Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ப் படம் ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?
#1
தமிழ்ப் படம் ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?<img src='http://thatstamil.indiainfo.com/images26/anna130.jpg' border='0' alt='user posted image'>

சுப.வீரபாண்டியன்

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தொடர்பான வாதங்கள் கொதி நிலையை எட்டியுள்ளது. தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பிறகு, அது இன்னொரு புதிய இடத்தைத் தொட்டுள்ளது.

முதலமைச்சரின் அறிக்கை, ஆங்கிலத்தில் பெயர் வைப்பது அண்ணாவின் இரு மொழிக் கொள்கைக்கு ஏற்றதே என்று கூறுகிறது. அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, அண்ணாவின் மொழிக் கொள்கையை இவ்வளவு மலிவுப்படுத்தலாமா? இப்படிக் கொச்சைப்படுத்தலாமா என்று கேட்க வேண்டியுள்ளது.

அண்ணாவின் மொழிக் கொள்கை என்ன என்பதை, "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்", "தமிழனின் மறுமலர்ச்சி ", "மாணவருக்கு அண்ணா", "அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்" முதலான அவருடைய பல நூல்கள் நமக்கு விளக்குகின்றன.

முன்னாள் துணைவேந்தர் அ.இராமசாமியின் "அண்ணாவின் மொழிக் கொள்கை", மு¬னைவர் சக்கரவர்த்தியின் "அண்ணாவின் விடுதலைச் சிந்தனைகள்" ஆகிய ஆய்வேடுகளில், அவரது மொழிக் கொள்கை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

எந்த நூலிலும், எந்த ஆய்வேட்டிலும், தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதற்கு அண்ணாவின் கொள்கை ஆதரவு தெரிவிப்பதாக நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால், அண்ணா உறுப்பினராக இருந்த அதே நாடாளுமன்ற மேலவையில் இன்று உறுப்பினராக இருக்கும், "பன்மொழிப் புலவரான" எஸ்.எஸ்.சந்திரன், "சைக்கிள்" எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சொல்லே இல்லை என்பது போல அறிக்கை விட்டிருக்கிறார்.

இதே சைக்கிள் குறித்து அண்ணா எழுதியுள்ள வரிகள் இப்போது நம் நினைவுக்கு வருகின்றன. பிற மொழியில் இருக்கும் எந்தச் சொல்லையும் தமிழாக்கி, அதாவது ஆங்கிலச் சொல்லையோ, சமசுகிருதச் சொல்லையோ அப்படியே தமிழில் உச்சரிக்காமல், அச்சொற்களை, எல்லாம் தமிழில் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்துக் காட்டாக, "சைக்கிள்" என்னும் ஆங்கிலச் சொல்லை, "ஈருருளி" என்றும், "பிரத்யட்சம்" என்ற சமசுகிருதச் சொல்லை "கண்கூடு" என்றும் வழங்கலாம் என்கிறார் அண்ணா ('மாணவர்க்கு அண்ணா').

அண்ணாவிற்கு முன்பு "துவிச் சக்கர வண்டி" என்றும், அவர் காலத்தில் "ஈருருளி" என்றும் அறியப்பட்ட "சைக்கிள்", இன்று மிக எளிமையாய் "மிதி வண்டி" ஆகிஉள்ளதை நாம் அறிவோம். அதை அறிந்து கொள்ள எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுக்கு நேரமோ, நிதானமோ இல்லாமல் போயிருக்கலாம்.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/jayawe400.jpg' border='0' alt='user posted image'>

அதுகுறித்து நாம் கவலைப்படவில்லை. ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஜெயலலிதாவிற்கு நேரம் இல்லாமல் போகலாமா? அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கை பற்றி அறிய, ஆயிரம் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை.

1963, மே 2ஆம் நாள், இந்திய நாடாளுமன்ற மேலவையிலும், 1968 சனவரி 23ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்திலும், அவர் ஆற்றியுள்ள இரண்டு உரைகளை மட்டுமே படித்தால் போதுமானது.

அதிலும் குறிப்பாக, 23.01.68 அன்று, இரு மொழிக் கொள்கையை ¬முன்மொழிந்து, ஒரு நாள் முழுவதும், சட்டமன்றத்தில் அவர் நிகழ்த்தியுள்ள உரைகளும், வாதங்களும் மொழி பற்றிய அவருடைய உள்ளக் கிடக்கையை நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டும்.

மும்மொழித் திட்டத்திற்கு மாற்றாக, இரு மொழிக் கொள்கையை அன்று அவர் முன்மொழிந்தார். இரண்டே இரண்டு நோக்கங்களுக்காகத்தான், தமிழுடன் ஆங்கிலம் சேர்ந்த இரு மொழிக் கொள்கையை அவர் கொண்டு வருகின்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களோடும், மத்திய அரசோடும், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் தேவை என்பதே அண்ணாவின் கருத்து.

மற்றபடி "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதே அண்ணாவின் மொழிக் கொள்கை என்பதை ஜெயலலிதா மட்டுமல்லாமல், சரத்குமார், நெப்போலியன் போன்ற திமுக நடிகர்களும் தெரிந்து கொள்வது நல்லது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் கொள்கை இன்று, "எங்கே தமிழ், எதிலே தமிழ்? " என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டது உண்மைதான். தமிழ் வழிக் கல்வியை அண்ணா ஆதரித்தார். ஆனால் இன்று ஆங்கிலப் பள்ளிகளே கள்ளிச் செடிகளாய் மண்டிக் கிடக்கின்றன. வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் கூடுதலாக திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கொடி கட்டிப் பறக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் அண்ணாவைப் பொறுப்பாக்க முடியாது.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதே அவரது மொழிக் கொள்கை என்பதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன. "நானும், திமுக கழகமும் ஆங்கிலத்திடம் பெரும் பற்றுக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம் என்று கூறும் அண்ணா, நான் ஆங்கிலத்திற்காக வாதாடுகிறேன், ஆங்கிலத்திற்காகப் பேசுகிறேன் என்றால், என்னுடைய தாய் மொழியை விட ஆங்கிலத்திற்கு உயர்ந்த இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அது மிகவும் வசதியான கருவி என்பதாலும், உள் நாட்டில் மட்டுமல்லாமல், உலக நாடுகளோடும் தொடர்பு கொள்வதற்கு அது உதவும் என்பதாலும் தான்" என்று, எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லாமல் தன் மொழிக் கொள்கையை விளக்குகின்றார்.

கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று பலமுறை அவர் வலியுறுத்தி இருக்கின்றார். இரு மொழிக் கொள்கையை முன் மொழிந்த அதே நாள், சட்டமன்றத்தில் "தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாட மொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது" என்ற தீர்மானத்தை அவர் முன் வைக்கிறார்.

நீதிமன்றங்களில் தமிழில் வாதாட முடியமா? என்று வினா எழுந்தபோது "தமிழில்தானே வாதாடினாள் கண்ணகி. அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல, வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது" என்று உறுதிபடக் கூறியவர் அண்ணா.

தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வினாவுக்கு, நம்முடைய ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்து விட்ட தமிழ் மொழிக்கு உரிய ஏற்றத்தைத் தருவோம். தமிழ் மொழி அதற்குரிய இடத்தை அடையும் வரை ஓய மாட்டோம் என்பதே (அண்ணாவும் அழகு தமிழும்) அண்ணாவின் விடையாக இருந்தது.

இந்திக்கு மாற்றாக ஆங்கிலம் என்பதுதான் அண்ணாவின் கோரிக்கையே அன்றி, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் என்பது ஒரு நாளும் இல்லை. எனவே, திரைப்படத் துறையினரின் ஆங்கில மோகத்துக்கும், ஜெயலலிதாவின் ஆங்கில ஆதரவுக்கும், தமிழின உணர்வை இம் மண்ணில் விதைத்த தலைவர்களுள் ஒருவரான அண்ணாவைப் பலியாக்கிட வேண்டா என்பதே நம் வேண்டுகோள்.

"தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்" என்று கேட்கும் குஷ்பு போன்ற சுத்தத் "தமிழச்சிகள்", "நாளை தமிழை உயர்த்திப் பிடிக்க அண்ணா யார்" என்றும் கேட்கக் கூடும். அதனை ஆதரித்து ஜெயலலிதாவும், நன்றி தெரிவித்து சரத்குமாரும் அறிக்கை விடவும் கூடும்.

அண்ணாவின் தொடர்தான் நம் நினைவுக்கு வருகின்றது "ஏ...! தாழ்ந்த தமிழகமே!

சுப.வீரபாண்டியன்
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தனது கீழ்த்தரமான அரசியலுக்காக அந்த நல்ல மனிதரை கூட ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை என்பதனைத்தான் அவரின் அண்மய நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன. அதனையும் விட முன்நாள் முதல்வர் (எம்.ஜி.ஆர்) என அழைக்கப்படும் இரமச்சந்திரனின் கொள்கைகளுக்கே முரணானவர் என்பது வெளிப்படை. அண்ணாவின் இருமொழி கொள்கைதனை விளங்கி கொள்ளாத இவரெல்லாம் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பது, தமிழ் நாட்டு மக்களுக்கே சாபக்கேடனது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
அவவிற்கு முதல்லை தமிழ் ஒழுங்கா தெரிஞ்சாதானே உதெல்லாம் தெரிய..அதைவிட அவா தமிழ்நாடடிற்கு என்ன என்ன சேவை செய்து முதலமைச்சரானவா??உதெல்லாம் கதைச்சு பிரயேசனமில்லைஉந்த தமிழ்நாடும் திருந்தாது அந்தமக்களும் திருந்நமாட்டார்கள் :evil: :evil:
; ;
Reply
#4
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த தமிழகம் இன்று தமிழைக்காப்பாற்ற அல்லாடுகிறது. தமிழுக்கு ஏன் இந்த பரிதாபநிலை?
வந்தாரை அரசாட்சி செய்ய விட்டு கைகட்டி சேவகம் செய்கின்ற தமிழகமக்கள் இவர்களை ஆயிரம் பெரியாரும் அண்ணவும் வந்தாலும் திருத்தமுடியாது.
கன்னடநாட்டு பரத்தையின் கால்களில் விழுந்து வணங்கும் தமிழகத்து முள்ளந்தண்டு இல்லாத ஆண்கள் இருக்கும்வரை எப்படித்தமிழகம் உய்யும்?
உலகப்படத்தில் ஒரு காலத்தில் தமிழீழத்தில் மட்டும் தமிழ்பேசும் மக்கள் இருப்பார்கள்.. இதை ஒருவராலும் மாற்றமுடியாது ஏனென்றால் அது தலைவரால் எடுக்கப்பட்ட முடிவு.
ஒருகாலத்தில் சோழன் கடல் கடந்து நாடுகளை வென்று ஆட்சிசெய்தான்.
இன்று அவனுடைய நாட்டை ஆட்சிசெய்ய கன்னடத்திலிருந்து வரும் நடிகர்கள் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டை அண்ணாவுக்கு பிறகு ஆட்சி செய்தவர்களில் மு.க. ஒருவர்தான் தமிழர் என்பது தமிழகத்தின் பரிதாப நிலையை காட்டுகிறது :x :x :x
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)