Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்திலே தமிழ் பிள்ளைகள்
#1
புலத்திலே தமிழ் பிள்ளைகளை ஈழத்தில் எம்மை பெற்றேர் கண்டித்தது போல் கண்டிக்கலாமா அல்லது கூடாதா ?? அல்லது ஏதேனும் அளவுகோல்உள்ளதா??? ;காரணம்.இன்றுபுலத்தில் கண்டிப்பதால் 1 பிள்ளைகள் விட்டை விட்டு வெளிNறுகின்றனர். அல்லது காவலதுறையிடம் புகார் கூறி விடுகின்றனர். இதனால பலகுடும்பங்கள் பிரச்சனை பட்டு கணவன் மனைவி விவாகரத்து வரை நடந்திருக்கிறது
; ;
Reply
#2
இந்த விடயம் முன்னரும் களத்தில் ஆராயப்பட்டிருந்தாலும் உங்கள் ஆர்வத்தை மதிக்கும் முகமாக எங்கள் பதில்...

வன்ம வழியைத் தேடாமல் அன்பு வழியில் சென்றால் அனைத்தும் சுபம்...!

பெரியவர்களை விடக் குழந்தைகளை அன்பால் கட்டுப்படுத்துவது மிக இலகு.....! பெரியவர்கள் அன்பின் மீதே சந்தேகம் வைப்பர் அது போலியா உண்மையா என்று...ஆனால் குழந்தைகள் அப்படியல்ல அன்புக்காய் ஏங்கும் உள்ளங்கள்...அவர்கள் அன்பையும் அரவணைப்பையும் தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.. ஆனால் பெற்றோரோ அவற்றை தேவைக்கு ஏற்ப வழங்கத் தவறுகின்றனர்...! அப்படி அன்பு செலுத்தும் பெற்றோர் கூட அளவுக்கு அதிகமாக கொடுக்க... அது செல்லமாக பிள்ளை அதையே எங்கும் எதிர்பார்க்க... பிரச்சனைகள் புதிய வடிவம் எடுக்கும்...!

எனவே கண்டிப்போடு (அடித்து உதைப்பதல்ல... உதாரணமாக குழந்தைகள் விரும்புவதை தரமாட்டேன் தொடக்கூடாது என்று கூறுவதன் மூலம் அப்பாவோ அம்மாவோ இப்படிச் செய்தா இதைச் செய்ய விடமாட்டார்கள்...அது அவர்களுக்குப் பிடிக்காதது என்பதை குழந்தைகள் இயல்பாகப் புரிந்து கொள்வர்... அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் அது மனதில் இருக்கும்.... எங்கள் பெற்றோர் செய்தவை இன்றும் எம்மோடு இருக்கிறது...எம்மை வழிநடத்துகிறது போல...) அன்பையும் அரவணைப்பையும் தேவைக்கு ஏற்ப வழங்கி குழந்தைகள் தாங்களாக சிந்தித்து தீர்மானம் எடுக்கும் வரை அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பதுதான் சிறந்தது...!
அதேபோல் குழந்தைகள் வளர வளர பெற்றோர் சரியான பாதையில் தாமும் நடந்து பிள்ளைகளுக்கும் சரியான வழி காட்ட வேண்டும்...இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு....!

பலர் சொல்கிறார்கள் தங்களுக்கு குழந்தைகளோட செலவு செய்ய நேரம் இல்லை என்று அது வெறும் சாட்டு...! உண்மையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு இரண்டு மணித்தியாலத்தைக் கழித்தாலும் இயல்பாக நீங்கள் அன்புள்ளவராக இருந்தால் அந்த இரண்டு மணி நேரம் போதும் உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கு உங்கள் அன்பின் பரிமானத்தைக் காட்ட....நீங்கள் புலத்தில் தான் இந்தப் பிரச்சனை என்று பார்க்கிறீர்கள்... தாயகத்தில் கூட தென்னிலங்கைக்கோ இல்ல தூர இடங்களுக்கோ சென்று தனிமைப்பட்ட சூழலில் வேலை பார்க்க வேண்டி வரும் சந்தர்ப்பத்தில் கூட இதே நிலையை பல பெற்றோர் அனுபவித்துள்ளனர்...! Idea

குழந்தைகளுக்காக விவாகரத்தென்பது விளக்கம் இல்லாத் தன்மை...அப்படியானவர்கள் ஏன் தான் குழந்தைகளை உருவாக்கின்றனரோ...!!! Idea :roll:

அன்பும் பாசமும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் எங்கும் எதையும் சாதிக்க உதவும்...! இவற்றை சரியாக பயன்படுத்தத் தவறுவோரே மனிதனில் சமூகவாழ்வில் தோல்வியடைகின்றனர்....! Idea

கணவன் மனைவிக்காவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக் கொடுப்பத்தில் என்ன குறையோ தெரியாது... ஆனால் அநேகர் அதைச் செய்ய விளைவதில்லை...! ஏனோ... யாம் அறியோம்....! இதற்கு ஈகோ (Eco) தான் முக்கிய காரணம் என்றால்...ஏன் அதைக் கைவிடத் தவறுகின்றனர்... ஈகோ அது குடும்பத்துக்கோ சமூகத்துக்கோ நல்லதல்ல என்பது தெளிவு...! குடுமபஸ்தர்கள் தான் மிச்சம் மீதி விளக்க வேண்டும்... வாழ்கைப் படிப்பினைகளை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவிகள் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருப்பினும் எனது கருத்து அதிலிருந்து வெறு படுகிறது. புகலிடத்தில் கண்டிக்கக் கூடாது என்று சொல்ல முடியாது. அதேநேரம் தாயகத்தில் கண்டிக்கப்புடன் வளர்நதவர்கள் அனைவரும் நல்லவர்களாக வளர்ந்தது மில்லை. பெற்றோரின் கண்டிப்புக்கு பயப்படுவது போல வீட்டிலும் வெளியிலே வோறோர் விதமாயும் இருக்கும் குழந்தைகள் இளைஞர்கள் எத்தனை பேர் அப்படி இருக்கையில் எப்படி கண்டிப்பதன் கூலம் இளைஞர்களை அல்லது குழந்தைகளை திருநத்த முடியும் இருப்பினும் சிறு காலங்களுக்கு முன் குழந்தைகளை கண்டித்து தண்டித்து வளர்க்க கனடியா நீதிமன்றம் பொற்றோருக்கு அனுமதி வழங்கழியுள்ளது. என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அன்பினால் பிள்ளைகளை திருத்தலாம் எனபது சாத்தியமாகாத ஒன்று புகலிடத்தில் பிள்ளைகளை நித்திரையில் தான் பெரும்பாலன பெற்றோர் காண்கின்றனர். அந்த அளவக்குவேலை பிறகு அனிபினால் யார் அவர்களை த் திருத்துவது. குழந்தைகள் பராமரிக்கும் விடுதி ஊழியர்களா. உண்மையைச் சொல்வதானால் இங்கு குழந்தைகள் நன்கு கவனிக்கப்பட வில்லை என்பதே.
பெற்றோர் விவாகரத்து செய்வது குழந்தைகளுக்காகவா? தமது பிரச்சினைகளை குழந்தைகள் மீது காட்டும் போது குறிப்பாக தமது கோபங்கள் எரிச்சல்கள் களைப்பக்கள் அனைத்தையுமே அவர்கள் தமது குழந்தைகள் மீதொ அல்லது இளைஞர்கள் மீதோ காட்டும் போது தான் குடும்பத்தில் பிரச்சினைகள் எழுகின்றன. இன்றைய விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? தங்கள் பிள்ளைகள் பற்றிக்கூட கவலைப்படமால் தமது சமுதாய த்தைப்பற்றி கவலைப்படமால் விவாகரத்து என்று நீதி மன்று செல்வோர் தமது சுயதேவைகளுக்காக தமது உறவுகளின் உணர்வகளை பொசுக்கு கின்றனர் என்பதே உண்மையாகும் இதற்குகு விதி விலக்காக சில் விவாரத்துக்கள் நடைபெறலாம்
உண்மையில் பிள்ளையின் வளர்ச்சி மீது அக்கறையிருந்தால் ஏன் பிரியவேண்டும்....
பிள்ளையால் கணவரக்கும மனைவிக்கு மிடையே ஏன் பிரச்சினைகள் எழவேண்டும்...
