Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் கடிதம்
#1
எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது.

'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடிதம் திரைப்படக்குழுவினர் செயற்;பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த காதல் கடிதம் இசைத்தொகுப்பு அமைந்தது. இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இப்பொழுது உலகத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இசைத்தொகுப்பில் இருந்து ஒர் திரைப்படமென காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காதல் கடிதம் இசைத்தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்தொகுப்பும் வெளிவர இருக்கின்ற வேளையில் காதல் கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்வோம். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடும், தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த தேர்ந்த கலைஞர்களின் ஆதரவோடும், இத்திரைப்படத்தை உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

இத் திரைப்படத்தின் தயாரிப்பிற்காக கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நானும் வசீகரனும் காத்திருந்தோம். இப்பொழுது ஒரு நல்ல இளம் தயாரிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியில், அவரே முழுத் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்க தொடங்கிவிட்டோம் என்கிறார் படப்பிடிப்புத் தளத்தில் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.

<img src='http://img41.imageshack.us/img41/4381/59nv.jpg' border='0' alt='user posted image'>

கடந்த 14.12.2005 அன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 21.12.2005 முதல் இலங்கையில் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இத் திரைப்படத்தை றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள நிறுவனர் வு.தில்லைவண்ணன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ்த் திரைப்படக் கூட்டுத்தாபனமும் இவருக்கு தங்களால் ஆன முழு உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காதல் கடிதம் படப்பிடிப்பின் முக்கிய விடயமாக உலகத் தமிழர்களின் காதுகளைக் கொள்ளையடித்த 'யாழ்தேவியில் காதல் செய்தால்" பாடல் யாழ். தேவி தொடரூந்திலேயே மூன்று நாட்களுக்கு மேலாகப் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பின் போது நு}ற்றுக்கும் அதிகாமான எமது மக்கள் சக்தி குஆ வானொலியுூடாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ். தேவி தொடரூந்தில் பயணிப்பது போன்று படமாக்கப்பட்டது.

இந்தப் பாடலை உயிரோட்டமாகப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்ட சாம்.பி.கீர்த்தன் அவர்களே பாடி நடித்தது இந்தப் படத்திற்கு மேலும் சிறப்புூட்டுகிறது.

இந்தப் பாடலுக்கான முழுமையான அனுசரனையை வழங்கி, திறந்த மனதோடு காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக்தி குஆ வானொலி மற்றும் சக்தி தொலைகாட்சியினர்.

இத்திரைப்படத்தில் இடம் பெற இருக்கும் ஆறு பாடல்களில் 'ஈழப்பெண்ணே ஈழப்பெண்ணே", 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே", 'எழுது எழுது என் அன்பே", 'யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை", ஆகிய பாடல்கள் இலங்கை முழுவதும் உள்ள எழில் கொஞ்சும் இயற்கைத் தாயின் மடியில் படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், படம்பிடிக்கப்பட்டு, வவுனியாவில் இத்தரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது வவுனியாவில் வாழ்கின்ற தமிழ்; மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்தும் வகையில் இக்காட்சி படமாக்கப் பட்டது மறக்கமுடியாது என்கிறார் காதல் கடிதம் திரைப்படக் குழுவில் பணியாற்றும் ஒருவர்.

உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழரின் வாழ்வியலை அவர்களின் வளமான குடும்ப வாழ்க்கையை, ஒரு பிள்ளைக்கு காதல் வந்தால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை, எங்கள் கலை கலாச்சார பண்பாட்டுத் தன்மைகள் சிதையாத வகையில் அழகிய திரைக்காவியமாக வெளிக் கொண்டுவரும் கடிதம்தான் காதல் கடிதம்.

காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஐp கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார். அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கதையின் தரம் கருதி இருவரும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருக்கிறர்கள்.


