Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97478

தேசிய மரரமாக வாகை மரம்


கறுப்பி

1401 views

வாகைமரம்.

vahaimaramzo4.jpg

தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.

சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன. வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம்.

Leguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம்.

இது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை.

இது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.