Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கு வழிகள்
நண்றி தேவகுரு அண்ணா..! உங்களின் வாசகன் நான்...
::
Reply
Quote:Nero Burning Rom அல்லது Express, ISO filem களை உருவாக்கும்போது ISO என்ற extension ஐ கொடுக்காமல் nrg என்று கொடுக்கும். ஒரிரு மென்பொருட்கள் img என்ற extension ஐ கொடுக்கும்.
Nero வில் ISO வகை கோப்புக்களையும் உருவாக்கலாம்.
<img src='http://img241.imageshack.us/img241/8820/nero2ke.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
வாழ்த்துக்கள் தேவகுரு அண்ணா. தளராமல் தொடர்ந்து தகவல்களைத் தரும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது
[size=14] ' '
Reply
<b>குறுக்குவழிகள் - 104</b>

What is Hiberfil.sys file?

Hibernation என்பது, பனி பெய்யும் மேலை நாடுகளில் ஒரு மிருகம் அதிக குளிர் காரணமாகவும் உணவு கிடைக்காததின் காரணமாகவும் சக்தியை சேமித்து உயிர் வாழும்பொருட்டு சில மாதங்களுக்கு நிலத்தின் கீழ் புற்றெடுத்து ஆழ்ந்த உறக்கம்போன்ற நிலையில் கிடந்து, குளிர் முடிய வெளியே வருவதாகும். இதே யுக்தியை கம்பியூட்டரிலும் கையாளும்போது எழுதப்படும் கோப்புத்தான் Hiberfil.sys file என்பது

கம்பியூட்டரின் முன் ஆளில்லாதபோது நாம் ஏற்கனவே set பண்ணியபடி குறிப்பிட்ட சில நிமிடங்களில் கம்பியூட்டர் Hibernation mode க்கு போகும். அப்போது நினைவகத்தில் உள்ளவற்றை ஹார்ட் டிஸ்க்கில் எழுதிவைக்கும். இந்த எழுதிவைக்கப்பட்டதைதான் Hiberfil.sys file என்கிறோம். பின்பு உரியவர் வந்து கம்பியூட்டரில் கைவைக்கும்போது கம்பியூட்டர் உயிர் பெற்று Hiberfil file லில் உள்ளதை நினைவகத்திற்கு ஏற்றிகொள்ளும். அதன் பின் இந்த file தேவையற்ற ஒன்று தான். Laptop கம்பியூட்டர்களில் மின்சார இணைப்பு இல்லாதபோது மின்கலம் பாவிக்கையில் இந்த Hibernation mode மிகவும் பிரயோசனமானது. மற்றும்படியும் சிலர் காலையில் கம்பியூட்டரை on செய்தால் இரவு படுக்கைக்கு போகும்போதுதான் off பண்ணுவார்கள். பகலில் சில மணிநேரங்கள் கம்பியூட்டரின் முன் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த setting பிரயோசனமானது.

எனவே Defragmentation செய்யும் முன்பதாக இந்த file களை நாம் ஹார்ட்டிஸ்க்கில் இருந்து அழிக்கவேண்டும். எப்படி?

Control Panel ஐ திறக்கவும்
Power Options Icon ஐ இரட்டை கிளிக்செய்யவும்.
Hibernate Tab ஐ கிளிக் செய்யவும்
Enable Hibernation என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்து விடவும்.
Tick எடுபட்டவுடன் விண்டோஸ் XP தானகவே இந்த Hiberfil ஐ அழித்துவிடும். பின்பு நீங்கள் Degragmentation செய்யலாம். செய்து முடிந்தவுடன் மீண்டும் Tick ஐ போட்டுவிடலாம்.
Reply
<b>குறுக்குவழிகள் - 105

[b]Bulk Rename Utility</b>

இந்த மென்பொருள் டிஜிட்டல் கமெரா வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது.பல நூறு பையில்களின் பெயர்களை ஒரேயடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு உதவும் இலவச மென்பொருள் இது.

