Jump to content
 • Our picks

  • இரை.

    

   தினையளவு இரைதேடி 

   சிற்றெறும்புக்  கூட்டம் 

   புற்றுவிட்டு நீங்கி 

   பொழுதெல்லாம் அலையும்.

    

   குடைபோல் வலைபின்னி 

   வலைக்குள் காத்திருக்கும் 

   பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் 

   எட்டுக்கால் சிலந்தியும்.

    

   அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த 

   மலர்தேடி மதுவுண்டு செல்ல 

   மணம் முகர்ந்து அலையும் 

   மாமரத்துத் தேனீக்கள்.

    

   உடும்பொடு பாம்பும் 

   இரைபார்த்து ஊர்ந்து வரும் 

   பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் 

   உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும்.

    

   வானில் உலவும் பருந்து 

   வீட்டு முற்றம் சேர்ந்து 

   தாயை விட்டு விலகிய குஞ்சை 

   கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும்.

    

   தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை 

   தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை 

   கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே 

   வேங்கையை விரட்டி இரையை எடுக்கும்.

    

   கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் 

   கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் 

   அவை சென்ற பாதையெல்லாம் 

   மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும்.

    

   பறவைக்கும் இரையாகும்  விலங்குக்கும் இரையாகும் 

   மனிதர்க்கும் இரையாகும்  தமக்கும்  தாமே இரையாகும் 

   மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ 

   அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று.

    

   பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் 

   புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன 

   வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் 

   குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......!

    

   யாழ் 24 அகவைக்காக,

   ஆக்கம் சுவி......!

    

    
    • Like
   • 5 replies
  • நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது.

                    ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன்.

                    அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.

                     ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

                    அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை.

                    ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன்.


    

                    வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும்.


                     இதுதான் நாங்கள் போனபாதை
   மிகுதி தொடரும்.
    • Like
   • 59 replies
  • நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.
    • Haha
    • Like
   • 18 replies
  • ஈழத்திருநாடே  என் அருமைத் தாயகமே,
   உன்  நிலைகண்டு  வருந்துகிறேன் கொடிய 
   நோய் கொடுத்த துயர் மறையும்  முன்னே 
   கொடும் பசி வாட்டுகிறதே  
   பொருட்களின் விலையேற்றத்தால் 
   மக்கள் துயர் கூடுகிறதே.  

   கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய 
   ராஜ பக்சேக்களின்  சுயநலமும் சொத்து சேர்ப்பும்
   தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் 
   உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய  
    ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும்  
   அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு 
   வட்டி கட்டிட மேலும் கடனும்  
   சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும்  
   என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே  

   தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் 
   பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் 
   அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த 
   சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன்  
   சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய். 
   மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் , 
   ராணுவத்துக்கு செலவிடட பணமும்  
   அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) ..
   உன் சொந்த மக்களை  இந்நிலைக்கு கொண்டு சென்றது 

   உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை  
   வெறுக்கையில்  உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ?
   வரலாற்றில் இல்லாத வறுமையும்  துயரமும்  ஏன்?  
   உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த
   என் ஈழத்தமிழினம்  எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து .

   மண்ணை கிண்டி  வலையை வீசி  விறகடுப்பில் வெந்து 
   வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத் 
   தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும் 
   புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம்.
    கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர்  

   நீண்ட கியூ வரிசையில்  விரக்தியின் விளிம்பில் 
   ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில்  நிற்கும் 
   மனிதனின் மனதில்  உதிக்கும் ஒரு வெறுப்பு  
   அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல 
   ஆடசியை  மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும்.  

    

    நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம்

   என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து.  . 
    • Like
   • 5 replies
  •  பார்வை ஒன்றே போதுமே
    கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே.

   இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று.
    • Thanks
    • Like
   • 61 replies