பிள்ளையால் பிறச்சினை வந்ததாய் வைத்துக் கொண்டாலும் ஏன் கணவன் மனைவி பிரிய வேண்டும்...
இந்தக் கேள்விகளுக்கு எம்மால் பதில் தேட முடியாது விவாகரத்து செய்வோரிடம் தான் பதில் கேட்க முடியும் இது இப்பொது ஒரு நாகாPகளம் ஆகி விட்டது போல...
கண்டித்து வளர்பதா? அன்பினால் கண்டிப்பதா? இதற்கு நான் சொல்வது ஒன்று தான் இரண்டுமே 100வீதம் பயன் தராத விடையம். அன்பினால் எதையும் அடைய முடியும் என்பது உண்மை ஆனால் அன்பு செலுத்த பெற்றொர்கள் தமது பிள்ளைகளுடன் நட்பாக பழகவேண்டும் அவர்களது மனதை வெல்லப் பழகவேண்டும் அப்போது தங்கள்
பிள்ளைகளின் உணர்வகள் பற்றி அவர்கள அறிவார்கள்..இந்த அன்பினை வேறோருவர்வழங்கும் பொதே தேவையற்ற பிரச்சினைகள் எழுகின்றன.. தமது பிள்ளையை ஒரு நண்பனாய் எந்தப் பெற்றொர் பார்க்கின்றாரோ அவரது பிள்ளை நிச்சயம் நல்லவனாக வல்லவனாக இருப்பான் அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் பெற்றோருக்கும் தெரியும்யாராவது பெற்நோர்கள் களத்திலிருக்கிறீங்களா? இப்படி செய்த பாருங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நாங்கள் பிள்ளைகள் அல்லவா நாம் எதை எதிர்பார்க்கிறம் என்றால் அன்பு கலந்த கண்டிப்பு... கண்டிப்பும் இன்றி பிள்ளைகள் இருக்க கு}டாது.. நாம் நிறைய வீடுகளில் பாத்திருக்கம்.. அடிவிழும் அப்பா அடிச்சால் அம்மா அணைப்பா... அம்மா அடிச்சால் அப்பா அணைப்பார் ..... அடிக்கிறது மட்டும் இல்லை பேசுறதுக்கும் தான்.. மற்றது அடிச்சோ பேசிப்போட்டே.. பிள்ளையைக்கு}ப்பிட்டு ஏன்ன தவறு ஏன் அதைச்செய்யக்கு}டாது என்று ஒரு சின்ன விளக்கம் கொடுத்து பிள்ளைகளை தட்டிக்கொடுத்தா ஓகே.. இப்படி செய்கிற போது பிள்ளைகளிற்கு அதாவது நமக்கு விளங்கும்.. என்ன நடந்தது என்று.. அதோட பிள்ளை சொல்லுறதையும் கொஞ்சம் கேட்டு அதுக்குரிய விளக்கம் கொடுத்தால் பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்கள் அன்புக்கோட்டிற்குள்ள இருப்பார்கள். அவர்களிற்கும் புரியனும் அம;மா அப்பாக்கு கோவம் வந்தால் எப்படி அன்பாய் இருந்தால் எப்படி என்று.. கண்டிக்காமல் இருக்கிறதும்.. ஒரே அடியாய் அன்பு செலுத்தாமல் இருக்கிறதும் பிழை... இவை மாறி மாறி நடந்தால் தான்.. சுவாரசியமும் இருக்கும் குடும்பத்தில சந்தோசமும் இருக்கும்.. மற்றப்படி விவாகரத்து.. அவர்கள் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுறதற்காய் குழந்தைகளை சாட்டி விவாகரத்து பெறுறது தப்பு.. அதைவிட நம்ம தமிழ்ச்சமு}குத்தில அது குறைவு தானே..
இவைகள் நாம் கண்ட உண்மைகளும் அனுபவிச்ச உண்மைகளும்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
நிதர்சன் உங்கள் பார்வை வோறொரு கோணத்தில் இக்கருத்தை அணுகி இருக்கிறது... நல்ல பல கருத்துக்களை வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்....

