Jump to content
  • entries
    27
  • comments
    0
  • views
    47955

அச்சத்தை போக்க


PSIVARAJAKSM

803 views

நண்பர்களே வணக்கம்,

திரு பாண்டம் மற்றும் திரு பாண்டியன் அவர்களுக்கும் முதலில் என் நன்றியை அறிவித்துவிட்டு தொடர்கிறேன்.

மனிதன் தன் தேவைகளுக்காக காலம் தோறும் இடம் பெயர்ந்து வருவது வரலாற்று உண்மை அந்த வகையில் அந்த காலங்களில் ஆற்றங்கரையோர வளமான நிலங்களில் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வு தொடங்கியது. சிலர் வளமான வாய்ப்புகள் வசதிகள் கருதியும், வேலை வாய்ப்பு கருதியும் நடந்த இடப்பெயர்வு பொருளாதர வல்லரசுகள் தோன்றையவுடன் அந்த நாடுகளில் அடிமை வேலையாவது கிடைக்காதா என்று இங்கு சுதந்திரமாக சகல வசதியுடன் வாழ்வோரும்கூட இடப்பெயர்வுக்கு ஆளாய் பரந்து அமெரிக்க தூதராலய வளாகத்தில் அவதிபடுகிறார்கள் அந்தி வெயிலில். நான்கூட சில காலம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில காலம் வேலை செய்துவிட்டு வந்தால் பொருளாதர தன்னிரைவு பெற்று கவலையில்லாமல் செயல்படலாம் குறிக்கோள் நோக்கி என்று கருதுவதுண்டு. இப்படியான இடப்பெயர்வில் சமூக அமைதியின்மையினால் ஏற்ப்படும் இடப்பெயர்வும் நடக்கிறது. ஆனாலும் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் அனைவரும் ஒட்டுமொத்தமாக விரும்பி இடம் பெயர்வதில்லை.

ஒட்டுமொத்த இடப்பெயர்வு என்பது நாடுகளுக்கிடையே எல்லைகள் ஏற்ப்பட்டபோதே தடுக்கப்பட்டு வந்துள்ளது எனும் போது கடவு சீட்டுகள் அனுமதி சீட்டுகள் என்று கட்டுபாடுகள் இருக்கும் போது இடப்பெயர்விற்க்கான சாத்தியங்கள் மிககுறைவு. வேண்டுமானால் அரசு இயந்திரங்கள் அச்சுருத்தி ஆதிகவர்க்கத்தின் அவசியத்திற்க்காக இடம் பெயர வைப்பதெல்லாம் இன்று சர்வ சாதாரனமாக விசயங்களாகிவிட்டன. அப்படித்தான் அனுமின் நிலையம் அமைக்க இடப்பெயர்வு, பொருளாதர வளாகம் அமைக்க இடப்பெயர்வு, விமான நிலைய விரிவாக்க இடப்பெயர்வு இவை மட்டுமா எங்காவது ஒரு பனக்காரனுக்கு அரிப்பெடுத்து பிளாட் போட நினைத்தால் அங்கும் இடப்பெயர்வு என்று செய்யும் அரசுகள் அகிலமெங்கும் இருக்கத்தானே செய்கின்றன. இப்படியாக இடம் பெயரும் அனைவரும் தங்கள் சொந்தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்று சர்வ நிச்சயமாக சொல்ல முடியாது எனில் வசதியான வாழ்வைத்தேடி வருபவர்கள் நிச்சயமாக திரும்பி செல்ல மாட்டார்கள் அவர்கள் தாங்களின் சொந்தங்களையும் தருவித்து கொள்வதில் ஆச்சரியத்திற்க்கு ஒன்றுமில்லை. அதில் தவறேதுமில்லை. ஆனாலும் அப்படி இடம் பெயர்கிறவர்களின் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்பதைவிட அதற்க்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு. எனவே ஒப்பீட்டளவிலும் கூட முதியவர்களும் போராளிகளும் மட்டுமே அங்கிருக்கிறார்கள் என்பது ஏற்ப்புடையதல்ல ஆனாலும் முதியவர்களும் போராளிகளும் மட்டுமே அங்கிருக்கிறார்கள் என்பதும் உண்மையே! அதாவது முதியவர்களை தவிர அனைவரும் போராளிகளாகத்தான் அங்கு இருக்கிறார்கள். ஆயுதம் தாங்கி களமுனையில் சாவை சந்திக்கும் மறவர்கள் மட்டுமல்ல போராளிகள். சுதந்திர காற்றை சுவாசிக்க சகலவித சங்கடங்களையும் சகித்து சமாளித்து சமர்களத்திலேயும் வாழ்க்கை நடத்தும் எம் ஏனைய சகோதரர்களும் போராளிகளே! அங்கே மக்கள்தான் போராளிகள். அங்கு நடப்பது மக்களின் அவர்களே விரும்பி நடத்தும் விடுதலைப்போராட்டம்.