<img src='http://img41.imageshack.us/img41/6941/47uz.jpg' border='0' alt='user posted image'>இத்திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் உருவாக்கியே தீருவேன் என உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் முன்வந்த இளைய தயாரிப்பாளர் வு.தில்லைவண்ணன் இப்படத்தின் இயக்குனர் திரு.முகேஷ் அவர்களுக்கும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கும் திருப்தி தரும் வகையில் தயாரிப்புச் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி கண்ணம்மா முதல் ஆட்டோக்கிராப் திரைப்படம் வரை 'தவமாய்த் தவமிருந்து" திரையில் ஓர் நாவல் தந்த இயக்குனர் சேரனிடன் உதவி இயக்குனராகப் பணியாhற்றிய திரு.முகேஷ் அவர்கள் திருமதி.வினோலியா நீதிதேவன் அவர்களின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி மிகவும், அழகாக நெறியாள்கை செய்து கொண்டிருக்கிறார்.

காதல் கடிதம் இசைத்தொகுப்பின் மூலம் தனது உன்னதமான இசையை பாடல்களுக்கு வழங்கி, பின்னணி இசையினை வழங்கவும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு மிகவும் பக்கபலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.

திரைப்படக் கல்லுரியில் படித்துப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, தங்கப் பதக்கம் வென்று தன் புதுமையான ஒளிப்பதிவில் கண்ணுக்குக் குளிர்மையான காட்சிகளை கவிதையாக தந்து கொண்டிருக்கிறார் டீ.சு.ராஐன் அவர்கள்.

இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் முதல் முறையாக புலம்பெயர்ந்து நோர்வே மண்ணில் வாழ்கின்ற வசீகரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.

இப்படி எல்லாமே புதிய, இளைய முகங்களின் அறிமுகங்களோடு உங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான பிரபல தென்னிந்திய நடிகர்களும் காதல் கடிதம் திரைப்படத்தில் இணைகின்றார்கள்.


<img src='http://img77.imageshack.us/img77/3757/21hw.jpg' border='0' alt='user posted image'>நடிப்பில் கலக்கப் போகும், உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், ராசி அழகப்பன், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் யு.நு.மனோகரன். எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.

தொழிநுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு: வு.தில்லைவண்ணன் றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள.

மூலக்கதை: வினோலியா

திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்

ஒளிப்பதிவு: டீ.சு.ராஐன்

இசை: வி.எஸ்.உதயா

பாடல்கள்: வசீகரன் (நோர்வே)

கலை: கலைராஐ;

நடனம்: காதல் படப் புகழ் கந்தாஸ், மன்மதராசா பாடல் புகழ் சிவசங்கர்

படத்தொகுப்பு: வாசு சலிம்

நிழற்ப்படம்: சிற்றரசு

திரைப்படத்தில் பணியாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் இலங்கைக் கலைஞர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள், மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் இந்தக் 'காதல் கடிதம்" திரைப்படத்தினூடக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ மாசி மாதம் வரை காத்திருங்கள்.

காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர்.

இத்திரைப்படம் தொடர்பான மேலதிக தகவல்கள், படப்பிடிப்பு தளங்களில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற நிழல் படங்களைப் பார்வையிட றறற.எnஅரளiஉனசநயஅள.உழஅ பாருங்கள

நன்றி: தமிழ்நாதம்[img][/img]
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
நன்றி மதுரன் தகவல்களை இங்கு இணைத்தமைக்கு. வாசிக்கும் போது பழைய நினைவுகளையும் அசை போட வைத்தது. [b]காதல்க்கடிதம் சிறப்பாகவர உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
<i><b> </b>


</i>
Reply
#3
ஈழ இந்திய கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் காதல் கடிதம் திரைப்படம் குறித்த தகவல்களை தந்தமைக்கு நன்றி மதுரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
¯È׸Ǣý ÓÂüº¢ ¦ÅüȢ¨¼Â Å¡úòÐì¸û
!
-
Reply
#5
காதல் கடிதம் இசை வட்டினை கேட்டதுண்டு. ஈழத் தமிழர்களின் இதயத்துடிப்பாய் இத்திரைக்காவியம் அமையுமானால் அதுவே இத் திரைக்காவியத்தின் வெற்றியாகவும் அமையக்கூடும். இத்திரைப்படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். தமிழேந்தி சேரன் சீமான் தங்கர்பச்சான் மற்றும் பால போன்ற சிலரின் தமிழ்ப்படங்களே பார்க்கக்கூடிய திரை படங்களாக தமிழர்முன் வலம் வருகின்றன. அவற்றையும் சில விமர்சகர்கள் விமர்சிக்கும் போக்குகளால் இயக்குனர்கள் மனமுடைந்து போகும் நிலை காணப்படுகின்றது. இருந்தும் அவர்கள் மிகவும் துணிச்சலோடு தவமாய் தவமிருந்து இன்னும் பல தவமாய் தவமிருந்து திரைப்படம் போன்ற படங்களை தர வேண்டி.

