Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிமேகலை
#1
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பற்றிய கதையை சுருக்கமாக இங்கு போடலாம் என நினைக்குறன். மணிமெகலை என்னும் காப்பியத்தை எழுதியவர் கூலவாணிகன் சாத்தனார் ஆவார்.

மணிமேகலை

சோழ வளநாட்டின் புகழ்பூத்த பெரும் பதியான காவரிபூம்பட்டினத்தின் பழம் பெயர் "சம்பாபதி" என்பதாம். இந்தப் பெயர் தாங்கிய ஒரு பெண் தெய்வம், காவரிப்பூம்பட்டினத்தைக் காவல் காத்து, பகையரசர்களிடமிருந்து மட்டுமில்லாது இயற்கையில் எழுகின்ற நோய் நொடிகளிலிருந்தும் இந்தப் பதியிலுள்ள மக்களைக் காத்து வந்ததால் இதற்குச் 'சம்பாபதி' என்னும் பெயர் ஆயிற்று. ......

Arrow தொடரும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
<b> .. .. !!</b>
Reply
#2
இந்தப் பட்டினத்தைச் சிறப்புறச்செய்ய எண்ணிய சோழ மன்னன் 'காந்தமன்' என்பான் அகத்திய மாமுனிவரை வேண்டி நின்றான். இந்த மாமுனிவர் மன்னவனின் வேண்டுதலை மனதிற் கொண்டவராய்த் தம் கமண்டல நீரைத்தரையில் ஊற்ற, அந்த நீரே காவியாறாக உருவெடுத்தது என்பது ஐதீகமாயினும் சோழன் வளர்ச்சிக்கு மாமுனிவர் அகத்தியர் பெருந்துணை புரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

அகத்திய மாமுனிவர் தம் கமண்டல நீரைக் கீழே கவிழ்த்துவிட, அது பெருக்கெடிக்கத் தொடங்கி பெரிய ஆறாக, ஓடக்கண்ட சம்பாபதி, "வேணவாத் தீர்த்த விளக்கே வா" என வரவேற்க, மாமுனிவர் அகத்தியர் காவிரித்தாயைப் பார்த்து, " அன்னையே, உன்னை இவள் போற்றி வணங்குவதற்கு உருயவள், போற்றிப் புகழ வேண்டிய தன்மைகள் அனைத்தையும் கொண்டவள்" என்றார். அகத்திய மாமுனிவர் கூறக்கேட்ட சம்பாபதி உடன் தானே தொழுது வணங்க ஆரம்பித்து விட்டாள். நாளடைவில், 'சம்பாபதி என்னும் பெயர் மங்கிக் ' காவிரிப்பூம்பட்டினம்' என்ற பெயர் நிலைபெற்று விளங்கியது.

தொடரும்
<b> .. .. !!</b>
Reply
#3
இந்தப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் தான் ஒரு பெரிய சரித்திரமே நடந்து முடிந்தது. முடிந்தது சேர நாட்டில் என்றாலும் அதன் பெரும் பகுதி நடைபெற்றது சோழவள நாட்டில்தான். கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியவர்களெல்லாம் அங்கு வாழ்ந்து சரித்திரம் படைத்தார்கள்

கண்ணகியைக் கோவலன் துறந்து மாதவியிடம் மையல் கொண்டு 'எல்லாம் அவளே' என்று கருதி அவளுடனே வாழ்ந்து வந்த போது தான் கோவலன் மாதவி ஆகியோருக்கு மணிமேகலை பிறந்தாள்.
<b> .. .. !!</b>
Reply
#4
ம்..... நல்ல விடையத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.....
(இப்பகுதியில் கதை, கதாபாத்திரம் தொடர்பான விமர்சனங்களை மட்டும் இடம்பெறச் செய்து அரட்டையை தவிர்த்தால் நன்றாகவும் ஒரு தொடராகவும் இருக்கும்.)

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
<b>விழா அறை காதை</b>

சோழர் குல மன்னர்களின் புகழ் பெற்று விளங்கியவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்பவனாவான். இவன் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த மதில்களையெல்லாம் அழித்த காரணத்தால் " தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்" என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இவன் காவரிப்பூம்பட்டினத்தை முன்னை விடவும் சிறப்புறச்செய்ய ஆசைப்பட்டான். எவ்விதத்திலும், அனைவரும் போற்றிடும் ஒரு ஒப்பற்ற பட்டினமாக ஆக்க எண்ணி மாமுனிவர் அகத்தியரிடம் ஆலோசிக்க, அவர் கருத்துப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.

