Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தேசியமலர் அறிமுகம்
#1
இந்த வருட மாவீார் நாளிலிருந்து தமிழீழத்தேசியமலராக கார்த்திகைப்பூ அறிமுகம் செய்யப்படப்போவதாக தேசிய தொலைக்காட்சி ஒரு தகவல் வெளியிட்டிருந்தது

படமும் கணனி வழி உருவகப்படுத்தி காட்டியிருந்தார்கள்(கணனிவழிப்படுத்திய கலைஞனுக்கு பாராட்டுகள்)

யாராவது கார்த்திகைப்பூ பற்றிய செய்திகள் அல்லது படம் இருந்தால் தரவும்.
Reply
#2
கார்த்தைப்புூவை பெரும்பாலோர் பார்த்து இருப்பீhகள். செவ்வரத்தைப்புூவைவிட சற்றுச் சிறிய புூ. இதன் சிகப்பு நிற இதழ்கள் விரல்களைப்போல நீண்டு காணப்படும். பெண்களில் விரல்களுக்கு கம்பர் இதை உவமையாகச்சொல்லி உள்ளார். மார்கழி மாதத்தில் வேலிகள் தோட்டங்களில் புூத்துக்காணப்படும். காந்தல் மலர் என்றம் கார்த்திகைபபுூவைக்குறிப்பிடுவர்.

புூவின் படத்தைப்பெற்று அனுப்ப முயற்சிக்செய்கிறேன்[Image: eco-blk.jpg]
Reply
#3
உடனடித்தகவலுக்கும் படத்திற்கும் நன்றி ஆதிபன்

ஆனாலும் ஞாபகத்திற்கு வரும்பாடாயில்லை.
Reply
#4
<img src='http://www.tamilworldnews.com/karthikai-flower.jpg' border='0' alt='user posted image'>

பட உதவி தமிழ்நாதம்
பட உருவாக்கம் ரிரிஎன் கலைஞர்கள்????
Reply
#5
இதைத்தான் கிறிஸ்மல் Tree என்றும் சொல்வார்கள் என நினைக்கின்றேன். ஏனெனில இந்த மாதத்தில்தானே அது மலர்கின்றது. அழகுதான் பச்சை இலைகளிற்கிடையில் சிவந்த மலர்இதழ்கள்
[b] ?
Reply
#6
Karavai Paranee Wrote:இதைத்தான் கிறிஸ்மல் Tree என்றும் சொல்வார்கள் என நினைக்கின்றேன். ஏனெனில இந்த மாதத்தில்தானே அது மலர்கின்றது. அழகுதான் பச்சை இலைகளிற்கிடையில் சிவந்த மலர்இதழ்கள்

பரணீ இதுதான். கிறிஸ்மஸ் மரத்தின் பூவோ தெரியாது. ஆனால் பூக்கடையில் இருக்குது...நீங்கள் சொன்ன அதே உருவவியல் ஒற்றுமை இருந்தது....இவ்வளவு காலமும் அதை அவதானிக்கவில்லை ஆனால் இன்று கண்டோம்....! இருப்பது இங்கிலாந்துப் பூக்கடையில்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
கிறிஸ்மஸ் மரப் புூ எப்படி இருக்கும்? பொட்டானிக்கல் நேம் என்ன?
Reply
#8
என்னவோ தெரியாது !
எனது வீட்டில் இப்படியான மலர் உள்ள செடி இருந்தது. அதன் இலை பச்சை நடுவில் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மலர் இதுதான் என எண்ணுகின்றேன். அந்தநேரம் அதை யார் அவதானித்தது. தற்போதுதான் அவதானிக்க முடிகின்றது.

ஊரிற்கு போகும் நேரம் பார்க்க வேணும்.
[b] ?
Reply
#9
aathipan Wrote:கார்த்தைப்புூவை
பெரும்பாலோர் பார்த்து இருப்பீhகள். செவ்வரத்தைப்புூவைவிட சற்றுச்
சிறிய புூ.
இதன் சிகப்பு நிற இதழ்கள்
விரல்களைப்போல நீண்டு காணப்படும்.
புூவின் படத்தைப்பெற்று அனுப்ப
முயற்சிக்செய்கிறேன்[Image: eco-blk.jpg]

ஆதிபன் புூவைப்பற்றிய விபரங்கள்
ஏதாவது கிடைத்ததா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<b><span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழத்தின் தேசியப் பூ</b></span>

<img src='http://www.selvakumaran.de/padam/kanthal.jpg' border='0' alt='user posted image'>

