• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. " இந்திய " என்று கூறியுள்ளீர்கள். இச் சொல் குறிப்பாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா அலது அதற்கு நிகரான வேறு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா ? ஏனென்றால் இந்தியா என்கின்ற பதம் எதனைக் குறிக்கிறது ? தெளிவில்லாமல் இருக்கிறது. துணைக் கண்டமா அல்லது துணைக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியையா ? அல்லது ஏதேனும் ஒரு நாகரீகத்தைக் குறிக்கிறதா?
 3. விட்டிட்டம்...அதுஒரு காலம் இருந்ததது அண்ணா..250 டொலர் பட்டம் ..அதுக்கு ஜெர்மன் சுவிலையும் கூப்பிட்டு பாராட்டு வைத்தவை..தெரியாதே..
 4. Today
 5. என்ரை பெயரும் விடுபட்டு போச்சுது எண்ட கொதியிலை நானும் இருக்கிறன்.
 6. தமிழருக்கும் சைவர்களுக்கும் எதுவுமே இருக்கக்கூடாது. எதுவுமே அவர்கள் கலாச்சாரம் இல்லை / இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.இலங்கை இந்தியாவில் சைவ தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த தைப்பொங்கலுக்கும் ஆப்பு. உலகத்திலே தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் அந்த மிருகவதை அதுதான் சல்லிக்கட்டுக்கும் ஆப்பு. மதுவும் மாதுவும் பணமும் என தவமிருந்த தமிழே ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாத ஆன்மீக பச்சைத்தமிழன் இப்ப தமிழினத்துக்கு துரும்பாம் தும்பாம்
 7. 1. இது தமிழர் தொன்மம் என்பவர்கள்தான் அதை நிறுவ ஆதாரம் தரவேண்டும். ஒரு தமிழ் கல்வெட்டுத்தானும் அங்கே இல்லாத இடத்து, அங்கே இருக்கும் சான்றுகள் எல்லாம் வேறு ஒரு கதையை சொல்லுமிடத்து, கடாரத்தை பற்றி, ஶ்ரீ விஜய கடலரசை பற்றி குறிப்பாவது கொடுக்கும் தமிழ்நாட்டின் புராதன ஆதாரங்கள், இந்த அரசை தமிழ் அரசாக அடையாளம் காணாதவிடத்து, பெயர் ஒற்றுமை (அந்த பெயரே தமிழர்கள் இரவல் வாங்கியது), சமயம் (அதுவும் இரவல்) இரண்டையும் வைத்து மட்டும் இப்படி ஒரு urban myth ஐ கட்டி எழுப்பி வளர்ப்பவர்கள்தான் அதற்கு ஆதாரமும் தரவேண்டும். 2. வராலாற்றுக்கு முந்திய காலத்தில் துணைகண்டத்தில் இருந்து வெளியேறிய ஒரு இனக்குழுமம்- பல ஆயிரம் ஆண்டுகளாக அங்கே தங்கி, அதன் வாரிசுகளாக கெமெர் அரசு அமைந்தது எனும் ஒரு எடுகோள் உளது. ஹிகின்ஸ் என்பார் எழுதிய The Origins of the Civilization of Angkor என்ற புத்தகத்தில் எழுதியதன் அடிப்படையிலும், மேலும் நான் வாசித்து அறிந்த மட்டிலும் - சீனாவில் இருந்து, கெமெர் அரசு எழுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்த பகுதிக்கு வந்த சீன யாதிரிகர் இருவர், இந்த பகுதியில் ஒரு “இந்திய” குடிகளின் அரசு இருப்பதாக குறித்துளனர். 3. ஆனால் இதை மட்டுமே வைத்து இதை தமிழரசு என சொல்லுவது அபத்தம். 4. பாரம்பரிய நியாபகம் என்பது ஒரு அரும் பொக்கிசம். இப்படி ஒரு தமிழர் அரசு இருந்த செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அடியோடு மறந்து போகும் என நான் நினைகவில்லை. கதைகளாக, யுத்த காண்டங்களாக, இலக்கியமாக எங்கோ ஒரு சிறு குறிபேனும் இருந்திருக்கும்.
