Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியெதிர்ப்புப் போராட்ட வரலாறு
#1
இம்மாதம் 1965-ம் ஆண்டு நடந்த தமிழக மாணவர் இந்தியெதிர்ப்புப் போரட்டம் நடந்து 40 ஆண்டுகளாகிறது. அக்கால் ஏறத்தாழ 500 தமிழ் இளையோர் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2.4 மாணவர் போராட்டம்: சனவரி 26

சிதம்பரம் நகரிளுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக (Annamalai University) மாணவர்கள் 1965 சனவரி 26-ம் நாளில் இந்தி திணிப்பையெதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். இந்தியெதிர்ப்பு முழக்கங்கள் எழுதப்பட்ட பெரிய அட்டைகளும், கொடிகளும் ஏந்தி, இந்தியெதிர்ப்பு முழக்கங்களை ஒலித்தபடி மாணவர்கள் பல்கலைக்கழக விளாகத்திலிருந்து ஊர்வலம் தொடங்கினர். தாரை தப்பட்டைகள் முழக்கினர். சங்கூதினர். ஊர்வலம் எந்தவொரு வன்முறையுமின்றித் தொடங்கியது. ஆனால், காவல்துறையினர் (police) ஊர்வலம் சிதம்பரம் நகருக்குள் போகலாகாதென்று கூறி ஊர்வலத்தைத் தடுத்தனர். மாணவர்கள் அதற்கிணங்காமல் தொடர்ந்து அமைதியாக முன்னேறினர். காவலர்கள் (police) ஊர்வலத்தைக் கலைக்குமாற்றான் துமுக்கியால் (துப்பாக்கியால்) ஊர்வலத்தை நோக்கிச் சுட்டார்கள். காவலர்கள் கண்ணீர்ப் புகை வீசி ஊர்வலத்தைக் கலைக்க முயன்றிருக்கலாம். அல்லது இழுவைத் தோட்டாகளைப் பயன்படுத்திச் சுட்டிருக்கலாம். அது யாரையும் கொன்றிருக்காது. (இழுவைத் தோட்டா = இரப்பர் தோட்டா = rubber bullet) ஆனால் மேலதிகாரிகளிடமிருந்து வந்த ஆணைப்படி எக்குத் தோட்டக்களைப் (steel bullets) பயன்படுத்தினார்கள். இராசேந்திரன் என்ற மாணவர் துமுக்கிச் சூடு பட்டு இறந்தார். நெடுமாறன் என்ற மாணவர் படுகாயமடைந்தார்.

2.5 தமிழ்நாடுத் தெருக்களில் குருதியோட்டம்: சனவரி 27 - பெப்ருவரி 14

சனவரி 25-ம் நாளில் மதுரையில் ஆளும் கட்சியான பேராயக் கட்சியைத் தழுவிய தொழிலாளர் கழகத்தினைச் (a trade union affiliated with the Congress Party) சார்ந்த சிலர் மாணவர்களை அரிவாள் கொண்டு தாக்கியதும், சனவரி 26-ல் காவலர்கள் (police) மாணவர்களின் ஊர்வலத்தில் துமுக்கிச்சூடு (துப்பாக்கிச் சூடு) நடத்தியதும், தமிழ்நாடெங்கும் மாணவர்களைக் கொதிக்க வைத்தது. சனவரி 27-ல் தமிழ்நாடெங்கும் மாணவர்கள் கண்டன ஊர்வலங்கள் நடத்தினர். சனவரி 25-ல் நடந்த ஊர்வலங்களைப் போலவே இவ்வூர்வலங்களும் மிகப் பெரிதாயிருந்தன. பொதுமக்கள் மாணவர்களை முற்றிலும் ஆதரித்தனர். மாணவர்தம் போராட்டத்தை ஆதரித்து கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் தெருவோரங்களில் மிக அமைதியாக நின்று மாணவர் ஊர்வலங்களை பார்த்தார்கள். தமிழ்நாட்டு மாணவர் இந்தியெதிர்ப்புப் போராட்டச் செயற்குழு (Tamil Nadu Students Anti-Hindi Agiotation Committee) வரையறையற்ற போராட்டத்தை (indefinite strike) அறிவித்தது.

தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய இந்தி திணிப்பு எதிர்ப்பு ஊர்வலங்களும், அவற்றுக்குத் தமிழ்நாட்டுப் பொது மக்கள் கொடுத்த ஆதரவும் தில்லியிலுள்ள இதிக்காரப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு திகிலேற்படுத்தியது. இந்தியத் தலைமையமைச்சர் இலால் பகதூர் சாத்திரி (Lal Bahadur Shastri), உள்நாட்டுத்துறையமச்சர் குல்சாரிலால் நந்தா (Home Minister Gulzarilal Nanda) மற்றும் தமிழ்நாட்டு மாநில முதலமைச்சர் பக்தவத்சலல் ஆகியோர் தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போரை படைவலியோடு நசுக்குவதென முடிவு செய்தனர். பிறமாநிலக் காவல் துறையினர், இந்திய நடுவண் காவல்துறையினர் மற்றும் பட்டாளத்தினரை (out-of-state police, Indian Central Reserve Police and army) பேருந்து வண்டிகள் மூலமும், தொடர்வண்டிகள் மூலமும் (by trucks and rail) தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து குவித்தனர். அமைதியாக இந்திய நடுவண் அரசு நிறுவனங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் தொடர்வண்டி நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் (demonstrations) நடத்திய மாணவர்களை காவல் துறையினர் தடியால் தாக்குவதும், அதனால் சினங்கொண்ட மாணவர்கள் காவலர் மேல் கல் வீசுவதும், உடனடியாக காவல்துறையினரும் அவர்க்குத் துணையாக நிற்கும் பட்டாளக்காரரும் துமுக்கியால் சுடுவதும் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையிலும் பலவிடங்களில் நடந்தன. துமுக்கிச் சூடால் பலர் காயப்பட்டு வீழ்வதையும், சிலர் சாவதையும் கண்டு மாணவரும், பொது மக்களும் சிலவிடங்களில் அஞ்சல் நிலையங்களுக்கும், தொடர் வண்டி நிலயங்களுக்கும் தீ வைத்தனர். தமிழ்நாடே போர்க்களம் போலாயிற்று. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் மறவர் தம் குருதி பாய்ந்தது. இந்நிலை ஏறத்தாழ இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்தது. எத்துணை தான் அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டாலும், எத்துணையோ பேர் துமுக்கிச்சூட்டில் கொல்லப்பட்டாலும் இந்தி எதிர்ப்புப்போர் தொடர்ந்து நடை பெறுவதைக் கண்ட இந்திய அரசு, இனி இந்தி திணிப்பு இருக்காது என்றும் அதற்குத் தேவையான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது. தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்தினார்கள். இந்திய அரசு அன்று கொடுத்த வாக்குறுதி வக்கில்லாமலேயே போயிற்று. 1968 ஆகத்டுத் திங்கள் முதல் நாளில் இந்தியப் பாராளுமன்றம் ஆட்சிமொழி குறித்த ஒருசட்டத்தை நிவேற்றியது. இது தமிழ்மக்கள் எதிர்பார்த்த சட்டமல்ல. இது ஏனோதானோவென்ற உப்புச்சப்பற்ற, சாரமில்லாத சட்டம். இன்னும், இன்றும் இந்தி திணிப்பு தொடரத்தான் செய்கிறது [குறிப்பேடு 1].

1965-ல் எத்துணை பேர் துமுக்கிச்சூட்டுக்குப் பலியானார்கள், எத்துணைபேர் கை, காலிழந்தார்கள், எத்துணை பேர் வேறுவகையில் காயப்பட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1967-ல் நடந்த தேர்தலில் 1965-ல் ஆளுங்கட்சியாகவிருந்த பேராயக்கட்சி (Congress Party) தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்து தமிழ்நாட்டு மாநில ஆட்சியை இழந்தது. ஆட்சியைக் கைவிடுமுன்னால் முதலமைச்சர் பக்தவத்சலம் 1965-ல் நடந்த துமுக்கிச் சூடுகளைப் பற்றி அரசிடமிருந்த எல்லா விவரங்களையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வடநாட்டு எழுத்தாளர் ஒருவர் 52 பேர் துமுக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள் என்று எழுதியிருக்கிறார். தமிழ்நாடைச்சார்ந்த ஒருவர் ஏறத்தாழ 500 பேர் கொல்லப்ப்பட்டார்கள் என்று கணித்திருக்கிறார். பல்வாறு காயமடைந்தோர் தொகை எத்துணையோ, ஆண்டவனுக்கே தெரியும்.

http://www.geocities.com/tamiltribune/annai/index.html
Reply
#2
என்னத்தை போராடி என்ன பயன் இப்பபாருங்கோ இனியெரு ஆங்கில எதிர்ப்பு போராட்டம் தமிழ் நாட்டிலை நடத்தவேண்டும்
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)