Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்
#1
பெயர்ப்பலகை அழிக்கும் போராட்டம்: ராமதாஸ், திருமாவளவன் கைது
மே 23, 2005

சென்னை:

சென்னையில் பிறமொழிப் பெயர்ப்பலகைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

வணிக நிறுவனங்களில் தமிழ் அல்லாத பிற மொழிப் பெயர்களை அழிக்கும் போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தலைமையிலான தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது.

இதன் படி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு முழுவதும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெயர்ப் பலகைகளை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி இன்று சென்னையில், அரசுத் தலைமை பொது மருத்துவமனை எதிரே உள்ள மேயோ ஹால் பகுதியில், ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில்இருந்த கடைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், ஆங்கில விளம்பரப் பலகைகளிலும் கரி பூசி அழித்தனர். இதையடுத்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரும், கடலூரில் 500க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். வேலூர்,கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

thatstamil
Reply
#2
கவிஞர் அறிவுமதியும் கைது செய்யப்பட்டதாக அறிந்தேன்???
""
"" .....
Reply
#3
முதலில் இத்தளத்தில் தமிங்கிலீசில் எழுதுபவர்களது எழுத்துக்களை நீக்கி இங்கும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமே?
Reply
#4
முதல் நாளே அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் அறிந்தேன்!
Reply
#5
Sooriyakumar Wrote:முதலில் இத்தளத்தில் தமிங்கிலீசில் எழுதுபவர்களது எழுத்துக்களை நீக்கி இங்கும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமே?
அப்படி யார் எழுதுகின்றனர்? களத்தில் நான் அறியேன்! நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?
Reply
#6
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->முதலில் இத்தளத்தில் தமிங்கிலீசில் எழுதுபவர்களது எழுத்துக்களை நீக்கி இங்கும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முதல்ல நீர் இடக்கு மடக்க கதைக்கிறதை விடலாமே!...
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#7
Sooriyakumar Wrote:முதலில் இத்தளத்தில் தமிங்கிலீசில் எழுதுபவர்களது எழுத்துக்களை நீக்கி இங்கும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமே?
சூரியகுமார் கருத்துகளை நீக்குவதென்பது மட்டுறுத்தினர்களால் மட்டுமே முடிந்தது.பல்வேறு வேலைகளுக்கிடையில் கருத்துகளை கவனைத்து வெட்டிக் கொண்டிருக்க அவர்களால் இயலாது.

ஆனால் களத்தில் கருத்தாடுபவர்கள் தங்களைத் தானே உணர்ந்து இயலுமானவரை ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிக்கலாம் இவற்றை அவர்களே திருத்திக் கொள்வதற்காகக்த் தான் எழுதிய கருத்தில் மாற்றஞ் செய்யும் உரிமை அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்து கருத்துக்குப் பதில் கருத்து அதற்கும் பதில் என்று வீணாக நீளும் விவாதங்களில் காய் கூய் என்று தமிங்கிலம் திமிறுவதைக் கண்டும் மற்றவர்கள் சும்மாயிருக்காமல் சுட்டிக் காட்டலாம்.

முயன்றால் முடியாதது இல்லை.கள உறவுகள் உணர்வுடன் செயற்படுவார்கள் என நம்புகிறேன்
\" \"
Reply
#8
Quote:முதலில் இத்தளத்தில் தமிங்கிலீசில் எழுதுபவர்களது எழுத்துக்களை நீக்கி இங்கும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமே?
முதல்ல நீர் இடக்கு மடக்க கதைக்கிறதை விடலாமே!...
நிலவன்

அவர் அத விடுவாரே அதுக்குத்தானே இங்கை வந்திருக்கிறார்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]
Reply
#9
முதலில் பெரியவர் கருணாநிதி Sun TV என்பததை தமிழில் மாற்றும் படி போரட்டம் நடத்தட்டும்!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)