருந்து கங்கை வரை.

தாயை முதன்மையாகக் கொண்ட தாய்வழிச்சமுதாயம் எவ்வாறு ஆணாதிக்கச் சமூகமாக மாறியது

இந்துமதம் எவ்வாறு பரப்புரை கண்டது

பிராமணர்கள் எவ்வாறு ஆதிக்க சக்திகளாக மாறினார்கள்

சூத்திரரை அவர்கள் எவ்வாறு அடக்கி ஆண்டார்கள்

போன்ற பல கேள்விகளுக்கு ஆராய்ச்சிபூர்வமான முடிவுகளை கதைகளாக வடித்திருக்கிறார்.
\" \"
Reply
#32
உந்தப் பண்பாடு கலாச்சாரம் மண்ணாங்கட்டி எண்டு கூத்தாடுற ஆக்களப்பாத்தா எரிச்சல் தான் வருது.
கலாச்சார உடை எண்டு ஒண்டு இருக்கிறது சரி. அதை எங்க பயன்படுத்திறதெண்டும் ஒரு விளக்கம் இருக்க வேணும்.
அதை மறுக்கிற உரிமை மற்றாக்களுக்கு இருக்கு.
இளைஞன் வேட்டி கட்டிப்போயிருந்தா நல்லந்தான். என்ர தெரிவு கோட் சூட்டைவிட வேட்டிதான். இவ்வளவுக்கும் நான் இளைஞனைவிட ஒரு வயசுதான் மூத்தவனாயிருப்பன்.
ஆனா அதுகட்டிக்கொண்டு போகாததால அவர் தமிழனில்ல எண்டமாதிரிக் கதைக்கிறது சரியில்ல. இதத்தான் எங்கட ஆக்கள் சீலை கட்டுறதுக்கும் சொல்லுறது. சீல கட்டினாத்தான் அவ தமிழ்ப்பொம்பிளயாம்.
பண்பாடு கலாச்சாரம் எண்டது ஈழவன் சொன்னதுபோல காலங்காலமாக மாறிக்கொண்டுதான் வருது.
எங்கட கலாச்சாரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிப் பாத்தா அருவருக்கத்தக்கதாத்தான் இருக்கும். அதுக்காக எல்லாத்தையும் அப்படியே காவிக்கொண்டு திரியோணுமெண்டோ, எல்லாத்தையும் தூக்கியெறியோணுமெண்டோ இல்ல.
Reply
#33
நல்ல வேளை வன்னியல துவக்குத்தூக்கிச் சண்டைபிடிக்கிற ஆக்கள வேட்டியும் சீலயும் கட்டிக்கொண்டு சண்டைபிடி எண்டு சொல்லாமல் விட்டியளே.
Reply
#34
nallavan Wrote:நல்ல வேளை வன்னியல துவக்குத்தூக்கிச் சண்டைபிடிக்கிற ஆக்கள வேட்டியும் சீலயும் கட்டிக்கொண்டு சண்டைபிடி எண்டு சொல்லாமல் விட்டியளே.

ஒருவேள கொடுக்கு கட்டிக்கொண்டு சண்டைபிடிக்கச் சொல்லுவினம்..எதுக்கும் ஒருக்கா பொறுத்துப்பாப்பம்..

(சீன கம்பிச் சுறுளில மாட்டுறது சுகம் தானே) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)