உங்கள் பார்வையோடு எமது சில கருத்துக்கள்...

நீங்கள் குறிப்பிட்டது போல இளைஞர்கள் தானே நாளை குடும்பத்தை அமைக்கப் போகிறார்கள்... இவர்கள் எந்த அளவுக்கு குடும்பத்தின் மீது அதன் சமூகத்தாக்கத்தின் மீது தெளிவு கொண்டவர்களாக இருப்பர்...!

முதலில் இப்படியான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்... திருமண வாழ்வென்பது ஏதோ பெட்டை/பொடி தேடிவதும் கையெழுத்துப் போடுவதும் பிள்ளை குட்டி பெறுவதென்பதும் அல்ல....! குடும்பம் ஒரு சமூக நிறுவனம் போன்றது அதை கொண்டு நடாத்துவதற்கும் உயர்ந்த பலனை எட்டுவதற்கும் ஒரு வழிமுறை நெறிமுறை இருக்கு அவை பல இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தெரியாது...! மேற்கில் இவைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.... தனிப்பட்ட குடும்ப நல ஆலோசனைகள் மூலம் அறிவுறுத்துகின்றனர்...ஆனால் எங்கள் இளைஞர்களுக்கு அதில் எல்லாம் அக்கறை கிடையாது.... இவர்கள் பாடம் படிப்பது அடுத்த குடும்பங்களைப் பார்த்து.... இவைதான் ஒருவர் செய்யும் பிழையை (உணர்ச்சி வசப்பட்ட விவாவகரத்துக்கள் ) மற்றவரும் செய்ய...செய்யும் பிழைகளை நாகரிகமாக காட்டவும் காரணமாகிறது...!

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் குடும்பங்களை அமைக்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ( அவர்கள் படித்துப் பட்டம் கூடப் பெற்றிருக்கலாம்....) குடும்பம் என்பதன் அடிப்படை சித்தாத்தம் தெரியாமையே....! குடும்பம் அதை எப்படி அமைப்பது நிர்வகிப்பத்து என்ற திட்டமிடல் இன்மை...இன்று ஒரு நிறுவனத்துக்குச் சமனான திட்டமிடல் இன்றி குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலை...காரணம்... சமூகத்தில் உயர் வாழ்வுத் தகமை தேடும் வெறி... பெரியோரின் ஆதரவும் வழிகாட்டலும் இல்லாத நிலை... பொருளாதாரக் காரணிகள் என்று பல....ஆனால் இன்று புலத்து இளைஞர்களிடமும் யுவதிகளிடமும் உள்ள பலவீனம் என்பது திட்டமிடல் இன்மை....!

அன்று புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் பொறுப்புணர்வோடு தாயகத்தில் இருந்த தங்கள் குடும்பங்களை கவனித்தது போல் அவர்களின் பிந்தைய சகோதரங்களோ...இல்ல அவர்களின் வாரிசுகளோ இல்லை....ஏன்...????! இதற்கு விடை கண்டால் இவர்களின் பலவீனம் புரியும்...அதுதான் குடும்பங்கள்.... குழந்தைகள் சீரழிய முக்கிய காரணம்....! Idea

இக்கருத்துக்கள் குடும்பஸ்தர்களைவிட இன்றைய இளைஞர்களுக்கு யுவதிகளுக்கும் தான் முக்கிய தேவையாகும்.... அவர்கள் தான் நாளைய குடும்பங்களின்... சமுதாயத்தின் தோற்றுவாய்கள்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
உங்கள் கூறறுக்கள் சில நல்லவையே ஆனால் தாய் தந்தையர்விடுகின்ற மிகப்பெரும் பிழை ஒருவர் கணடிக்கும்போது மற்றவர் உடனே ஆறுதல் சொல்வது.உ..ம் தந்தை கண்டித்தால் தாய் உடனே குறுக்Nகு புகுந்து தடுத்து ஆறுதல்சொல்வது.அப்போ பிள்ளை நினைக்கும் தான் மிக பெரிய தவறு ஏதும் செய்யாமல் தந்தை கண்டிக்கிறார்... எனவே ஒருவர் கண்டிக்கும்போது மற்றவர் பொறுமையாய் இருந்து பின்னர் ஏன் அவர் கண்டித்தார் என்பதை எடுத்து கூறி இனிமேல் அப்படி செய்யகூடாது என கூறுவது நல்லது என்பது என் கருத்து
; ;
Reply
#7
tamilini Wrote:நாங்கள் பிள்ளைகள் அல்லவா நாம் எதை எதிர்பார்க்கிறம் என்றால் அன்பு கலந்த கண்டிப்பு... கண்டிப்பும் இன்றி பிள்ளைகள் இருக்க கு}டாது.. நாம் நிறைய வீடுகளில் பாத்திருக்கம்.. அடிவிழும் அப்பா அடிச்சால் அம்மா அணைப்பா... அம்மா அடிச்சால் அப்பா அணைப்பார் ..... அடிக்கிறது மட்டும் இல்லை பேசுறதுக்கும் தான்.. மற்றது அடிச்சோ பேசிப்போட்டே.. பிள்ளையைக்கு}ப்பிட்டு ஏன்ன தவறு ஏன் அதைச்செய்யக்கு}டாது என்று ஒரு சின்ன விளக்கம் கொடுத்து பிள்ளைகளை தட்டிக்கொடுத்தா ஓகே.. இப்படி செய்கிற போது பிள்ளைகளிற்கு அதாவது நமக்கு விளங்கும்.. என்ன நடந்தது என்று.. அதோட பிள்ளை சொல்லுறதையும் கொஞ்சம் கேட்டு அதுக்குரிய விளக்கம் கொடுத்தால் பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்கள் அன்புக்கோட்டிற்குள்ள இருப்பார்கள். அவர்களிற்கும் புரியனும் அம;மா அப்பாக்கு கோவம் வந்தால் எப்படி அன்பாய் இருந்தால் எப்படி என்று.. கண்டிக்காமல் இருக்கிறதும்.. ஒரே அடியாய் அன்பு செலுத்தாமல் இருக்கிறதும் பிழை... இவை மாறி மாறி நடந்தால் தான்.. சுவாரசியமும் இருக்கும் குடும்பத்தில சந்தோசமும் இருக்கும்.. மற்றப்படி விவாகரத்து.. அவர்கள் அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றுறதற்காய் குழந்தைகளை சாட்டி விவாகரத்து பெறுறது தப்பு.. அதைவிட நம்ம தமிழ்ச்சமு}குத்தில அது குறைவு தானே..
இவைகள் நாம் கண்ட உண்மைகளும் அனுபவிச்ச உண்மைகளும்..