காதல் கடிதமும் தமிழர்களின் வாழ்வியலை தொட்டு செல்லும் திரை என்பதால். நிச்சயமாக இதில் தமிழர் நமக்காக பல புதிய செய்திகள் இருக்கும் என்னும் ஆவலோடு. காதல் கடிதம் திரைபடக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காதல் கடிதத்தை
தரிசிக்க காத்திருக்கும்
இருவிழி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#6
தகவலுக்கு நன்றி.... திரைப்படம் ஆக்குவோரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
[b]இப்படத்தில் இருந்து ஒரு பாடல்

பாடல் தரவேற்ற உதவி வன்னியன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
பாடலை இணைத்தமைக்கு நன்றிகள் குளக்கட்டான். இதன் இசைத்தட்டினை எங்கோ தவறவிட்டுவிட்டேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#9
இரு முறை பதிவாகியமையால் ஒன்றை நீக்கியுள்ளேன்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#10
"VNMusicdreams" நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக 'காதல் கடிதம்" எனும் இசைத்தொகுப்பு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய 'காதல் கடிதம்" ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது.

நானும், திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நகரங்களில், கிராமங்களில், வீதிகளில், சந்திகளில், கோயில்களில், குளக்கரைகளில், தொழிலசார் நிறுவனங்களில், பாடசாலைகளில், கலை விழாக்கள் என்று எங்குமே காற்றலைகளில் தவழ்ந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'காதல் கடிதம்" இசைத் தொகுப்பு.

நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் எங்களுடைய சிறகடிப்பு காதல் கடிதம் இசைத் தொகுப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. அதன் எல்லைகள் விரிந்து இப்பொழுது காதல் கடிதம் என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எங்கள் முதல் முயற்சிப் படியில் ஆணித்தரமாக நின்றுகொண்டு, இரண்டாவது படியில் எங்கள் காலத்தடத்தைப் பதிவுசெய்யத் தயாராகிவிட்டோம். இந்த விண்ணப்பக் கட்டுரையின் நோக்கம் உங்கள் இதயபுூர்வமான ஆதரவை எதிர்பர்த்து நிற்பதே ஆகும்.

எங்களுடைய காதல் கடிதம் இசைத் தொகுப்பு புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் சென்றடையவில்i என்கின்ற முறைப்பாடுகூட இன்னும் எங்கள் காதுகளுக்கு எட்டிக்கொண்டிருக்கிறது. உங்கள் உள்மன ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய நாங்கள் எடுக்கின்ற ஒரு புதிய முயற்சி இதுவாகும்.

இந்த விடயத்தை நன்றாகவே உள்வாங்கி தீர்க்கமாக என்ன செய்யலாம் என்று யோசித்த போது இப்படி ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. இதோ அந்த யோசனையை உங்கள்முன் கொண்டுவருகிறேன்.

'காதல் கடிதம்" இசைத் தொகுப்பு இன்னும்கூட இலங்கை, இலண்டன், சுவிஸ், கனடா, பிரான்ஸ் மற்றும் நோர்வே தவிர்ந்த நாடுகளில் நேரடியாக விநியோகிக்கப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது. அதற்குக் காரணம் தகுந்த விநியோகஸ்தர்கள் எமக்கு கிடைக்காமல் போனமையே ஆகும். ஒரு கலைஞன் படைப்பாளனாக மாறி நல்ல படைப்பை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிட்டால் அவன் படைப்பு ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தங்கிவிடும். இதை நன்கு உணர்ந்து எம்மால் இயன்றவரை முயன்று நான் மேற்குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமே எங்கள் படைப்பை வெளியிட முடிந்தது. இதற்கு எங்கள் மத்தியில் நிலவுகின்ற கலைசார்ந்த தொடர்;பாடல் முறைகளில் உள்ள குறைபாடும், பிற்போக்கான சில எண்ணங்களே காரணமாகும்;.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே எங்களின் இரண்டாவது இசைத்தொகுப்பான 'காதல் மொழி" எனும் இறுவட்டை இன்னும் ஒர் இரு மாதங்களில் உலகெங்கிலும் வெளியீடு செய்யலாம் என எண்ணியுள்ளேன். 'காதல் கடிதம்" விநியோகம் செய்வதில் நாங்கள் செய்த தவறை இந்த இசைத் தொகுப்பின் மூலமும் செய்யவிரும்பவில்லை.

