Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கற்றதும்.. பெற்றதும்..
#1
<span style='font-size:25pt;line-height:100%'>கற்றதும்.. பெற்றதும்..</span>
[size=15]சுஜாதா

கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?

கத்தரி, அவியல், குண்டான், தொப்பி, பில்லி, மங்குஸ்தான், பீங்கான், ஏலம், ஓரை, கடுதாசி, கக்கூசு, வோட்டு.
விடை கடைசியில்.
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p122.jpg' border='0' alt='user posted image'>

'பூனையைப் போல் அலையும் வெளிச்சம்' - குட்டி ரேவதி (தமிழினி), 'பலூன்காரன் வராத தெரு' - அழகு நிலா (குமரன் பதிப்பகம்) தொகுப்புகளின் தலைப்புகளே அட்டகாசமாக வைக்கிறார்கள். என் கவனத்தை ஈர்க்கின்றன. பின்னது அழகாக அச்சடிக்கப்பட்டு (நூலாக்கம் பத்மா விஷன்ஸ்) மனோகரின் ஓவியங்களும் கவிதைகளும் மெருகூட்டுகின்றன.

''கவனமாக இருக்க வேண்டியுள்ளது
சாதாரண ஓர் ஆடை கூட
என்னை வேறுபடுத்திக்
கூறுபோடத் தயாராக உள்ளது
சரியானதாகத் தோன்றாமல்
வாங்கியிருக்க முடியாது என்றாலும்
அணிந்து கொள்ள விருப்பமில்லை..
என் வருத்தமெல்லாம்
வாங்காமல் விட்டுவந்த
அந்தப் பொருத்தமான
ஆடை குறித்தே''
வாழ்வில் நாம் விட்டு வைத்த பொருத்தமான ஆடைகள் அனேகம்.

இது தற்செயலானதா இல்லை, ஒரு சமூக மாறுதலின் அடையாளமா... பெண் கவிஞர்களின் கவிதைகள் சிறப்பாக இருப்பதாக ஒரு பிரமை எனக்கு ஏற்படுகிறது. காரணம் இரண்டு சொல்வேன்.

சிறப்பாக எழுதக்கூடிய ஆண் கவிஞர்கள் குறைவாக எழுதுகிறார்கள். இதற்கு அவர்கள் சுயவிமரிசன உக்கிரம் காரணமாக இருக்கலாம். அல்லது பல ஆண் கவிஞர்கள் கோடம்பாக்கத்து முயற்சிகளில் கவிதை எழுதுவதை கொஞ்ச காலம் ஒத்திப் போட்டிருக்கிறார்கள். வைரமுத்து, பா. விஜய், முத்துக்குமார், கபிலன் போன்றோரின் வரிகள் அவர்களின் கவிதை பாடும் சாமர்த்தியத்தால் சில நல்ல வரிகளைத் தற்செயலாக சினிமா பாடல்களுக்குக் கடத்துகிறார்கள். இதனிடையே வார்த்தை சுதந்திரம் பெற்ற குட்டி ரேவதி போன்ற கவிஞர்கள் புதிய படிமங்களை ஒதுக்கிவிட்டுப் புதுசு புதுசாக அடுக்குகிறார்கள்.