shiyam Wrote:உங்கள் கூறறுக்கள் சில நல்லவையே ஆனால் தாய் தந்தையர்விடுகின்ற மிகப்பெரும் பிழை ஒருவர் கணடிக்கும்போது மற்றவர் உடனே ஆறுதல் சொல்வது.உ..ம் தந்தை கண்டித்தால் தாய் உடனே குறுக்Nகு புகுந்து தடுத்து ஆறுதல்சொல்வது.அப்போ பிள்ளை நினைக்கும் தான் மிக பெரிய தவறு ஏதும் செய்யாமல் தந்தை கண்டிக்கிறார்... எனவே ஒருவர் கண்டிக்கும்போது மற்றவர் பொறுமையாய் இருந்து பின்னர் ஏன் அவர் கண்டித்தார் என்பதை எடுத்து கூறி இனிமேல் அப்படி செய்யகூடாது என கூறுவது நல்லது என்பது என் கருத்து
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நான் மேற்கூறிய விடயத்திற்கு ஒரு உ..ம் யேர்மனியில் எனது உறவினரின் மகன் 14 வயது நண்பர்களுடன் புகை பிடிப்பதை அறிந்த தந்தை 2..3 தடைவை அறிவுரைகூறி பார்த்தார் பின்னரும் மகன்ஒருநாள் வீதியில் மகன் புகை வழையம் விட்டதை கண்ட தந்தை மகனை புரட்டிஎடுக்கவே தாய் குறுக்கே போய் அது அவனல்ல பக்கத்தில் போன நண்பனதான் என்று வக்காலத்து வாங்க தந்தையோ அப்ப நான் என்ன விசரனோ எண்டு தாய்கும் ஒண்டு போட மகன் மறுநாள் காவல் துறையில் புகார் கூற இன்று விவாக ரத்தின் இறுதியில் நிறகிறது குடும்பம்
; ;
Reply
#9
Quote:இணைந்தது: 01 ஆடி 2004
கருத்துக்கள்: 114
வதிவிடம்: france
எழுதப்பட்டது: செவ்வாய் கார்த்திகை 23, 2004 4:27 pm Post subject: புலத்திலே தமிழ் பிள்ளைகள்



புலத்திலே தமிழ் பிள்ளைகளை ஈழத்தில் எம்மை பெற்றேர் கண்டித்தது போல் கண்டிக்கலாமா அல்லது கூடாதா ?? அல்லது ஏதேனும் அளவுகோல்உள்ளதா??? ;காரணம்.இன்றுபுலத்தில் கண்டிப்பதால் 1 பிள்ளைகள் விட்டை விட்டு வெளிNறுகின்றனர். அல்லது காவலதுறையிடம் புகார் கூறி விடுகின்றனர். இதனால பலகுடும்பங்கள் பிரச்சனை பட்டு கணவன் மனைவி விவாகரத்து வரை நடந்திருக்கிறது
_________________

