Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
இன்று முதல் 26-09-2003 நவராத்திரி தொடங்குகிறது...
<img src='http://www.neonblue.com/tfs/saras.jpg' border='0' alt='user posted image'>
அலை மகள், மலை மகள், கலை மகள் மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
9 நாளும் நவ தானியங்களை சுண்டல் செய்து படைப்பர். பாசிப்பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயறு, கொண்டை கடலை, போன்றவற்றில் நைவேத்தியங்கள் படைக்கப்படும்
நவராத்திரி தினங்களின் போது அபிராமி அந்தாதி சகலகலாவல்லி மாலை என்பன படிக்கப்படும்.
இதன்போது பயறு முளைக்க போடுவார்கள் (நவதானியத்தில் ஒன்று)
யாழ்ப்பாணத்தில்.. சரஸ்வதிபூசைக்கு புத்தகங்கள்.. வாத்தியங்கள் வைப்பார்கள்
கொழும்பில் தமிழ்நாட்டு முறைப்படி கொலுவைப்பதை பார்த்திருக்கிறேன்.
10வது நாள் விஜயதசமி அன்று.. பாடசாலையில்.. ஏடு தொடக்குவார்கள்..
நவராத்திர சம்பந்தமாக மேலும் தகவல் கதைகள் தெரிந்தால் எழுதுங்கள்...தேவாரமும் எழுதுங்கள்
நவராத்தியில் அம்மனை பிரார்த்தித்து நலம் பெறுவோம்.
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>நவராத்திரியும் முப்பெரும் தேவியரும்... </span>
<img src='http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/images/nava-01a.jpg' border='0' alt='user posted image'> <img src='http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/images/nava-06a.jpg' border='0' alt='user posted image'><img src='http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/images/nava-03a.jpg' border='0' alt='user posted image'><img src='http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/images/nava-05a.jpg' border='0' alt='user posted image'><img src='http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/images/nava-09a.jpg' border='0' alt='user posted image'>
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில் துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்விக் கடவுளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.
பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்' விரிவாகப் பேசுகிறது.
புராணங்களிலேயே 'தேவி பாகவதம்' ஈடு இணையற்ற ஒன்றாகப் போற்றப்படுகிறது. விரதங்கள், அனுஷ்டானங்கள் ஆகியவற்றால் கூட பெற முடியாத உன்னத பலன்களைத் தேவி பாகவதத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் பெற முடியும் என்கின்றனர் முக்காலம் உணர்ந்த முனிவர்கள்.
தீர்த்த யாத்திரை, ஸ்தல யாத்திரைகளால் அடையும் அரும் பயனையும், தானம், தவம் மூலம் பெறும் அரிய பலன்களையும் கூட தேவி பாகவதத்தைக் கேட்பதன் மூலம் பெற முடியும் என்பது வேத வியாசரின் கருத்து.
பரீஷித் மகராசனின் மகன் ஜனமேஜயன ராஜனின் கலக்கத்தைப் போக்க சிறீவேத வியாசர் ''தேவி பாகவதத்தை'' போதித்ததாகப் புராணங்கள் பேசுகின்றன.
அத்தனை தெய்வங்களுமே, அந்தத் தேவியின் ஒப்பற்ற மாயையினால்தான் திகழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே.
பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம். ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே நித்திய யுவதி. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து, துதி செய்தால் அருட் கடாட்சத்தை அள்ளி வழங்குவாள்.
நாளெல்லாம் அம்பிகையை வணங்கினாலும் ராசிகள் 12-ல் மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும் அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும்.
புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான சிறீதுர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான சிறீ மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான சிறீ சரஸ்வதியையும் வணங்க வேண்டும்.
முதல் மூன்று நாள்கள் துர்க்கா சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் முதலான வகைகளாலும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி அஷ்டோத்ரம், லட்சுமி சகஸ்ரநாமம் முதலான வகைகளாலும், கடைசி மூன்று நாள்களில் சரஸ்வதி அஷ்டோத்ரம், சரஸ்வதி சகஸ்ரநாமம் ஆகியவையினாலும் அம்பாளை வழிபடலாம்.
புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப விஷயங்களைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் துவங்க வேண்டும்.
ஆண்டில் சித்திரை மாதத்தில் வசந்த ராத்திரி என்றும், ஆடியில் ஆஷாட நவராத்திரி என்றும், ஐப்பசியில் சாரத நவராத்திரி என்றும் சில கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும், புரட்டாசியில் வரும் சுக்லபட்சப் பிரதமையில் தொடங்கும் நவராத்திரியே அம்பாளைத் துதித்துப் போற்ற ஏற்ற காலமாகும்.
புரட்டாசி மாதத்தில்தான் நவக்கிரகங்களில் ஒரு நாயகமாக உள்ள சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறான். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். இவனே வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
நவராத்திரியில் கொலு வைப்பது வழக்கம். அமாவாசை அன்றே படிக்கட்டுகள் வைத்து பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதும், விஜய தசமியன்று ஒன்றிரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டுப் பின்னர் கலைக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம். தேவியரை வணங்குவதால் எதையும் பெறலாம். ராமர் கூட ராவணன் மீது போர் தொடுக்கும் முன் நவராத்திரி விரதமிருந்து சக்தியிடம் ஆசி பெற்றதாகக் கூறுவதுண்டு. அவதார புருஷர்களே அன்னையை வணங்கினார்கள் என்றால் நாமும் வணங்கி நலம் பெறுவோமே.
எழுத்தும் படங்களும்
ரா.சுந்தரமூர்த்தி.
நன்றி
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி தகவலுக்கு.
கதையோடு கதையாக ஒரு கொசுறுதகவல்
முன்னர் யாழில் பிரபலமான விக்னா ரியுட்டரி ஆரம்பமான முதல் பச்சில் நாமும் இருந்தோம்
அது ஒரு பொற்காலம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி விடயத்திற்கு வருகிறேன்.அங்கு ஈபிஆர்எல்எப் முதல்வர் வரதா அவர்கள் ஆசரியராக கடமையாற்றிய சமயம் அது. நவராத்திரி விழா கொண்டாடினோம்.அதில் அவரை உரையாற்றசொன்னார்கள்.
அவர் உரையாற்றியது இன்றும் ஞாபகமாகவிருக்கிறது
தனக்கு இதில் நம்பிக்கையில்லையெனவும் ஆனால் இதனை ஒரு தாய்க்கு பெருமை சேர்க்கும் விழாவாக இதை கருதுகிறேன் எனவும் கூறி தாய் பற்றி கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.
பின்னர் அவரை காலங்கள் எப்படி மாற்றியது எனவும்.எத்தனை தாய்மார்கள் கண்ணீர் விட்டார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மைகள்..
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வணக்கம்
தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றி
யாழ் அண்ணா, திரு.வரதர் ஆசரியராக கடமையாற்றினார் என்ற தகவல் இன்றுதான் அறிந்தேன். நன்றி.
யாழ்/yarl Wrote:நன்றி தகவலுக்கு.
கதையோடு கதையாக ஒரு கொசுறுதகவல்
முன்னர் யாழில் பிரபலமான விக்னா ரியுட்டரி ஆரம்பமான முதல் பச்சில் நாமும் இருந்தோம்
அது ஒரு பொற்காலம்<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி விடயத்திற்கு வருகிறேன்.அங்கு ஈபிஆர்எல்எப் முதல்வர் வரதா அவர்கள் ஆசரியராக கடமையாற்றிய சமயம் அது. நவராத்திரி விழா கொண்டாடினோம்.அதில் அவரை உரையாற்றசொன்னார்கள்.
அவர் உரையாற்றியது இன்றும் ஞாபகமாகவிருக்கிறது
தனக்கு இதில் நம்பிக்கையில்லையெனவும் ஆனால் இதனை ஒரு தாய்க்கு பெருமை சேர்க்கும் விழாவாக இதை கருதுகிறேன் எனவும் கூறி தாய் பற்றி கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.