கிணற்றாழங்களில் கசியும்
நீர்த் தாரைகளின்
ஈரமொத்த உன் கண்கள்
கீறிய பழத்தோலின்
உள்விதைப் பிதுங்கல்
மொட்டுத் தாரகையின்
மின்னல்முளை
அகழ்ந்தெடுத்த சொல்லின்
அர்த்தப் பெருங்குழி.
தமிழில் சுட்டெழுத்துகள் மூன்று. அ இ உ... அவன் இவன் உவன். இதில் உவன் பெரும்பாலும் மறைந்து, யாழ்ப்பாணத் தமிழில் மட்டும் உள்ளது. பேசுபவரும் கேட்பவரும் எதிர் எதிரே இருக்கும்போது இவன் என்றால் என்னருகில் இருப்பவன். உவன் என்றால் உன்னருகில் இருப்பவன். அவன் என்றால் வேறு எங்கோ இருப்பவன். பேசுபவரும் கேட்பவரும் ஒரே இடத்தில் இருக்கையில் உவனுக்கு அத்தனை நுட்பமான வேறுபாடு தேவையற்றுப் போய்விட்டது. ஆனால், இப்போது செல்போனும் டெலிபோனும் தொலைக்காட்சியில் போன் - இன் - நிகழ்ச்சிகளும் மலிந்துவிட்ட இந்த நாட்களில் உவன் புதிதாகத் தேவைப்படுகிறான். பேசுபவரும் கேட்பவரும் வேறு வேறு இடத்தில், நகரில், ஏன் தேசத்தில் இருப்பதால் உவனுக்கு ஒரு புது உபயோகம் ஏற்படுகிறது.

உதாரணம் - ''ஹலோ... மல்லிகா பேசறேன். யார் பேசறது?''

''ராகினி. என்ன விஷயம்?''

''ராகினி பக்கத்தில மனோ இருக் கானா?''

''இருக்கானே..''

''உவன்கிட்ட கேளு. கொடுத்த கடனை எப்ப திருப்பித் தருவான்னு.''

''ரமேஷ் உம் பக்கத்தில இருக்கானா?''

''இருக்கான். ஆனா இவன்கிட்ட பேராதுன்னு சொல்லு.''

வேறுபாடு புரிகிறதல்லவா? இப்படி ஒரே ஒரு எழுத்தில் சுட்டிக் காட்ட முடிவதும் கேள்வி கேட்க முடிவதும் தமிழுக்குச் சிறப்பானது. ஆங்கிலத்தில் கூட பீகுகூசூ ப்ஹபி, பீகுஹபீ ப்ஹபி, ஹிகுகூஷகு ப்ஹபி இப்படித்தான் சொல்ல முடியும். தமிழில் இவன், அவன், எவன்.

லத்தீன், துருக்கிய மொழிகளில் அவன், இவன், உவனை ஒட்டவைக்க முடியும் என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய 'தமிழ் மொழி இலக்கண இயல்புகள்' என்னும் அருமையான நூலிலிருந்து அறிகிறேன்.

யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் பதிப்பித்திருக்கும் இப்புத்தகம் மிகச்சிறந்த இலக்கண ஆராய்ச்சி நூல்களில் ஒன்று.

எழுத்தாளனுக்கு தன் மொழியின் இலக்கண நளினங்களை அறிந்து கொள்வது முக்கியம் என நம்புகிறவன் நான். உதாரணம், தமிழ்மொழியில் வினாவுதலை கேள்வி கேட்பதை கொஞ்சம் கவனியுங்கள். ஆங்கிலத்தில் கூற்றாக ஒரு வாக்கியத்தை எழுதி விட்டுக் கேள்விக்குறியை அமைத்தாலே வினாவாகிறது. சந்தேகம் வரும்போது ஹிகுட் ஹிகுக்பி ஹிகுகூஷகு ஹிகுஹபீ பயன்படுகிறது அல்லது வார்த்தைகளின் வரிசையை மாற்றி அமைத்தால் கேள்வியாகிறது. வச்யு ஷஹபி க்ஷச் பீகுகூசூ என்னும் கூற்று ஷஹபி ட்ச்யு க்ஷச் பீகுகூசூ என்னும் போது வினாவாகிறது. ட்ச்யு ஷஹபி க்ஷச் பீகுகூசூ? என்று தொனி மாற்றி கேள்வி கேட்க விடலாம். தமிழில் வெள்ளைக்காரன் வருவதற்குமுன் கேள்விக்குறிக்கான குறியீடுகள் ஏதும் இல்லை. வினா எழுத்துகளை வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் ஒட்டவைக்கிறோம். இதற்கு நன்னூல் சூத்திரம் -

எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவாகும்மே
இதில் சொல்லின் இறுதியில் வரும் 'ஏ'யை மட்டும் கவனித்து வியக்கலாம். கவிதா வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றாள் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டு தனித்தனியாக கவிதாவா, வெள்ளிக் கிழமையா, காலையா, கல்லூரிக்கா, சென்றாளா என்று ஐந்து முறை மாற்றி 'ஆ'வை ஒட்டவைத்துப் பாருங்கள் வாக்கியத்தின் பொருள் வானவில் போல மாறும்.

பாய்ஸில் முன்னாவாக நடித்த சித்தார்த் அடுத்து மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் நடிக்கிறார். இலங்கைக்கு பாய்ஸ் ஐம்பதாவது நாள் விழாவுக்குச் சென்றிருந்தபோது பீட்டில்ஸ் பாடகர்கள் போல வர வேற்பு இருந்தது. பெண்கள் அவர்கள் மேல் மயங்கி விழுந்தார்கள். ஸ்ரீலங்காவில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் தேவதாஸை விட அதிக வசூல்... 'புரியவே இல்லை சார்' என்றார். 'புரிவதற்கு உனக்கு இன்னும் கொஞ்சம் வயசாக வேண்டும்' என்றேன்.

ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை முறையே
தெலுங்கு, மலையாளம், மராட்டி, உருது, சிங்களம், மலாய், சீனம், அரபு, கிரீக், போர்த்துகீசு, டச்சு, ஆங்கிலம்.

நன்றி:விகடன்
Reply
#2
AJeevan Wrote:கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?

கத்தரி, அவியல், குண்டான், தொப்பி, பில்லி, மங்குஸ்தான், பீங்கான், ஏலம், ஓரை, கடுதாசி, கக்கூசு, வோட்டு.
மருவி வந்தவை என்று சொல்வதே சரியானது. ஏனெனில் நீங்கள் எழுதியது மாதிரியான சொற்பிரயோகங்கள், நீங்கள் குறிப்பிடும் மொழியிலேயே சில வேளை காணமுடியாது.
Reply
#3
Ilango Wrote:
Sujatha in Vigadan Wrote:கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?

கத்தரி, அவியல், குண்டான், தொப்பி, பில்லி, மங்குஸ்தான், பீங்கான், ஏலம், ஓரை, கடுதாசி, கக்கூசு, வோட்டு.
மருவி வந்தவை என்று சொல்வதே சரியானது. ஏனெனில் நீங்கள் எழுதியது மாதிரியான சொற்பிரயோகங்கள், நீங்கள் குறிப்பிடும் மொழியிலேயே சில வேளை காணமுடியாது.

கீழ்க்காணும் சொற்கள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தவை?
என்பதற்கு சுஜாதா ஆனந்தவிகடனில் இப்படி எழுதியுள்ளார்.


கத்தரி, (தெலுங்கு)

அவியல், (மலையாளம்)

குண்டான்,(மராட்டி)

தொப்பி,(உருது)

பில்லி, (சிங்களம்)

மங்குஸ்தான்,(மலாய்)

பீங்கான், (சீனம்)

ஏலம், (அரபு)

ஓரை, (கிரீக்)

கடுதாசி, (போர்த்துகீசு)

கக்கூசு, (டச்சு)

வோட்டு (ஆங்கிலம்)

(இளங்கோ சொல்வது போல மருவி வந்ததாக எழுதாமல் விடப்பட்டிருக்கலாம்.)
இது பற்றிய மாறுபட்ட தேடல்கள் இருக்கிறதா , இல்லையா என்பது கிடைத்தால், தெரிந்து கொள்வது பலருக்கு பயனுள்ளதாகும்.
தெரிந்தால் எழுதுங்கள்.............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)