Sign in to follow this  
  • entries
    7
  • comments
    0
  • views
    15,649

செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது

Sign in to follow this  
naanal

458 views

செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது

எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய

அந்தக் கொடிய வைகாசி 17......

பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,

எமது கனவு,

எமது இலட்சியம்

எமது ஏக்கம்,

எமது கொள்கை,

எமது அமைப்பு,

எமது தலைமை என அனைத்தையுமே

அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17

கடந்து வாரங்கள் வாரங்கள் உருண்டோடி மாதமொன்று ஆகப்போகிறது.

இனச்சுத்திகரிப்பின் அதி உச்சமாக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட

நம்மவரைக் காவுகொடுத்தபின் கடந்துபோன இருபதுநாட்களில் எதைச் செய்தோம்

எதைச் செய்துகொண்டிருக்கிறோம்?

எதைச் செய்யப்போகிறோம்?

எப்படிச் செய்யப்போகிறோம்?

இந்த உலகம் வெகு வேகமாக உருண்டோடிக்கொண்டிருக்கிறது.

நித்தம் நித்தம் புதிய பிரச்சனைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

நாமும் இந்தக் கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடாவிட்டால்

இன்னும் சில வாரங்களில் அதிகப்டசம் சில மாதங்களில்

எம்மையும் எமது பிரச்சனைகளையும் இந்த உலகம் மறந்துவிடும்.

சிங்கள அரசைப் பாருங்கள் எல்லம் முடிந்துவிட்டது,

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தனது இலக்கை நிறைவு செய்ததுடன் முடிவடைந்தது,

என்று அறிவித்ததுடன் வெற்றிவிழாக் கொண்டாடுவதுடன் நின்றுவிடவில்லை

எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட நகர்வுகளையும்

தம்மை ஸ்திரப்படுத்தும் செயல்களையும் செயல்படுத்துகிறான்.

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் மென்மேலும் பலவீனப்பட்டவர்களாகிறோம்.

நாம் மீண்டும் மீண்டும் நடந்ததையே கதைத்து வேதனைப்பட்டு

எமது மன உளைச்சலை அதிகரிப்பதையும்

சுற்றிலும் உள்ளவர்களையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வேலையையும்,

வெறுமனே எதிரியைத் திட்டித்தீர்ப்பதையுமே செய்துகொண்டிருக்கிறோம்.

ஆக்கபுhர்வமா எதைச்செய்தோம்? ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்த்தால் புரியும்.

நாம் உடனடியாகச் செய்யவேண்டியது, நம்முன் இருக்கும் அடுத்த கடமைகளை,

செயல்த்திட்டங்களைப் பட்டியலிடுவது.

அவற்றைத் துறைசார் நிபுணத்தவமுடைய நம்மவர் துணையுடன் இணைந்து

விவாதித்து குறை நிறைகளை ஆராய்ந்து சரியான வடிவமைத்துச் செயல்படுத்துவது என்பனவாகும்..

1.போரினால் தம்முயிரைத் தவிர அனைத்தையும் இழந்து முட்கம்பிகளிற்குள்

வாழும் உறவுகளுக்குரிய அன்றாட தேவைகளான உணவு அடிப்படைச் சுகாதார உதவிகள்

சென்றடைய வழியமைப்பது.

2.போரின் பாரிய தாக்கத்தால் மனவலு இழந்து பெரும்

மன உளைச்சலில் இருக்கும் அவர்களுக்குத் தேவையான

உளவலு ஊட்டலிற்காண நிபுணத்துவ உதவிகள் சென்றடைய வழிசெய்வது

அவர்களை மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு மீள உதவுதல்.

விரைவில் தமது சொந்த இடங்களிற்குத் திரும்புவதற்குரிய புறச்சூழலை ஏற்படுத்துவது.

மீளக்குடியமரும்போது அவர்களது சுயபொருளாதாரத்திற்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது.

இவற்றிற்குச் சமாந்தரமாகச் செய்ய வேண்டிய அடுத்த நடவடிக்கை

அண்மைய காலத்தில் தோன்றிய உரிமைப்போராட்டங்களில் மிகவும் வளர்ச்சி கண்டதும்

கூர்மைப்பட்டதுமான எமது அமைப்பின் பாரிய வளர்ச்சி உலக அரசியல்வல்லுணர்களையும்,

போரியல் வல்லுணர்களையும் ஆச்சியப்பட வைத்ததுடன்

எமது போரியல் நுட்பங்கள் அவர்களால் ஆய்வுகளுக்குட்படுத்தப்படும

அளவிற்கு இருந்தது.

அதேபோல யாருமே எதிர்பாராத வேகத்திலேயே,

உலகெங்கும் கிளபரப்பி விருட்சமாய் நின்ற ஒரு பாரிய அமைப்பு

முதல்நிலை இரண்டாம் நிலைத் தலைமைகள் அனைத்தையும்

ஒரே இரவில் இழந்து கட்டளைப்பீடமே இல்லாது

தனது சகல வளங்களையும் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்து

நடந்துமுடிந்திருப்பதுவும் பலரது ஆய்வுக்கும் உட்ப ட்டிருக்கிறது.

ஆதலால் நாமும் எமது பாரிய எழுச்சிக்கும்

அதேபோல பெரு வீழ்ச்சிக்குமுரிய காரணங்களை அறிவதற்குரிய

சுயவிமர்சனங்களையும் சுய ஆய்வுகளையும்

எமது அடுத்தகட்ட நகர்வுகளைற்கு முன் செய்ய வேண்டியது

மிகவும் அவசியமானதும் அர்த்தமுள்ளதுமான உடனடித் தேவையுமாகும்.

அதைவிடுத்து சுயவிமர்சனமே எமக்குத் தேவையற்றது எங்கள் செயற்திட்டங்கள்

முற்றிலும் சரியானவை என எண்ணிச் செயற்பட்டால்

இனிவரும் காலங்களிலும் நாம் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கும்

சாத்தியங்களை அதிகரிக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திரமான வாழ்விற்குரிய போராட்டம் எவ்வளவு முக்கியமோ

அதேபோல அதற்குரிய பொருத்தமா செயற்திட்டங்களும்

நகர்வுகளும்கூட அத்தியாவசியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு

நிதானமாச் சிந்தித்துச் செயல்ப்படவேண்டிய இக்கட்டான காலகட்டமிது

என்பதைக் கருத்தில்கொண்டு செயல்ப்படுவோமாக.

பெற்ற தோல்விகளிலிருந்த படித்த பாடங்களுடன் மீண்டும்

புதுப்பொலிவுடன் புதிய உத்திகளுடன் எழுவோம்.

வெறும் அரட்டைகளைத தவிர்த்து ஆக்புhர்வமான ஆய்வுகளைக்

கள உறவுகள் முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...............

Sign in to follow this  


0 Comments


Recommended Comments

There are no comments to display.