கமெராவிலிருந்து படங்களை கணணிக்கு மாற்றும்பொழுது படங்களின் கீழ் பெயர்கள் ஒரே மாதிரியாக காணப்படும் (சில இலக்கங்களை தவிர). இது விரும்பத்தகாத ஒன்று. சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது)

இப்படியான நேரங்களில் எமக்கு உதவுவது மேற்கூறப்பட்ட மென்பொருளாகும்.
பெயர்களின் முன்பகுதியில், பின்பகுதியில் அல்லது இடையில் ஓரிரு எழுத்துக்களை நீக்கவோ, சேர்க்கவோ மாற்றவோ அல்லது பெயரோடு இலக்கங்களை வரிசைக்கிரகமாக சேர்க்கவோ இதனால் முடியும். இலங்களை 1 இலிருந்தல்லாமல் வேறொரு இலக்கத்திலிருந்தும் ஆரம்பிக்க முடியும். இப்படி பல வழிகளில் பெயர் மாற்றம் செய்ய இந்த மென்பொருள் உதவி செய்யும்.

இந்த மென்பொருளை இயக்க தோன்றும் ஒரே பெட்டியில் எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். பார்க்க ஒரு பத்திரம் போல தோன்றும். தேவையில்லாதவற்றை நிரப்ப வேண்டியதில்லை. Preview உண்டு. பெயர் மாற்றம் செய்யவேண்டியதை நிரப்பி Rename பட்டனை கிளிக் பண்ணமுன்பாக preview வை பார்த்து திருத்தம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை நான் பாவிக்கின்றேன்.

http://www.bulkrenameutility.co.uk/Main_Intro.php
Reply
நண்றி தேவகுரு அண்ணா..!
<b> .. .. !!</b>
Reply
ரொம்ப..பயனுள்ள தகவல்கள் தேவகுரு அண்ணா..கொஞ்ச நாட்களாகவே வாசித்து வருகின்றேன்..கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்து விடுவேன் என்று நினைக்கின்றேன்..ஆனாலும் முயற்சி விடாமல் தொடரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
..
....
..!
Reply
நன்றி தேவகுரு ஜயா மிக பயனுள்ள தகவல்
[b][size=18]
Reply
உங்களுடைய சேவையை மேலும் தொடர என் வாழ்த்துக்கள் தேவகுரு அண்ணா.......
! ! !!
Reply
[b]குறுக்குவழிகள் - 106

Hiren's BootCD 7.7

நூற்றுக்கு மேற்பட்ட இலவச மென்பொருட்களை (Tools) ஒன்று திரட்டி, அவைகளை வகைப்படுத்தி, ISO Format ஆக்கி டவுண்லோட் பண்ணி Bootable CD தயாரிக்கக்கூடியதாக இணையத்தில் கிடைக்கிறது Hiren's BootCD 7.7 இவ்வேலையை குஜராத்தை சேர்ந்த ஒருவர் தான் செய்கிறார் என எண்ணுகின்றேன்.

PC மெக்கானிசம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தெரியாதவர்களுக்கு பழகிக்கொள்வதற்கு ஒது சந்தர்ப்பம். கம்பியூட்டர் Boot பண்ணாது தொல்லை கொடுக்கும்போது, இந்த சீடியில் பூட் பண்ணி கம்பியூட்டரை repair செய்து கொள்ளலாம்; Master boot record ஐ கொப்பி பண்ணலாம்: பாஸ்வேட் மறந்து போனவிடத்து reset பண்ணலாம்: ஹாட் டிஸ்க்கை பிரதி எடுக்கலாம். Partition ஐ resize பண்ணலாம்; Formatting செய்யலாம்; System Information முழுவதையும் ஒரேயடியாக பார்க்கலாம்; Ram testing செய்யலாம். டிஸ்க்கை பிரதி பண்ணலாம்; பொதுவாக எல்லாமே செய்து கொள்ளலாம். இந்த Tools களில் 75% மானவை Dos mode இல் இயங்குபவை. அதாவது Hard disk இலிருந்து பூட் பண்ணாமல் இந்த் சீடியிலிருந்து பூட் பண்ணி பின் இந்த Tools களை இயக்கவேண்டும்.

