Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!
#1
செய்தி...

சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட 38 தமிழ் இளைஞர்கள் கைது

சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட தமிழ் இளைஞர்கள் 38 பேர் சிறிலங்கா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று காலை மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து சிறிலங்கா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இத்தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாணம், திருக்கோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம நகர்ப்பகுதியிலிருந்து வெலிகம மீன்பிடித் துறைமுகம் ஊடாக இத்தாலி செல்வதற்காக பாரஊர்தி ஒன்றில் சென்ற வேளையே இவர்கள் சிறிலங்கா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் சராசரி மூன்று தொடக்கம் நான்கு இலட்சம் ரூபாய்களைச் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட 400 சிங்கள இனத்தவர்கள் சோமாலியாவில் அநாதரவாக விடப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<span style='font-size:16pt;line-height:100%'>puthinam.com </span>


ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!

அரசியல் புகலிடமா.....பொருளாதார புகலிடமா...தற்போது தாயகத்தில் அரசியல் நெருக்கடி ஓரளவேணும் அமைதியாக இருக்கின்ற நிலையிலும் மேற்குலக நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்களினது செயற்பாடு...குறிப்பாக இளைஞர்களின் செயற்பாடு தொடர்வதன் மர்மம் என்ன...???!

இது ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் உண்மை நிலையை செப்புமா...உண்மையில் தாயக விடுதலை... உரிமை என்பது தாயகத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர மேற்கில் இருந்தல்ல....எனவே தமிழர்கள் போரைச்சாட்டாக வைத்துப் புலம்பெயர்வதென்னவோ....சுகத்திற்கும் சுகபோகத்திற்கும் என்பதாகவே படுகிறது.....இப்படிப்பட்டவர்களால் உண்மையான இன விடுதலையை தாயகத்தில் ஈட்டமுடியுமா...????!

இது தாயக்கத் தமிழர்களின் கோரிக்கைகளையும் முயற்சிகளையும் அவர்களின் சந்ததிகளின் கல்வி மற்றும் சமூகவியல் வளச்சியையும் எந்தளவு தூரம் பாதிக்கும் அல்லது ஊக்கிவிக்கும்....எங்கே உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

:!: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அத்தோடு இதையும் கொஞ்சம் படியுங்கள்....

இன்றைய இளம் சமுதாயம் எங்கே போகிறது? என்ன நடக்கிறது? எங்கோ தவறு நடக்கிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரியதாக இருக்கப் போகிறது. இதனை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு, விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற அன்டன் பாலசிங்கம் எழுதிய விடுதலை நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

புதுவை இரத்தினதுரை உரையாற்றும்போது, இன்றைய இளைய சமுதாயத்தினர் சுகமாக வாழலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எமக்கு என்ன பிரச்சனை தாம் உண்டு தமது வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். எமது சமுதாயத்தை கெடுப்பதில் தொலைக்காட்சி தொடர்களும், சினிமாக்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக எமது பாரம்பரியம் - கலை - கலாசாரம் சீரழிந்துகொண்டு போகிறது.

கணணிக்கு முன்னால் இருந்து பிள்ளை படிக்கிறது என்று பெற்றோர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் கணணிக்கு முன்னால் இருந்து படிக்கிறார்களா அல்லது பாழாகிப் போகிறார்களா என்று பார்ப்பது இல்லை. பாலியல் சம்பந்தமான இணையத்தளங்கள் இன்று உலகில் 36 இலட்சம் இருக்கின்றன. இவைகளைத்தான் பிள்ளைகள் பார்க்கின்றனர். இதனை பெற்றோர் கவனிப்பதாக இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.............. :!: :twisted:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் விநோகராதலிங்கம் முதற்பிரதியை வழங்க, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.

இந்நூலின் சிறப்புப் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் வெளியிட்டு வைக்க, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைவர் செந்தில்நாதனும், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பீடாதிபதி நந்தகோபாலும், வவுனியா வடக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆலோசகர் ஜெயச்சந்திரனும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, புத்தகத்தின் மதிப்பீட்டு உரையினை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பீடாதிபதி நந்தகோபால் மற்றும் வவுனியா வடக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆலோசகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள். நன்றி உரையினை எஸ்.என்.ஜீ நாதனும் வழங்கினார்.

வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானவேலு உரையாற்றும்போது வவுனியா மாவட்டத்தில் இளம் சமுதாயத்தின் நிலை படு மோசமாக இருக்கின்றது. அவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்று இங்கு உள்ள பிரதான பிரச்சனை குடும்பப் பிரச்சனை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை. கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு மனைவி வேறு ஆணோடு தொடர்பு இது தான் எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளாக இருக்கின்றது.

இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எமது சமுதாயம் அதள - பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. எமது சமுதாயத்திற்கு என்று ஒரு விழுமியம் பாரம்பரியம் உண்டு. இதனை இன்றைய இளம் சமுதாயம் மறந்து மிகவும் கேவலமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவு எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியாமல் உள்ளது. இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையெனில் இதன் விளைவுகள் பாரதூரகமாக இருக்கும் என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
விதைச்சது தானே முளைக்கும்..
முக்கனி மரங்களை முறிச்செடுக்கேக்கை.. அந்த நிலத்திலை முள்ளு எண்டு சொல்லச்சொல்ல விதைக்கேக்கை.. உவற்றை புத்தி எங்கை போனதாம்..?

அது கிடக்கட்டும் தனிநாடு பாட்டு காட்டு கிடைக்குமட்டும்தானெண்டு நீங்கள் அடிக்கடி தளத்திலை களத்திலை பாடுற பாட்டு சொல்லிது.. அப்படியிருக்க உதென்ன கேள்வி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
ஆனால்
புதுவை இரத்தினதுரை ஜயா
பிள்ளையள் அரட்டையிலை இருக்கிறதைச் சொல்ல மறந்திட்டார்


கவிதன்
Reply
#5
<b>குருவிகளே</b>


புலம் பெயரும் இளைஞர்கள் எல்லாம்
சுகத்தையோ
சுகபோகத்தையோ அனுபவிக்கவில்லை
இவர்கள்
கஸ்டத்தையும்
கடன் சுமையையும்
தனிமையையும்
வெறுமையையும்
வேலையின்மையும்
தூக்கமின்றியஉழைப்பையும்
தான் அனுபவிக்கிறார்கள்.
ஏதோ சிலபேர்தான் சுகபோகமான வாழ்கையை வாழுகிறார்கள்.
அதற்காக
இங்கு"ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதமாகாது"



கவிதன்
Reply
#6
குருவிகளே

நியமாக என்ன பாடுபடுகிறார்கள் புலம்பெயர்ந்த இளைஞர்கள் என்பதைப்பற்றி அறிய அயீவனின் இணையத்துக்கு போய் <span style='font-size:25pt;line-height:100%'>எச்சில் போர்வை</span> என்ற குறம் படத்தைப் பாருங்கள். பின்னர் சிந்தியுங்கள்.

குறும்படத்தைப் பார்க்க
http://home.no.net/yarl/alien_viel.asf

அயீவனின் இணையத்தளத்துக்கு
http://www.ajeevan.com/


கவிதன்
Reply
#7
Quote:இது ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் உண்மை நிலையை செப்புமா...உண்மையில் தாயக விடுதலை... உரிமை என்பது தாயகத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர மேற்கில் இருந்தல்ல....எனவே தமிழர்கள் போரைச்சாட்டாக வைத்துப் புலம்பெயர்வதென்னவோ....சுகத்திற்கும் சுகபோகத்திற்கும் என்பதாகவே படுகிறது.....இப்படிப்பட்டவர்களால் உண்மையான இன விடுதலையை தாயகத்தில் ஈட்டமுடியுமா...????!

இது உங்கள் கருத்தா குருவிகாள்?மேற்குலகில் இருந்துகொண்டே இனவிடுதலை பற்றிய எழுச்சியான சிந்தனைகள் படைக்கும் நீங்களா இப்படிக் கேட்பது?
\" \"
Reply
#8
இது எமது கருத்தல்ல..... ஆதங்கம்....உண்மையில் லண்டனை எடுத்துப் பார்ப்பீர்கள் என்றால் எத்தனை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகப் பிரச்சனை பற்றிய தெளிவு... அதன் தற்போதைய நிலை....அதன் இன்றைய, நாளைய சமூகத்தாக்கங்கள் என்று சிந்திப்பவர்களாக இருக்கின்றனர்.....மிகச் சிலரே என்பது தான் கசப்பான உண்மை.......அதுதான் நிதர்சனமும் கூட.......!