இந்திர விழாவை ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும், அந்த விழாவிற்கு இந்திரன் வருமை தர வேண்டும் என்றும் அவன் பணிந்து வேண்டி நின்றான். இந்த விழா இருபத்தெட்டு நாட்கள் இனிது நடை பெற இந்திரன் ஆசி அளித்தா. தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடங்கி வைத்த இந்த இந்திர விழா, ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. 28 நாட்கள் நடக்கும் இந்த இந்திர விழாவைக் காண வானுலகத்திலிருந்து தேவர்கள் கூட வருவார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#6
ragavaa Wrote:ம்..... நல்ல விடையத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.....
(இப்பகுதியில் கதை, கதாபாத்திரம் தொடர்பான விமர்சனங்களை மட்டும் இடம்பெறச் செய்து அரட்டையை தவிர்த்தால் நன்றாகவும் ஒரு தொடராகவும் இருக்கும்.)

சரி ராகவா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#7
<b>இந்திட விழா எடுப்பது பற்றி ஆலோசனை</b>

காவரிப்பூம்பட்டினம் செல்வ வளத்தில் முன்னின்றது; அறிவுடையோர் பலர் இருந்தனர்; வணிகப் பெருமக்களும் நிரம்ப வாழ்ந்தனர். இத்தகைய பெருந்தகைகள் இருக்கும் போது இந்திர விழாவை சிறப்பாக நடத்தலாமென்றோ! இத்தகைய விழாக்களை- அதுவும் முன்னோர் ஏற்படுத்தி வைத்திருந்த விழாக்களை- நடத்தாமல் இருப்பது அந்த நாட்டுமுன்னேறத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து மீண்டும் தொடங்க முடுவு செய்தனர்.

முசுந்தன் என்னும் வீரனுக்கு அசுரர் விட்ட அத்திரத்தால் கண்கள் பார்வை குன்றி மனமும் இருண்டு போயிற்று. அல்லலுற்ற இந்த முகுந்தனை காத்தது அங்காடி பூதமாகும்.
தவ வேடம் புனைந்த வஞ்சகர்கள், நம்பியிருக்கும் அரசனை மோசம் செய்யும் அமைச்சர்கள், பிறன் மனைவியை நாடுவோர், பொய் சாட்சி கூறுவோர், இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் தெய்வத் தண்டனை கொடியதாகும். தீயகுணங்கள் கொண்டவர்களை தண்டித்து கண்டிக்கும் ச்துக்கபூதம் அந்த நகரை, விட்ட்டு போகக் கூடாது என மக்கள் எண்ணினர் எனவே, முந்தையோர் செய்த இந்திரவிழாவை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
<b> .. .. !!</b>
Reply
#8
<b>இந்திர விழா பற்றி முரசறைதல்</b>

இந்திர விழாவை நன்முறையில் கொண்டாடுவது என்று முடிவு செய்ததும், இந்திரனுடைய வச்சிராயுதம் வைக்கப் பெற்றிருந்த கோயிலாகிய வச்சிரக் கோட்டத்திலிருந்த விழாக் காலத்து முரசை, அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏறி ஊரை , அரசனை மக்களை வாழ்த்தி, எல்லோரும் இணைந்து இருந்து கண்டு மகிழும் வண்ணம் ஒவ்வொருவரும் இதயபூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டும். பசியும் பட்டிணியும் மட்டுமன்றிப் பகையும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். மழையும் பெருகிட வேண்டும் என்று கூறி முரசறைந்தார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#9
<b>ஊர் அலர் காதை </b>

இந்திரவிழாவிற்கு மாதவி வரவில்லை . மாதவியின் அற்புத நடனத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக போய் விட்டத்ய். இதனால் மக்கள் மாதவியை பற்றி பலதும் பேசினர். இதனால் மாதவியின் தாயான சித்திராபதி பெரிதும் துயருற்றாள். மனம் வருத்தமுற்ற சித்திராபதி மாதவியின் தோழியான வசந்தமாலையுடம் ஊர் அலர் பற்றிக் கூறி இந்திரவிழாவில் கலந்து கொள்ளுமாறு வேண்டினாள்.