சில Tools கள் Windows இல் வேலை செய்பவை. XP அல்லது Win2000 வேலை செய்து கொண்டிருக்கும்போது இயங்குபவை. Hiren's Cd ஐ அதன் டிரைவிலிட்டு CD ஐ திறந்து Windows என்னும் போல்டரினுள் உள்ள EXE file களை கிளிக்பண்ணுவதன் மூலம் இயக்கலாம். இவைகள் Windows Tools என்ற தலையங்கத்தில் கீழ் வகைப்படுத்த பட்டுள்ளது. சரி இந்த சீடியின் உள்ளடக்கங்களை அறிய விரும்பின் இந்த லிங்கை கிளிக் பண்ணவும். ஆனால் இந்த தளத்தில் டவுண்லோட் கிடையாது .

http://homepage.ntlworld.com/hiren.thanki/bootcd.html

டவுண்லோட் பண்ணவேண்டுமெனில் கீழே உள்ள லிங்கை கிளிக்பண்ணவும். இதன் அளவு 59 MB. இதனை கையடக்கமாக வைத்துக்கொள்ளவேண்டுமென்பதற்காகப்போலும் இதனோடு இந்த Tools களின் User Guides களை இணைக்காமல் விட்டுள்ளார்கள். User Guides களை இணையத்தில் வேறாக தேடி பிடித்துக்கொள்ளவேண்டும். இந்த ISO File ஐ டவுண்லோட் பண்ணி சாதாரணமாக எம் எல்லோரிடத்திலும் உள்ள Nero Express உதவியோடு அதில் உள்ள Saved Project or Disk Image என்ற கட்டளை மூலம் Bootable CD தயாரித்துக்கொள்ளலாம்.

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக கிடைத்த XP கம்பியூட்டரின் பாஸ்வேட் அவருக்கு தெரியாமலிருந்த்து. என்னிடம் கொண்டுவந்தார். என்னிடமிருந்த Hiren's boot CD ஐ அதன் டிரைவ் இலிட்டு அதிலிருந்து பூட் பண்ணி Active@pwd changer என்ற Tool ன் உதவியோடு அந்த் பாஸ்வேட்டை நீக்கி கொடுத்தேன்.

இதை Burn பண்ணி கைவசம் எல்லோரும் வைத்திருக்கவேண்டும் என்பதனால் இத்தொடரில் இதை எழுதுகின்றேன். மேலும் ஏதாவது விபரம் வேண்டின் இத்தொடரில் போஸ்ட் செய்யவும்.

http://www.9down.com/downloads.php?fileid=257
Reply
நல்ல பயனுள்ள தகவல்களும் இணைப்பும் நன்றிகள் தேவகுரு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>குறுக்குவழிகள் -107</b>

How to remove unused drivers? பாவனையற்ற டிரைவர்களை நீக்குவது எப்படி?

என்னிடம் ஒரு கம்பியூட்டர் உள்ளது ஆனால் Printer இல்லை. ஒன்று கிடந்தது: தற்போது அது பழுதடைந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒருமுறை scanner தேவைப்பட்டது, நண்பனிடம் வாங்கி பாவித்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டேன். எனது சகோதரி கடந்த வாரம் நோர்வேயிலிருந்து வந்தவர். தனது டிஜிட்டல் கமெராவில் படங்கள் நிறைந்து விட்டதால் எனது XP கம்பியூட்டருக்கு தனது படங்களை டவுண்லோட் பண்ணி சீடியில் பதிந்து கொண்டு போனார்.