மற்றவர்கள் எல்லோரும் தாம் ஒன்று தம்பிழைப்பென்றும் தங்கள் குடும்பம் குட்டி என்றும்....சுகமும் சுகபோகமும் என்று வாழ்வதையே காண்கிறோம்....இதே நிலைதான் பெரும்பாலான புலம்பெயர்ந்த நாடுகளிலும் ...அப்பப்ப தாம் வெறுமையானவர்கள் என்று உணரும் போது மட்டுமே...தாயகம் தொடர்பான நிகழ்வுகளில் கவனம் செலுத்துகின்றனர்....தாயகம் தொடர்பான நினைவு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்...அதிலும் இளையவர்களை காண்பதென்பது அரிது...அப்படி வந்தாலும் ஏதோ வேடிக்கைக்காகத்தான் வருகின்றனர்....அண்மையில் ஒரு நெருங்கிய நண்பர் ஒருவருடன் புகைவண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது எதேட்சையாக அவரின் தாயக உறவுகள் மற்றும் நெருக்கடிகள் பற்றி கேட்ட போது அவை பற்றி கதையாதேங்கோ...அதைக் கதைச்சு ஆகிறது என்ன...எங்களுக்கு அதனால் என்ன கிடைக்கப் போகிறது என்று தாம் ஏதோ உறவுகள் அறுத்துவிட்டு புதிய உலகில் வாழ்பவர் போல் பதில் சொன்னார்....நாமும் அதோடு நிறுத்தி மேற்குலக டாம்பீகம் பற்றிக் கதைக்க மனிதர் விளாசித்தள்ளினார்....அதில் இருந்து அவருடைய தற்போதைய மனநிலையை நன்கறிய முடிந்தது...இதே நிலையை நாம் பலரிலும் அவதானித்தோம்...!!!!!

உதாரணத்துக்கு இன்னொன்று....இன்னொருவர் சொன்னார் எங்கட குடும்பத்தை எடுக்க வேணும் சகோதரிகளுக்கு இங்க பி.ஆர் மாப்பிள்ளை பாக்கிறன் அவையை எடுக்கிறதில பிரச்சனையில்ல.... தம்பிமார் இரண்டு பேரையும் இப்ப எடுக்கிறதுதான் கஸ்டமாக்கிடக்கு....உங்க அசைலமும் அடிக்கேலாது...பாப்பம் கனடா பக்கம் தான் எடுக்க வேணும் சிலபேரோட கதைச்சுக் கொண்டிருக்கிறன் எண்டு சொன்னார்....இத்தனைக்கும் அந்தக் குடும்பம் 90இல் இருந்து கொழும்பில் நல்ல வசதி வாய்ப்போடதான் இருக்கிறது....!!!! இப்படிப் பலதும் இருக்கிறது தொடர்கதையாய்.....

எமது கேள்வி இதுதான்.... எத்தனை தமிழர்கள் இதய சுத்தியுடன் தெளிவான பார்வையுடன் தாயகப்பிரச்சனையை தங்களின் சொந்தப் பிரச்சனை போல் அணுகுகின்றனர்....அப்படி அணுகுபவர்களை கைவிரல் விட்டு எண்ணலாம் மற்றவர்கள் எல்லோரும் சந்தர்ப்பத்தையும் பிரச்சனையையும் பாவித்து பயன்பெற்று நழுவ நினைக்கும் மனிதர்கள் என்பதே உண்மை......! உண்மையில் தாயகப் பிரச்சனை தொடர்பாக மேற்கில் செங்கொடி பிடிப்பவர்களில் பலரும் அதே நிலையில் தான் இருந்தாலும் ஏதோ கொடியாவது பிடிக்கிறார்களே என்று திருப்திப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது தோன்றவில்லை.....!!!!

இப்படியாக யதார்த்தச் சூழலை உணர்ந்து கொள்ளாது தாம் ஒன்று தம்பாடு ஒன்று என்று சமூகம் அறுத்து வாழ விளைவது தான் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி சமூக அக்கறையற்ற சமூகக் குற்றவாளிகள் பெருக இடமளிக்கின்றது......!

எனவே இவற்றிற்கான தீர்வு என்ன...அதை எப்படி மாயையில் கட்டுண்டு உளலும் தமிழர்களுக்கு மத்தியில் உணர்த்துவது.....?????! Idea

இதை எந்த வழியைக் கையாண்டும் செய்யத் தவறின் வெறும் குற்றம் சுமத்தல்களோடு குற்றவாளிகள் கண்முன் பெருக பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் மிஞ்சும்...அது தமிழர்கள் போன்ற சிறிய சமூகம் ஒன்றில் பாரிய பாதிப்பை உண்டு பண்ணும் என்பது மட்டும் நிச்சயம்....!

:twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
சரியாக சொன்னீர்கள் குருவி. நான் கூட கடந்த வாரம் ஓரு விசேசத்திற்கு சென்றிருந்தேன். விசேசம் என்னவோ தமிழ் முறைப்படி தான் நடந்தது. அனால் அங்கு வந்திருந்த சிலரோ வெள்ளைக்காரர்கள் போல நடந்தார்கள். பிள்ளை தமிழில் செல்ல பேச்சு பேச வேண்டிய சிறு பிள்ளைகள் ஆங்கிலம் தான் பேசினார்கள். பலரது நிலையையும் அறிந்து கொள்ளும் ஆசையில் சுற்றி பார்த்தேன் ஓரிருவர் மட்டும் தான் உறவினரை கண்டவுடன் ஊர் புதினம் பேசியதை கண்டேன். அதுவும் அவர்கள் வயது போனவர்கள் தான் இளைஞர்கள் பக்கம் பார்த்தேன். சுவாரசியமாக விஜயின் பட்டு பார்த்து கொண்டார்கள். இந்த நிலையில் செல்கிறது இருந்தாலும் தாய் நாட்டின் மேல் பாசமுள்ளவர்களும் இருக்கிறார்கள். அதை எண்ணி மகிழவேண்டியது தான். தானியாக வாழுகின்ற சிலர் பெற்றோரை. தாய் நாட்டை எண்ணி வருந்துபவர்களும் இருக்கிறார்கள். அடியோடு மறந்தவர்களாக பாசாங்கு செய்பவர்களும் இருக்கிறார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
8) 8) :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
நாம் தகுந்த செயற்பாடுகள் இன்றி தகுந்த விழிப்புணர்வுகள் இன்றி காலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம் என்றால்...நிச்சயமாக நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே விளைவுகள் கிட்டும்....! நெருங்கிய உறவுகள் தூர நிற்கும் நிலையே இருக்கும்.....!

:twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ஏன்ராப்பா.. அங்கைதான் வாய் பொத்து விருப்பமில்லாதவன் வெளியேறு எண்டு சொன்னியள்.. வெளியேறி இஞ்சை வந்தால் இஞ்சையும் இருக்க விடாயள்போலையிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
இப்ப புரிஞ்சு போச்சு நீங்கள் என்னத்துக்கு மாரடிக்கிறியள் எண்டது...அடியுங்கோ அடியுஙோ ஒரு நாளைக்கு உங்க மார்பே வலிக்கும்...அப்ப தெரியும் வலியும் நோவும் நோக்கமும்.....இப்ப புத்தியில ஏறாது மத்தியிலதான் ஏறும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
நீங்கதான் எழுதினியள்.. "வாய் பொத்து விருப்பமில்லாதவன் வெளியேறு" ஞாபகமில்லையோ..
ஒழுங்கான சனத்துக்கு ஒண்டும் போதிக்கத் தேவையில்லை.. ஆயுத அடக்குமுறையை விட்டு வெளியேறி வந்தவர்களது பகுத்தறிவு அளப்பெரியது.. யார் யார் ஆயுதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யார் யாருடைய போதனையை உள் வாங்கவேண்டுமென்று பகுத்தறிய அவர்களுக்குத் தெரியும்..
நன்றி..
Truth 'll prevail
Reply
#14
ஓமோம் தெரியுமே உங்கட பகுத்தறிவு....ரோட்டு ரோட்டா கஞ்சா விக்கிறதும் அடிதடிப்படுகிறதும்....கங் வைச்சு பெட்டைக்கு அலையுறதும்....இன்னும் வெளியில சொல்லேலாததும் செய்யுறியள் தெரியுமே....அதுதான் லண்டன் பொலிசே நாய் சங்கிலியோட அலையுது...நாமுந்தான் பார்த்தோமே மற்ற சிற்றியளில பொலிஸ் சும்மா திரியுது...லண்டனில மட்டும் நாய்ச் சங்கிலியோட திரியுது...குறிப்பா உங்கட ஆக்கள் இருக்கிற இடங்களில....லைசன்சே இல்லாமல் கார் ஓடுறது நாலு தெருவுக்கு கேக்க பாட்டுப் போட்டு காரோடுறது....அண்டரேஜில போய் சிகரட் பியர் வாங்கிறது...குடுக்காட்டி கல்லெறியுறது...போத்தில் எறியுறது கண்ணாடி உடைக்கிறது....உதெல்லாம் பிடிக்காமல் தானே வெள்ளைக்காரன் ஊரோடு காலி செய்து ஓடுறான் தெரியல்லையோ...உதாரணம் வேணுமோ....பிறகு லண்டன் எண்டு சொல்ல வெட்கப்படுவியள் எண்டுதான்....இதில அடைக்கிவாசிச்சிருக்கு......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதான் சொன்னமே உங்கட மாரட்டிப்பு என்னத்துக்கெண்டு விளங்கிட்டுதெண்டு....உப்படியே போனா நாளைக்கு நாயும் மதியாது உங்களையும் உங்கட பகுத்தறிவையும் எண்டதை மறந்திடாதேங்கோ.....!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
தான் பஸ் ஸ்ராண்டிலை நிண்டு செய்ததுகளை விலாவாரியா எழுதினவர்
இப்ப இப்பிடி அப்பிடி எழுதி தப்பிக்கப்பார்க்கிறார்..

