Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த் திரை
#1
<b>தமிழ்த் திரை</b>

தமிழ்த் திரை ttv என்ற புதிய தொலைக் காட்சியை பாரதிராஜா தலைமையிலான திரை உலகினர் தொடங்கியுள்ளனர் பெயரே தமிழில் உள்ளது சிறப்பு நிகழ்ச்சிகள் சற்று புதுமையாகவே உள்ளன பெரும்பகுதி திரைத்துறையினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிகம் உள்ளதால், மக்களைக் கவரக்கூடும் தமிழா.. தமிழா.. என்ற ஒரு கருத்துப் பாடல் (Theme Song) அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது அதில், தமிழ்நாட்டின் வளம், கலை, பண்பாட்டுச் சிறப்புகளுடன் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெறுகிறார்கள். மற்ற தொலைக் காட்சிகளுடன் போட்டி போட சில நிகழ்ச்சிகள் வழக்கமானதாக இருந்தாலும், தரமான புதிய நிகழ்ச்சிகளைத் தரும் ஆற்றல் இத்தமிழ்த்திரைக் குழுவினருக்கு உண்டு. இப்போதே தமிழ்த்திரை தொலைக்காட்சி, முன்னணி தொலைக்காட்சிகளுக்கு சவாலாக வளரக்கூடும் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது வழக்கமான தமிழ் சினிமா அபத்தங்களைக் குறைத்துக் கொண்டு வாழ்வியல், பகுத்தறிவு, தமிழின வளர்ச்சிக் கூறுகளுடன் நிகழ்ச்சிகள் அமைந்தால் பாரதிராஜா தமிழ்த்திரையில் கூறுவதுபோல சிறந்த தொலைக்காட்சி என்று உரத்துச் சொல்லலாம் உலகுக்கு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)