இதுதான் நிலைமை எனில் நான் தற்போது கம்பியூட்டரை இயக்கும்போது மேற்கூறப்பட்ட மூன்று சாதனங்களின் டிறைவர்களும் சேர்ந்து இயங்க ஆரம்பிக்கின்றன என்பது எனது கவனத்திற்கு வராமல் போய்விட்டது. அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை. இந்த சாதனங்களை அகற்றும்போது அதற்குரிய டிறைவர்களை நான் uninstall செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டது எனது தவறுதான். இப்படி எத்தனை டிறைவர்கள் உள்ளனவோ? சரி இவைகளை எப்படி அகற்றுவதென பார்ப்போம்

1.Control Panel லில் உள்ள System Icon ஐ இரட்டை கிளிக் செய்யவும். ( அல்லது Windows+Break கீக்களை அழுத்தவும்)
2.வரும் ஜன்னலில் Advance Tab ஐ அழுத்தவும்.
3. வரும் புதிய பக்கத்தின் அடியில் காணப்படும் Environment Variable என்ற Tab அழுத்தவும்.
4.Environment Variable என்ற ஜன்னலில் கீழ் காணப்படும் System Variable என்ற பகுதியின் கீழ் அடியில் காணப்படும் New என்ற பட்டனை அழுத்தவும்.
5. New System Variable என்ற சிறிய பெட்டி வரும். அதில் Variable Name என்பதன் எதிரில் devmgr_show_nonpresent_devices என் ரைப் பண்ணவும். Variable Value என்பதன் எதிரில் 1 என ரைப் பண்ணவும். கிளிக் OK. மீண்டும் கிளிக் OK.
6. இப்போது System Properties டயலக் பெட்டியில் நிற்பீர்கள். Hardware Tab-->Device Manager-->View-->Show Hidden Devices இவைகளை கிளிக் பண்ணவும்.
7. Device Manager ஜன்னலில் மேலிருந்து கீழாக ஒவ்வொரு + அடையாளத்தையும் கிளிக்பண்ணி ஆராய்ந்து பார்க்கவும். மங்கலான icon காணப்படுகிறதாவென. மங்கலாக இருந்தால் டிறைவர் லோட் ஆகியுள்ளது ஆனால் device கழற்றப்பட்டுள்ளது என அர்த்தம். அதில் வலது கிளிக்பண்ணி Properties ஐ பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (Error code 45- Device not present என காணப்படலாம்)
8.அவைகளை வலது கிளிக்பண்ணி Uninstall செய்துவிடவும்.

அண்மையில் தான் இந்த விடயம் எனக்கு தெரியவந்தது. எனது கம்பியூட்டரில் இதை பரீட்சித்தபோது எட்டு டிறைவர்களை கண்டுபிடித்து அழித்தேன். சில இடங்களில் Duplicate ம் காணப்பட்டது. ஒரே டிறைவர் அருகருகே காணப்பட்டது. அதில் ஒன்று மங்கலாக இருந்த்து. தவறுதலாக ஏதாவது ஒன்று அழிபட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டாது. மீண்டும் install பண்ணிக்கொள்ளலாம்.

இவ்வேலையை முடித்துக்கொண்டு Cclener ஐ இலவசமாக டவுண்லோட் பண்ணி கம்பியூட்டரை சுத்தப்படுத்தினேன். அதன் பின் கம்பியூட்டரின் வேகம் அதிகரித்துள்ளதை காண்கிறேன்.