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்ஙனம் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மலர்கள் தரணியில் இலங்கிடும் தேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வழமை தொன்றுதொட்டு வேதாகமக் காலத்திலிருந்து நிலவி வருகின்றது. கிறித்தவ வேதாகம நூலின் பழைய ஏற்பாட்டிலிலே சாலமனின் பாடல் என்ற அத்தியாயத்தில் (song of solomon) <b>பண்டைய எகிப்திய தேசத்தினை தாமரையும், நீலோற்பலமும் பிரதிநிதித்துவப்படுத்தின </b>என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் மன்னர்கள் தத்தமக்கென தனித்தனியான மலர்களைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது <b>சோழருக்கு அத்திப் பூவும், சேரருக்கு பனம் பூவும், பாண்டியர்க்கு வேப்பம் பூவும் தேசிய மலர்களாக இருந்ததுள்ளன. </b>

மேற்குறிப்பிட்ட பூக்களின் மாலைகளையே அவர்கள் களமுனைகளுக்கு செல்லும் போது அணிந்து சென்றதாக அ. தட்சிணாமூர்த்தி என்பார் யாத்த - தமிழர் நாகரிகமும் பண்பாடும் - என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்நூலில் குறுநில மன்னர்களும் தத்தமக்கு சொந்தமாக மலர்கள் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகின்றது. <b>வீரத்தில் சிறந்தவர்களாம் வேளிர் மன்னர்களில் ஆய் அண்டிரன் என்பார் சிறுபுன்னைப் பூவின் மாலையையும், ஏறைக்கோன் என்பார் காந்தள் மாலையும் அணிந்ததாக மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது</b>. இங்கே காந்தள் என்பது கார்த்திகைப் பூவின் பாரம்பரியத் தமிழ்ப் பெயராகும். இவ்வரலாற்றுச் சான்றாதாரத்தினூடாக கார்த்திகை மலருக்கும் தமிழர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெட்டத்தெளிவாகின்றது.

தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில் வாழுகின்ற மக்களின் இறை நம்பிக்கைளிலும் பூக்கள் பங்கு வகிக்கின்றன குறிப்பாக இந்துக்களினதும், பௌத்தர்களினதும் அன்றாட வாழ்வில் இறை வணக்கத்திற்கு பூக்கள் பயன்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஐதீகத்தின் பிரகாரம் வெள்ளை றோசாக்கள் மொகமட் ஆனவர் சொர்க்கத்திற்கு செல்கின்ற வழியில் அவரது இனிமைப்பாட்டின் வெளிப்பாடாக மலர்வதாகக் குறிப்பிடுவர். முருக ஆராய்ச்சியாளரும் கவிஞருமான அறிவுமதியவர்கள் பண்டைத் தமிழர்களின் போர்க்கடவுளாம் முருகனது மலரும் கார்த்திகைப் பூவே என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

<b>பண்டைய கிரேக்கத்தில் புன்னை ஆனது அப்பலோ தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுவதோடு புலமையாளர்களை கௌரவிக்கப்படுவதற்கும் உரியதாக விளங்கியது. ஒலிவ் ஏதேன்ஸ் நகர தேவதைக்குரியதாகவும், மெய்வல்லுனர்களையும், களத்தினில் சாதனை படைத்தோரையும் கௌரவப்படுத்துவதற்கும் உரியதாக இருந்தது. ரோமானியர்கள் தங்களுடைய புகழ்பூத்த தளகர்த்தர்களுக்கு சிந்தூர மரத்தின் இலைகளாலும் பூக்களாலும் வனையப்பட்ட கிரீடங்களைச் சூட்டினர்.</b>

இராணுவச் சின்னங்கள், நாடுகள், நகரங்கள், மாநிலங்கள் என்பனவும் தத்தமது இருப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த தமது சமூக கலாச்சார பண்பாடு பின்னிப் பிணைந்துள்ள பூக்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு குடியரசிற்கும் ஒவ்வொரு பூ குடியரசுப் பூவாய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியப் பூவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கார்த்திகைப் பூவைப் பற்றிய மூலாதார விடயங்களை அறிவோம்.

<b>கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பார். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே (Lili aceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்</b>.

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.

கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.

கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம் வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதுமுண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.

பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.

<b>தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும். </b>

இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம்: 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

<b>பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள், என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.</b>

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். <b>இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் - அக்கினிசலம் - எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் - இலாங்கிலி - எனவும் அழைக்கப்படும்.[இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும். அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் - தோன்றி - என்றும் அழைக்கப்படும். சுதேச வைத்தியத்திலே இதனை - வெண்தோண்டி - எனவும் அழைப்பர்./b] இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். இதனாலேயே இச்செடிக்கு மிக மேலான மாட்சிமை பொருந்தியது எனும் பொருளில் புடழசழைளய ளுரிநசடிய என்ற பெயரில் அழைப்பர்.