தன் கணவன் கோவலன் அநீதியாக மதுரையில் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியறிந்த மாதவி இவ்வுலக இன்பங்களையெல்லாம் துறந்தவளாக எதுலுமே பற்றற்றவளாக காணப்பட்டாள்.இதனால் துறவற வாழ்க்கையை மேற்கொண்டாள் தன் தந்தைக்கு ஏற்பட்ட கொடிய துயரம் அறிந்த மணிமேகலையும் தாய் வழியியை பின்பற்றினாள்.

மாதவியின் தாயார் வேண்டுதலின் படி மாதவியை பார்க்க வந்த வசந்தமாலை அவளுடைய வாடி தளர்ந்த மேனி கண்டு பெரிதும் வருந்தினாள். அவளது சிறப்புக்களை எடுத்து கூறி இந்திரவிழாவிற்கு வருமாறு வேண்டினாள்.
மாதவி மறுத்துரைத்த்தாள். அவள் தன் கணவன் பற்றியே எண்ணி புலம்பியவளாய் அவன் இறப்பை பற்றியே நினைத்துக்கொண்டு வேதனைப்பட்டாள். பின்னர் கண்ணகியின் கற்பின் மகிமையால் மதுரை மாநகரத்தையே எரியுண்ணச் செய்ததை உரைத்து அவள் மக்ளான மணிமேகலையும் எந்தக் காரணம் கொண்டும் கணிகையரின் குலத் தொழிலில் இறங்கிடமாட்டாளென்றும் இறைவன் திருவடி செல்லும் முன் தவ வாழ்க்கையிலேயே ஈடுபட்டிருந்தாள் என கூறினாள் இவையெல்லாவற்றையும் தம் தோழியருக்கும் தாயாருக்கும் உரைக்க வேண்டுமேன் வசந்தமாலையிடம் கூறினாள்.
<b> .. .. !!</b>
Reply
#10
<b>மலர் வனம் புகுந்தா காதை.</b>

தம் தோழியிடம் மாதவி உரைத்தைக் கேட்டு மணிமேகலை பெரிதும் வருந்தினாள். அவள் தன்னையுமறியாது கண்ணீர் வடித்தாள். இதானால் அவள் கட்டிய பூமாலை நனைந்து விட்டதை கண்ட மாதவி அந்த மாலையின் புனிதம் கெட்டு விட்டதால் மலர்த்தோட்டம் சென்று வேறு மலர்கள் பறித்து வருமாறு வேண்டினாள்.

இவ்வாறு கூறக் கேட்ட மாதவியின் தோழியான சுதமதி , மாதவியிடம் மணிமேகலை தனியே மலர்கூடத்துக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தினாள். அப்புறம் தனக்கு நடந்த சோகத்தை சொல்லி மணிமேகலையை தனியே செல்லவிடாது தடுத்தாள். அதன் பின்பு பலவிதமான் மலர்ச்சோலைகள் உண்டு என்பதை மாதவிக்கு உரைத்தாள். உவ வனத்தைப்பற்றிகூறி அந்த வனத்திற்கு மணிமேகலையை அனுப்புமாறு பணித்தாள் அவளுடன் தானும் கூட செல்வதாக கூறினாள்.
<b> .. .. !!</b>
Reply
#11
ரசிகை முன்பு படித்தது மறந்து போச்சு தொடர்ந்து தாருங்கள் நல்ல விடயம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#12
<b>பளிங்கறை புகுந்த காதை</b>

இருவரும் சோலையினுள் சென்றனர். அந்தச் சோலை சூரியனுடைய ஒளிக் கதொர்களுக்கு அஞ்சி இருளெல்லாம் அங்கு வந்து ஓளிந்து கொண்டிருப்பது போன்று காணப்பட்டது. அங்குள்ள பல இனிய காட்சிகளை மணிமேகலைக்கு காட்டி தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்வித்தாள்.

மதம் கொண்டு அழிவுகள் பலவற்றை உண்டு பண்ணிய யானையை அந்தச் சோழர் குல இளவரசனான உதயகுமாரன் அடக்கினான். உதயகுமாரன் இவ்வாறு வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டு இருக்கும் போது தன் நண்பன் எட்டி குமரனைக் கண்டான் அவன் சோர்வுற்றவனக காணப்பட்டான். மன்னைக்கண்டதும் வந்து வணங்கி அவனுடைய சோர்வுக்கான காரணத்தை உரைத்தான்.

