Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"பெல்ஜியத்தில் எழுக தமிழ்"
#1
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்க வலியுறுத்தி பெல்ஜியத்தில் இன்று திங்கட்கிழமை 'எழுக தமிழ்' எனும் முழக்கத்தோடு பாரிய தமிழர் உரிமைப் பேரணி நடைபெற உள்ளது.


பெல்ஜியத்தின் பிரெசெல்ஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் முன்பாக இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் புகலிடத் தமிழர்கள் வானூர்திகளிலும் தங்களது வாகனங்களிலும் பேரூந்துகளிலும் அலை அலையாக பெல்ஜியம் நோக்கி திரண்டு வருகிறார்கள்.

புகலிட நாடுகளில் இயங்கி வரும் அனைத்து சமூக, கலாச்சார, அரசியல், மகளிர், இளையோர் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரும் முதல் முறையாக இப்பேரணிக்காக ஒன்று திரண்டுள்ளனர். யேர்மன், பிரான்ஸ், சுவிஸ், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்பேரணியில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த பேரணியில் உரையாற்றுகின்றனர்.

தமிழீழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய பேரணியில் பங்கேற்கின்றனர்.

பேரணியின் முடிவில் பிரகடனமும் வெளியிடப்பட உள்ளது.

- இலங்கைத்தீவின் இணக்க முயற்சிகளில் ஐரோப்பிய சமூகம் நீதியானதும், பாரபட்சமற்றதுமான பங்கை வகித்தல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் சமாதானப் பேச்சுக்களிலும், போர்நிறுத்த உடன்பாட்டிலும் சம தரப்பாகப் பங்கேற்கும் தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரித்து கௌரவமாக நடாத்துதல் வேண்டும்.

- இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றைக் தளமாகக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டை ஐரோப்பிய சமூகம் ஆதரித்து - மதித்து சமாதான முயற்சிக்கு ஆதரவு தரல் வேண்டும்.

- விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் எதிராக சிறிலங்கா இராணுவ உளவுத்துறையினால் நடாத்தப்படும் நிழல் போரைப் பயங்கரவாதம் என ஐரோப்பிய சமூகம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தல் வேண்டும்.

- ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் ஒடுக்கப்பட்டு, துன்புறும் தமிழ் மக்களிற்கு ஆதரவு தருவதற்கும், அவர்கள் மீதான சிறிலங்கா பேரினவாத பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை ஐரோப்பிய சமூகம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அந்தப் பிரகடனத்தில் இடம்பெறக் கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

http://www.eelampage.com/?cn=21102
" "
Reply
#2
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16166
" "
Reply
#3
பெல்ஜியத்தை உலுக்கிவருகிறது பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்களின் உரிமை முழக்கம்!!
[திங்கட்கிழமை, 24 ஒக்ரொபர் 2005, 17:00 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயண வரவேற்பு மறுப்பை மீளப்பெற வேண்டும் என்று பெல்ஜியத்தில் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்கள் உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர்.


இன்று திங்கட்கிழமை ஐரோப்பிய நேரம் பிற்கபல் 12 மணியளவில் இந்த உரிமை முழக்கப் போராட்டம் தொடங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகம் அருகில் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பாரம்பரிய நாதஸ்வர இசை வாசிக்கப்பட்டது.

பின்னர் பொதுச்சுடரினை தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்றினார்.

பின்னர் தொடங்கிய உரிமை முழக்கப் போராட்டத்தில்

சூரியத் தேவனே! எங்கள் தலைவன்!!

தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே!!

ஐரோப்பிய ஒன்றியமே மீளப் பெறு! மீளப் பெறு!!

விடுதலைப் புலிகளின் பயண வரவேற்பு மறுப்பை மீளப் பெறு!!

என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழீழத் தேசியக் கொடி மற்றும் சின்னங்களை கைகளில் ஏந்தியும் சிவப்பு மஞ்சள் உடை அணிந்தும் புகலிடத் தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
" "
Reply
#4
இன்று பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் நிழற்படங்கள்

http://www.sankathi.net/gallery/categories...s.php?cat_id=25
<b>
?
- . - .</b>
Reply
#5
அணையாத தீயாய் விடுதலைத் தீ என்றும் மக்களிடம் இருந்தால் எம் நாடு விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
Reply
#6
<b>இணைப்புக்கு நன்றி ரமணன்</b>
Reply
#7
பெல்ஜியத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் தடையை எடுக்கின்றதோ இல்லையோ எங்கள் மக்கள் பிரித்தானியாவை தலைகுனிய வைத்துவிட்டனர். பிரித்தானியா மீண்டும் சூடுவாங்க விரும்புமா பொறுத்திருந்து பார்ப்போம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#8
படங்களுக்கு நன்றி சிறிரமணன்

Reply
#9
நானும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெல்ஜியம் புருஸ்ஸல் நகரம் இதுவரை இப்படியான அமைதியான பெரும்திரளான மக்கள் வெள்ளத்தினை கண்டதில்லை என்றூதான் நினைக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
inthirajith
Reply
#10
<span style='font-size:22pt;line-height:100%'>நேற்று பெல்ஜியத்தில் நடந்து முடிந்த \"எழுக தமிழ்\" பேரணியில் நானும் கலந்து கொண்டவன் எண்ட முறையில் அங்கே நிகழ்ந்தவற்றை கள உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்...