[b]கார்த்திகைப் பூவின் ஏனைய மொழிப் பெயர்கள் வருமாறு: சிங்களம்: நியன்கல, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி:கரியாரி, மராட்டி: மெத்தொன்னி</b>
தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)

தேசத்தின் பூவாம் கார்த்திகைப் பூவினை இனிவரும் காலங்களில் தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அணிந்து தேசியமாண்பினை வெளிப்படுத்துவோம். இல்லங்கள், பொதுக் கூடங்கள், வாணிப மையங்கள், கல்விச்சாலைகள் என எல்லாவிடங்களிலும் கார்த்திகைச் செடி வளர்த்துப் பேணி கார்த்திகைப் பூவால் தமிழர் தேசமதை நிறைத்திடுவோம்.

[b]தொகுப்பு: வீரநாதன்
நன்றி - தமிழ்நாதம்.கொம்
Nadpudan
Chandravathanaa
Reply
#11
தமிழீழத்துத் தேயத்துப் பூவைப் பற்றி தெரிவித்தமைக்கு நன்றி, திருமதி. சந்திரவதனாஅவர்களே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

-
Reply
#12
விபரங்களுக்கு நன்றி சந்திரவதனாக்கா.
காந்தல் மலரும், கார்த்திகைப்புூவும் ஒன்றா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
வசி அது காந்தல் இல்லை காந்தள் கார்த்திக்கைப் பூவை அப்படியும் அழைப்பார்கள்
\" \"
Reply
#14
பூ வின்ட நிறமும் மலரும் காலமும் தேசத்தின்ட வரலாற்ற சொல்றதான் இருக்கு. பாக்கிறவைக்கு விளங்கட்டும். சந்தோசம்!
Smile
Reply
#15
<img src='http://www.eelampage.com/flower/kaarthikai/Karthikai%20Poo1.jpg' border='0' alt='user posted image'>

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்ஙனம் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மலர்கள்; தரணியில் இலங்கிடும் தேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வழமை தொன்றுதொட்டு வேதாகமக் காலத்திலிருந்து நிலவி வருகின்றது. கிறித்தவ வேதாகம நூலின் பழைய ஏற்பாட்டிலிலே சாலமனின் பாடல் என்ற அத்தியாயத்தில் (song of solomon) பண்டைய எகிப்திய தேசத்தினை தாமரையும், நீலோற்பலமும் பிரதிநிதித்துவப்படுத்தின என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் மன்னர்கள் தத்தமக்கென தனித்தனியான மலர்களைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது சோழருக்கு அத்திப் பூவும், சேரருக்கு பனம் பூவும், பாண்டியர்க்கு வேப்பம் பூவும் தேசிய மலர்களாக இருந்ததுள்ளன.

மேற்குறிப்பிட்ட பூக்களின் மாலைகளையே அவர்கள் களமுனைகளுக்கு செல்லும் போது அணிந்து சென்றதாக அ. தட்சிணாமூர்த்தி என்பார் யாத்த 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்நூலில் குறுநில மன்னர்களும் தத்தமக்கு சொந்தமாக மலர்கள் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகின்றது. வீரத்தில் சிறந்தவர்களாம் வேளிர் மன்னர்களில் ஆய் அண்டிரன் என்பார்.

சிறுபுன்னைப் பூவின் மாலையையும், ஏறைக்கோன் என்பார் காந்தள் மாலையும் அணிந்ததாக மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே காந்தள் என்பது கார்த்திகைப் பூவின் பாரம்பரியத் தமிழ்ப் பெயராகும். இவ்வரலாற்றுச் சான்றாதாரத்தினூடாக கார்த்திகை மலருக்கும் தமிழர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெட்டத்தெளிவாகின்றது.