பிற்குறிப்பு:----இத்தொடர் பயனுள்ளது என்றும், தொடர்ந்து எழுதும்படி கேட்டும் Private Message அனுப்புகின்ற, இத்தொடரிலேயே வேண்டுகோள் விடுக்கின்ற எனது வாசகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடிந்தவரை முயற்சி செய்கின்றேன். தனிப்பட்ட முறையில் பதில் அனுப்பமுடியாமைக்கு வருந்துகின்றேன். மன்னிக்கவும்.
Reply
நல்ல பயனுள்ள தகவல்களும் இணைப்புக்களுக்கும் நன்றிகள் தேவகுரு
Reply
நன்றி தேவகுரு அண்ணா... உங்கள் தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது. நன்றிகள்.. தொடருங்கள்..!
Reply
நன்றி தேவகுரு உங்கள் தகவல்களுக்கு ஆனால் இங்கு இங்கிலீசில் உள்ளதை டொச்சில் போடமுடியுமா அல்லது யாராவது உதவி செய்யுங்களேன். ப்ளீஸ்
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
Reply
தேவகுரு ஐயா கூறியதன் இன்னொரு வழிமுறை மைக்ரோ சாப்ட் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
http://support.microsoft.com/?id=315539

கீழே மொழிபெயர்ப்பு
http://support.microsoft.com/default.aspx?...id=kb;de;315539
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
<b>குறுக்குவழிகள் -108</b>

<b>எனது கம்பியூட்டர் எப்போதும் Safe Mode லேயே இயங்க ஆரம்பிக்கின்றது. இக்குறையை நீக்குவது எப்படி?</b>

என்னிடம் இரு கம்பியூட்டர்கள் உள்ளன. அதில் ஒன்றை Test Pc ஆக பாவிக்கின்றேன்.( 3rd party மென்பொருட்களை இறக்கி பரிசோதிப்பதற்காக).

CCleaner- பல்லாயிரக்கணக்கானோர் இலவசமாக டவுண்லோட் செய்து பாவிக்கிறார்கள் என இத்தளம் கூறுகிறது. இது விண்டோஸ் முழுவதையும், Registry உட்பட சுத்தம் செய்ய வல்லது. இலவசமென்பதால் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கின்றேன். ஆரம்ப பாவனையாளர்களுக்கு உகந்த்து.

RegSupreme 1.3 - இது Registry ஐ மாத்திரம் கிளீன் பண்ணும். Registry ஐ கிளீன் பண்ணுவதில் வல்லது. கிளீன் பண்ணும் பகுதியை backup எடுக்கும். பிழை ஏதும் நடந்துவிட்டால் restore மூலம் முன் இருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். 30 நாளைக்கு Trial பார்க்கலாம். 30 நாள் கடந்தால் பணம் கேட்கும் shareware program இது.

jv16 PowerTools - இது மேற்கூறிய இரண்டின் வேலைகளோடு மேலதிகமாக வேறு சில வேலைகளயும் செய்யக்கூடியது. மிகவும் பிரபல்யமானது. இதன் ஆரம்ப பதிப்புகள் RegCleaner என்ற பெயரில் இலவசமாக கிடைத்தன. அதன் பின் இதன் பெயரை jv16 PowerTools என மாற்றினார். இதன் பதிப்பு 1.3 (1.3.0.195) வரை இலவசம். அதன் பின் விலைக்கு போகிறது. இதன் பதிப்பு 1.3 (1.3.0.196) இலவசம் என்கிறது, ஆனால 30 நாட்களின் பின் பணம் கேட்கும்.
இதன் இலவச பதிப்பாகிய version1.3 (1.3.0.195) ஐ www.oldversion.com என்ற தளத்திலிருந்து இறக்கி நீங்கள் தற்போதும் பாவிக்கலாம்

RegClean 4.1- இதுவும் Registry கிளீனர் தான். மைக்றோசொவ்ட் நிறுவனத்தின் வெளியீடு. ஆனால் தற்போது இதை அந்நிறுவனம் கைவிட்டுவிட்டது. காரணம் தெரியாது. இது அமைதியாக பின்ணணியில் இயங்கும். Progress Bar மாத்திரம் காட்சியளிக்கும்.
www.pcworld.com என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம். இலவசம். (RegClean 4.1 மற்றது RegCleanr-- r தான் இரண்டின் பெயரிலும் வித்தியாசம் என்பதை கவனிக்கவும்)

இவைகளை எல்லாம் இறக்கி பரிசோதித்து விளையாடிவிட்டு கம்பியூட்டரை மூடிவிட்டு ஒரு நாள் காலை கம்பியூட்டரை பூட் செய்தேன். Safe Mode க்குள் தானகவே போனது. மீண்டும் மீண்டும் இயக்க Safe Mode க்குள் தான் போனது. அடுத்த கம்பியூட்டரை இயக்கி இணையத்திற்குள் போய் வழியென்ன என குடைந்தேன். கண்ட வழி இதுதான்.

