Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
சோபனா அக்கா உங்கள் உதவிக்கு நன்றி. இப்பகுதியை தனியான தொடர் ஒன்றில் குறிப்பிட இருந்தேன். எனவே உங்களுக்கு நேரம் இருந்தால் பின்வரும் குறித்த மூலகங்களின் விளக்கத்தை <b>ஒரு தொகுப்பாக</b> தயாரித்து தரவேற்ற முடிந்தால் மிகவும் நல்லது.
<b>
<i>
<big>
<small>
<sub>
<sup>
<tt>
<u>
<em>
<strong>
<strike>
மேலதிகமானது
<abbr>
<acronym>
<cite>
<code>
<dfn>
<kbd>
<samp>
<var>
என்றுடன் அன்புடன்
தமிழ்வாணன்.
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
ஆமாம் கவிதன் நன்றி பிழையை சுட்டிக்காட்டியதற்கு
தமிழ்வாணன் அண்ணா இன்று நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன் விளக்கம் கூறமுயற்சிக்கிறேன்...
நன்றி
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
இன்றும் இணையப்பக்கத்தில் கட்டுரை ஒன்றை வடிவமைக்கும்போது செய்யப்படக்கூடிய மேலதிக விடயங்களை பார்ப்போம்.
<b>1. பந்தியில் indent விடுதல்</b>
பந்திகளில் முதலாவது வாக்கியத்தை வலதுபுறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்த்துவதே indent ஆகும். இதனை செய்வதற்கு style எனும் பண்பை (attribute) பயன்படுத்தலாம்.
<p style="text-indent: 25 px">
என எழுதுவதன் மூலம் அப்பந்தியின் முதலாவது வாக்கியத்தை 25 பிக்ஸல் (pixel) தூரத்திற்கு நகர்த்தலாம்.
style பண்பை பயன்படுத்துவதன் மூலம் பல அழகுபடுத்தல்களை இணையப்பக்கத்தில் செய்யலாம். இது பற்றி பின்னர் தனியாகவும் விளக்கப்படும்.
<b>2. முதல் எழுத்து:</b> கட்டுரை ஒன்றின் முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதப்படுவதை கண்டிருப்பீர்கள். அதற்கும் குறித்த மீயுரை பயன்படுத்தவேண்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது பின்னர் நான் சொல்கிறேன்.
<b>3. <pre> மூலகம்</b><body> பகுதிக்குள் கீழே குறிப்பிட்ட மீயுரையை இட்டு பரிசோதித்து பாருங்கள்.
<pre>
1234
789 +
---------
2023
---------
</pre>
இவ்வாறு நாங்கள் தட்டெழுதுவது போலவே இணையப்பக்கத்திலும் தோன்ற செய்வதற்கு இம்மூலகம் பயன்படுகிறது.
<b>
4. ஒரு பந்தியின் நான்கு பக்கங்களிலும்</b> எவ்வளவு இடைவெளி விடப்படவேண்டும் என்பதும் அழகுபடுத்தலில் முக்கியமாகும். அதற்கு பின்வரும் மீயுரையை பயன்படுத்தவும்.
<p style="margin-bottom: 50 px; margin-top: 50 px; margin-right:50 px; margin-left: 50 px;">
இங்கு குறிப்பிட்ட அளவுகளை உதாரணமாக 50 இலிருந்து 100 ஆக தனித்தனியே மாற்றி விளைவுகளை அவதானியுங்கள்.
<b>
5.
மூலகம்</b>
பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகளை ஏற்படுத்த பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும்போதும் முடிவு மூலகம் தேவையில்லை.
<hr width="75%" color="green" >
இங்கு கிடைக்கோட்டின் அகலமானது 75% வீதம் என குறிக்கப்படுவதன் மூலம் எந்த அகலமுள்ள கணனித்திரையிலும் 75% அகலத்துக்கு கிடைக்கோடு வரையப்படும்.