 • Topics

 • Upcoming Events

 • My Clubs

 • Posts

  • இரண்டு மாதங்களில்... உணவு, நெருக்கடி? நிலாந்தன். “செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடியால் அதுவும் இல்லை. தவறான உரக் கொள்கையால் பெரும்போக விவசாயத்தில் விளைச்சல் 60 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது.எதிர்வரும் காலத்தில் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. நடுத்தரவர்க்க மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது.ஓகஸ்ட் செப்டம்பர் மாதப் பகுதிகளில் உணவு நெருக்கடி வரலாம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார் சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பயிற்செய்கையில் ஈடுபடத் தவறினால்,நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். “எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது” என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார்.”கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.எனினும்,கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதால், நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக” அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்டவாறு விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் உணவு நெருக்கடி தொடர்பாக எச்சரித்திருந்தார்.அவரும் அடுத்த ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இரவில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரித்திருந்தார். நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சூம் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைத்தீவு இதுவரை சந்தித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளின் போது நாட்டை பாதுகாத்தது விவசாயம்தான் என்று அவர் அதில் கூறினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் உரக் கொள்கையில் கை வைத்தார். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.அவருக்கு முன் ஆட்சி செய்த எல்லாத் தலைவர்களுமே விவசாய வாக்காளர்களை கவர்வதற்காக ரசாயன உரத்துக்கு மானியம் வழங்கினார்கள். அவருடைய தமையனார் மஹிந்தவும் அவ்வாறு மானியம் வழங்கினார். இதனால் விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு உரப்பை ஒன்றை 350 ரூபாயிலிருந்து 450 வரை ரூபாய் வரையிலும் மானிய விலையில் வழங்கியது. ஆனால் கோத்தாபய ஜனாதிபதியாக வந்ததும் நாட்டை ராணுவத்தனமாக இயற்கை உரத்துக்கு மாற்றவிழைந்தார். அது பெருந்தொற்று நோய்க் காலம். ஏற்கனவே இனப்பிரச்சினை காரணமாக நொந்து போயிருந்த பொருளாதாரம்,ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், ஏற்கனவே கோத்தபாயவின் வரிக் குறைப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், அரசாங்கத்தின் புதிய உரக் கொள்கையால் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியதுபோல இதற்குமுன் வந்த எல்லாப் பொருளாதார அதிரச்சிகளில் இருந்தும் நாட்டை பாதுகாத்த விவசாயம், இந்த முறை நாட்டைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.கடந்த போகங்களில் செயற்கை உரப் பாவனை குறைந்தபடியால் விளைச்சல் 20 வீதம் அளவே கிடைத்தது என்று விவசாயிகள் பொதுவாகக் கூறுகிறார்கள்.ஒரு பகுதி விவசாயிகள் 12 விகிதம்தான் கிடைத்தது என்று முறைப்பாடு செய்கிறார்கள். இயற்கை உரம் ஓர் உன்னதமான கொள்கை. பூமியைப் பாதுகாக்க விரும்பும் எவரும் அதை ஏற்றுக் கொள்வர். ஆனால் தன் நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினரை ஈவிரக்கமின்றி புழு பூச்சிகளைப் போல கொன்றொழித்து யுத்தத்தை வெற்றிகொண்ட ஒருவர், நாட்டின் மண்ணை நேசிக்கிறேன் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக ரசாயன உரத்தை நிறுத்துகிறேன் என்று கூறியது ஓர் அக முரணே. பொருளாதார நெருக்கடியானது மக்களால் தாங்க முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்தபொழுது, முன்னைய காலங்களைப் போல அந்த அதிர்ச்சியை தாங்கக் கூடிய நிலையில் விவசாயம் இருக்கவில்லை. இவை அனைத்தினதும் திரட்டப்பட்ட விளைவே மக்களை வீதிக்குக் கொண்டுவந்தது. விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக அரசாங்கம் ரசாயன உரத்தை அனுமதித்தது. ஆனால் மானியத்தை நிறுத்தியது.மேலும் ரசாயன உர விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தது. ஆனால் டொலர் பிரச்சினையால் திட்டமிட்டபடி ரசாயன உரத்தை கொண்டு வரமுடியவில்லை.இப்பொழுது இந்தியாவில் இருந்து பெறக்கூடிய உரத்துக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அந்த உரத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனின் அளவு போதாது என்ற ஒரு சந்தேகமும் உண்டு. எதுவாயினும் அந்த உரம் இம்முறை கால போகத்துக்குள் வந்துசேராது என்று விவசாயிகள் அச்சமடைகிறார்கள். இம்முறை கால போகத்திற்கு ஒப்பீட்டளவில் பிந்தி விதைத்த விவசாயிகள் கிட்டதட்ட 30 நாட்களுக்குள் உரம் கிடைத்தால் விளைச்சலில் மாற்றத்தை காட்டலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. அதேசமயம் கள்ளச்சந்தையில் உரம் ஒரு பை 45000 ரூபாய் போகிறது.அந்த விலைக்கு உரத்தை வாங்கி கமம் செய்த ஒரு விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? இப்பொழுது நெல் ஒரு கிலோவின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக போகிறது. ரசாயன உரம் நிறுத்தப்பட முன்பு அரசாங்கம் மானிய விலையில் 350 இலிருந்து 450 ரூபாய் வரையிலும் ஒரு உரப்பையை வழங்கியது. அப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை ஆயிரம் வரை போனது. ஆனால் இப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் உரத்தை வாங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? அந்த விலைக்கு நெல்லை வாங்க நடுத்தர வர்க்கத்தாலும் முடியாது போகலாம் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். அப்படியென்றால் ஏழைகளின் பாடு எப்படியிருக்கும்? குறிப்பாக தமிழ் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்? தமிழ்மக்கள் இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். இப்பொழுதும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மணித்தியாலக் கணக்காக வரிசையில் நின்று மோட்டார் சைக்கிளின் வயிறு முட்ட பெட்ரோலை நிரப்பி கொண்டு வந்து வீட்டில் அதை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து போத்தல்களில் சேமிக்கும் பலரைரைக் காணலாம்.