தேசத்தோடு மாத்திரமின்றி தேசத்தில் வாழுகின்ற மக்களின் இறை நம்பிக்கைளிலும் பூக்கள் பங்கு வகிக்கின்றன குறிப்பாக இந்துக்களினதும், பௌத்தர்களினதும் அன்றாட வாழ்வில் இறை வணக்கத்திற்கு பூக்கள் பயன்படுகின்றன. இஸ்லாமியர்களின் ஐதீகத்தின் பிரகாரம் வெள்ளை றோசாக்கள் மொகமட் ஆனவர் சொர்க்கத்திற்கு செல்கின்ற வழியில் அவரது இனிமைப்பாட்டின் வெளிப்பாடாக மலர்வதாகக் குறிப்பிடுவர். முருக ஆராய்ச்சியாளரும் கவிஞருமான அறிவுமதியவர்கள் பண்டைத் தமிழர்களின் போர்க்கடவுளாம் முருகனது மலரும் கார்த்திகைப் பூவே என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பண்டைய கிரேக்கத்தில் புன்னை ஆனது அப்பலோ தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுவதோடு புலமையாளர்களை கௌரவிக்கப்படுவதற்கும் உரியதாக விளங்கியது. ஒலிவ் ஏதேன்ஸ் நகர தேவதைக்குரியதாகவும், மெய்வல்லுனர்களையும், களத்தினில் சாதனை படைத்தோரையும் கௌரவப்படுத்துவதற்கும் உரியதாக இருந்தது. ரோமானியர்கள் தங்களுடைய புகழ்பூத்த தளகர்த்தர்களுக்கு சிந்தூர மரத்தின் இலைகளாலும் பூக்களாலும் வனையப்பட்ட கிரீடங்களைச் சூட்டினர்.

இராணுவச் சின்னங்கள், நாடுகள், நகரங்கள், மாநிலங்கள் என்பனவும் தத்தமது இருப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த தமது சமூக கலாச்சார பண்பாடு பின்னிப் பிணைந்துள்ள பூக்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு குடியரசிற்கும் ஒவ்வொரு பூ குடியரசுப் பூவாய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியப் பூவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கார்த்திகைப் பூவைப் பற்றிய மூலாதார விடயங்களை அறிவோம்.

கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பார். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே (Lili aceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும்.

கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.

கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம் வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதுமுண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.

பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம்: 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள், என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் 'அக்கினிசலம்' எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் 'இலாங்கிலி' எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும். அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் 'தோன்றி' என்றும் அழைக்கப்படும். சுதேச வைத்தியத்திலே இதiனை 'வெண்தோண்டி' எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். இதனாலேயே இச்செடிக்கு மிக மேலான மாட்சிமை பொருந்தியது எனும் பொருளில் புடழசழைளய ளுரிநசடிய என்ற பெயரில் அழைப்பர்.

கார்த்திகைப் பூவின் ஏனைய மொழிப் பெயர்கள் வருமாறு: சிங்களம்: நியன்கல, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி: கரியாரி, மராட்டி: மெத்தொன்னி

தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (<i>Liliaceae Glory lily</i>)

தேசத்தின் பூவாம் கார்த்திகைப் பூவினை இனிவரும் காலங்களில் தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அணிந்து தேசியமாண்பினை வெளிப்படுத்துவோம். இல்லங்கள், பொதுக் கூடங்கள், வாணிப மையங்கள், கல்விச்சாலைகள் என எல்லாவிடங்களிலும் கார்த்திகைச் செடி வளர்த்துப் பேணி கார்த்திகைப் பூவால் தமிழர் தேசமதை நிறைத்திடுவோம்.

தொகுப்பு: வீரநாதன்

1) தமிழர் வரலாறு: தேவநேயப் பாவாணர் (கழக வெளியீடு)

2) தமிழர் நாகரிகமும் பண்பாடும்: அ.தட்சிணாமூர்த்தி (ஐந்திணைப் பதிப்பகம்)

3) சென்னைப் பல்கலைக்கழக கலைக் களஞ்சியம்

4) நர்மதாவின் தமிழ் அகராதி

5) Encarta Reference Library 2003

6) Sri lankan Flowers New edition 2003

நன்றி தமிழ்நாதம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
GLORIOSA (Glorio'sa)

<img src='http://gflora.com/lilia/g_gloriosa.jpg' border='0' alt='user posted image'><img src='http://gflora.com/lilia/9320.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:red'>DESCRIPTION: They produce weak, trailing stems clothed with glossy leaves, which are tipped at the ends with tendrils to aid in climbing. These plants can reach heights up to 8 feet. Flame Lilies are valued for their exotic, 4- to 5-inch flowers whose wavy-edged petals are reflexed back as if blown by a strong wind. If the flowers are cut just before the petals bend back, they will last up to 8 days in an arrangement. Split the end of the main stem before putting it into the vase. G. rothschildiana is the prettiest of the Flame Lilies, reaching 3 to 6 feet in height and having whorled leaves. The wavy petals of its flowers are crimson, edged in bright yellow making the blossoms look like they're on fire. G. simplex produces orange and yellow flowers that open with a light greenish tinge. The vines reach about 3 feet in length. G. superba var. Lutea has pure yellow flowers with slender petals.