 8. என்ர பெயரை சேர்க்கவில்லையே. ஏனாம் ? என்னை ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லைபோல் படுகிறது ?
 9. Nunavilan நீங்கள் தந்த இணைப்பில் உள்ள செய்தியை வாசித்ததன் பின் பேசாமல் கடந்து போக மனம் ஒப்பவில்லை. ஆகவேதான் இதை எழுத வேண்டியதாயிற்று. எனது நகரத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில்தான் Rot am See என்ற கிராமம் அமைந்திருக்கிறது. இது நான் வசிக்கும் இடத்தின் நகராட்சி வட்டத்துக்குள் இருக்கிறது 24.01.2020 வெள்ளிக்கிழமை மதியம் நடந்த இந்தப் பாரிய சம்பவம் ஒரு அதிர்சசி அலையைத் தந்திருக்கிறது. 26 வயதான ஒரு இளைஞன் தனது தாய், தந்தை இருவர் உட்பட மேலும் நான்கு உறவினர்களைக் கொலை செய்து மேலும் இருவரைக் காயப் படுத்தி இருக்கிறான். காயப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் பாவிக்கப்படும் குறி பார்த்துச் சுடும் துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்று உடனடிச் செய்திகள் வெளிவந்தன. Adrianஇன் தாய் Sylviaவுக்கும் தந்தை Klausக்கும் இடையில் வளர்ந்த வேறுபாடுகளால் விவாகரத்துக்குப் பின் இருவரும் பிரிந்தே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் Offenburg என்ற நகரத்தில் தனது தாயாருடன் வாழ்ந்து வந்த Adrian அங்கே இருக்கப் பிடிக்காமல் தாயைப் பிரிந்து வந்து தந்தை Klausஉடன் சேர்ந்து Rot am Seeஇல் வாழத் தொடங்கினான். Rot am See நகரத்தின் பிரதான புகையிரத நிலைய வீதியில் Klaus ஒரு உணவு விடுதி வைத்திருந்தார். அவரது முன்னோர்கள் நடத்தி வந்த விடுதி அது. எல்லோருடனும் நட்பாகப் பழகும் Klausக்கு அந்த விடுதியில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. தந்தை தனது வியாபாரத்தில் அதிக கவனம் வைக்க வேண்டி இருந்ததால் பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் Adrian தனிமையிலேயே இருந்தான். கணணிதான் அவனது உலகம். Adrianஇன் தாய் வழிப் பாட்டி Adelheid இறந்து விட பாட்டியின் நல்லடக்கம் 25.01,2020 இல் நடக்க ஏற்பாடாகி இருந்தது. தனது தாயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் தனது முதல் கணவனுக்குப் பிறந்த மகன் Holger, மகள் Carolin மற்றும் 12,14 வயதிலுள்ள இரண்டு பேரப்பிள்ளைகள் Leon, Lennar ஆகியோருடன் Sylvia, Rot am See க்கு வந்திருந்தாள். 24.01.2020 அன்று மதியம் 12:48க்கு அவசரப் பொலீஸ் பிரிவுக்கு ஒரு தொலைபேசி வந்தது. தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியது Adrian. “கொலைகள் நடந்து விட்டது” என Adrian தகவலைத் தர 12:57க்கே பொலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து விட்டார்கள். Adrian இன் தாய் Sylvia, தந்தை Klaus, ஒன்றுவிட்ட சகோதரர்களான Holger, Carolin, தந்தை Klausஇன் தங்கை அவளது கணவன் என ஆறு பேர் கொல்லப் பட்டிருந்தார்கள். மேலும் இரு உறவினர்கள் காயப் பட்டிருக்கிறார்கள்.அதில் ஒருவரின் நிலை ஆபத்தான நிலையில் இருக்கிறது. காயப்பட்ட உறவினர்கள் இருவரது விபரங்களை பொலீஸார் வெளியிடவில்லை. Rot am seeஇல் உள்ளவர்களை ஊடகங்கள் பேட்டி கண்டதில் சொத்துப் பங்கீடு கொலைகளுக்கான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கருத்து தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கொலைகளுக்கான காரணத்தை Adrian இதுவரை கூறவில்லை. ஆறு கொலைகள் செய்ததற்காகவும் இரண்டு பேரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காகவும் Adrian மீது குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. Adrian இன் பாட்டன் Wolfgang இரத்த உறவினர்கள் யாருமின்றி நண்பர்களுடன் தனது மனைவியின் நல்லடக்கத்தில் நேற்று கலந்து கொண்டார். ஊடகங்களின் கேள்விக்கு “நான் நிலைகுலைந்து போயிருக்கிறேன்” என்று Wolfgang பதில் தந்திருந்தார்.
