Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் இணைய தளத்தை அடையாளம் காட்ட...
#1
<b>உங்கள் இணைய தளத்தை அடையாளம் காட்ட... </b>

உங்களைப் பற்றி, உங்கள் திறமைகள் குறித்து, நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பது குறித்து ஓர் அழகான தகவல்கள் பொதிந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதனை மற்றவர்கள் பார்த்து தெரிந்து கொண்டால் தானே பயன் கிடைக்கும். இதற்கான வழி என்ன? இங்கு பார்ப் போமா?

உங்கள் வெப் தளத்தின் முகவரியை மற்றவர்களுக்கு எப்படி தெரிவிக்கலாம்? தெரிந்தவர்களிடம் என்றால் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கூறி விடலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் வெப் தள முகவரியை டைப் செய்யலாம். துண்டு பிரசுரங்கள் மூலம் உள்ளூரிலும், வெளியூரிலும் விநியோகம் செய்யலாம். உலகம் முழுக்க உள்ளவர்களுக்கு உங்களால் இவ்வாறு தெரிவிக்க முடியுமா? முடியாது. இங்குதான் சர்ச் எஞ்சின் உங்களுக்குக் கை கொடுக்கிறது.

பலர், ஏதாவது வெப்தளத்தின் முகவரி வேண்டுமெனில், ஏதாவது ஒரு பொருள் குறித்த இணைய தளங்கள் வேண்டு மெனில் சர்ச் எஞ்சினில் நுழைந்து தேடுகிறார்கள். சர்ச் எஞ்சின் தேடித் தருகிற விடை பட்டியலில் உங்கள் தளத்தின் பெயரும் இருந்தால், தேடியவர்கள், உங்கள் தளத்தில் நுழைவார்கள்.


இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய 5 கோடி வெப் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு வெப்தளத்திலும் பத்து அல்லது நுõறு என வெப்பக்கங்கள் காணப்படும். இவ்வாறு உள்ள கோடிக் கணக்கான வெப் பக்கங்களில், உங்களது வெப்பக்கங்களும் அடங்கும்.

சர்ச் எஞ்சின் தேடித் தருகிற விடையின் முதல் நான்கைந்து பக்கங்களில் உங்களது வெப் பக்கமும் காணப்பட்டால், உங்கள் தளத்தில் மக்கள் நுழைவதற்கான வாய்ப்பு உண்டு. சர்ச் எஞ்சினின் விடைப் பட்டியல் ஆயிரம் பக்கங்களாக நீண்டு அதில் உங்கள் தளம் கடைசி பக்கங்களில் இருந்தால் எவரும் உங்கள் தளத்துக்கு வருகை தர மாட்டார்கள். இதற்கு என்ன செய்திட வேண்டும்? அதற்கு சர்ச் இஞ்சின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

சர்ச் எஞ்சின் உங்கள் தளத்தை எவ்வாறு அடையாளம் காண்கிறது?

Spider, Web Crawler, Robo, Bot போன்ற புரோகிராம்களை சர்ச் எஞ்சின்கள் பயன்படுத்துகின்றன. இவை புதுப்புது வெப் பக்கங்களை தேடிக் கண்டு பிடித்து அந்த பக்கங்களில் உள்ள சொற்களை வைத்து அந்த வெப் பக்கம் என்ன கூறுகிறது என்பதைக் கண்டு பிடித்து, அதற்கான பிரிவின் கீழ் உங்கள் வெப் பக்கத்தைச் சேர்த்து விடும்.

சர்ச் எஞ்சின் தேடிக் கண்டு பிடிக்க கொஞ்ச காலம் ஆகலாம். அதுவரை உங்களுக்குப் பொறுமை இல்லை என்றால் நீங்களாக நேரடியாக சர்ச் எஞ்சினில் நுழைந்து உங்கள் தளத்தை அதற்கு தெரிவிக்கலாம்.

உங்கள் வெப் பக்கத்தை சர்ச் எஞ்சின் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமானால் உங்கள் வெப் பக்கத்தில் Meta என்ற டேக்கை (Tag) நீங்கள் பயன்படுத்த வேண்டும். HTML மொழி தெரிந்தவர்களுக்கு டேக்கை பயன்படுத்தத் தெரியும். எனினும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கில் அது பற்றிய விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

META டேக்கினை பயன்படுத்த:

META டேக்குடன் Name என்ற அட்ரிபியூட்டை பயன்படுத்த வேண்டும். Name அட்ரிபியூட்டின் மதிப்பாக Description அல்லது Keywords என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் Content என்ற அட்ரிபியூட்டை பயன்படுத்தி அதில் Description அல்லது Keywords பற்றிய விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.

