Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தாத்ஸ் எப்பவும் நல்ல மேட்டர் சொன்னா ஏத்துப்பார்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கம்பஸ் போறவங்களுக்கு மட்டும் இங்கிலிஸ் சொல்லிக்குடுக்காம எல்லாருக்கும் கட்டாயமாக்கினா நல்லாருக்கும்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
படிச்சாலும் அது 3ம் வகுப்பிலதான் தொடங்குது, O/L கட்டாயம் இங்க்லிஸ் பாஸ் பண்ண தேவை இல்ல. இது எல்லாத்தையும் மாத்தி 1ம் வகுப்பிலருந்து கம்பஸ் வரை இங்க்லிஸ் கட்டாய பாடமாக்கணும். முடியும்னா தமிழ், சிங்கள மீடியத்த ஸ்டாப் பண்ணி இலங்கை முழுக்க கல்வி மற்ற எல்லாத்தையும் இங்க்லிஸ் மீடியமாக்கணும்.
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
BBC
இது உமக்குத் தேவைதானா?
தற்காலத்திற்கு ஆங்கிலம் அவசியம் - ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் -----
யார் மடையன் சொன்னான் ஆங்கிலம் தெரியாததால் தான் தமிழ் பற்றி பேசுகிறார்களென்று. இன்று தழிழனுக்காக தமிழ் பேசித்திரிபவர்கள் எல்லாம் உமது கணிப்பின்படி ஆங்கிலம் தெரியாதவர்களா?
ஆங்கிலத்தில் படித்தவர்கள் இன்று தமிழ் பேசினால் வெட்கம் என்று திரியுதுகள்.
லண்டனில் சில பாடசாலைகளின் விண்ணப்பப் படிவத்தில் கேட்டிறுக்கிறது - உமக்கு உமது தாய் மொழி படிக்க எழுத தெரியுமா என்டு - உம்மைப்ப்பொலவர் இல்லை என்றுதான் போட வேண்டும். இதை வெள்ளைகளெ நக்கல் பண்ணி சிரித்திருக்கிறார்கள். நீ ஒரு சாதனையாளன் அல்ல்து உயர்ந்தவன் என மற்றவர் உன்னை நினைக்க வேண்டும் ஏனில் உமக்கு உமது தாய் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
...... 8)
Posts: 120
Threads: 0
Joined: Jan 2004
Reputation:
0
BBC
இது உமக்குத் தேவைதானா?
தற்காலத்திற்கு ஆங்கிலம் அவசியம் - ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் -----
யார் மடையன் சொன்னான் ஆங்கிலம் தெரியாததால் தான் தமிழ் பற்றி பேசுகிறார்களென்று. இன்று தழிழனுக்காக தமிழ் பேசித்திரிபவர்கள் எல்லாம் உமது கணிப்பின்படி ஆங்கிலம் தெரியாதவர்களா?
ஆங்கிலத்தில் படித்தவர்கள் இன்று தமிழ் பேசினால் வெட்கம் என்று திரியுதுகள்.
