Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனித் தமிழா, கலப்புத் தமிழா?
#1
தனித் தமிழா, கலப்புத் தமிழா?

தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
Reply
#2
வடமொழி இல்லாமல் தமிழ் இல்லை என்ற நிலைதான் இன்று.. ஏனெனில் எது வடமொழி எது தமிழ் என்று பிரித்துணர முடியாதவாறு வடமொழி கலந்துவிட்டது.. என்னவோ.. கோட்டு சூட்டுபோட்டாலும் தமிழாக இருந்தால் போதும்தானே? குளிர்நாட்டில் ஏன் வேட்டி சால்வை?
.
Reply
#3
தமிழனே கலந்துகிடக்கிறான் பிறகு தமிழெங்க வாழ...ஒரு மொழி வாழவேண்டுமாயின் அதற்கு என்றெரு நாடு வேண்டும் பேச மக்கள் வேண்டும்.....பண்டைத்தமிழன் படை கொண்டு நாடு காத்து மொழி நாகரிகம் பண்பாடு என்று எல்லாம் காத்தான்....இன்று........?! எந்த மொழி படித்தா உழைக்கலாம் அல்லது சிற்றிசன் சிப் எடுக்கலாம் என்று பார்கிறான்.....பிறகெங்க தமிழ் வாழ......! தமிழோடு எதுவும் கலக்கலாம்...ஆங்கிலம்...பிரன்சு....டொச்சு...நொஸ்கு.....
சமஸ்கிரதம்...சிங்களம்...இந்தி....தெலுங்கு...மலையாளம்...மராட்டி...உருது......?????????????!

நாங்க நாலு பேர் மொழியோடு பேச நாலு லட்சம் பேர் மொழியையே அநாகரியம் என்று நினைக்கிறான்...பிறகெங்க......மொழி வாழ....!

தமிழோட காதல் கீதல் என்று ஒரு மொழி கலந்தால் சிலவேளை தமிழ் வாழும்.....! :wink:

ஒன்று செய்யலாம் சுரதா அண்ணா செய்த கென்வேடரை MSN,Yahoo......Chat க்க புகுத்தினால் நிச்சயம் தமிழ் வாழும்....!
:twisted:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
>> ஒரு மொழி வாழவேண்டுமாயின் அதற்கு என்றெரு நாடு வேண்டும் பேச மக்கள் வேண்டும்..

உண்மையான கருத்து. தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
Reply
#5
இவை நாடு வேண்டி கிழிச்சு முடிஞ்சு இப்ப அங்கை போறினமோ..? தமிழ்நாடு பெயராக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
tamilan Wrote:>> ஒரு மொழி வாழவேண்டுமாயின் அதற்கு என்றெரு நாடு வேண்டும் பேச மக்கள் வேண்டும்..

உண்மையான கருத்து. தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

[Image: d_3.jpg]வெளியில இருந்து (கனவில்) கோல் போடுறது இலகுவானது.
ஆடிப்பார்த்தவர்களுக்கு விபரீதம் புரிகிறது?
Reply
#7
இதுவும் தமிழாக்கும்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000547.html
http://www.raaga.com/channels/tamil/lyrics/12804.html
:oops: நாகரிக தமிழ் சந்ததியின் தமிழ் இப்படியே வழந்துகொண்டுவருது எங்கபோய் முடியப்போகுதோ... :? உயிர்மெய் எழுத்து தொகை போறபோக்க பார்க்க 247 அல்லது 27 என சந்தேகம் கட்டாயம் வரும் போல் உள்ளது
போற போக்க பார்க பயமாகதான் உள்ளது காசி அண்ணா சொன்னதுபோல்....
Reply
#8
Lyricsரை வாசிக்கவும்...
Reply
#9
பிறமொழிகளின் ஆதிக்கம் என்பது சில நேரத்தில தவிர்க்க முடியாதது...எமது மொழி ஒரு விடயத்தில வளரவில்லையாயின் அவ்விடயத்தில பிறமொழிச்சொற்கள் ஆதிக்கம் செலுத்துகிறன்றன...உதாரணமாக இக்காலத்தில் தொழிநுட்பச் சொற்கள்...