 10. இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா அல்லது அனுமானத்தின் (யூகம் அல்ல) அடிப்படையில் சொல்கிறீர்களா ?
 11. நகைச்சுவையைப் பார்தது சிரியுங்கள். பாட்டைக் கேட்டு அழுங்கள். “சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனிதஜாதி”
 12. மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.
 13. இது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும் மிக மிக முக்கியமான செய்தியை சொல்கிறார்கள்....... மேலும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உறவினர்களுடன் பாரிஸில் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அது ஒரு பஃபே டைப் உணவகம். கோப்பையை எடுத்து வேண்டியதை வேண்டியமட்டும் எடுத்து கொள்ளலாம்.ஆனால் வீணாக்க கூடாது. அங்கு மெனுகார்டிலேயே போட்டிருந்தார்கள், வீணாகும் உணவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று.மிக மிக நல்ல விடயம்......!
 14. Basketball great Bryant dies in helicopter crash Reuters US basketball legend Kobe Bryant has been killed in a helicopter crash in the city of Calabasas, California. Bryant was travelling in a private helicopter when it burst into flames, according to media reports. The LA County Sheriff's department said five people died in the helicopter crash on Sunday, with no survivors. Confirming the death, the City of Calabasas confirmed the news with "great sadness". It said "nobody on the ground was hurt". Eyewitnesses told news site TMZ they heard the helicopter's engine spluttering before it went down. The cause of the crash is being investigated. Five-time NBA champion Bryant, 41, played his entire 20-year career with the Los Angeles Lakers. He retired in April 2016. Bryant's achievements include being the 2008 NBA Most Valuable Player and two-time NBA Finals MVP. He was also two-time NBA scoring champion and a two-time Olympic champion. He also won an Oscar for best short animated film in 2018 for Dear Basketball, a five-minute film based on a love letter to the sport he had written in 2015. Kobe Bryant's career in numbers https://www.bbc.com/news/world-us-canada-51256756
 15. வட அமெரிக்காவில் காசுக்கு கவுரவ கலாநிதிப் பட்டம் பெற்று கூவிக்கூவி கொண்டாடி பாட்டி வைக்கிறதெண்டு சொல்லுறவங்கள்.
 16. ஆமிக்கு பொலிசுக்கு பிளைட் எஞ்சினியருக்கு படிக்கப்போறதெல்லாம் ஒரு செய்தியா வெளியிடுறாங்க..... அய்யோ....அய்யோ அது சரி உது தனிநபர் விசயமெல்லோ
 17. சுவிசிலை பல்கலை கிடைத்த்வுடன்...டாக்டராகிட்டா என்று முகநூலிலை தம்பட்டமே அடிப்பாங்கள்.. அதுக்கு ஜால்ரா போடுற கூட்டமும் ஆண்டபரம்பரை அந்தப் பரம்பரையின்னு வாசித்திட்டே போகும் கடைசியில் ஒண்ணும் இருக்காது..
 18. சொல்லுங்கோ, ரசிப்பம். எனக்கு கற்பனை கதைகள் என்றால் அலாதி ஆர்வம்.