உண்மையிலேயே அந்த பேரணியை ஒழுங்கு படுத்தியவர்கள் அன்னளவாக 10,000 மக்களை எதிர்பார்த்தார்கள், காரணம் இந்த பேரணிக்கு சுவிஸ் வாழ் தமீழமக்களின் பங்களிப்பு குறைந்த அளவில் காணப்படலாம் எனெனில் விசா பிரச்சினை, அதைவிட திங்கள் கிழமை, விசா உள்ளவர்களுக்கு வேலை செய்பவர்கள், லீவு எடுப்பது கஸ்ரம் எண்டபடியினால்..

ஆனால் இந்த பேரணிக்கு முழு ஆதரவு வழங்கியவர்கள் ஜேர்மனி வாழ் தமிழிழீழ மக்கள் கிட்டத்தட்ட 120-150 பஸ்களில் (அதில் இரண்டு அடுக்கு பஸ்களும் அடக்கம், டபிள் டெக்கர்) இந்த பேரணியை நடத்துவதற்கு பெல்ஜியத்தில் தமிழ் மக்கள் குறைவு, அதைவிட தமிழருக்கெண்டு எந்தவித கிளை நிறுவணங்களும் இல்லை, அதனால் ஜேர்மனி நாட்டின் தமிழிழீழ மக்களின் பிரதி நிதி, மதகுரு ஒருவரின் விடா முயற்சியின் மூலம் இது சாத்தியமானது, இங்கெ என்னொமொன்றை குறிப்பிடவேண்டும், கடந்தகாலத்தில அந்த பேரணி இடம்பெற்ற இடத்தில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணிகளால் பலத்த சேதங்கள் ஏற்பட்டது, இதனால் எனி அந்த இடத்தில் எவருக்குமெ பேரணி நடத்த அனுமதி வழங்கபட மாட்டாது என தீர்மாணம் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த பேரணியை நடத்தபோகிறோம், எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறமாட்டாது,ஏற்கனவே சுவிஸில் பல முறை இப்படி நடைபெற்றுள்ளது என்று விரிவான விளக்கத்துக்கு பின் நடத்த சம்மதம் தெரிவித்து இருந்தார்கள் எண்ட ஜேர்மனி பொறுப்பாளர் தெரிவித்தார்,,

அடுத்தது நெதர்லாந்தில் இருந்து 10-15 இடைப்பட்ட பஸ்களில் 1500 அதிகமான மக்களும், பிரான்ஸ்(?) ,சுவிஸ்,(?)எண்ணீக்கை தெரியவில்லை, இங்கிலாந்த் (4-8 ) பஸ்களும், டென்மார்க், சுவீடன் தலா 1 பஸ், வருகை தந்திருந்தன... ஜேர்மனியிலிருந்து (ஆதாவது பேரணி ஆரம்பமாகி 1,30 மணீத்தியாலங்களின் பின்) வந்த 40-50 பஸ்களின் மக்களை பொலிசார் அந்த கூட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை, காரணம் மக்களின் வெள்ளம், அந்த பேரணி இடமெற்ற இடத்தில் இடம்பற்றாகுறைவுகாரணமாக, பின்பு ஒரு மாதிரி சமாளித்து அனுப்பினார்கள்,,

நேற்று நடந்த பேரணியை குழப்ப பேரினவாத சக்திகளினான் அனுப்பப்பட்ட செயற்கை மழையோ என எண்ணுமளவிற்கு மழை, குளிர், காற்று மக்களை ஒரு வழி பண்ணிவிட்டது, பேச்சுக்களின் இடைவெளியில் பேரணி ஒழுங்கமைப்பாளர்களின் புத்திசாலித்தனத்தால் (இடை நடுவே தமிழீழ படல்களையும், எழுக தமிழ் பாடல்களையும் ஒலிக்க செய்து மக்களை கைதட்டி ஆட பண்ணிவிட்டார்கள்) அந்த இயற்கையின் சீற்றத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை...