ஏன்ராப்பா நீ செய்ததுகளைத்தானே சொல்லிக்காட்டுறாய்.. இப்ப வெள்ளைக்காரணுக்கை புகுந்திருந்துகொண்டு புத்தி சொன்னால்..
என்ன மற்றாக்கள மடையர் எண்ட நினைப்போ..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#16
பஸ்ராண்டில நிண்டது உங்கட ஆக்கள் கண்டது என்னவோ நாங்கள் தான்....அது உங்கட துரதிஷ்டம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கட ஆக்கள் செய்ததைச் சொன்னோடன சமாளிப்புக்கேசன் பலமா இருக்குது...எங்களுக்கு வெள்ளைக்காரனுக்க புகுந்திருக்கோணும் எண்டில்ல அவனோட கூடி இருக்க வேணும் எண்டதுதான் நிலைப்பாடு...அதுவும் அவன்ர ஊரில....அவனையும் மதிச்சு அவன் எங்களையும் மதிக்கற மாதிரி எங்கட தனித்துவதுக்குள்ள இருக்கிற சிறப்புக்களை வெளிக்காட்டத்தக்கதா இருக்க வேணும் எண்டதுதான்....

நீங்கள் சொன்னமாதிரி நாங்கள் உங்கட ஆக்கள் செய்யுறதைச் செய்திருந்தால் இப்ப இக்க எழுதம் எந்த ஜெயிலில இருந்து புட்போள் மச் பாப்போமோ யார் அறிவார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
இவர் தன்னுடைய பஸ் ஸ்ராண்ட சேட்டையை மறைக்கிறார்.. இவர் எழுதினதை இவரே மறந்திட்டார்..

அடடே.. புட்போல்மச்.. அங்கையெல்லாம் இருந்து பார்க்கலாமோ.. எனக்குத் தெரியாதே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
ஏன் தெரியாது...அதுதானே உங்கட ஆக்கள் அடிக்கடி போய் வாற இடமாச்சே.....ஏன் மறைக்கிறியள்.....உது உங்க சின்னப் பால் குடிக்கும் தெரிஞ்ச விசயமாச்சே....!

எங்க அந்த பஸ்ராண்டு விசயமா... நாங்க என்ன சொன்னம் எண்டதை ஒருக்கா திருப்பிச் சொல்லுங்கோ பாப்பம்...ஞாபகம் இருந்தா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
தான் போட்டு வந்து கதையளக்கிறறான்.. இல்லாட்டில் அங்கை ரிவி இருக்கிறது இவனுக்கு எப்பிடி தெரியும்..?

என்னுடைய பிள்ளையும் பஸ்சிவைதான் வாறது.. பவுத்திரமா கொண்டுவந்து விடுங்கோ எண்டதுக்கு என்ன பதில் நீங்கள் எழுதினியளோ.. அதுதானே உங்களது கலாச்சாரம் பண்பாடு..பிறகென்ன இப்ப அறிவுரை.. பகுத்தறிவு உள்ளவன் பகுத்து அறிவான்.. பாஞ்சு போறவன் பாஞ்சுதான் போவான்..
Truth 'll prevail
Reply
#20
ஐயோ...உந்த ரீவி எங்கையெல்லாம் இருக்கெண்டுறது நாளாந்தம் ரீவி பாக்கிறவைக்கு தெரியல்லை எண்டா...நீங்க லண்டனில இருக்கிறது வேஸ்ற்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்க சொன்னமாதிரி எழுத அதுக்கு நாங்கள் என்ன எழுதினம் எண்டதை...மீள ஒருக்காப் போய் வாசிச்சிட்டு வாங்கோ....அதுக்குப் பிறகு எங்கட கலாசாராசம் பண்பாடு பழக்கவழக்கம் என்னெண்டு விலாவாரியாச் சொல்லுறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)