Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97478

கார்த்திகைப் பூ - Flame lilly


கறுப்பி

2044 views

கார்த்திகைப் பூ - Flame lilly

IPB ImageIPB Image

தமிழீழத்தின் தேசியப்பூ. இது கார்த்திகை மாதத்தில் பூப்பதன் காரணத்தால் இந்த பெயர் பயன் பாட்டில் உள்ளது. சங்க இலக்கியங்களில் இது காந்தள் எனக்குறிப்பிடப்படுகின்றுது. ஆங்கிலத்தில் இது Flame lilly என அழைக்கப்படுகின்றது. இதன் பூர்விகம் ஆசியா, ஆபிரிக்க கண்டங்களின் உலர் பிரதேசம். தாவரவியலில் நமது கார்த்திகைப்பூ குளோரியேஸா சுப்பேபா (gloriosa superba) எனப்படுகின்றது. கார்த்திகைப்பூவில் gloriosa superba, carsonii, simplex verschuuriஆகிய 4 வகைகள் உள்ளன.

எம் தேசியப்பூ gloriosa superbaஎன்ற இனமாகும். கார்த்திகைப்பூ கொடியில் பூக்கும் மலர். ஆங்கிலத்தில் இதன் பெயர் gloriosa என வருவதற்கு gloriosu, என்ற சொல் அடிப்படையாகும். இதன் பொருள் மிக அழகானது என்பதாகும். Superba என்பது மிகவும் அழகான என்ற மேன்மையைக் குறிக்கவாக வைக்கப்பட்டது. கிழங்கில் இருந்து குறித்த காலத்தில் மட்டும் முளைத்துப் பூத்து பின் மடிந்து நிலத்தின் கீழ் கிழங்கில் மட்டும் உயிர்வாழும் செடியும் பூவும்தான் கார்த்திகைப்பூ. அதன் உயிர்வாழ்வு விழவிழ எழுதல் என்ற பொருளையும் கொள்கிறதல்லவா.

இதன் வாழ்வுக்காலம் நவம்பர் முதல் மார்ச் வரையாகும் செப்டம்பரில் நிலத்தின் கீழ் உள்ள கிழங்கு முளைக்கத் தொடங்கும். நவம்பர் பூக்கும். நேரடியாக சூரியனை எதிர்கொண்டதாக இல்லாமல் பற்றைகளின் நிழலில் படரும் கொடி இது. இதற்கு சதுப்பு நிலம் தேவை. தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கைத்தீவு, இந்தியா, ஆபிரிக்க நாடுகளான Cape coast, Natal, Swaziland, Northern Province, Botswana, Nambia and Zimbabweஆகிய வற்றில் இந்த வகை கார்த்திகைப்பூச்செடி வாழ்கின்றது. உலகளவில் கார்த்திகைப்பூச் செடி மருத்துவ இரசாயனத் தேவைகளுக்காக பண்ணையாக வளர்க்கப்படுகின்றது. பழங்குடிகள் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் வியாதி, புளுவியாதி போன்றவற்றுக்கு கார்த்திகைச்செடியைப் பயன்படுத்துகின்றனர்.

இரசாயனப்பகுப்பில் கார்த்திகைச்செடியின் சகல பகுதிகளிலும் நச்சுத்தன்மை இருக்கின்றது. கார்த்திகைச்செடி உடலுக்குள் சென்றால் மயக்கம் ஏற்படும். உயிராபத்தும் ஏற்படும். ஆனால் மருத்துவத்தில் இது பயன்படுகின்றது. கார்த்திகைச்செடி 1.8 மீற்றர் தொடக்கம் 2.4 மீற்றர் வரை வளரும். இதன் வாழ்வுக்கு 15 பாகை செல்சியஸ் முதல் 30 பாகை செல்சியஸ் வரை சூழல் வெப்பம் இருக்க வேண்டும். பூக்கள் செழுமையாக இருக்க வளிமண்டல ஈரப்பதன் அதிகமாக இருக்க வேண்டும். சராசரி அமிலத்தன்மையுடைய ஈரமான மண் இதன் வாழ்வுக்குத் தேவை. செடி இறந்ததும் இதன் கிழங்கு மண்ணின் கீழ் வாழ்வதற்கு 20-25 பாகை செல்சியஸ் வெப்பம் தேவை. இதிலிருக்கும் நச்சுப்பொருள் alkaloid colchicineஆகும். gloriosine என்ற நச்சுப்பொருளும் இதில் உள்ளது .

  • Like 1

6 Comments


Recommended Comments

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை பூவுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.நன்றாக உள்ளது.அத்துடன் விளக்கங்களுடனும் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை பூவுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.நன்றாக உள்ளது.அத்துடன் விளக்கங்களுடனும் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

நன்றி குமாரசாமி சார் வந்து பார்த்ததுக்கு

Link to comment

அழகான தெரிவு - தெரியாத தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி

Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

அழகான தெரிவு - தெரியாத தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி

நன்றி பிச்சுமணி சார் உங்கள் பதிவுக்குக்கும் பார்வையிடலுக்கும்.

Link to comment

கார்த்திகைப்பூ, செண்பகம், வாகை மரம் எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது..

Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

உங்க பதிவிற்கு நன்றி

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.