அந்த பேரணிக்கு அதிகளவில் பொலிசார் குவிக்கப்படவில்லை,, 25-50க்குள்த்தான் இருக்கவேண்டும், அதுவும் ஆரம்பமாகும் பொழுதுதான் அத்தொகை,, காரணம் வீதி போக்குவரத்தை சரி செய்ய, அதன் பிறகு பொலிசாரை காணமுடியவில்லை,,, பெல்ஜிய பொலிசார் இந்த அளவிற்கு ஒரு மக்கள் கூட்டத்தையும், அவ் மக்களின் அமைதியான பண்பையும் காண்டிருக்கமாட்டார்கள்,, ஒரே ஒரு பொலிஸ் வாகனம் வந்த் வாசலில் நின்றது. அதற்குள் கலகமடக்கும் பொலிஸ் 4,5 பேர், அந்த பொலிசார், உள்ளுக்கை இருந்து (வாகனுத்தினுள்) அரட்டை அடிச்சுக்கொண்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது...</span> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மேலும் தொடரும்..... Idea
[b]

,,,,.
Reply
#11
மிகவும் சிறப்பாக நடந்தது. ஒழுங்கமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply
#12
தொடர்ச்சி...

[size=14]இங்கே உண்மையில் ஜேர்மனி வாழ் மக்களின் நாட்டுப்பற்றை வர்ணிக்க இயலாது, காரணம் ஜேர்மனி நாடு ஒரு பெரிய நாடு, ஜேர்மனிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து என்னொரு இடத்துக்கு செல்லவேண்டுமெனில் கிட்டத்தட்ட ஒரு நாள் தேவைப்படும் (அதுவும் கார் எண்டால்), நேற்றுவருகை தந்த கிட்டத்தட்ட 50க்க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 10-11மணித்தியாலங்கள், 40க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 7-8 மணித்தியாலங்கள், மீதி 5-6 மணித்தியாலங்கள், இவற்றினுள் மிக அதிகமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள், அதைவிட முதியோர்களும் அதிகமாக வந்திருந்தார்கள், இதைவிட சுவிடன், நோர்வோ நாட்டிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு நாள் பயணம்,,,

கூட்டம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இடை நடுவே TYO மாணவர்களின் செயற்பாடு மிகவும் நன்றாக இருந்தது, மக்களை ஒன்றுபடுத்துதல், உணவு குடிநீர், வழங்குதல், இடங்களை துப்பரவு செய்தல், என்று பல வகையில் பெல்ஜியம், ஜேர்மன், நெதர்லாந்த், பிரான்ஸ் என்று பல நாட்டைச்சேர்ந்த TYO (இளையோர் அமைப்பு) மற்றும் பல அமைப்புக்களும் அவர்களுக்கு உறு துனையாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது,

இறுதியாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்ட மனு வாசிக்கப்பட்டது, அந்த நேரத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி தாங்களின் ஆதரவை தெரிவித்தார்கள், அந்த மனுவை வாசிக்கும் பொழுது மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள், ஒவ்வொருவரின் குரலும் ஆக்கிரோசமாக இருந்தது,,

இதைவிட ரீரீன் தொலைக்காட்சியின் பங்களிப்பும், அதில் சகல கலைஞர்களும் (சாரு, லண்டன் அங்கிள், றொபேட், கலையழகன், நையாண்டி மேளம் அணி, கணேஸ் தம்பையா, மேலும் முகம் தெரியாத பலர்) வந்து சிறப்பித்தனர்..

இனிதே, எதற்காக அணி திரண்டோமோ அந்த குறிக்கோள் இயற்க்கையின் சிற்றத்தையும் மீறி நன்றாக நிகழ்ந்துவிட்டது, எதிர்பார்க்கப்பட்டது போல எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் மக்கள் பெருவெள்ளம் பிரசல்ஸ் நகரைவிட்டு தங்கள் தங்கள் நாடுகளிற்கு சென்றார்கள், செல்லும் பொழுது பிரசல்ஸ் நகரகம் ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது, காரணம் பஸ்கள், கிட்டத்தட்ட 200 க்குமேற்பட்ட பஸ்கள், அடுத்தடுத்து புறப்படும்பொழுது, நேரம் 17.00-17.15 அந்த நேரத்தில் வேலையிலிருந்து வீடு திரும்புவர்களும் ஒன்றாக இனைந்ததால் வாகன நெரிசல், லைன் பஸ்கள் அப்படியே அந்த அந்த இடத்தில் நின்றுவிட்டன.. சில நிமிடங்களில் பொலிசார் அந்த இடத்துக்கு வந்து வாகன நெரிசல்களை கட்டுபடுத்தினர்.....

இங்கே முதலில் பெல்ஜிய பொலிசாருக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும், என்ன ஒரு ஒத்துழைப்பு.

அடுத்ததாக பெல்ஜிய நாட்டு மக்கள் (பிரசல்ஸ்) அவர்களின் வேலை பழுக்களுக்குமத்தியில் பல இடங்களை பொலிசார் அடைத்த பொழுது (புளக்) எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் அவர்களாக தங்கள் பாட்டுக்கு சென்றார்கள்..