லண்டனில் சில பாடசாலைகளின் விண்ணப்பப் படிவத்தில் கேட்டிறுக்கிறது - உமக்கு உமது தாய் மொழி படிக்க எழுத தெரியுமா என்டு - உம்மைப்ப்பொலவர் இல்லை என்றுதான் போட வேண்டும். இதை வெள்ளைகளெ நக்கல் பண்ணி சிரித்திருக்கிறார்கள். நீ ஒரு சாதனையாளன் அல்ல்து உயர்ந்தவன் என மற்றவர் உன்னை நினைக்க வேண்டும் ஏனில் உமக்கு உமது தாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். :evil: :twisted:
...... 8)
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம்
ஒரு நாளில் சிலமணி நேரம் இணையத்தை பார்க்காமல் இருந்தால் கருத்துக்களத்தை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது எத்தனை விதமான கருத்துகள் எதற்கு பதில் சொல்வது என்பது தெரியவில்லை பொதுவாக சொல்கிறேன்
முதலில் நாம் எந்த வேலையிலும் தமிழ் தான் எமது தாய் மொழி அதனால் தமிழ் மட்டும் தான் பேச வேண்டும் ஆங்கிலத்தை திரும்பியும் பார்க்கக்கூடாது என்று சொல்வதில்லை நீங்கள் தமிழ் வெறியன் என்று சொன்னாலும் சரி தமிழ்க் கிருக்கன் என்று சொன்னாலும் சரி எங்களுக்கு தேவை எமது தாய் மொழி இத்தனை காலமும் எமது முன்னோர் கட்டிக்காத்து எமக்கு பரிசளித்த முதுசம் அழிந்து போய்விடக்கூடாது
அதுதான் எமது குரலே ஒழிய ஆங்கிலத்திற்கு நாம் என்றும் எதிரானவர்கள் அல்ல ஏன் நான் எனது உயர்கல்வியை ஆங்கிலத்தில் தான் கற்கிறேன் ஆனாலும் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று மற்றவர்களுகு காட்டிகொண்டு இருப்பதை விட நான் தமிழன் எனது தாய் மொழி தமிழ் என்று கூறுவதில் பெருமையடைகிறேன் நான் பெருமை அடைவதுடன் நின்றுவிடாது எனது சந்ததிக்கும் இது சேரும் வகை தமிழை கட்டிக்காக்க வேண்டும் என நினைக்கிறேன் அதற்காக தான் பேசும் போதும் எழுதும் போதும் தமிழுடன் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கலக்க வேண்டாம் என்று சொல்கிறோம் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை உங்களுக்கு பல்வேறு மொழிகளில் இருக்கும் புலமையை எமது தாய் மொழியை வளர்ப்பதர்கு பயன் படுத்துங்கள் அதனை அழிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள்
இலங்கையில் ஆங்கிலக்கல்வி கட்டாயமாக்கப்படல் வேண்டும் இது எனது கருத்தும் கூட ஆனால் குடியுரிமை பத்திரத்தில் தமிழன் என்று கூறப்பட்டிருக்கும் ஒவ்வொருத்தனும் தமிழை நன்கு அறிந்திருத்தல் வேண்டும் இதுவும் கட்டாயமாக்கப்ப்ட வேண்டும்
இதை ஏன் வலியுறுத்துகின்றேன் என்றால் எனது நண்பன் யாழ்ப்பனத்தில் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் போது பெற்றோருடன் கொழும்பு வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டவன் பெற்றோர் பிள்ளையின் கல்வி முக்கியம் கருதி கொழும்பில் உள்ள பெயர் பெற்ற பாடசாலையில் சேர்த்து விட்டனர்.அவன் கல்வி கற்றது முழுவதும் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேசுவது ஆங்கிலத்தில் பெற்றொரின் காரணமாக நன்கு தமிழும் பேசுவான் ஆனால் எழுதத்தெரியாது........
இவன் ஒரு இலங்கை தமிழன் இது இவனது பிழை கூட இல்லை அவன் வளர்ந்த சூழல் அப்படி அவனுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை இப்படி எத்தனையோ தமிழ் குழந்தைகள் தமிழ் தெரியாத தமிழர்களாக அலைகின்றன