தமிழ்மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்த காரணிகளில் முக்கியமானது சீதனம். தவிர இயல்பாகவே முன்னெச்சரிக்கை உணர்வு மிக்க மக்கள். குறிப்பாக யுத்த காலத்தில் அந்த முன்னெச்சரிக்கை உணர்வு சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவித்தது.இப்பொழுது பொருளாதார நெருக்கடியின் பொழுதும் தமிழ் மக்களை பாதுகாக்க போவது, அல்லது தமிழ்மக்கள் ஓரளவுக்காவது சமாளித்துக்கொண்டு தப்பிப் பிழைக்க காரணமாக அமையப் போவது அவர்களுடைய சேமிப்பு பழக்கம்தான். இது முதலாவது. இரண்டாவதாக, தமிழ்ப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு காசில் தங்கியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணம் இப்பொழுது டொலரின் பெறுமதி காரணமாக பல மடங்காகப் பெருகி வருகிறது. எனவே அதுவும் தமிழ் மக்களுக்கு ஒரு பலந்தான். எனினும்,அதற்காக தமிழ் மக்கள் சும்மாயிருக்கக்கூடாது.ஒரு நெருக்கடியை முன் அனுமானித்து முன்னெச்சரிக்கையோடு சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். தானியங்களைச் சேமிக்க வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் அக்கறை காட்ட வேண்டும். தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல உணவு நெருக்கடி ஒன்று வரலாம் வராமலும் போகலாம். ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களைத் தயார்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு கட்சிகளுக்கும் செயற்பாட்டு அமைப்புக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழ்ப் பண்பாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் காணப்பட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏற்கனவே காணப்பட்ட சிறுதானியங்களுக்கு “இராச தானியம்” என்ற பெயரை வழங்கி ஒரு நிகழ்வு இன்று காலை அச்சுவேலி பத்தமேனி பகுதியில் இடம்பெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு இலவசமாக சிறுதானியங்கள் வழங்கப்படும்.அவர்கள் அறுவடை முடிந்ததும் தமக்கு வழங்கப்பட்ட விதை தானியத்துக்குப் பதிலாக அதன் இரண்டு மடங்கு தானியத்தை பசுமை இயக்கத்துக்கு வழங்க வேண்டும்.அது மீண்டும் மறுசூழற்சிக்கு வழங்கப்படும்.தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆர்வமுடைய தரப்புக்களும் பின்பற்றலாம். மேலும் புதிய வித்தியாசமான திட்டங்களையும் யோசிக்கலாம். தமிழ் மக்கள் உடனடியாக முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இப்பொழுது உயிர் பிழைத்திருக்கும் பெரும்பாலான தமிழர்கள் போரினால் உமிழ்ந்து விடப்பட்டவர்களே.போர்க்கால அனுபவம் எல்லா நெருக்கடிகளின் போதும் தமிழ் மக்களுக்கு உதவும். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் வருவது வரட்டும் என்று வாளாயிருக்கக்கூடாது. https://athavannews.com/2022/1284319
  • இந்தியா, ரஷ்யாவுடன்... கொண்டுள்ள நிலைப்பாட்டை, மதிக்கின்றோம் – ஜேர்மனி உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுநிலை வகித்ததால் இந்தியா, ஜேர்மனி இடையே உறவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். https://athavannews.com/2022/1284296
  • ரஷ்ய படைகள்... கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக... தகவல் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவிற்கமைய ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனில் இராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனில், ரஷ்யப் படையினர் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, உலக நாடுகளிடம் முறையிட்டுவருகிறது இந்தநிலையில், கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய இராணுவத்தினரை உக்ரைன் இராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தெறிந்தாக கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1284284
  • உக்ரைன் துருப்புக்கள்... "செவெரோடோனெட்ஸ்கை" விட்டு, வெளியேறலாம்! உக்ரைனின் பெரிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் வெளியேறலாம் என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் நகரத்தின் ஒரு பகுதி சுற்றியுள்ளதால், உக்ரைன் துருப்புக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளப்படாமல் இருக்க வெளியேற வேண்டியிருக்கும் என லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். கிழக்கு டோன்பாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா ஒரு முக்கிய போர் நோக்கமாகக் கொண்டுள்ளது ரஷ்யாவின் முன்னேற்றத்தை எதிர்க்க நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை அதை வழங்கவில்லை. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைனுக்கு நீண்ட தூர பல-ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள் தேவை என்று கூறினார். இதனிடையே, உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று உக்ரைன் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது. துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் தரை மட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளின் அடியில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1284248
  • இவரின் ஆசை வார்த்தையில் மயங்கி, வடை வாயில விழுகுதில்லையாம். மக்கள் உசார் என்று ஆதங்கப்படுகிறார்.               
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Images

 • Today's Birthdays

 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   242.4k
  • Total Posts
   1.4m
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.