மொத்தத்தில் மீண்டும் ஐரோப்பியவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பணியை இனிதே நிறைவேற்றி விட்டனர்.. இன்னும் எத்தனை எதிர்ப்புகள் வரினும் கொட்டும் மழை என்ன பனி என்ன எங்களின் எதிர்ப்புக்கள் தொடரும், எங்களின் சுதந்திர நாடு மலரும் வரை. Idea

நன்றி வணக்கம்.
[b]

,,,,.
Reply
#13
நீங்கள் எழுதியதை படிக்கும்போது பேரணியினை நேரில் பார்த்தது போல இருந்தது..
மிக்க நன்றி செல்வன்..
Reply
#14
பேரணியில் பங்கு கொண்ட அனுபவங்களை அறிய தந்தமைக்கு நன்றி செல்வன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
நன்றிகள் செல்வன்.....
<b> </b>
Reply
#16
[size=13]நானும் பேரணில் கலந்து கொண்டேன் (இளையோர் அமைப்பு பிரான்ஸ் ).

பிரான்சில் இருந்து 42 பேரூந்துகளில் மக்கள் சென்றார்கள்....
பரிசிலிருந்து 4 மணித்தியாலப்பயணம். ஆனால் செல்லும் வழியில் ஒரு விபத்துக் காரணமாக எல்லா பேரூந்துகளும் மெதுவாகவே சென்றன.

(நான் எடுத்த புகைப்படங்கள் உள்ளன ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டுள்ளபடியால் அவற்றை இணைக்கவில்லை.)

நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை ஒரே மழை. ஆனால் ஒரே உற்சாகமாக இருந்தது.

மழையில் நனைந்து இன்று ஒரே காய்ச்சலும் தடிமனும்
Reply
#17
<b>வியாசன்...
பெல்ஜியத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் தடையை எடுக்கின்றதோ இல்லையோ எங்கள் மக்கள் பிரித்தானியாவை தலைகுனிய வைத்துவிட்டனர். பிரித்தானியா மீண்டும் சூடுவாங்க விரும்புமா பொறுத்திருந்து பார்ப்போம்.</b>

இலண்டனில் ஏறக்குறைய ஒரு லட்சம் தமிழர்களின் வாக்குகள், தேடித்தேடி லேபருக்கே போட்டோம்! அதுவும் நடந்து முடிந்த இறுதித் தேர்தலில் சில தொகுதிகளை லேபர் தக்கவைக்க எம்மவர்களின் வாக்கே காரணமாகவிருந்தது! இதில் குறிப்பாக மேற்கு கரோ உட்பட சில தொகுதிகளில் திரு கரத் தோமஸ் உட்பட சிலர் பராளுமன்ற கதிரைகளை பாதுகாக்க முழுமூச்சில் நாம் உதவினோம்!! ஆனால் லேபரின் கடந்த மூன்று ஆட்சிக்காலத்தில்....
1) தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்பனை செய்தது!
2) பல அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள்!
3) ...............
x) சுனாமி அனர்த்தத்தின் போது தமிழர்பகுதி உதவிகளை முற்றாக புறக்கணித்தார்கள்!
y) இன்று எம்மவர்களுக்கு பயணத்தடை!
.......... இப்படி பலபல நன்மைகளை? ஈழத்தமிழர்களாகிய எங்களுக்குச் செய்கிறார்கள்!!

இனியும் இதே லேபரை நம்பி ஏமாறவேண்டுமா???????????
" "
Reply
#18
செல்வன் கூறியதுபோல் ஜேர்மனியில் இருந்து குறுந்தூரப்பயணம்(3 மணி நேரம்) நீண்டதூரப்பயணம் (12 மணி நேரம்) என பல நகரங்களில் இருந்தும் 134 பஸ்களில் ஜேர்மன் வாழ் தமிழீழ மக்கள் வந்து இருந்தனர் பஸ்களில் 60 இருக்கைகளும்,இரட்டுத்தட்டு பஸ்களில் 78 இருக்கைகளும் ஏறக்குறைய உள்ளன. இதனை விட மற்றும் ஐரோப்பியநாடுகளில் இருந்தும் 100 இற்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் கார், சிறியரகபஸ் (9 இருக்கைகள்) என ஐரோப்பியவாழ் தமிழ் மக்கள் வெள்ளம் பங்குபற்றியிருந்தனர். முழுவதையும் கணக்கிட்டு பாருங்கள் பெல்ஜிய பொலிசாருக்கு கூட வேலைப்பழுவை கொடுக்காமல் எமது தமிழர் அமைப்புக்களே முழுவதையும் நெறிப்படுத்தியமை அவர்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. நானும் இவ் பேரெழுச்சியில் ஆரம்பம் முதல் நிகழ்வின் இறுதிவரை நின்று இருந்தேன்
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)