<b>6. <div> மூலகம்</b>
முன்னர் கட்டுரை ஒன்றையோ பந்தி ஒன்றையோ வடிவமைக்கும் போது ஒவ்வொரு பந்திக்கும் தனித்தனியே அழகுபடுத்தலை செய்திருந்தோம். தற்போது குறிப்பிட்ட ஒரு பக்கத்தின் பகுதி ஒன்றை எவ்வாறு அழகுபடுத்துவது என்று பார்ப்போம். அதற்கு <div> எனும் மூலகம் பயன்படுத்தப்படுகிறது.
இவ் மூலகத்தில் மூலகத்தில் பயன்படுத்திய அனைத்து பண்புமாற்றங்களையும் செய்துபாருங்கள்.
மீண்டும் அடுத்ததொடரில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் அறியதாருங்கள்.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி இதுவும் பரீட்சித்து பார்த்தாச்சு
[b][size=18]
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்றைய தொடரில் சட்டங்களை கொண்டு இணையப்பக்கம் வடிவமைத்தல் (Layout with Tables) பற்றி குறிப்பிடுகிறேன். நாங்கள் விரும்பிய இடங்களில் படங்களையோ எழுத்துக்களையோ தோன்றச்செய்வதற்கு இச்சட்டங்கள்(Tables) முக்கியமானதாகும். அத்துடன் கற்றுக்கொள்வதற்கு மிகவும் இலகுவானதாகும். இலகுவானதொரு சட்டத்தை பார்ப்போம்.
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body style="font-family: Arial Unicode Ms, Latha">
வணக்கம் இது HTML தொடர் - 07.
<table border="1">
<caption>தமிழ்நெடுங்கணக்கு</caption>
<tr>
<th>வகை</th>
<th>தொகை</th>
</tr>
<tr>
<td>உயிர்எழுத்துகள்</td>
<td>12</td>
</tr>
<tr>
<td>மெய்எழுத்துகள்</td>
<td>18</td>
</tr>
<tr>
<td>உயிர்மெய்எழுத்துகள்</td>
<td>216</td>
</tr>
<tr>
<td>ஆய்தஎழுத்து</td>
<td>01</td>
</tr>
</body>
</html>
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/page7.JPG' border='0' alt='user posted image'>
மேற்குறிப்பிட்ட மீயுரையை பரிசோதித்து பாருங்கள் .ஒரு சட்டம் (Table) ஆனது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிரைகளையும் (Row) நிரல்களையும் (Column) களையும் கொண்டிருக்கும். நிரையை உருவாக்க <tr> மூலகமும் நிரலை உருவாக்க </td> மூலகமுமே பயன்படுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள <th> மூலகம் சட்டத்தின் தலைப்பை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் தடிப்பு (border) எனும் பண்பால் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.அதனை தேவைக்கேற்ப 0 இலிருந்து பெறுமானங்களை தெரிவுசெய்யலாம்.
அடுத்து சட்டத்தில் முக்கியமான விடயமான colspan, rowspan எனும் இருவிடயங்கள் பற்றி பார்ப்போம்.
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body style="font-family: Arial Unicode Ms, Latha">
வணக்கம் இது HTML தொடர் - 07.
<table border="1">
<caption>எனது தொடர்புக்கு </caption>
<tr>
<td rowspan=2>தொலைபேசி இல</td>
<td>0346782345</td>
</tr>
<tr>
<td>0994984321</td>
</tr>
</body>
</html>
இங்கு எனக்குறிப்பதன் மூலம் இரண்டு row கள் ஒரு column இல் ஒன்றாக்கப்பட்டுள்ளதை காணலாம்.
இதனை போலவே இரண்டு column கள் ஒரு row இல் ஒன்றாக்கப்பட்டுள்ளதை கீழுள்ள மீயுரையில் காணலாம் காணலாம்.
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>
<body style="font-family: Arial Unicode Ms, Latha">
வணக்கம் இது HTML தொடர் - 07.
