Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத் தமிழ்த் தொலைக் காட்சிகளும்-திருகோணமலைத் தாக்குதலும்
#1
இந்தத் தலைப்புக்குள் புலத் தமிழ்த் தொலைக் காட்சிகள் திரிகோணமலையில் தமிழ் மக்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலை எவ்வாறு ஆவணப்படுத்தின,எவ்வளவு செய்திகளை வழங்கின,எவ்வளவு விரைவாக இன்னும் எப்படி செயற்படலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை,ஆலோசனைகளை வையுங்கள்.தகுந்தவர்கள் பார்த்து பயன் பெறட்டும்.

எனது கருத்துக்களும் பார்வையும்.

1) இன்று தீபம் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் உடைந்த கட்டுடங்களையும்,கண்காணிப்புக் குழுத் தலைவரின் பேட்டியினையும்,அகதிகளையும், இராணுவப் பேச்சாளரின் பேட்டியையும் ஒளிபரப்பினார்கள்.

2)தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொழும்பில் நடக்கும் பத்திரிகையாளர் மானாடுகளில் ஏன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பதில்லை?
அங்கிருப்பவர்களுக்குத் தான் கொலைப் பயம் என்றால் இங்கிருந்து போவர்களாவது கேட்கலாம் அல்லவா?

திருகோணமலையில் ஏன் மக்கள் குடியிருப்புக்கள் குண்டு வீசி அழிக்கப் பட்டன?
உங்களால் அடயாளப்படுத்தப்பட்ட இராணுவ இலக்குகள் எவை?அவை எவ்வாறு அடயாளப் படுத்தப்பட்டன?உங்கள் இலக்குகள் எட்டப் பட்டனவா?

இராணுவத்தளபதியை புலிகள் தான் தாக்கினர் என்பதற்கான ஆதாரம் என்ன? பிபிசி தமிழ்சேவை போன்ற சர்வதேச ஊடகங்களில் விழுந்து விழுந்து கேள்வி கேட்கும் நடு நிலமை ஊடகவியலாளர்கள் கூட ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை?

மேலும் இந்த செய்திப்படங்கள் ஏன் சர்வதேச ஊடகன்களுக்கு விரைவாக வளங்கப்படவில்லை?

செய்மதி இணைப்பின் மூலம் ஒளிப்படங்கள் தரவேற்றப்படக் கூடிய வசதிகள் பாவிக்கப் பட்டால் விரைவாக படங்களை வினியோகிக்கலாம் அல்லவா ?

எடுக்கப்பட்ட படங்களைத் தொகுத்து எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் வரக்கூடிய மாதிரி ஆவணம் ஒன்று தயாரித்து செய்தி நிறுவனக்களுக்கும்,அரச,உள்ளூர் நிறுவனங்களுக்கும் வழங்கலாம் அல்லவா?
இணயத்திலும் இவற்றைத் தர வேற்றினால் பலராலும் பார்க்கப் படலாம், மின்னஞ்சல் இணைப்புக்கள் மூலம் பரவலாக பலராலும் வினியோகிக்கப்படலாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)