பின்னர் அவரை காலங்கள் எப்படி மாற்றியது எனவும்.எத்தனை தாய்மார்கள் கண்ணீர் விட்டார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மைகள்..
[b] ?
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் போது குஜராத்தில் நீண்ட நேரம் நடைபெறும் நடனநிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. அது குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தளம்: http://www.navratrifestival.com/ இத்தளம் குஜராத் அரசு நவராத்திரிக்காக நிறுவியுள்ள அதிகாரப்பூர்வ தளமாகும். விழாவின் போது 9 நாள் இரவுகளிலும் தாண்டியா உள்ளிட்ட நீண்டநேர நடனநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நவராத்திரி இந்த மாநிலத்தில்தான் முதன்முதலில் கொண்டாடப்பட்டதால் அதிகாரப்பூர்வ தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வெப்சைட்டில் நுழையும் போதே நடனம் மற்றும் இசை உங்களை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தவுடன் நவராத்திரி குறித்த தகவல்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, சுற்றுலா பயணிகளுக்கான விபரங்கள் ஆகியன இடம்பெறுகின்றன.
சக்தியை வழிபடும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறையில் கொண்டாடப்படுகிறது. எனினும் அதற்கான நோக்கம் ஒன்றுதான் என்று கூறும் தளத்தின் முகவரி: http://www.ahmedabad.com/travel/fairfest/navratri.htm
மும்பையில் விமரிசையாக நடைபெறும் நவராத்திரி போட்டோக்களை பார்வையிட செல்லவேண்டிய தளம்: http://www.mumbaicentral.com/ இந்த தளத்தில் நவராத்திரி பகுதியில் ஏராளமான படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் சிறப்பான முறையில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் தொடர்பான தகவல்களைத் தரும் ரீடிப் தளத்தில் நவராத்திரியும் இடம்பெற்றுள்ளது. முகவரி: http://www.rediff.com/search/navratri.htm
இந்த தளத்தில் 9 நாள் நடைபெறும் இத்திருவிழா குறித்த விபரங்கள், தாண்டியா நடனநிகழ்ச்சி, திருவிழா உணவுகள், கொண்டாட்டங்கள் என்று வித்தியாசமான திருவிழாவாக உள்ளது. இத்தளங்கள் அனைத்தும் நவராத்திரியைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள உதவுகின்றன.
நன்றி: தினமலர் http://www.dinamalar.com/index.asp
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
இந்த உலகத்தில் ஆண் தெய்வங்கள் இருக்கும் அனைத்து கோயில்களிலும் சக்தியும் இருக்கும். ஆனால் பெண் தெய்வங்கள், ஆண் தெய்வங்களின் துணை இல்லாமல் தனித்து இருப்பதை காண முடியும். ஆண்களால் முடியாததை பெண்கள் சாதித்துக் காட்ட இயலும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு வீட்டில், பெண்ணின் துணை இல்லாமல் ஆண்களால் சரிவர இயங்க முடியாது. எனவேதான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் விழா எடுக்கப்பட்டது.
சக்திக்குரிய விழா "நவராத்திரி' என வழங்கப்பட்டது.
சகல செல்வங்களையும் தரும் மகா சக்தியான அன்னையை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற பெயர்களில் மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபடுகிறோம். கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி, பூமி, தண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.
ஆதிபராசக்தியை துர்க்கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் தரிசித்தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவேதான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப் பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள். இதற்கு காரணம், தேவியால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் உருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய சக்திகளுக்குள் அடக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.
(இன்று நவராத்திரி முதல்நாள்)
நன்றி: தினமலர் http://www.dinamalar.com/index.asp
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தகவல்களிற்கு நன்றி சாமி
பெயரிற்கு ஏற்றபடிதான் விளங்குகின்றீர்கள்
நன்றி
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Kanani Wrote:இன்று முதல் 26-09-2003 நவராத்திரி தொடங்குகிறது...