இவ்வாறே வடமொழியும் தமிழினுள் புகுத்தப்பட்டுள்ளது...அது காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம்..ஆனால் இன்று தூய தமிழ்ச்சொல்லை மறந்து அம்மா மம்மியாகவும் அப்பா தாடியாகவும் மாறக் காரணம் என்ன? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#10
அம்மா...மம்மி..அப்பா...டடி எல்லாம் ஒரு ஷேஜ்ஷடா தம்பி ஷேஜ்ஷு.....உது கொழும்பு லண்டன் கனடாவுக்கு...மிச்சது......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்து எழுதலாம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் ஆங்கிலத்தையும் கலந்து எழுதுவதை நியாயப்படுத்தலாம் என்று ஒரு சாரார் வாதிடமுனையலாம். தமிழில் இப்போது வழக்கத்திலிருக்கும் சொற்களில் 30-35 வீதமான சொற்கள் வடமொழியிலிருந்து மருவி வந்தன என்று எப்போதோ படித்த ஞாபகம் இருக்கின்றது. இந்த வடமொழிச் சொற்களில் தமிழ் ஒலிநடையுடன் ஒலிப்பனவற்றை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நான் எண்ணுகின்றேன். ஏனெனில் வடமொழியின் ஆதிக்கம் இப்போது இல்லை இனி அது தமிழினை அழிக்கமுடியாது. எனவே அதனால் ஆபத்து தமிழிற்கு இனி இல்லை. ஆனால் ஆங்கிலம் அப்படியல்ல. அது ஆதிக்கம் நிறைந்தது. அதன் செல்வாக்கு தமிழின் இருத்தலை கேள்விக்குறியாக்கும். அதன் கலத்தலை நாம் முற்று முழுதாக தவிர்க் முனையவேண்டும். புதிதாக உருவாகும் பொருட்களுக்கு உடனடியாகவே தமிழ்ச்சொல்லையும் நாம் அறிமுகப்படுத்தவேண்டும். அதாவது அந்தப் பொருள் கண்டுபிடித்து சந்தைக்கு வரும்போதே அதற்கான தமிழ்ச்சொல்லை அறிமுகப்படுத்தக்கூடிய வேகம் எங்களிடம் இருக்க வேண்டும். தமிழில் வினையடிச்சொற்கள் ஏனைய மொழிகளிலிலும் பார்க்க மிக அதிகமாயுள்ளதாம். எனவே முயன்றால் புதிய சொற்களை தமிழில் அறிமுகப்படுத்துவது கடினமாயிருக்காது என்று தமிழறிஞர் கூறுவர்
Reply
#12
உண்மைதான்...
உதாரணம் கணனி,அணுகுண்டு இச்சொல் இவை கண்டுபிடிக்கமுன்னமே தமிழில் உண்டு... 8)
Reply
#13
தமிழ் தனித்தமிழா கலப்புத்தமிழா என்று ஆராய முன்பு அதை கலந்தது யார் என்று யோசித்துப்பாருங்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் பெருமை வேண்டி தமிழில் சமஸ்கிருதம் கலந்து பயன்படுத்தினார்கள் ஏன் அவற்றுக்கு நிகரான தமிழ் சொல் இல்லாமையாலா? இல்லை எல்லாம் ஒரு தற்பெருமைக்கு அதனை மணிப்பிரவாள நடை என்று சொல்வார்கள் அதாவது ச விற்கு பதிலாக ஸ வை உபயோகிப்பது.
எமது காலத்தில் நாங்கள் தற்பெருமை பேசுவதற்காக ஆங்கிலத்தை கலந்தோம் எங்கள் சந்ததி இருக்கும் இடத்திற்கு பொருத்தமாக French, Dutch இன்னும் பிறமொழிகளை கலக்கின்றது
மொத்தத்தில் பிழை எங்களது அந்தக்காலத்தில் இருந்த மொழிகளில் சிறிது சிறிது எடுத்து ஆங்கிலம் என்று ஒரு கலவை மொழியை உருவாக்கினான் வெள்ளையன் நாங்கள் தொன்மை நிறைந்த எங்கள் தமிழ் மொழியில் அதை கலப்பது சரியா என்று விவாதித்து கொண்டிருக்கின்றோம்