புலம் பெயர் தமிழர்களுக்கும் தாயக தமிழர்களுக்கும் தொடர்பு குறைவாக இருக்கும் என்பது உண்மையானாலும் கூட உணர்வால் உதவி செய்யும் குணத்தால் தொடர்ந்து தொடர்பு பேனப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைய இணையதள வசதிகள் தொலைகாட்சிகள் அவற்றை அகிகறித்திருக்கவே செய்யும் எனவே உணர்வால் ஒன்றுபடுவது அதிகமாகத்தான் இருக்கும் ஆனாலும் அதை வளரும் சமுதாயம் தொடர்ந்து வளர்க்க முயற்ச்சிக்க வேண்டும் என்று நாமும் இது சமயத்தில் வேண்டுகிறோம்.

கொழும்பில் வாழும் நம் சகோதரர்கள் தனிப்பட்ட எண்ணிக்கையில் அதிகமாக தோன்றினாலும் ஒப்பிடும்போது தமிழீழ எல்லையில் வாழும் நம் சகோதரர்களை விட மிக மிக குறைவாகத்தான் இருப்பார்கள். யாருடைய நன்மைக்காக யார் விட்டு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கொழும்பில் வசிக்கும் நம் சகோதரர்களே முடிவு செய்யட்டும்! அடிக்கடி ஏற்ப்படும் சிறு சலனங்களுக்கே நம்மீது தாக்குதல் நடத்தி நம்மை கொன்றொழிக்க முற்ப்படும் சிங்கள வெறியர்களுடன் வாழ்வதற்க்காக நம் ஏனைய சகோதரர்கள் அடைமையாக வாழ வேண்டுமா? என்று அவர்கள் மனசாட்சி அவர்களுடன் பேசும்போது அது முடிவு செய்யப்பட்டுவிடும். ஏற்க்கனவே அங்கு வாழும் நம் சகோதரர்களின் எண்ணிக்கை சொர்ப்பமாகத்தான் இருக்கும் ஒப்பீட்டளவில் என்று கருதுகிறேன். மேலும் கொழும்பில் வழும் எம்மக்களை கொன்றொழிக்கும் அளவுக்கு சிங்களவர்கள் அயோக்கியர்களா? அப்படியெனில் அந்த அயோக்கியர்களின் வாழ்வுக்காக தமது அறிவை ஆற்றலை உழைப்பை ஏன் வழங்கவேண்டும் நம் சகோதரர்கள்? விழலுக்கு நீர் பாய்ச்சி ஓயப்போகிறார்களா?

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே அங்கு இரு நாடுகள் இரு ராணுவங்கள் இருக்கின்றன என்பது சர்வதேசத்திற்க்கு உணர்தப்பட்டுவிட்டது. இன்று தமிழீழத்தில் தம் மக்களை மானமுடையவர்களாக இறையான்மையுள்ள குடிகளாக வாழவைக்க தம் உயிரை கொடுத்து போராட முப்படைகளும் உள்ளன ஏன் நாலாவதாக உலகில் எங்கும் இல்லாதா ஏன் நினைத்தும் பார்க்காத தற்க்கொலைப் படையும் அங்கிருக்கிறது. இங்கு சோழர்களின் வேளக்காரப் படையை நினைவு கூற்வது சாலப் பொருந்தும்.