<img src='http://www.neonblue.com/tfs/saras.jpg' border='0' alt='user posted image'>
அலை மகள், மலை மகள், கலை மகள் மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
9 நாளும் நவ தானியங்களை சுண்டல் செய்து படைப்பர். பாசிப்பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயறு, கொண்டை கடலை, போன்றவற்றில் நைவேத்தியங்கள் படைக்கப்படும்
நவராத்திரி தினங்களின் போது அபிராமி அந்தாதி சகலகலாவல்லி மாலை என்பன படிக்கப்படும்.
இதன்போது பயறு முளைக்க போடுவார்கள் (நவதானியத்தில் ஒன்று)
யாழ்ப்பாணத்தில்.. சரஸ்வதிபூசைக்கு புத்தகங்கள்.. வாத்தியங்கள் வைப்பார்கள்
கொழும்பில் தமிழ்நாட்டு முறைப்படி கொலுவைப்பதை பார்த்திருக்கிறேன்.
10வது நாள் விஜயதசமி அன்று.. பாடசாலையில்.. ஏடு தொடக்குவார்கள்..
நவராத்திர சம்பந்தமாக மேலும் தகவல் கதைகள் தெரிந்தால் எழுதுங்கள்...தேவாரமும் எழுதுங்கள்
நவராத்தியில் அம்மனை பிரார்த்தித்து நலம் பெறுவோம்.
வெள்ளைக் கலையுடுத்து
வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்
வெள்ளையரியாசனத்தில் அரசரோடெம்மை
சரியாசனம் வைத்த தாய்...!
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம் ...!
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம் ...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
ஓம் சக்தி ஆதிபரசக்தி. அகிலமும் ஆழும் தேவி அன்னை பராசக்தி. முதல் வணக்கம். இங்கு நவராத்திரி பற்றி சமயப்பற்ருதலோடும் ஆச்சாரத்தேடும் அள்ளி வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
. . . . .
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நவராத்திரிக்குள் இதைக்கொண்டுவருவதற்கு மன்னிக்கவும்.. யாழ் எப்போது பால்மாற்றம் செய்தார்..? மேலே பெண்குறியுடன் தென்படுகிறாரே..? நவராத்திரியென்றவுடன் உண்டியல் நிரப்ப ..? வேஷம்போடுறாரோ..?
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
திருத்தவே ஏலாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:நவராத்திரிக்குள் இதைக்கொண்டுவருவதற்கு மன்னிக்கவும்.. யாழ் எப்போது பால்மாற்றம் செய்தார்..? மேலே பெண்குறியுடன் தென்படுகிறாரே..? நவராத்திரியென்றவுடன் உண்டியல் நிரப்ப ..? வேஷம்போடுறாரோ..?
_________________
Truth 'll prevail
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote="ragi swiss"]திருத்தவே ஏலாது[quote]நவராத்திரி தெரியும்.. அதுதான் முதலே மன்னிப்புக் கேட்டிருக்கு..
நீங்களே குறிமாறித்தான் எழுதுறியள் பிறகு திருத்தேலாது எண்டு எனக்கு விடுறியள்.
யாழ் உண்டியலோடை நிக்கிறது தெரியாட்டில் நானென்ன செய்யிறது..? அதுகும் பெண் வேஷம் போட்டுக்கொண்டு.
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யாழ்ப்பாணத்தில் நவாராத்திரி சிவராத்திரி தேர் திருவிழா எல்லாம் நடப்பது எம் பெண்புரசுகளுக்காகத் தான். அப்படி ஏதும் நடந்தால் தானே பெட்டிக்குள் இருக்கும் நகை நட்டு புதிய பட்டுச் சேலைகளுடன் சோடனைப் பொருட்களாய் வீதி உலா வரலாம். அரோகரா. யார் கடவுளை நினைத்துக் கொண்டு கோயிலுக்கு வருவது? பாவம் இந்ந கடவுள்கள்.
தங்க மாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள்
நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்.
அன்புடன்
சீலன்
seelan
|