Jump to content
  • entries
    24
  • comments
    7
  • views
    97520

இலக்கணம் - முதனிலை


கறுப்பி

1912 views

இலக்கணம் - முதனிலை

30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.

உ-ம்.

அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.

கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.

31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்?

இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.

1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.

2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.

3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.

4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.

5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.

6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.

வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.

உ-ம்.

யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.

34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.

ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

இறுதி நிலை

35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.

உ-ம்.

விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா - 31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?

எழுத்துக்களின் சாரியை

36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும்.

உ-ம்.

ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான்.

ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும்.

உ-ம்.

அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.

மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும்.

உ-ம்.

க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான்.

உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம்.

தேர்வு வினாக்கள் -- 32. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா? உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை?

போலியெழுத்துக்கள்

37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும்.

உ-ம். ஐயன் ஸ்ரீ அய்யன்; ஒளவை ஸ்ரீ அவ்வை

தேர்வு வினாக்கள் -33. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.

ஏழுத்தியல் முற்றிற்று.

http://www.noolaham.net/library/books/01/68/68.htm என்ற பதிவிலிருந்து எனது தேவைக்காக மட்டும் கேள்வி பதிலாக பதிய பட்டிருக்கின்றது.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

Guest
This blog entry is now closed to further comments.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.