அன்பால் அரவணைத்து அறிவுரை கூறுவதே நல்லது.
<b> </b>
Reply
#10
அன்பால் அரவணைத்து அறிவுரை கூறுவதே நல்லது.ஜஃஙரழவநஸ

அன்பால் திருத்துவது பேச நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியப்படாது
; ;
Reply
#11
Quote:அன்பால் திருத்துவது பேச நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியப்படாது

அப்படி என்றால் கண்டித்து பிரச்சனையை வளருங்கள்
<b> </b>
Reply
#12
shiyam Wrote:நான் மேற்கூறிய விடயத்திற்கு ஒரு உ..ம் யேர்மனியில் எனது உறவினரின் மகன் 14 வயது நண்பர்களுடன் புகை பிடிப்பதை அறிந்த தந்தை 2..3 தடைவை அறிவுரைகூறி பார்த்தார் பின்னரும் மகன்ஒருநாள் வீதியில் மகன் புகை வழையம் விட்டதை கண்ட தந்தை மகனை புரட்டிஎடுக்கவே தாய் குறுக்கே போய் அது அவனல்ல பக்கத்தில் போன நண்பனதான் என்று வக்காலத்து வாங்க தந்தையோ அப்ப நான் என்ன விசரனோ எண்டு தாய்கும் ஒண்டு போட மகன் மறுநாள் காவல் துறையில் புகார் கூற இன்று விவாக ரத்தின் இறுதியில் நிறகிறது குடும்பம்

14 வயதில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம்... (ஒருவேளை ஜேர்மனியில் வேறு சட்டமோ என்னவோ...) அப்படி என்றால் அதை பேசாமல் தகப்பனே பொலீசில் அறிவிக்க வேண்டியதுதானே... மகனுக்கு சிகரட் கிடைப்பது பற்றி....அவர்கள் மூலங்களைக் கண்டு பிடிப்பார்கள்... பிரச்சனை தீர்ந்துது....! மகன் ஒரு தவறான வழிக்குப் போனால் அவனின் பாதையில் போய்த்தான் அவனைக் கண்காணித்து அறிவுரை சொல்லித் திருத்த வேண்டும்...இல்ல சட்டம் அவனுக்கு என்ன தண்டனை வழங்குமோ அதைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதுதான்... திருந்துவதற்காக....வேறு வழியில்லை...! Idea

ஆனால் அந்தத்தாய் சரியா புத்தி பேதலித்தது போல... மகன் செய்வது தவறு... அவனுக்குக் கெடுதி அப்படி இருந்தும் அதை தாய் ஏன் ஊக்கிவிக்க வேண்டும்... கேடுகெட்ட குடும்பமா...???! நடந்த சம்பவத்தைப் பொலீசுக்கு விளக்கி தாயும் தக்கப்பனும் ஒரு குரலில் நிலையைச் எடுத்துச் சொல்லி இருந்தால் பையனுக்கும் திருந்த ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்... குடும்பத்தில் பிரச்சனையும் வந்திருக்காது...இப்ப விவாகரத்து எடுத்தாப் போல பையன் திருந்தவா போறான்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.
<b> </b>
Reply
#14
குருவிகளே ஜரேப்பா எல்லாம்ஒரே சட்டம்தர் 18 வயதிறகுட்ப்டவர்களிற்கு சிகரற்; மற்றும் பார் களில் மது விக்க தடை ஆனால்.ஆனால் சிறுவர்கள் புகை பிடிக்கிறார்கள் என்று போலிசில் சொல்லி எதுவம் ஆகபேவதில்லை அவர்கள பாடசாலை யிலும் பெற்றோரிடமும் கவனிக்கசொல்லி விட்டுவிடுவார்கள். அதுவம் யெர்மனியில் ஒருவசதி தெருவேரங்களிலேயே காசு போட்டு யாரும் எடுக்க கூடிய வகையில் சிகரற் மிசின்கள் உள்ளன
; ;
Reply
#15
நான் 12 இல அடிச்சுட்டன் சொன்னது கள்ளை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#16
[quote=shiyam]நான் மேற்கூறிய விடயத்திற்கு ஒரு உ..ம் யேர்மனியில் எனது உறவினரின் மகன் 14 வயது நண்பர்களுடன் புகை பிடிப்பதை அறிந்த தந்தை 2..3 தடைவை அறிவுரைகூறி பார்த்தார் பின்னரும் மகன்ஒருநாள் வீதியில் மகன் புகை வழையம் விட்டதை கண்ட தந்தை மகனை புரட்டிஎடுக்கவே தாய் குறுக்கே போய் அது அவனல்ல பக்கத்தில் போன நண்பனதான் என்று வக்காலத்து வாங்க

