Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97520

கம்பன் ஏமாந்தான்


கறுப்பி

1492 views

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன் ஏமாந்தான்...)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

(கம்பன் ஏமாந்தான்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே

(கம்பன் ஏமாந்தான்...)

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.