Topics
-
- 1 reply
- 221 views
- Updated
-
- 0 replies
- 108 views
- Updated
-
- 0 replies
- 144 views
- Updated
-
- 0 replies
- 63 views
- Updated
-
- 13 replies
- 1.4k views
- Updated
-
- 0 replies
- 168 views
- Updated
-
- 0 replies
- 105 views
- Updated
-
- 7 replies
- 398 views
- Updated
-
- 0 replies
- 336 views
- Updated
-
- 1 reply
- 180 views
- Updated
-
- 0 replies
- 179 views
- Updated
-
- 1 reply
- 342 views
- Updated
-
- 4 replies
- 484 views
- Updated
-
- 3 replies
- 561 views
- Updated
-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து தென் தமிழீழப் போராளிகளை அவர்கள் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் தலைவர் ஆற்றிய உரை அது. 1 2
- 48 replies
- 2k views
- Updated
-
- 0 replies
- 272 views
- Updated
-
- 1 reply
- 292 views
- Updated
-
- 1 reply
- 322 views
- Updated
-
- 0 replies
- 218 views
- Updated
-
- 0 replies
- 322 views
- Updated
-
- 0 replies
- 220 views
- Updated
-
- 0 replies
- 181 views
- Updated
-
- 6 replies
- 416 views
- Updated
-
- 0 replies
- 169 views
- Updated
-
- 5 replies
- 493 views
- Updated
-
Our picks
-
இரை .......!
suvy posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
இரை.
தினையளவு இரைதேடி
சிற்றெறும்புக் கூட்டம்
புற்றுவிட்டு நீங்கி
பொழுதெல்லாம் அலையும்.
குடைபோல் வலைபின்னி
வலைக்குள் காத்திருக்கும்
பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய்
எட்டுக்கால் சிலந்தியும்.
அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த
மலர்தேடி மதுவுண்டு செல்ல
மணம் முகர்ந்து அலையும்
மாமரத்துத் தேனீக்கள்.
உடும்பொடு பாம்பும்
இரைபார்த்து ஊர்ந்து வரும்
பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும்
உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும்.
வானில் உலவும் பருந்து
வீட்டு முற்றம் சேர்ந்து
தாயை விட்டு விலகிய குஞ்சை
கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும்.
தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை
தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை
கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே
வேங்கையை விரட்டி இரையை எடுக்கும்.
கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும்
கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும்
அவை சென்ற பாதையெல்லாம்
மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும்.
பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும்
மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும்
மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ
அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று.
பசித்தாலும் பசிக்கும் ஆனாலும்
புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன
வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார்
குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......!
யாழ் 24 அகவைக்காக,
ஆக்கம் சுவி......!
-
-
- 5 replies
Picked By
மோகன், -
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஈழப்பிரியன் posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது.
ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன்.
அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை.
ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை.
ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன்.
வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும்.
இதுதான் நாங்கள் போனபாதை
மிகுதி தொடரும்.-
-
- 59 replies
Picked By
மோகன், -
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.
-
-
- 18 replies
Picked By
மோகன், -
-
ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
நிலாமதி posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே,
உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய
நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே
கொடும் பசி வாட்டுகிறதே
பொருட்களின் விலையேற்றத்தால்
மக்கள் துயர் கூடுகிறதே.
கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய
ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும்
தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும்
உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய
ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும்
அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு
வட்டி கட்டிட மேலும் கடனும்
சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும்
என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே
தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள்
பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும்
அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த
சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன்
சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய்.
மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் ,
ராணுவத்துக்கு செலவிடட பணமும்
அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) ..
உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது
உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை
வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ?
வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்?
உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த
என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து .
மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து
வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத்
தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும்
புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம்.
கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர்
நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில்
ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும்
மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு
அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல
ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும்.
நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம்
என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .-
-
- 5 replies
Picked By
மோகன், -
-
பார்வை ஒன்றே போதுமே.......!
suvy posted a topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்,
பார்வை ஒன்றே போதுமே
கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே.
இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று.-
-
- 61 replies
Picked By
மோகன், -
-
-
Who's Online 9 Members, 7 Anonymous, 81 Guests (See full list)