1. Safe Mode க்குள் போன கம்பியூட்டரை இயக்கி டெஸ்ரொப் வந்தவுடன், ALT+CTRL+DEL மூன்றையும் சேர்த்து அழுத்தி Task Manager வந்தவுடன், அடியில் உள்ள New Task என்ற பட்டனை அழுத்தி வரும் பெட்டியில் Open என்பதன் எதிரில் C:Windows\pchealth\helpctr\binaries\msconfig.exe என ரைப் செய்து ok ஐ கிளிக்பண்ணவும்,

2. இப்போது System Configuration Utility என்ற பெட்டி தோன்றும். அதில் Boot.ini என்ற பட்டனை கிளிக்பண்ணி Safe Mode என்பதன் எதிரில் உள்ள Tick ஐ எடுத்துவிடவும். OK ஐ கிளிக்பண்ணி மீண்டும் கம்பியூட்டரை பூட் பண்ணவும்

3. வழைமைபோல் சரியாக இயங்கியது எனது கம்பியூட்டர். இப்படி ஏதும் உங்களுக்கு நடந்தால் எனது பாடம் உங்களுக்கு உதவுமல்லவா?
Reply
<b>குறுக்குவழிகள் -109</b>

<b>UBCD4WinXP தயாரிப்பது எப்படி?</b>

XP பாவனையாளர்களுக்கு இந்த சீடி ஒரு அருமருந்து. இதை அருகில் வைத்துக்கொண்டால், கம்பியூட்டரில் புகுந்து விளையாட துணிவு தானே வரும். இணையத்தில் கிடைக்கும் Bart's pe யையும் UBCD யையும் (Ultimate Boot Compact Disk) டவுண்லோட் செய்து Windows XP install CD யின் ஒரு பகுதியுடன் கலந்து இந்த லிங்கில் காணப்படும் கட்டுரையின்படி தயாரிக்க வருவதுதான் UBCD4WinXP. (353MB) Preinstalled environment சீடி (PE)எனப்படும்.

http://www.woundedmoon.org/UBCD/UBCD.html

WinXP install CD யை ஹாட்டிஸ்கில் நிறுவி அதை C: டிறைவ் என்கிறோம். சரி அந்த C: டிறைவை அப்ப்டியே இன்னொரு வெற்று சீடியில் கொப்பி எடுத்து பழுதுபட்ட இன்னொரு கம்பியூட்டரின் சீடி டிறைவில் போட்டு அதில் இருந்து பூட் செய்து அந்த பழுதுபட்ட ஹாட்டிஸ்கின் Windows Explorer ஐ வழமைபோல் பார்க்கமுடிந்தால், அதில் திருத்தம் செய்யமுடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். அதைத்தான் இந்த UBCD4WinXP செய்கிறது. UBCD யில் காணப்படும் எத்தனையோ இலவச மென்பொருட்களும் இதனுடன் இணைந்து வருவதால் இந்த UBCD4WinXP இன்னும் பல திருத்த வேலைகளை செய்ய உதவுகிறது. இதன் துணையுடன் வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டு இயங்காதிருக்கும் கம்பியூட்டரையும் சுத்தம் செய்யமுடியும். MBR, Boot sector போன்றவற்றையும் திருததலாம். கோப்புக்களை பிரதி எடுக்கலாம். இன்னும் பல.