ஒரு விவாதத்திற்கு அப்படி கலந்த ஆங்கில மொழி தான் உலகில் முன்னனியில் இருக்கிறதே என்று கேட்பவருக்கு ஒரு கேள்வி உங்களால் ஆங்கிலத்தை பயன்படுத்தி எவ்வித தங்கு தடையின்றி உரையாட முடியுமா அப்படியாயின் "உங்களுக்கு இன்று எத்தனையாவது பிறந்த நாள்" இதனை நேரடி அர்த்தம் தொனிக்கும் வகை ஆங்கிலத்தில் மொழி பெயருங்கள் பார்க்கலாம்

எனது கருத்து என்னவென்றால் எந்தவொரு மொழியையும் தேவை கருதி தமிழுடன் சேர்த்து பயன் படுத்துவது பிழை இல்லை ஆனால் அதனை தமிழுடன் கலந்து தமிழின் அழகையும் கெடுத்து அந்த மொழியையும் கெடுப்பது தான் பிழை
Reply
#14
பலமொழிகளில் ஒரேசொல்லு ஒரே கருத்துடன் இருக்கும்போது அதன் உச்சரிப்புக்களும் ஒன்றாக இருக்கும்போது அந்த ஐந்து சொற்களையும் நீக்கி ஒத்த சத்தமுள்ள சொல்லை சேர்த்தவுடன் தமிழாகுமா..?
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#15
நாக என்ற சொல் தமிழில் நாகம் என்பதி குறிக்கும் மலாய் மொழியிலும் நாக என்றே சொல்கிறார்கள் அங்கேயும் நாகம் தான் நாகம் தமிழா மலாயா? சமஸ்கிருதமா

நாம் எந்த சொற்களை நீக்கி எந்த சொல்லை சேர்த்து அதனை தமிழ் என்கிறோம் எதைக்கேட்டாலும் நூலகம் போ என்கிறீரே சொல்வதையாவது விளக்கமாக சொல்லப்பாரும்
Reply
#16
Eelavan Wrote:நாக என்ற சொல் தமிழில் நாகம் என்பதி குறிக்கும் மலாய் மொழியிலும் நாக என்றே சொல்கிறார்கள் அங்கேயும் நாகம் தான் நாகம் தமிழா மலாயா? சமஸ்கிருதமா

நாம் எந்த சொற்களை நீக்கி எந்த சொல்லை சேர்த்து அதனை தமிழ் என்கிறோம் எதைக்கேட்டாலும் நூலகம் போ என்கிறீரே சொல்வதையாவது விளக்கமாக சொல்லப்பாரும்
ஷ வை எடுத்துவிட்டு ச வையோ
ஜ வை எடுத்துலிட்டு ச வையோ
சேர்த்திருப்பார்கள்..
அதெபோல ஹ வை நீக்கிவிட்டு க வையும்
ஸ வை நீக்கிவிட்டு ச வையும் சேர்த்திருப்பார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
எங்கு மலாயிலேயா?
Reply
#18
அல்லது ஸண்டியன் ஸின்னத்தம்பியின் ஸட்டாம்பிள்ளை தனத்துக்கு ஸக்கடத்தார் ஸாதுரியமாக முடிவு கட்டினார் என்றா
Reply
#19
அட்ரா அட்ரா ...
Reply
#20
ஒரு மொழி வழர நாடு தேவயில்லை.இலக்கணமும் இலக்கியமும்,எழுத்துருவும் இருந்தாலே அந்த மொழி வளர முடியும்
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)