சென்னையில் குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனத்தை நீங்கள் நடத்துவதாகவும், உங்கள் வெப் பக்கத்தில் அது பற்றிய விபரங்களைக் குறிப்பிட்டு, அவற்றை சர்ச் எஞ்சின்கள் பயன்படுத்த விரும்புவதாகவும் நாம் வைத்துக் கொள்ளுவோம். இந்த எடுத்துக் காட்டின்படி எப்படி உங்கள் வெப் பக்கத்தில் ஹெச்டிஎம்எல் மொழியின் META டேக்கை பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.

வெப் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டிய HTML டேக் இது:

<META NAME=Description Content=''Chennai Flat Sales, Flat at Chennai in reasonable price, the best flat seller in Chennai, Most reliable Flat seller in Chennai, CDMA approved flats in Chennai, Individual Luxury Duplex Bungalows in Chennai, Luxury Type Independent House in Chennai, Uniquely Designed House in Chennai, Independent House designed by experienced Architect''



உங்கள் வெப் தளத்தின் முக்கிய சொற்கள், உங்கள் நோக்கம் போன்ற எல்லா விபரங்களும் மேலே கண்டுள்ள Content என்பதில் Description மதிப்பாக குறிப்பிட்டு விட வேண்டும்.

இன்னும் ஒரு வேலையை நீங்கள் செய்ய வேண்டும். சர்ச் எஞ்சினில் நுழைபவர்கள் முக்கிய சொற்களை வைத்துத் தளங்களைத் தேடுவார்கள். என்ன சொற்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அந்த சொற்களை Keywords என்பதற்கு நீங்கள் குறிப்பிட வேண்டும்.

<META NAME=Keywords Content='' Flats, Houses, Bungalows, Chennai''>

Content மதிப்பாகக் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லை அடுத்தும் காற்புள்ளியை இட வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

சர்ச் எஞ்சினிற்கு நீங்கள் தெரிவிக்க Spider, Web Crawler, Robu Bots போன்ற புரோகிராம்களை வைத்து சர்ச் எஞ்சின்கள், வெப் தளங்களையும், வெப் பக்கங்களையும் கண்டு பிடிக்கும் என்று பார்த்தோம்.

சர்ச் எஞ்சின்கள் மற்றும் டைரக்டரிகள் என இரு வகையாக தேடல் தளங்கள் உள்ளன. META டேக்கினுள் கொள்ளும் டைரக்டரியால் அதைக் கண்டு பிடிக்க முடியாது. எனவே நீங்கள்தான் அதை டைரக்டரிக்கு தெரிவிக்க வேண்டும்.

டைரக்டரிக்கு தெரிவிப்பதை சர்ச் எஞ்சினுக்கும் தெரிவிக்கலாம், தப்பில்லை. நீங்கள் தெரிவிப்பதற்காகவே பல டைரக்டரிகளிலும், சர்ச் எஞ்சின்களிலும் Submission, அல்லது Request அல்லது Add URL போன்ற பொருள்படுகிற பெயர்களில் பட்டன்கள் அல்லது லிங்க்குகள் இருக்கும். அந்த பட்டனை அல்லது லிங்க்கை நீங்கள் கிளிக் செய்து உங்கள் தளம் பற்றி தெரிவிக்கலாம்.

கீழே உள்ள அட்டவணையில் ஒரு சில தளங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

சர்ச் எஞ்சின் அல்லது டைரக்டரி பெயர் தகவல் தர வேண்டிய வெப் பக்கத்திற்கான முகவரி

யாஹு: http://submit.search.yahoo.com/free/request

கூகிள்: www.google.com/addurl.html

எம்எஸ்என்: http://submit.bcentral.com/msnsubmit.htm

நன்றி: வானம்பாடி
Reply
#2
நன்றி ஹரி மிகவும் பயனுள்ள விடையம்....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி ஹரி அண்ணா
. .
.
Reply
#4
நன்றி ஹரி அண்ணா...
Reply
#5
நல்ல தகவலுக்கு நன்றி அண்ணா.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
நன்றி மன்னா
[b][size=18]
Reply
#7
நன்றி ஹரி அண்ணா
Reply
#8
நன்றி ஹரி.