ஆகவேதான் என் இனிய தமிழ் உறவுகளே உங்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை இக்கட்டுரையின் மூலம் முன்வைக்கின்றேன். உலகெல்லாம் சிதறுண்டு வாழ்கின்ற எம் தமிழ் உறவுகளே உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகின்ற சில மணித்துளிகளைச் சேமித்து, எங்கள் கலைத்துறையை கட்டியெழுப்ப நீங்கள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பீர்கள்.

கலையில் ஆர்வம் உள்ள நீங்கள் உங்கள் முதற்ப் சுவடை எப்படி பதிப்பது என்று கூட எண்ணிக் கொண்டு ஓர் எதிலியாகக்கூட இருக்கலாம். நீங்கள் எங்கள் கலைத்துறையை வளர்க்க அல்லது எங்கள் கலைச்சொத்துக்களை ஆவணப்படுத்தும் எண்ணம் உள்ளவராக இருப்பீர்கள். இந்தக் கலைத்துறைக்குள் நுழைவதற்கு நீங்கள் விரும்பின் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

ஆகவே சுற்றிவளைக்காமல் 'காதல் மொழி" இறுவட்டு விநியோகம் தொடர்பான விடயத்திற்கு வருகிறேன். "VNMusicdreams" நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாக வெளிவரவிருக்கும் 'காதல் மொழி" இறுவட்டினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் விநியோகம் செய்வதற்கு ஒரு தனிநபராகவோ, ஒரு குடும்பமாகவோ, ஒரு தமிழ் ஊடகமாகவோ, தொலைக்காட்சி நிறுவனமாகவோ, தமிழ்ச்சங்கமாகவோ, கலை பண்பாட்டு நிறுவனங்களாகவோ உதவிட முன்வாருங்கள.; அப்போதுதான் எங்களுடைய 'காதல் மொழி" என்னும் இறுவட்டை எல்லாத் தமிழர் வீடுகளிலும் ஒலிக்கச் செய்யலாம்.

ஒரு தனிமனிதனாக, என் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடக நண்பர்களின் இதயபுூர்வமான முழுமையான ஒத்துழைப்புடன்தான் ஓரளவுக்காவது 'காதல் கடிதம்" இசைத் தொகுப்பை எம்மால் புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையில் இசையமைப்பாளர் திரு வி.எஸ்.உதயா அண்ணனின் உதவியுடனும், ஊனு-உவைல உரிமையாளர் சாந்தகுமார் அவர்களின் உதவியுடனும் வெளிக்கொணர முடிந்தது.

இதில் விசேஷமாக இலங்கையில் உள்ள சக்தி எப்.எம் வானொலி எங்கள் குடும்ப வானொலி போலவே முழுமனதோடு எங்கள் பாடல்களை காற்றலைகளில் ஏற்றி பிரபல்யப்படுத்தினார்கள்.

இதே போன்றுதான் இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஐபிசி வானொhலி, கனேடியத்தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, ஒலி எப்.எம் வானொலி என அனைத்து வானொலிகளுமே எங்கள் பாடல்களை இங்கு பிரபல்யப்படுத்தின. எமக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர். அதற்காக எனது நிறுவனமும், இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா அண்ணா அவர்களும் என்றுமே நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.

புலம்பெயர் வாழ்வில் உங்களைப் போலவே எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கலையாகப் படைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அகரமுதல் எழுத்து உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடுகளிலும் உங்கள் காதல் கதைகள், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், சுகங்கள், துக்கங்கள், கண்ணீர் கலந்த கோபங்கள், தாபங்களை, போராடும் வாழ்வை சொல்லப்போகும் இனிய படைப்பாக 'காதல் மொழி" அமையும். எங்கள் படைப்பின் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் கைகளில் எங்கள் இரண்டாவது இசைக் குழந்தையாக தவழவேண்டும் என்பது எமது விருப்பம்.

