Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95859

எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?


போக்குவரத்து

1173 views

ஒழுங்கை மாற்றம் போக்குவரத்து நிலவரம், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படுகின்றது. வாகனம் ஓடும்போது ஒழுங்கை மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டி ஏற்படலாம் அல்லது 20 நிமிடம் அளவிற்கு கூட அது தேவைப்படாதும் போகலாம். வலது பக்கமாக உள்ள ஒழுங்கையில் இயலுமான வரை ஓடவேண்டும் என்பதே பொதுவான போக்குவரத்து விதியாகும் (வட அமெரிக்கா).

எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்?

1-உங்கள் பார்வை முன்னால் செல்கின்ற பெரிய வாகனங்கள் மூலம் (பார ஊர்தி, பேருந்து) தடைப்படுமாயின்

2-உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் காரணம் இல்லாமல் மெதுவாக செல்லுமாயின்

3-நீங்கள் ஓடுகின்ற வலது அல்லது இடது ஒழுங்கை முடிவடையப் போகுமாயின்

4-நீங்கள் ஓடுகின்ற ஒழுங்கையில் வீதி திருத்த வேலைகள் நடைபெறுமாயின்

5-நீங்கள் சந்தியில் வலது அல்லது இடது பக்கத்திற்கு திரும்ப வேண்டி ஏற்படுமாயின்

6-போக்குவரத்து அதிகாரி அல்லது காவல்துறையினரால் கட்டளையிடப்படுமாயின்

7-pavement markings மூலம் அறிவுறுத்தப்படுமாயின்

8-Emergency வாகனங்கள் வருமாயின்

9-ஒரு சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்ட பின்னர்

10-ஒரு வாகனம் மூலம் நீங்கள் அருகாக பின் தொடரப்பட்டால் (being Tailgated) (வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை முதலில் கணக்கில் எடுங்கள்).

எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?

1-காரணம் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் மற்றைய வாகனங்களை முந்தி செல்வதற்காக ஒழுங்கை மாற்றத்தை மேற்கொள்ளாதீர்கள்.

2-Snowplowவாகனத்தை ஒருபோதும் முந்தக்கூடாது.

3-பாதசாரிகள் கடவைக்கு (pedestrian crossing) 30மீற்றர் தூரத்திற்கு அருகாக (within) ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

4-சந்திகளில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. புகையிரத கடவைகளுக்கு அருகாக ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

5-முன்னால்/பின்னால் தெளிவாக பார்க்க முடியாதவாறு உங்கள் பார்வை (visibility) தடைப்படுமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

6-உங்கள் blind spot இல் ஏதாவது வாகனம் நிற்குமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

7-அருகாக அல்லது பின்னால் வரும் வாகனம் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் ஒழுங்கை மாற்றம் செய்து வர முயற்சிக்குமாயின் நீங்கள் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

8-குறுகிய பாலம், சுரங்கப்பாதை உள்ள இடத்தில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

9-வீதியில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது என Sign ஏதாவது போடப்பட்டு இருந்தால் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.

10-உங்களுக்கு முன்னால் உள்ள வாகனம் நிறுத்தப்பட்டு இருக்குமாயின் போக்குவரத்து, நிலவரத்தின் அடிப்படையில் பாதுகாப்பாக ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருப்பின் மட்டும் ஒழுங்கை மாற்றம் செய்யலாம்.

11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் Common Sense ஐ பாவியுங்கள், அத்துடன் பாதுகாப்பிற்கு (safety) முக்கியத்துவம் கொடுங்கள்.