தமிழ் மொழியை படிப்பதும் படிக்காமல் விடுவதும் அவனது உரிமை ஆனால் அவனுக்கு தமிழ் கற்பித்திருக்க வேண்டியது அவனது பெற்றோரது கடமை அவனது பெற்றோர் அதிலிருந்து தவறும் போது அது சமூகத்தின் கடமையாகின்றது அது தான் அரசாங்கத்தின் வேலை இலங்கையில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் போது தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும்
சிஙபூரில் சட்டம் என்ன தெரியுமா ஓவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் தாய்மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் அவன் வேலை தேடுவதாக இருந்தாலும் சரி மேற்படிப்பு படிப்பதாக இருந்தாலும் சரி அடிப்படை தகமை தாய் மொழியில் சித்தி
இங்கு தமிழரின் எண்ணிக்கை ஓரளவுதான் உண்டு ஆயினும் தமிழ் இங்கு அரசகரும மொழி எமது மொழிக்கு தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ கொடுக்காத சிறப்பை இங்கு கொடுக்கிறார்கள்
இதையே எமது அரசாங்கம் செய்யுமா என்றால் இல்லை அதற்கு தமிழ் மொழி அழிவதில் சந்தோசமன்றி வேறில்லை எனவே அந்தக் கடமையை நாம் தான் செய்யவேண்டும் உலகப்பொதுமொழி ஆங்கிலம் கற்போம் நாம் கற்பதுடன் நின்று விடாது எமது தாய் நாட்டுக்குழந்தைகளும் கற்க வகை செய்வோம் ஆங்கிலம் மட்டும் என்றில்லை நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அத்தனை மொழியையும் படியுங்கள் அந்தந்த மொழியில் உள்ள பிரயோசனமானவற்றை தாய் மொழிக்கு கொண்டு வாருங்கள்
அதை விடுத்து ஆங்கிலம் தெரியாதவர்கள் தான் தனித்தமிழ் என்கிறார்கள் என்பது வெறும் பசப்பு
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்புவிற்கு
அப்பு ஆயுதம் தூக்கி போராடியதால் தான் எமது இனம் பல திக்கும் சிதைந்து போனது என்பது ஓரளவு உண்மை ஆனால் அந்த ஆயுதங்களால் தான் எமது மண்ணில் தமிழர் என்றொரு இனம் இன்னமும் மிச்சமிருக்கிறது இது பேருண்மை நீர் எழுதுவதை பார்த்தால் எல்லாம் விளங்கியும் விதண்டாவாதத்தில் நிற்பதாக தான் படுகிறது பரவாயில்லை கருத்து சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல உமக்கும் உண்டு தான் உம் பணியை தொடரும்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்பு உங்கள் கருத்து நீக்கப்படுவதன் முன் பார்த்தேன்
அவர்கள் வெளிநாடு போயும் தமிழில் தானே பேசுகிறார்கள் அது ஏன் உமக்கு கேலியாக இருக்கு வெளிநாட்டுக்காரர் இங்கு வந்து என்ன தமிழிலேயே பேசினவர்கள் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மொழி பெயர்க்கவில்லையா
எங்கள் சனம் சிங்களப்பகுதிகளில் போய் இருப்பது போர் நடக்கும் இடங்கள் பாதுக்கப்பாக இல்லை என்பதனால் தான் என்ன சிங்கள இடத்தின் மேல் பர்றுக்கொண்டா போனார்கள் போர் ஒய்ந்தால் மீண்டும் வருவார்கள்
சண்டை தொடக்கியது நாங்கள் என்று சொல்கிறீர்கள் ஏன் தொடங்கினோம் என்று சொல்லவில்லை அவன் அடிக்க வாங்கிக் கொண்டு வாய் மூடி இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீரா
தலைவர் பிரபாகரன் விடுதலை புலி உறுப்பினர் ஒவ்வொருத்தரும் ஆங்கிலம் கட்டாயம் படிக்க வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார்
இதற்கு என்ன சொல்கிறீர்
சரி ஆங்கிலம் படித்தால் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்துவிடுமா
வயசானால் ஒரு வியாதி வரும் தெரியுமா அறளை பெயருதல் என்று யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள் பழையது எல்லாமே மறந்துவிடும் தான் செய்வது தான் சரி என தோன்றும் முக்கியமாக சுரணை கெட்டுப்போகும்..
