Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் செம்மொழியாக....
#1
தமிழ் செம்மொழியாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே...அதனைத்தொடர்ந்து............

<b>தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தா?

கன்னட மொழியியலாளர்கள் எதிர்ப்பு</b>

தமிழை செம்மொழியாக அறிவிப்பதற்கு கன்னட மொழி வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களின் எதிர்ப்புக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலையைச் சேர்ந்த தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்மொழியின் துணையின்றி தனித்தியங்கும் தன்மை கொண்ட தமிழை உலகின் பல பல்கலைக் கழகங்கள் செம்மொழியாக ஏற்று பாடமாக வைத்துள்ள உண்மையை மறுத்து, ஒரு மொழியின் தொன்மை, அதன் இலக்கியத் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செம்மொழித் தகுதி வழங்குவதென்றால் தமிழுக்கு முன்னால் கன்னடத்திற்குத் தான் செம்மொழிப் பட்டம் வழங்க வேண்டும் என்கிறார் கன்னட நாடகாசிரியரான சந்திரசேகரக் கம்பர்.


மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியம், கி.பி.9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கன்னட இலக்கியமான 'கவிராஜ மார்க்கா'விற்குச் சமகாலத்தில் எழுதப்பட்டதுதான் என்று நஞ்சைக் கக்குகிறார் கன்னட மொழியியல் அறிஞர் பேராசிரியர் சித்தானந்த மூர்த்தி.

வன்னியர்கள், தேவர்கள், கவுண்டர்கள், முதலியார்கள், செட்டியார்கள், நாடார்கள் இவர்களில் எந்த சாதியினர் பேசுகிற தமிழைச் செம்மொழியாக ஏற்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கன்னடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.வி.நாராயணா. வட்டார வழக்கில் உள்ள சொல் பலுக்கல் (உச்சரிப்பு) முறை வேறுபாட்டை உணராமல் அதை சாதி ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் இவரது மொழியியல் அறிவு கன்னட சார்புடையதே.

திராவிடம் என்றொரு மொழி இல்லை என்றாலும் தமிழேத்ரமிளமாகபின்னர் த்ரமிடமாகஅதற்குப் பின்னர் த்ராவிடமாக ஆரியர்களால் அழைக்கப்பட்டது என்ற உண்மையை மறுத்து, திராவிட மூல மொழியிலிருந்து தமிழும் மலையாளமும் ஒரே காலத்தில் பிறந்தன என்று கூறி, தமிழின் தோற்றத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிறந்த மலையாளத்தோடு ஒப்பிட்டு தனது தமிழ் எதிர்ப்பு படிந்த ஆய்வை வெளியிட்டுள்ளார் கன்னட பண்பாட்டு மானிடவியல் பேராசிரியர் கே.வி.ராஜகோபால்.

தமிழை விட கன்னடம்தான் அறிவியல் மொழி, அவ்வகையில் முதலில் கன்னடத்திற்குத் தான் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் பி.எம்.இடினப்பா இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டால் உலகம் முழுவதும் பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடைபெறும். இதன் மூலம் தமிழின் தோற்றம், வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவும். இதன் மூலம் கன்னடம் உள்பட பல மொழிகளின் மூல மொழி தமிழே என்பதும் உலகமறியும். இதைப் பொறுக்க முடியாத வெறியர்களும், மொழியியல் அறிஞர்களும் தமிழைச் செம்மொழியாக்கக் கூடாது என்று அரம்பத்தனமாக அலறுகிறார்கள்.

தமிழ் செம்மொழியாக்கப்பட்டால் சமஸ்கிருதமும் தமிழும் ஒப்பாய்வு செய்யப்படும். இதன்மூலம் பழம் பெரும் மொழி சமஸ்கிருதம்தான் என்ற மாயை தகர்த்தெறியப்படும். தமிழை நீசபாஷை என்று சொல்லும் வாய்களில் வழியும் சமஸ்கிருதத்தின் தகுதி உலகுக்குத் தெரியும். இதனால் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கத் தடைகோரும் கன்னட வெறியர்களுக்கு வடமொழி வெறியர்களும் துணை நிற்கக்கூடும்.

கன்னட பேராசிரியர்களின் இத்தகைய அறிக்கையானது அவர்களது வெறியுணர்வையே வெளிப்படுத்துகிறது. இத்தகைய அறிக்கைகள் தமிழக, கர்நாடக மக்களுக்கிடையேயான இன மோதல்களை அதிகரிக்கவே உதவும்.

எனவே இவ் விஷயத்தில் தமிழ் மக்கள் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருந்து தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்குப் பாடுபட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி அதுதமிழ் இணையம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)