கீவேர்ட்ஸ் என்கிற இடத்தில் உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தைத்தான் எழுதவேண்டும் என்றல்ல. மிகவும் பலரும் விரும்பித் தேடும் சொற்களையும் இணைக்கலாம். உதாரணமாக உங்கள் தளம் தமிழ் வாசகர்களை மையமாகக் கொண்டது என்றால்:

tamil, eelam, srilanka, india, tamil actress, cinema, ltte, liberation, simran, sneha, pirabakaran, tiger, tamilnadu, new movies, download, mp3, tamilsongs

இப்படி உங்கள் தளத்துக்கு சம்பந்தமில்லாததும், சம்பந்தமானதும் என கலந்து எழுதலாம். இதுதவிர sex, love போன்ற சொற்களையும் சேர்க்கலாம். இவை உங்கள் தளத்தைப் பிரபலப்படுத்துவதற்குத்தான். உங்கள் தளத்தை அடையாளப்படுத்துவதற்கு மட்டுமென்றால், அதுபற்றியதான சொற்களை இணையுங்கள். மற்றும்படி நீங்கள் dynamic முறையிலான இணையத்தளங்களை வைத்திருந்தால், நீங்கள் உங்கள் தளத்தில் எழுதும் செய்திகளையே keywords ஆக பயன்படுத்துமாறு செய்யலாம். தானாகவே ஒவ்வொருநாளும் புதிது புதிதாக சொற்களை சேர்த்துக்கொள்ளும்படி செய்யலாம்.


Reply
#9
இளைஞன் Wrote:நன்றி ஹரி.

கீவேர்ட்ஸ் என்கிற இடத்தில் உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தைத்தான் எழுதவேண்டும் என்றல்ல. மிகவும் பலரும் விரும்பித் தேடும் சொற்களையும் இணைக்கலாம். உதாரணமாக உங்கள் தளம் தமிழ் வாசகர்களை மையமாகக் கொண்டது என்றால்:

tamil, eelam, srilanka, india, tamil actress, cinema, ltte, liberation, simran, sneha, pirabakaran, tiger, tamilnadu, new movies, download, mp3, tamilsongs

இப்படி உங்கள் தளத்துக்கு சம்பந்தமில்லாததும், சம்பந்தமானதும் என கலந்து எழுதலாம். இதுதவிர sex, love போன்ற சொற்களையும் சேர்க்கலாம். இவை உங்கள் தளத்தைப் பிரபலப்படுத்துவதற்குத்தான். உங்கள் தளத்தை அடையாளப்படுத்துவதற்கு மட்டுமென்றால், அதுபற்றியதான சொற்களை இணையுங்கள். மற்றும்படி நீங்கள் dynamic முறையிலான இணையத்தளங்களை வைத்திருந்தால், நீங்கள் உங்கள் தளத்தில் எழுதும் செய்திகளையே keywords ஆக பயன்படுத்துமாறு செய்யலாம். தானாகவே ஒவ்வொருநாளும் புதிது புதிதாக சொற்களை சேர்த்துக்கொள்ளும்படி செய்யலாம்.

அது எப்படி என்று சொல்லுங்களேன் இளைஞன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
சரி அதுபற்றி எழுதுகிறேன் கவிதன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#11
இளைஞன் Wrote:சரி அதுபற்றி எழுதுகிறேன் கவிதன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி இளைஞன்
[b][size=18]
Reply
#12
தகவலுக்கு நன்றி ஹரி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
தகவலுக்கு நன்றி ஹரி இளைஞன்அதுபற்றி எழுது வதுக்கு நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#14
ஹரி மற்றும் இளைஞன் கூறியதுபோல.. எனக்கு தெரிந்த ஒன்றை கூறலாம் என நினைக்கிறேன். நீங்கள் உங்களின் வலைத்தளங்களையே அல்லது வலைப்பூக்களையே ஒவ்வொரு சர்ச் எஞ்சின்களாக சென்று பதியதேவையில்லை. எங்களின் இணையத்தில் பதிந்துவிடுங்கள் நாங்கள் இணையத்தின் Top சர்ச் எஞ்சின்களான கூகிள், லைக்கோஸ்,ஹாட்பாட்,ஆல்தவெப்,என்டயர்வெப்,எக்ஸாக்ட்ஸீக்,சப்ஜெக்ஸ் போன்ற 18 சர்ச் என்சின்களின் பதிவுசெய்கிறோம் என்கிறது இத்தளம். (www.addme.com)

நீங்களும் முயற்சிசெய்துபாருங்கள்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)