<table border="1">
<caption>எனது தொடர்புக்கு </caption>
<tr>
<td colspan=3 align="center">தொலைபேசி இல</td>
</tr>
<tr>
<td>0346782345</td>
<td>035683456</td>
<td>0994984321</td>
</tr>
</body>
</html>
இவை தொடர்பான மேலதிக விடயங்களை அடுத்ததொடரில் பார்ப்போம். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்.
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
இன்று இங்கு சில மூலகங்களின் தொழிற்பாடுகளும் அவை ஏன் எங்கு எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்
HTML சில தொழிற்பாடுகளுக்கு பல மூலகங்களை பயன்படுத்தலாம்.. உதாரணமாக நாம் எழுதும் சொற்கள் தடித்தவடிவததி;ல் எழுதவிரும்பின் அச்சொற்களுக்கு முன் <b> எழுதி அச்சொல்லின் இறுதியில் </b> எழுதுவதன் மூலம் நீங்கள் விரும்பும் சொற்களை தடித்த வடிவில் (Bold) எழுதலாம். இதனையே இப்படியும் எழுதலாம் .......
Ex: <b> Yarl.com </b> OR Yarl.com
நன்றி
<img src='http://www.geocities.com/keetham_fr/HTML/Bold.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
எனக்கு தெரியாமலே இங்கு இரண்டு தொடர் முடிந்துவிட்டது, ஏன் மோகன் அண்ணா எனக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வரவில்லை?
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
என்ன ஹரி அடிக்கடி இணையத்தல் நிக்கிறீர்கள் HTML பகுதியை பார்ப்பதுஇல்லையா?
Posts: 88
Threads: 7
Joined: Mar 2005
Reputation:
0
தொடர்ந்து எழுதுங்கள் .... வாழ்த்துக்கள்
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<!--QuoteBegin-shobana+-->QUOTE(shobana)<!--QuoteEBegin-->என்ன ஹரி அடிக்கடி இணையத்தல் நிக்கிறீர்கள் HTML பகுதியை பார்ப்பதுஇல்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இணையத்தில் தான் முழு நேரமும் ஆனால் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வரும் போதுதான் அப்பகுதியை பார்ப்பது வழக்கம், தேடிச்சென்றுபார்ப்பதில்லை, என்ன கன நாட்களைச்சு அடுத்த தொடரை காணவில்லை என்று வந்துபார்த்தால் கனக்க விசயம் போய்யிட்டு!
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
ஷோபனா அக்கா ஒரு வசனத்த சிவப்பு நிறத்தால மார்க் பண்ண என்னெண்டு கோட் எழுதுறது ஒருக்கா சொல்லித் தாங்கோவன்
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
இன்றைய தொடரில் ஒரு சட்டத்தில் எவ்வாறு colspan, rowspan பண்புகளை பயன்படுத்தி வடிவமைப்பது என்று பார்ப்போம்.கீழ்வரும் மீயுரையை பரிசோதித்து கொள்ளுங்கள்.
<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
</head>
<body style="font-family: Arial Unicode Ms, Latha">
வணக்கம் இது HTML தொடர் - 08.
<table border="1" width="200" cellpadding="50" cellspacing="10">
<tr>
<td colspan="2">இங்கு இரண்டு cols ஒன்றாக்கப்பட்டுள்ளது.</td>
<td rowspan="2">இங்கு இரண்டு rows ஒன்றாக்கப்பட்டுள்ளது.</td>
</tr>
<tr>
<td>4</td>
<td>5</td>
</tr>
</table>
</body>
</html>
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/page8.JPG' border='0' alt='user posted image'>
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பண்புகளுக்கான மாற்றங்களை செய்து பாருங்கள்.
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
இதுவரை நடந்த 08 சுற்றுகளிலும் எதிர்பார்த்தவாறு வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்யகூடியவாறு பதிவுகள் இருக்காததன் காரணமாக தற்காலிகமாக இத்தொடர் நிறுத்தப்படுகிறது.
.