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே
----------
Reply
#17
[quote=kuruvikal]ஆனால் குழந்தைகள் அப்படியல்ல அன்புக்காய் ஏங்கும் உள்ளங்கள்...அவர்கள் அன்பையும் அரவணைப்பையும் தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.. ஆனால் பெற்றோரோ அவற்றை தேவைக்கு ஏற்ப வழங்கத் தவறுகின்றனர்...! அப்படி அன்பு செலுத்தும் பெற்றோர் கூட அளவுக்கு அதிகமாக கொடுக்க... அது செல்லமாக பிள்ளை அதையே எங்கும் எதிர்பார்க்க... பிரச்சனைகள் புதிய வடிவம் எடுக்கும்...!

எனவே கண்டிப்போடு (அடித்து உதைப்பதல்ல... உதாரணமாக குழந்தைகள் விரும்புவதை தரமாட்டேன் தொடக்கூடாது என்று கூறுவதன் மூலம் அப்பாவோ அம்மாவோ இப்படிச் செய்தா இதைச் செய்ய விடமாட்டார்கள்...அது அவர்களுக்குப் பிடிக்காதது என்பதை குழந்தைகள் இயல்பாகப் புரிந்து கொள்வர்... அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் அது மனதில் இருக்கும்.... எங்கள் பெற்றோர் செய்தவை இன்றும் எம்மோடு இருக்கிறது...எம்மை வழிநடத்துகிறது போல...) அன்பையும் அரவணைப்பையும் தேவைக்கு ஏற்ப வழங்கி குழந்தைகள் தாங்களாக சிந்தித்து தீர்மானம் எடுக்கும் வரை அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பதுதான் சிறந்தது...!
அதேபோல் குழந்தைகள் வளர வளர பெற்றோர் சரியான பாதையில் தாமும் நடந்து பிள்ளைகளுக்கும் சரியான வழி காட்ட வேண்டும்...இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு....!

[color=red]பலர் சொல்கிறார்கள் தங்களுக்கு குழந்தைகளோட செலவு செய்ய நேரம் இல்லை என்று அது வெறும் சாட்டு...! உண்மையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு இரண்டு மணித்தியாலத்தைக் கழித்தாலும் இயல்பாக நீங்கள் அன்புள்ளவராக இருந்தால் அந்த இரண்டு மணி நேரம் போதும் உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கு உங்கள் அன்பின் பரிமானத்தைக் காட்ட....நீங்கள் புலத்தில் தான் இந்தப் பிரச்சனை என்று பார்க்கிறீர்கள்... தாயகத்தில் கூட தென்னிலங்கைக்கோ இல்ல தூர இடங்களுக்கோ சென்று தனிமைப்பட்ட சூழலில் வேலை பார்க்க வேண்டி வரும் சந்தர்ப்பத்தில் கூட இதே நிலையை பல பெற்றோர் அனுபவித்துள்ளனர்...! Idea

குழந்தைகளுக்காக விவாகரத்தென்பது விளக்கம் இல்லாத் தன்மை...அப்படியானவர்கள் ஏன் தான் குழந்தைகளை உருவாக்கின்றனரோ...!!! Idea :roll:

அன்பும் பாசமும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் எங்கும் எதையும் சாதிக்க உதவும்...! இவற்றை சரியாக பயன்படுத்தத் தவறுவோரே மனிதனில் சமூகவாழ்வில் தோல்வியடைகின்றனர்....! Idea

கணவன் மனைவிக்காவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக் கொடுப்பத்தில் என்ன குறையோ தெரியாது... ஆனால் அநேகர் அதைச் செய்ய விளைவதில்லை...! ஏனோ...

அன்பினால் எதையும் சாதிக்கலாம். குருவிகள் அண்ணாவின் கருத்துக்களுக்கு நன்றியண்ணா. யாவும் உண்மையே
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)