கவலைப்பட வேண்டிய விடயம் இந்த வியாதிக்கு மருந்தில்லை
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்பு உங்கள் கருத்து நீக்கப்படுவதன் முன் பார்த்தேன்
அவர்கள் வெளிநாடு போயும் தமிழில் தானே பேசுகிறார்கள் அது ஏன் உமக்கு கேலியாக இருக்கு வெளிநாட்டுக்காரர் இங்கு வந்து என்ன தமிழிலேயே பேசினவர்கள் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மொழி பெயர்க்கவில்லையா
எங்கள் சனம் சிங்களப்பகுதிகளில் போய் இருப்பது போர் நடக்கும் இடங்கள் பாதுக்கப்பாக இல்லை என்பதனால் தான் என்ன சிங்கள இடத்தின் மேல் பர்றுக்கொண்டா போனார்கள் போர் ஒய்ந்தால் மீண்டும் வருவார்கள்
சண்டை தொடக்கியது நாங்கள் என்று சொல்கிறீர்கள் ஏன் தொடங்கினோம் என்று சொல்லவில்லை அவன் அடிக்க வாங்கிக் கொண்டு வாய் மூடி இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீரா
தலைவர் பிரபாகரன் விடுதலை புலி உறுப்பினர் ஒவ்வொருத்தரும் ஆங்கிலம் கட்டாயம் படிக்க வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார்
இதற்கு என்ன சொல்கிறீர்
சரி ஆங்கிலம் படித்தால் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்துவிடுமா
வயசானால் ஒரு வியாதி வரும் தெரியுமா அறளை பெயருதல் என்று யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள் பழையது எல்லாமே மறந்துவிடும் தான் செய்வது தான் சரி என தோன்றும் முக்கியமாக சுரணை கெட்டுப்போகும்..
கவலைப்பட வேண்டிய விடயம் இந்த வியாதிக்கு மருந்தில்லை
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
வேறு ஒருபக்கத்தில் 3 வருடமாக இங்கு எழுதுகிறீர்கள் என்றீர்கள் உண்மையிலேயே உங்களை மதிக்கிறேன் தாத்தா ஆனால் வேண்டிய இடங்களில் ஏன்மரியாதையைக் காணோம் பரவாயில்லை... என்ன விரத்தி உங்களுக்கு உங்கள் கருத்துக்களின் ஆழம் விளங்கிறது உங்கள் நாராயண விழையாட்டும் விழங்கிறது. சிலவேளை யாழ் உள்வீட்டுக்குள் இருந்து கொண்டு கீ கொடுப்பதுபோலும் உள்ளது என்னவோ செய்யுங்கோ.... :? :wink: :roll:
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
எல்லோருமே தமிழர்கள் இங்கு
இங்குகூட ஒரு சிலர் ஏதோ எமக்குத்தான் ஆங்கில அறிவு இருக்கின்றது. நாம் ஆங்கில வார்த்தைகளை பாவிப்பதன் மூலம்தான் மற்றவர்கள் முன்னிலையில் நாம் படித்தவர்கள் ஆங்கில அறிவு உடையவர்கள் என்று காண்பிக்க நினைக்கின்றார்கள். உண்மையிலேயே அவர்களிற்கு அத்தகைய அறிவு எள்ளவும் இருக்குமோ என்பது சந்தேகத்துரியதுதான்.
உதாரணத்திற்கு ஒரு விடயத்திற்கு வருவோம்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆங்கிலப்புலமை உடையவர் அவர் எத்தகைய பேட்டிகளாகட்டும் கூட்டங்களாகட்டும் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என சொல்லலாம். அவரையே தமிழ் மகள் என்று மார்தட்டும் செல்வி ஜெயலலிதா இன்னாள் முதலமைச்சர் ஒரு தடவை கூறினார் கருணாநிதிக்கு ஆங்கில அறிவு இல்லை அதனால்தான் அவர் நான் சொல்வது சிலவற்றை புரிய மறுக்கின்றார் என்று அதேபோல்தான் எம்மவர்களும்
சிங்களவன் ஒரு தேசத்திற்கு போனால் அந்த நாட்டில் உள்ள சிஙகளவனுடன் கதைக்கும்போது தன் தாய்மொழியில்தான் கதைப்பான். என்ன படித்திருந்தாலும் அவன் தன்தாய்மொழியைவிட வேறு மொழி பாவிக்க மாட்டான். அதே இடத்தில் ஒரு தமிழன் இருப்பானானல் அவன் அங்கு தான் இருக்கும் நாட்டின் மொழியை பாவிக்க முயலுவான். இதை யாராலும் மறுக்கமுடியாது.
நிறைகுடம் என்றைக்குமே தளம்பியது இல்லை.
[b] ?