இதனால் எங்களுக்கு என்ன இலாபம் என்று நீங்கள் எண்ணுவதுகூட என் காதுகளுக்கு கேட்கிறது. ஒரு இளம் படைப்பாளனாக உங்கள் இதயக் குரலை என்னால் உணரமுடிகிறது.

என்ன பலன் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டிராமல் இந்தக் கட்டுரையை படித்த மறுகணமே என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். 'காதல் மொழி" இறுவட்டை உங்கள் நாடுகளில் எப்படி, வெளியீடு செய்யலாம் என்பதைச் சொல்ல, உங்களோடு கலந்துரையாடி, நீங்கள் வசிக்கின்ற நாட்டிற்கான 'காதல் மொழி" உரிமத்தை அதிகாரபுூர்வமாக வழங்க உங்களுக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் குரலை எதிர்பார்த்து
இதயமுடன்
இளங் கலைத்தயாரிப்பாளன்
வசீகரன்

விளம்பரத்தை இமேஜில் பார்வையிட

<b>www.vnmusicdreams.com</b>

<b>நன்றி தமிழ்நாதம் இணயம்</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#11
<b>ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - காதல் கடிதம் பற்றி இயக்குநர் முகேஷ்</b>

<img src='http://www.webulagam.com/cinema/vip/0604/17/images/img1060417011_1_1.gif' border='0' alt='user posted image'>
இலங்கை வவுனியாவிலிருந்து சென்னைக்கு படிக்க வருகிறாள்... தன்னுடன் படிக்கும் ஒரு சென்னைப் பையனை காதலிக்கிறாள்.

இந்த நிலையில் தன் சொந்த நாட்டுக்கு சென்றுவருவதாகச் சொல்லி இலங்கை போனவள் போனவள் தான். திரும்பி வரவேயில்லை.

காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன காதலன் தன் காதலியைத் தேடி இலங்கைக்குச் செல்கிறான்... அங்கே .... அவனுக்கு நேர்ந்த, அவனுடைய காதலுக்கு நேர்ந்த அனுபவங்கள் தான் காதல் கடிதம் படத்தின் கதை.
<img src='http://www.webulagam.com/cinema/vip/0604/17/images/img1060417011_1_2.gif' border='0' alt='user posted image'>
இப்படி சர்ச்சைக்குரிய படம் ஒன்று தயாராகி வருகிறது.

இதுபற்றி தெரிந்துகொள்ள டைரக்டர் முகேஷ் முன்பு ஆஜரானோம்.

பாரதி கண்ணையா படத்திலிருந்து ஆட்டோகிராஃப் வரை சேரனிடம் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து எனது முதல் படம் காதல் கடிதத்தை இயக்கி வருகிறேன்.

சேரன் பட்டறையிலிருந்து வந்ததால் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை உள்ளடக்கிய ஒரு படத்தைத் தரவேண்டும் என்கிற ஆசை உண்டு.

காதல் என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு திரைக்கதையை உருவாக்கியதோடு இந்த நாட்டுக்கென்ன உலகம் முழுவதற்குமான ஒரு மெஸேஜ் இந்தக் கதைக்குள் வந்து விழுந்தது. யுத்தம், அது வேண்டாம். அன்புதான் இந்த உலகத்திற்குத் தேவை என்பதை ஒரு காதல் கடிதம் மூலம் சொல்லியிருகிறேன். அதனால்தான் இந்தப்படத்திற்கு காதல் கடிதம் என்று பெயர் வைத்தோம்.

யுத்தத்தின் விளைவுகளைச் சொல்லப்போகிறீர்கள் என்றால் படத்தில் யுத்தக் காட்சிகளும் இடம் பெறுகிறதா?

யுத்தக் காட்சிகள் கிடையாது. ஆனால் அந்த யுத்தங்களால் ஏற்பட்ட காயங்கள், வலிகள், இழப்புகள், பறிபோன வாழ்க்கை என மனசு வலிக்க வலிக்க அந்தக் காட்சிகளை காட்டியிருக்கிறோம். நிச்சயம் இதயங்களை தொடும்படி இருக்கும் அந்தக் காட்சிகள்.

