Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் கண்டு பிடிப்பு
#1
மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் கண்டு பிடிப்பு
ஆய்வு நடத்திய தொல்பொருள் துறை_ கடற்படை அதிகாரிகள் தகவல்


சென்னை, பிப்.26_

மாமல்லபுரம் கடலுக்குள் கோவில் இருப்பதை தொல் பொருள் துறையினரும், கடற்படையினரும் கண்டு பிடித்துள்ளனர்.

கடலுக்குள் ஆய்வு

கல்லும் கதை சொல்லும் காவியச் சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

பல்லவர் காலத்தில் `குடவறைக் கோவில்' முறையில் உரு வாக்கப்பட்ட இந்த சிற்பங்களும், கடற்கரை கற்கோவிலும் இந்திய தொல் பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.

கடந்த காலகட்டங்களில் கடல் கொந்தளிப்பால் மேலும் சில சிற்பங்கள் இந்த கடலில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படு கிறது.

ஆராய்ச்சி

ஆகவே, மாமல்லபுரம் கடலுக்குள் அரிய சிற்பங்களும், கோவில் களும் இருக்கிறதா? என்று இந்திய கடற்படையினருடன் இணைந்து இந்திய தொல் பொருள் ஆய்வு துறையினர் கட லுக்குள் ஆராய்ச்சி நடத்தினார் கள்.

இந்த ஆய்வு பணி குறித்து தென் மண்டல இந்திய கடற் படை வீரர்கள் (டைவிங்) பிரிவு தலைவர் தாமஸ் கூறியதாவது:_

மாமல்லபுரத்தில் கடலுக்குள் ஆய்வு செய்யும் பணி 2004_ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது கடந்த 11_ந் தேதி முதல் 25_ந் தேதி வரை கடலுக்குள் கடற்படை வீரர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பணியில் 12 கடற்படை வீரர்களும், 3 தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளும் ஈடுபட்டனர். அப்பொழுது, கடலுக்கு அடியில் ஒரு கோவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான புகைப் படங்களையும் அவர்கள் எடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு தாமஸ் கூறினார்.

கடலுக்குள் அரிய சிற்பங்கள்

அப்போது, உடன் இருந்த டெல்லியைச் சேர்ந்த இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துணை சூப்பிரண்டு அலோக் திரிபாதி கூறியதாவது:_

மாமல்லபுரம் கடலுக்குள்ளும் நிறைய அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றைக் கண்டு பிடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த சிற்பங்கள் 18_வது நூற்றாண்டை சேர்ந்த வையாக இருக்கலாம்.

ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களை கொண்டது என்று தெரிவித்து உள்ளனர். அதேபோல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருகிறது. இப்போது உள்ளவை தவிர மற்ற கோவில் கள்கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு உள்ளது.

500 மீட்டர் தொலைவில்

மாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில் 2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தி யாசமான படிவங்கள், பழங்கால பொருட்கள், பாறைகள், கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமாக இருந்ததா? அல்லது கோட்டை போன்ற அமைப்பா? என்பது பற்றி ஆய்வு முடிவுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.

ஆய்வுக்குப் பிறகு

முதல் கட்டமாக தற்பொழுது கடலுக்குள் சென்ற கடற்படை வீரர்கள் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்களை எடுத்து வந்து உள்ளனர்.

தொல் பொருள் ஆய்வுத் துறையை பொறுத்த வரை எதை யும் பார்த்த உடன் அது எந்த காலத்தைச் சேர்ந்த கட்டிடம் என்பதை எல்லாம் தீர்மானிக்க முடியாது.

கடலுக்குள் இருக்கும் கற்களில் கடற்பாசிகள் சூழ்ந்து இருக்கின் றன. அதை எல்லாம் அப்புறப் படுத்தி முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் அவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரிய வரும்.

கலசம்

கடலுக்குள் அடியில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ள கோவில் இருக்கும் இடத்தை `மார்க்' செய்து உள்ளோம். கட லுக்குள் அந்த பகுதியில் இருந்து சிறிய கலசம், சிற்பம் செதுக்கிய கற்கள் போன்ற சிலவற்றை எடுத்து உள்ளோம். தொடர்ந்து தீவிர ஆராய்ச்சி செய்து வரு கிறோம்.

முதல் கட்ட கடல் அகழ் வாய்வுப் பணி 25_ந் தேதியுடன் முடிவடைந்து உள்ளது.

டெல்லியில் தொல்பொருள் ஆய்வு பற்றிய சர்வதேச மாநாடு வருகிற 17_ந் தேதி முதல் 19_ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற் கிறார்கள். அந்தமாநாட்டில் மாமல்லபுரம் ஆய்வு உள்ளிட்ட 24 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப் பிக்க உள்ளோம். அப்போது தற்பொழுது நடந்த ஆய்வு பற்றி கருத்து தெரிவிப்போம். அதன் பிறகு அடுத்த கட்ட ஆய்வுப் பணி அடுத்த மாதம் மீண்டும் தொடங்கி நடைபெறும்.

அரிய பொக்கிஷம்

கடலுக்குள் இருக்கும் பொருட் களை தற்பொழுது வெளியே எடுக்க மாட்டோம். ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

`சுனாமி'க்கு பிறகுதான் ஆய்வுப் பணி தொடங்கி உள்ளது என்று கூறுவது சரியல்ல. ஏற்கனவே ஆய்வுப் பணி 2004_ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட் டது.

வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த கட்டமாக அறிவியல் தொழில் நுட்ப உதவி மேற் கொள்ளப்படும். சாட்டிலைட் மூலம் நுண்ணிய புகைப்படங் கள் எடுக்கப்படும். அதனைக் கொண்டுஆராய்ச்சி மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அலோக் திரிபாதி கூறினார். ஆய்வுப் பணி நடந்த கப்பலில் அவர்கள் இந்த பேட்டியை அளித்தனர்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)