Dos boot disk அல்லது Recovery disk ஐ பழுதுபட்ட கம்பியூட்டரில் போட்டு பூட் செய்யும்போது நமக்கு தெரிவது கறுத்த மொனிட்டர் திரையில் வெள்ளை எழுத்துக்கள்தான். வரிவரியாக நாம் கட்டளைகளை நாம் தட்டவேண்டும். ஆனால் இந்த UBCD4WinXP யை போட்டு பூட் செய்தால் தெரிவது வண்ண வண்ண கலர்களில் வழமையான திரை.

இந்த UBCD4WinX சீடியை தயாரிக வசதியில்லாதவர்கள் விரும்பினால் என்னிடமுள்ள தயாரித்த சீடியின் Disk image ஐ அவர்களுக்கு இணையம் வாயிலாக அனுப்பிவைக்கமுடியும். வேண்டின் Private message அனுப்பவும். கொள்ளளவு 353MB தான்.

மேலே காணப்படும் லிங்குடன் தொடர்புபட்ட கட்டுரையை ஆற அமர வாசியுங்கள். அக்கட்டுரையில் காணப்படும் லிங்குகளை கிளிக்பண்ணி பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் தீரும்.
Reply
<b>குறுக்குவழிகள் - 110</b>

<b>Date Cracker 2000 - உயிர் கொடுக்கும் இலவச மென்பொருள்</b>

இந்த மென்பொருளை இணையத்தில் கண்டுகொண்டேன். இதன் அளவு 1.5 MB ஆகும். காலாவதியான Trial Version அல்லது Demo Version களுக்கு இதன் மூலம் உயிர் கொடுத்து இயங்கவைக்கலாம் என இத்தளம் கூறுகிறது. இந்த மென்பொருளின் சாரளத்தில் காலாவதியான மென்பொருளின் பெயர், அது முதன் முதலாக இயங்கத்தொடங்கிய திகதி, மற்றும் அந்த மென்பொருளின் .EXE file இன் path ஆகிய விபரங்களை கொடுத்து Run என்பதை கிளிக்பண்ண காலாவதியான மென்பொருள் உயிர் பெற்று இயங்கும் என அதில் உள்ள விபரம் கூறுகிறது. என்னிடம் காலாவதியான Acronis True Image 8.0 உள்ளது. Date Cracker மூலம் உயிர் கொடுக்க முயற்சித்தேன் ஆனால் வெற்றியளிக்கவில்லை. நீங்கள் செய்து பாருங்கள். சரி வந்தால் எமக்கும் தெரிவியுங்கள். கீழ்காணும் லிங்கை கிளிக்பண்ணி Date cracker 2000 ஐ டவுண்லோட் செய்யவும்.

நான் Trial பார்த்த Date cracker ன் சாரளத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்

http://www.wonderworks.ca/nbia/dc2000.htm

<img src='http://img137.imageshack.us/img137/7238/datecracker5xo.jpg' border='0' alt='user posted image'>
Reply
[b]குறுக்குவழிகள் - 111

Floppy Disk Image

உங்களிடம் windows 98 startup disk, windows 2000 startup disk (4), Bootable Ghost startup disk போன்று பல வட்டுகள் இருக்கலாம். இவைகளை நீண்ட காலம் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியாது: கெட்டுவிடும். Bootable CD ஆக மாற்றி வைத்துக்கொள்ளலாம். அல்லது Floppy disk லிருப்பதை Image file ஆக மாற்றி Hard disk பதிந்து வைத்துக்கொண்டு வேண்டும்போது எவ்வளவு காலத்தின்பிறகாவது மீண்டும் Floppy க்கு Restore செய்து பாவிக்கலாம்.

Floppy disk லிருப்பதை Image File ஆக மாற்றுவதற்கு கீழ்க்காணும் இலவச மென்பொருளை நீங்கள் பயன்படுத்தலாம்.

FLoppy Image v1.5

http://www.woundedmoon.org/win32/floppyimage.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)