Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95859

சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)


போக்குவரத்து

1484 views

பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக:

1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள்.

2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள்.

3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக சுற்ற வேண்டும்). இனி தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யுங்கள்.

4-உங்கள் வாகனத்தின் முன் கதவு மற்றைய வாகனத்தின் bumper க்கு அருகாக வரும்போது steering ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் வலது பக்கமாக சுற்ற வேண்டும்). தொடர்ந்து ரிவர்ஸ் செய்யுங்கள்.

5-மற்றைய வாகனத்திற்கு பின்னால் முழுவதுமாக வந்த பின்னர் முன் சில்லுகளை மீண்டும் நேராக்குங்கள்.

6- தவறு நிகழ்ந்தால் மீண்டும் படி ஒன்றில் தொடங்கி தொடருங்கள். வாகனத்தை நகர்த்தும் போது பாதசாரிகள், வேறு வாகனங்கள் வருகிறார்களா என்பதை அவதானியுங்கள். வந்தால் உங்கள் வாகனத்தை நிறுத்தி, கவனம் எடுத்து செயல்படுங்கள்.

7-முன்னே செல்ல வேண்டுமானால் மீண்டும் கியரை மாற்றுவதற்கு மறவாதீர்கள்.

கீழே வேறு ஒரு வகையில் மாணவர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கிறார்:

ஆக்கம்-போக்குவரத்து

http://cardriving.ca

  • Like 1

5 Comments


Recommended Comments

முன் சில்லுகளை நேர் செய்வது இங்கு முக்கியம். ஸ்ரியரிங்கை பாவித்து முன் சில்லுகளை நேராக்குவதற்கு தெரிந்து வையுங்கள். முன்சில்லுகள் நேராக நிற்கும் போது, ஸ்ரியரிங்கை அசையாமல் பிடிக்கும் போது உங்கள் வாகனம் முன்னிற்கு அல்லது பின்னிற்கு நகர்ந்தால் அது நேர்கோட்டில் அசையும். பலர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கும் போது பிழை விடுவதற்கு ஆரம்பத்தில் முன் சில்லுகளை நேராக்காமல் ரிவர்ஸ் செய்வதும் காரணம் ஆகும்.

  • Like 1
Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள், தொடருங்கள் போக்குவரத்து.

Link to comment

சமாந்தரமாக நிறுத்தம் செய்தல் (வலது பக்கமாக) : பிரிதொரு முறை சுருக்கமாக

சுற்றிலுமாக 360 கோணத்தில் பார்க்கவும்.

உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்க்கவும்.

உங்கள் வாகனத்தின் அரை வாசி பகுதி (உங்கள் shoulder) நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் பகுதிக்கு சமாந்தரமாக நிற்கும் போது steering wheel ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும்.

மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும்.

உங்கள் வாகனத்தின் முன் வலது பகுதி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் இடது பகுதிக்கு நேராக நிற்கும் போது steering wheel ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும்.

தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும்.

முழுவதுமாக பின்னால் வந்ததும் வாகனத்தின் steering wheel ஐ நேராக்கவும்.

நிறுத்தம் செய்யும் கியருக்கு மாற்றவும்.

வாகனத்தின் கதவை திறந்து வெளியேறுவதற்கு முன்பாக வேறு வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்; நன்றி பகிர்வுக்கு

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.