ஆக்கம் : போக்குவரத்து

http://CarDriving.CA

5 Comments


Recommended Comments

  • முன்னால் செல்லும் வாகனம் அளவில் பெரியதாக காணப்பட்டால் அதற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையில் அதிக அளவு இடைவெளியை பேணுவது மிக அவசியம்.
  • தேவை இல்லாமல் head lights ஐ high beam இல் போட்டு ஓடினால் 02 demerit points ம், அத்துடன் அபராதமும் கிடைக்கலாம்.
  • ஓட்டுனர் இருக்கையில் உங்கள் மார்புக்கும் steering wheel க்கும் இடையிலான தூரம் 10 அங்குலமாக அமையும் வகையில் பார்த்து கொள்வது முக்கியம்.
  • black ice க்கு மேல் ஏறி பின்சில்லு வழுக்கினால் உடனடியாக gas pedal இல் இருந்து காலை எடுத்து விட்டு நீங்கள் போக வேண்டிய பக்கமாக steer பண்ணுங்கள், brake அடிக்காதீர்கள்.
  • எஞ்சினை சூடாக்கிய பின் வாகனத்தை ஓட முன்னர் யன்னல்களை திறந்து carbon monoxide வாயுவை வெளியேற்றுங்கள்.
  • 36% ஆன விபத்துகள் நீங்கள் பாவிக்கும் மருந்துகளின் தாக்கத்தினால் வருகின்றன.

Link to comment

//11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது.//

ஒற்றை ஒழுங்கை நெடுஞ்சாலைகளில் மஞ்சள் ஒற்றைக் கோடு போட்டிருந்தால், பாதுகாப்பாக முந்திச் செல்லலாமா?

  • Like 1
Link to comment

முறிவு இல்லாத திடமான கோடு (solid line) என்றால் ஒழுங்கை மாற்றம் செய்ய முடியாது.

முறிவு உள்ள கோடு என்றால் எதிர்ப்புறமாக வாகனம் வராத போது அவதானத்துடன் ஒழுங்கை மாற்றம் செய்யலாம்.

முறிவு இல்லாத திடமான கோடு காணப்படும்போது உங்களுக்கு முன்னால் உள்ள வாகனம் நகரமுடியாதபடி குழறுபடி ஏதும் ஏற்பட்டு நிறுத்தம் செய்யப்பட்டால் (Emergency Situations) எதிர்ப்புறமாக வாகனம் ஏதும் வராதபோது மிகவும் அவதானத்துடன் ஒழுங்கை மாற்றம் செய்து மீண்டும் அவதானத்துடன் பழைய ஒழுங்கையினுள் பிரவேசிக்கலாம்.

இதுபற்றி விரிவாக கூறும் HTA (Highway Traffic Act) சரத்தை விரைவில் இங்கு இணைக்கின்றோம்.

Link to comment

நன்றிகள்..! :D

முன்னால் போகும் வாகனம் 90 இல் போவதற்குப் பதிலாக 50 இல் போய்க்கொண்டிருந்தால் முறிவில்லாத கோடுகள் இருக்கும் இடத்தில் முந்தலாமா?

  • Like 1
Link to comment

இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்ப்புறமாக வாகனம் ஏதும் வரவில்லை என்பதை உறுதி செய்தபின், அத்துடன் பாதுகாப்பாக முந்தி மீண்டும் பாதுகாப்பாக உங்கள் ஒழுங்கையினுள் வர முடியும் என்று நீங்கள் உறுதியாக கருதும் போது அப்படி செய்யலாம்.

முறிவு இல்லாத திடமான கோடு உள்ள நிலையிலும் HTA அங்கு ஒழுங்கை மாற்றம் செய்வது பாதுகாப்பு இல்லை என்றுதான் கூறுகின்றது. முறிவு இல்லாத கோடு உள்ள ஒற்றை தெருவில் ஒழுங்கை மாற்றம் செய்யும் போது நீங்கள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றீர்கள்.

பொதுவாக கூறுவதானால் இப்படியான சூழ்நிலையில் இது சட்டவிரோதமான செயற்பாடு என்றோ அல்லது இவ்வாறு செய்தால் காவல்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்றோ இல்லை. ஆனால், உங்கள் பாதுகாப்பே இங்கு கவனிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.

அவதானத்துடன் மாற்றம் செய்து பழைய நிலைக்கு திரும்புங்கள்.

  • Like 1
Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.