Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நூலகம் வலைத்தளம் இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது.
#1
<b>நூலகம்</b>

www.noolaham.net
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

2006 இன் முதல்பதிவினை, முதன்முதல் புதிய தமிழ் மணத்தில் வரவிருக்கும் எனது பதிவினை ஒரு நல்ல செய்தியோடு பிரசுரிக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக பலரதும் கூட்டுழைப்பில் சிறுகச்சிறுக வளர்ந்து வந்த நூலகம் வலைத்தளம்
இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது.

ஈழநூல் திட்டமாக ஆரம்பித்து, கோபி, பிரதீபா போன்றோரின் ஒத்துழைப்புடன் வளர்ந்து, ஈழநாதனின் இலங்கை வருகையுடன் சடுதியான வளர்ச்சியை எட்டி இன்று தரமான இலவச நூலகமாக இவ்வலைத்தளம் உங்கள் முன் நிற்கிறது.

நூலகம் என்பது, ஈழத்து எழுத்தாவணங்களை இணையத்தில் மின்வடிவில் பேணவும், பகிரவும் உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும். இவ்வலைத்தளத்தின் பின்னணியில் இயங்கும் நூலகம் திட்டம், நூலகம் நூலகம்மடலாடற்குழுவில் இணைந்துள்ள பல ஆர்வலர்களின் கூட்டுழைப்பாகும்.

இவ்வலைத்தளம் எவருக்கும் சொந்தமானதல்ல. எந்த அமைப்போடும் தொடர்பு பட்டதல்ல.

இத்திட்டத்தின் பணிகளை பொறுப்பெடுத்து செய்பவர்கள் முழுக்க முழுக்க தன்னார்வலர்களே. தத்தமக்கு முடியக்கூடிய பணிகளை அவரவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றனர். ஒருங்கிணைக்கும் பணிகூட இவ்வாறே பொறுப்பேற்கப்படுகிறது.

மின்வடிவாக்கப்பட்ட அத்தனை புத்தகங்களும், ஆவணங்களும் தமிழ் யுனிகோட் குறிமுறையில் உள்ளன. இவற்றை நீங்கள் எந்த இயங்குதளத்திலிருந்தும் படிக்க முடியும். அத்தோடு சேமித்துக்கொள்ளவோ, நகலெடுக்கவோ தொழிநுட்பரீதியான தடைகள் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்களின் உரிமம் தொடர்பான பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு.

இன்னமும் முழுமையாக மெப்புப்பார்க்கப்படாத நூல்கள் உள்ளிட 100 நூல்கள் தற்போது வலையேற்றப்பட்டுள்ளன. 100 நூல்களுக்குமான தொடுப்புக்கள் விரைவில் முழுமைப்படுத்தப்படும்.

திட்டத்தினுடைய விளக்கக்குறிப்புக்கள் உதவி ஆவணங்கள் அனைத்தும் விக்கி விக்கி பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. எவரும் அங்கே பங்களிப்புகள் வழங்கலாம்.

நூலகம் திட்டத்தின் மற்றுமொரு கிளைத்திட்டமான ஈழத்து இலக்கிய கலைக்களஞ்சியம் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமக்கென தனியான கலைக்களஞ்சியம் எதனையும் நாம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

திறந்த நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் விக்கிபீடியாவுக்கு பங்களித்தல் மூலமே எமக்கான சிறந்த கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்க முடியும் என நாம் திடமாக நம்புகிறோம்.

விக்கிபீடியாவுக்கான பங்களிப்பை ஊக்குவிக்குமுகமாக விக்கிபீடியாவிலுள்ள ஈழத்து இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் தனியான பக்கம் தனியான பக்கம் ஒன்றில் தொடுப்புக்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நூலகம் குழுவினர் தமது கலைக்களஞ்சிய கட்டுரைகளை நேரடியாகவே விக்கிபீடியாவுக்கு வழங்குவர்.

வெகு விரைவில் நூலகம் உதவி ஆவணங்கள் விக்கி புத்தகங்கள் பகுதியில் சேர்க்கப்படவுள்ளன.

நூல்களை, ஒலி வடிவிலும், திறந்த ஆவண (Open Document Text) வடிவிலும் வழங்கும் எண்ணம் உள்ளது. விரைவில் அது நனவாகும்.

எமது எதிர்கால சந்ததி, இணையத் தேடுபொறி ஒன்றின் மூலம் தமிழிலேயே தனது தேவைகளுக்காக ஈழத்து நூல்களை தேடிப்பெறக்கூடிய வசதி கிடைக்கவேண்டும். அவ்வாறு தேடிப்பெறும் நூல்களை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக பயன்படுத்தவேண்டும். அவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான உரிமம் சார்ந்த விடயங்களை சிக்கல்களை களைவதற்கு மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். வெல்வோம்.

அனைவரும் நூலகத்திற்கு வருகை தாருங்கள், பயன்படுத்துங்கள் எம்மோடு மடலாடலில் இணைந்துகொள்ளுங்கள்.

எல்லாவற்றும் மேலாக, உங்களுக்கு திருப்தியாய் இருந்தால் உங்கள் தளங்களில் எமக்கு இணைப்புக்கொடுங்கள்.
கூகிள் புறாக்கள் எம்மை தேடிவரட்டும்.

-மு.மயூரன்-

Nanri :-http://mauran.blogspot.com/2006/01/blog-post.html
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஒரு சொல்லுக்கு இணைப்புக் குடுப்பது எப்பிடி?முயற்சி செய்தேன் சரிவராதாம் அதால இணைப்புகளை அடைப்புக்குள் இடுகிறேன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இத்தளத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். இன்னும் வளர வாழத்துகின்றேன்

http://www.noolaham.net/
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)