செப்பினுள் மலர் ஒன்றை வைத்து மூடினால் அதன் கதி என்னவாகும்? இதே கதி தான் மணிமேகலைக்கு ஏற்பட்டுள்ளது என உதயகுமாரனிடம் கூறி தனது கவலைக்கும் அதுதான் காரணம் என கூறினான். அவள் தற்பொழுது சோலைக்கு சென்ற விடயத்தையும் கூறினான்.
ஒப்பரிய அழகியாம் மணிமேகலை சோலைக்குச் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்த உதயகுமாரன் எவ்வித தயக்கமும் இன்றி அவளைத்தம் வயப்படுத்தி விடலாம் என்று கருதினான்.தம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற மணிமேகலையை எவ்விதமும் அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவனைச் சோலையை நோக்கி விரைந்து செல்ல வைத்தது.

உதயகுமாரன் வந்து கொண்டிருக்கும் தேரின் ஒலியை மணிமேகலை கேட்டாள் தன்னை நாடித் தான் உதயகுமாரன் வருகிறான் என்பதை புரிந்து கொண்டு சுதமதியிடம் உதயகுமாரனைச் ச்ந்திக்காமல் இருக்க வழி கேட்டாள்.

இதைக் கேட்ட சுதமதி நடுக்கம் கொண்டாள் என்ன செய்வதேனத் திகைத்தாள் அப்பொழுது அவளுக்கு பளிங்கற மண்டம் ஞாபகம் வந்தது. அதனுள் மணிமேகலையை ஒளிய செய்துவிட்டு தான் பூப்பறிப்பது போல் நின்றாள்.

சோலையினுள் வந்த உதயகுமாரன் சுதமதியை கேட்டான், அப்பொழுது ச்தமதி அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள் அப்பொழுது தற்செயலக அவன் கண்கள் பளிங்குமண்டபத்தினுள் சென்றது. அங்கு நின்ற மணிமேகலையை கண்டது. இதனால் சுதமதியின் அறிவுர பயனற்றுபோனது.
<b> .. .. !!</b>
Reply
#13
தமிழில் அமைந்த ஐம்பெருங் காப்பியங்களில் மணிமேகலையும் ஒன்று.... மாதவியின் மகளாய் துறவு பூண்டு சமூகத்துக்காய் வாழ்ந்த பெண்ணின் கதை என்று சுருக்கமாக அறிந்திருக்கிறம்..விரிவாக காப்பியத்தைப் பகிரும் ரசிகைக்கு நன்றிகள்..ஓயாமல் தொடருங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
ஜம்பெரும் காப்பியங்கள் எல்லாமே எனக்கு நினைவு இல்லை யாரவது நினைவுபடுத்த முடியுமா??

தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, மணிமேகலை :roll: :roll: :roll: :roll: அப்புறம்??

ரசிகைக்கு வாழ்த்துகள் அன்ட் ஊக்கங்கள்.. தொடருங்கள்...
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ஐம்பெருங் காப்பியங்கள்

1 சிலப்பதிகாரம்
2 மணிமேகலை
3 குண்டலகேசி
4 வளையாபதி
5 சீவக சிந்தாமணி

சரியா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll:
Reply
#16
நன்றி ரசிகை தொடருங்கள் இயலுமானால் மற்றைய காப்பியங்களையும் (சிலப்பதிகாரம் தவிர) சுருக்கமாக எழுதுங்களன்
. .
.
Reply
#17
Anitha Wrote:ஐம்பெருங் காப்பியங்கள்

1 சிலப்பதிகாரம்
2 மணிமேகலை
3 குண்டலகேசி
4 வளையாபதி
5 சீவக சிந்தாமணி

சரியா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll:

சிலப்பதிகாரம் என்பது யாருடைய கதை??? நள தமயந்தி கதையா?? :roll: :roll:

நான் இந்த காப்பியங்களில் ஒன்றைத்தானும் படிக்கவே இல்லை :roll: :roll:

நன்றி அனித்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி மாதவியின் கதை
. .
.
Reply
#19
உங்கள் எல்லோரினது ஆதரவுக்கும் நன்றி ஓகே தொடர்ந்து எழுதுறன்.
<b> .. .. !!</b>
Reply
#20
Rasikai Wrote:உங்கள் எல்லோரினது ஆதரவுக்கும் நன்றி ஓகே தொடர்ந்து எழுதுறன்.

நல்ல சேவை. தொடருங்கள் ரசிகை. வாழ்த்துக்கள்.
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)