 19. தெரியவில்லை. கேரளாவில் ஒரு வழக்கம் - பிராமண குடும்பத்தில் முதல் மகன் மட்டும் ஒரு பிராமண பெண்ணை மணம் செய்ய வேண்டும். ஏனைய மகன்கள் எல்லாம் பிராமணரல்லாத பெண்ணை முடிக்கலாம் - ஆனால் பிள்ளைகள் எல்லாரும் தாயின் வம்சமாகவே கருதப்படுவர். ஒரே தந்தையுடன் தாய் வாழ வேண்டும் என்ற கட்டயமுமில்லை. உதரணதுக்கு ஒரு நாயர் பெண் - நம்பூதிரியோடு குடும்பம் நடத்தலாம். பிறக்கும் பிள்ளை நாயர்தான். சம நேரத்தில் அதே பெண் இன்னும் பலருடனும் சேர்ந்து வாழலாம். மலையாளிகள் காட்டி, கூட்டி கொடுத்து வேலையில் மேலே போவார்கள் என பல தமிழர் ஏசுவார்கள் (குறிப்பாக மத்திய கிழக்கில் இருப்போர்). இந்த வகையான நெகிழ்ந்து போன இனமாக அவர்களை மாற்றியவர்கள் பிராமணர்கள். இது ஒரு வரலாற்றுப் பழி. இந்த படம் சோசல் மீடியாவில் கிடைத்தது. ஆகவே 100% நம்பிக்கையான தரவு இல்லை. ஆனால் உண்மைக்கும் இதுக்குமான தூரம் அதிகம் இல்லை.
 20. அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே
 21. இந்தா - வந்திடமில்ல - வரலாற்று புனைவாசிரியர்கள் அங்கொர்வட்டை கட்டிய கெமெர் அரசு தமிழர் அரசு என்பதற்கு ஒரு குண்டு மணியளவுக்கும் ஆதாரமில்லை. அந்த காலத்தில் தென்கிழக்காசியாவின் பிரதான மதங்களாக சைவமும், வைணவமும் இருந்தன. இப்போ நாம் மேற்கத்திய கலாச்சாரம் உயர்வானது என சிந்திந்து பிள்ளைகளுக்கு ருசான், ரிசான், ரைஹானா என்றெல்லம் பெயர் வைக்கிறோமே? அப்படி அந்த நாளில் தென் கிழக்கு ஆசியா எங்கெனிம் விரும்பபட்ட நாகரீகம், இந்திய, தென்னிந்திய நாகரீகம். ஆகவே ராஜ வம்சத்தினர் - வர்மன் என்ற பெயரை பாவித்தனர். இந்திய மதங்களையும் பின்பற்றினர். உணவு, கலாச்சார வழக்கங்களையும் கூட. ஆனால் அவர்கள் தமிழர் இல்லை. எப்படி சால்ஸ் அன்ரனி என்ற பெயருடைய சீலன் ஒரு ஐரோப்பியர் இல்லையோ அப்படி. வர்மன் என்ற பெயர் கூட தமிழ் இல்லை. வர்மாவின் தமிழ் திரிபே வர்மன். வட இந்தியா எங்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக பாவனையில் இருந்த அரச பெயர் வர்மா. பின்னாளில்தான் இதை தமிழ் மன்னர்கள் சூடத் தொடங்கினர். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை என்றான் பாரதி. உண்மையான பழங்கதைகளை பேசினாலும் கூட பரவாயில்லை, இட்டு கட்டிய பொய்களை பரப்பி, எம் அடுத்த, குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளையும் மொக்கு கூட்டமாக்குகின்றோம். இதை விட பழமையான நாகரிகத்துக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்பதை கீழடி சொல்கிறது. தேவையில்லாமல் இரவல் கெத்துக்கு ஆசைபட்டு, எம் வரலாறு பற்றிய உண்மையான பதிவுகளை கூட உலகம் உதாசீனம் செய்யவே இது வழிகோலும்.
 22. இப்பவெல்லாம் யாழ்களத்திலை எழுதுறதே கொஞ்சப்பேர்தான். அதையும் நாறடிக்காமல் இருந்தியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும்.
 23. உங்கட மற்ற ஐடிக்களை சொன்னால் யாழ் தாங்காது வேணாம் விட்டுடுவம்
 1. Load more activity