--------------------------

POTTING: Flame Lilies are hardy from zones 7 to 10. They prefer night temperatures ranging from 60 to 70 oF and day temperatures at 75 oF or higher with high humidity. They will tolerate night temperatures down to 50 or 60 oF. Grow Flame Lilies in fast draining, organic, acid to neutral soil in a location that receives light to medium shade. In the garden, plant the finger-like, L- or V-shaped tubers 2 inches deep. They should be set horizontally in the holes. To extend the blooming period, start the tubers inside in late winter then transplant to the garden. One to three tubers can be grown in an 8-inch container. Water and fertilize while in active growth throughout the blooming period. After blooming, gradually stop watering, then dig and store the tubers dry for about 6 months at 50 or 60 oF. They can be left in pots of dry soil until spring, when they should be replanted in fresh soil. In suitable climates, they may be left in the ground over winter if sheltered from cold, damp conditions.

---------------------------

PROPAGATION:

--------------------------

SPECIES & VARIETIES: G. superba var. Lutea, Rothschildiana; G. simplex (G. plantii); G. carsoni; G. rothschildiana var. citrina; G. x greenii 'Wilhelmina Green'.

Our Thanks to http://www.botanyworld.com/gloriosa.html

===================

<img src='http://gflora.com/lilia/g_gloriosa.jpg' border='0' alt='user posted image'>

[size=14]

The Encyclopedia of House Plants

Gloriosa

Family: Liliaceae. Common name(s): Glory Lily

Genus of one very variable species of climbing, tuberous perennial from woodland and forest, often by rivers, in tropical Africa and India. The Glory Lily bears large flowers in midsummer. Gloriosa is a vine. The flowers have an unusual shape and can be used as a cut flower. Provide a sunny growing area and a well-drained soil. When the foliage dies down, dig the tubers and store them in peat moss or vermiculite through the winter. Gloriosa rothchildiana grows 4 -6 ft or more. Swept-back petals are red with a yellow base - Gloriosa superba is similar but petals change from green to orange and finally to red.

Growing conditions

Average warmth.Keep cool (50-60F) in winter. Choose sunniest spot available.

Watering and misting

Compost must be kept moist at all times during the growing season. Reduce and stop watering in winter. Misting is necessary in summer.

Propagation

Remove and plant offsets at repotting time. Divide the tuber at planting time in the spring. Sow seed at 66-75 F (19-24 C) in spring </span>

Our Thanks to http://gflora.com/index.php?cmd=genus_body...dy&genus_id=153

===================

<img src='http://www.aspca.org/toxicplants/images/TN_IMG01464_300X300Y.jpg' border='0' alt='user posted image'>
<i>Gloriosa superba </i>

<img src='http://www.aspca.org/images/content/pagebuilder/151373.gif' border='0' alt='user posted image'>

Make Your Pet's Home Poison Safe: List of Toxic Plants.

<span style='color:blue'>Glory Lily

Common Name: Glory Lily

Scientific Name: Gloriosa superba

Family: Liliaceae

Toxic Principle: <b>Colchicine related alkaloids </b>

Clinical signs: <b>oral irritation, bloody vomiting, diarrhea, shock, kidney and liver damage, bone marrow suppression.</b></span>

Our Thanks to http://www.aspca.org/toxicplants/M01874.htm

---------------------

[size=14]<b>இவை அலரி போல் நச்சுத்தன்மை கொண்டிருப்பினும் அலரி வீடுகளில் வளர்க்கப்படுவது போல் இவையும் வளர்க்கப்படக் கூடியவையே....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஒரு சில முக்கிய தொடுப்புகள் இருப்பதனால்
அதனை இங்கு உருவிப்போடமுடியவில்லை.
பல விடயங்கள் இருக்கின்றன.கட்டாயம் பாருங்கள்

http://sundaravadivel.blogspot.com/
Reply
#18
யாழ்/yarl Wrote:ஒரு சில முக்கிய தொடுப்புகள் இருப்பதனால்
அதனை இங்கு உருவிப்போடமுடியவில்லை.
பல விடயங்கள் இருக்கின்றன.கட்டாயம் பாருங்கள்
http://sundaravadivel.blogspot.com/

++++++++++++++++++++++++++++++

உண்மையில் தேவையானதை நகைச்சுவையுடன் அந்த மாதிரி எழுதியிருக்கிறார்கள்.. பார்க்க வேண்டியது.
...... 8)
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)