ஒரு களத்தின் பாதிப்புகளைச் சொல்லவேண்டும் என்றால் நேரடியாக அந்தக் களத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் இலங்கைக்குச் சென்று படமெடுத்தீர்களா?

ஆமாம்! சம்பந்தப்பட்ட காட்சிகளை இலங்கைக்கே சென்று படமெடுத்தோம்.

ஸ்ரீலங்கா ஃபிலிம் கார்பரேஷனின் ஒத்துழைப்போடு இதுவரை காட்டப்படாத இலங்கை லொகேஷனையும் படமெடுத்து வந்திருக்கிறோம்.

இரண்டு இனங்களுக்கிடையேயான வாழ்வுரிமைப் பிரச்சினைகளால் தான் இலங்கையில் யுத்தம் வருகிறது. இந்த சூழ்நிலையில் யுத்தம் வருவதற்கான காரண கரியங்களையும் அலசியிருக்கிறீர்களா?

அந்த எல்லைக்குள் நாங்கள் போகவில்லை. உலகின் எந்த மொழி, இனத்துக்காரராக இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்த்தால் யுத்தம் வேண்டாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். நாங்கள் இந்தத் தளத்தில் இருந்துதான் படம் பிடித்திருக்கிறோம்.

இப்படி ஒரு பரபரப்பான கதையை தயாரிக்க முன்வந்தது யார்? உங்களுக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது?

இலங்கை ஃபிலிம் கார்பரேஷனில் பணிபுரியும் தேவதா° என்பவர் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. இலங்கைத் தமிழரான, தற்சமயம் கனடாவில் வசிக்கும் தில்லைவண்ணன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருக்கு யுத்த பாதிப்புகள் நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்தக் கதையைப் படமெடுக்க அவரும் முன்வந்தார்.

படத்தில் வேறு என்ன விசேஷம்?

படத்தின் ஹீரோ ஸ்ரீபாலாஜி, சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவருகிறார். ஹீரோயின் அனிஷா, சென்னை கல்லூரி ஒன்றில் பிஃபார்ம் படித்து வருகிறார். படத்தில் அழுத்தமான ஒரு செய்தி இருந்தாலும் இளைஞர்களுக்கு தேவையான மாடர்ன் டைப்பில் தான் ஒரு கலகலப்பான படமாக எடுத்து வருகிறோம் என்றார் முகேஷ்.

அருகே இருந்த தயாரிப்பாளர் தில்லைவண்ணனிடம் பேசினோம்.

நான் கனடாவில் வசித்து வந்தாலும் உலகம் முழுக்க ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். சினிமா என்பது நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் சொல்லக்கூடியதுதான். அதில் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை எடுத்துகொள்ள வேண்டும் என என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தான் வாழ்க்கையில் உயர்ந்ததற்குக் காரணமே எம்.ஜி.ஆர் படங்களில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றியதுதான் எனச் சொல்லுவார். சினிமா மூலம் நல்ல விஷயங்களை இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தான், ஆசையில் தான் இந்தப் படத்தை தயாரித்து வருகிறேன் என்றார்.

(வெப்புலகம்)
::
Reply
#12
உது என்ன காதல் கதை. எங்கள் நாய் யகமும் மகே**ஸ்சும் லவ் பண்ணுவினமே ஒரு லவ்வு. அது மாதிரி எந்தக் காதல் கதையும் வராது. நானும் எப்பவாவது அதை படம் பிடிச்சுப் போடலாம் என்று தான் பார்க்கின்றேன். முடியவில்லையே!! :oops: :oops:
<span style='color:blue'> !!
!! </span>
Reply
#13
உது என்ன காதல் கதை. எங்கள் நாய் யகமும் மகே**ஸ்சும் லவ் பண்ணுவினமே ஒரு லவ்வு. அது மாதிரி எந்தக் காதல் கதையும் வராது. நானும் எப்பவாவது அதை படம் பிடிச்சுப் போடலாம் என்று தான் பார்க்கின்றேன். முடியவில்லையே!! :oops: :oops:[/quote]

உமக்கு வேற வேலை இல்லையோ நாய் லவ் பண்ணுறத பார்த்துகிட்டு அலையிறீர்.கவனம் நாய் கடித்து போட்டுடும் கவனம்.நாய்கள் ஜாக்கிறதை.
"To think freely is great
To think correctly is greater"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)