நீதி, நிர்வாக, நிதி போன்ற அரசு கட்டமைப்புகள் அங்கு அழகாக இயங்குகிறது. ஆழிப்பேரலை தாக்குதலின் போது அகிலத்தில் உதவிகள் அவர்களை சென்றடையாத போதும் அவர்கள் காட்டிய மீள் நடவடிக்கைகள் அகிலத்தின் கவணத்தை கவர்ந்தது வரலாறு. ஆகவே யாரும் வெல்லமுடியாத தோற்க்கவும் முடியாத போராக காட்சியளித்தாலும் உண்மையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் வாகை சூடியிருக்கின்றனர். எனினும் இன்னும் சில பகுதிகள் மீட்கப்படும் வரை அங்கு போர்ச்சூழல் நிலவும் என்பது உண்மை. இராணுவத்தின் எண்ணிக்கை, ஆயுதபலம் மட்டுமே போரின் முடிவை தீர்மானிக்கும் என்ற கருத்துக்கள் உலக போர் வரலாற்றில் பல முறை பொய்பிக்கப்பட்டுவிட்டன ஏன் நம் தமிழீழச் சகோதரனே பலமுறை அவற்றை பொய்பித்து காட்டியிருக்கிறான். அதை மீண்டும் மீண்டும் செய்வார்கள் என்று நம்பும் அதே வேலையில் உலகத்தில் ஒப்புயர்வற்று தொழில்நுட்பத்திறமை காட்டும் நம் தமிழ் சகோதரர்கள் அவர்கள் அறிந்திருக்கும் தொழில் நுட்பங்களை நம் ஈழச் சகோதரனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுவோம்.

ஏற்க்கனவே சர்வதேசத்தல் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே பிரச்சனைகளும் போரும் நிகழும் போது. புதிதாக அங்கீகாரம் வேண்டி நிற்க்கும் நாடும் அதனால் தம் அதிகாரம் பறிப்போவதாக கருதும் நாடும் பகையுடன் இருப்பது சாதாரனமானது அது கலப்போக்கில் தனிந்துவிடும்.

வெற்றி தோல்வி இல்லை என்ற நிலை வந்த பிறது அங்கு இருநாடுகள் இருப்பது என்பதுதான் சரியாக இருக்கும். பிறநாடுகள் தம்மை வெற்றி கொண்டுவிட கூடாது என்றுதானே அகிலத்து நாடுகள் எல்லாம் ஆயுதத்தை பெருக்குகின்றன? ஒன்றை ஒன்று வெற்றி கொண்டால் மட்டுமே ஒரே நாடாகும் வெற்றிக்கொள்ள படாவிட்டால் இருநாடுகள் என்பதே இயல்பான உண்ம. எனவே சகோதரர்களே தனியாளாக தொடங்கி தரணியில் தமிழர்களுக்கான முதல் நாட்டை அருகில் இருக்கும் எண்ணிக்கையில் பலமடங்குள்ள, பல நாடுகளின் உதவியையும் பல நாடுகளின் ஆயுத வழங்களையும் கொண்ட ஆனவ சிங்கள பேரினவாத இராணுவத்தால் வெற்றிக்கொள்ள முடியாத ஒரு நாட்டை நம் ஈழச்சகோதரர்கள் ஈட்டி கொடுத்திருக்கிறார்கள்! இத்தனைக்கும் உலக நாடுகள் பலவும் ஏன் அனைத்தும் தடை செய்த பிறகும் நடத்தி காட்டப்பட்டிருப்பது மகத்தான சாதனை. அதில் அடங்கியுள்ள அர்ப்பனிப்புணர்வும், தியாகமும் போற்றி அவர்களுக்கு நன்றி சொல்லி அதற்க்கான அகிலத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தர ஆவன செய்ய அகிலத்து நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்! கொடுத்தால் அவணியில் சிறப்போம்!.

கலைஞ்சர் மற்றும் செல்வி! ஜெயலலிதா குறித்து சிந்திப்போமேயானால் ஜெயலலிதா தமிழீழத்தை வேண்டாத மருமகளாகத்தான் பார்ப்பார். அவாளுக்கு இது விசயத்தில் ஆலோசனை சொல்வது அவாள்கள்தானே! சோவுடனும் இந்து சிங்கள ரத்னா ராமுடனும் அவாள் ஒத்துபோகாவிட்டால்தான் ஆச்சரியம்.

கலைஞ்சரை பொருத்தவரை பட்டும்படாமல் இருக்கும் தாயைப்போன்று இருக்கிறார். பல சமயங்களில் சொந்த சுற்றங்களையே எதிரியாக பார்க்கும் மன நிலைக்கும் வந்து விடுகிறார் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அவர் தாயாக நடக்கவேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமில்லை அவர் அதில் தவறினால் மோசமான தாய்க்கு அவரே இலக்கணமாகிப் போவார்! கலைஞ்சர் என்ன செய்கிறார் என்பதை ஏனைய சகோதரர்களைப் போல நாமும் எதிர்நோக்குகிறோம்.

இந்திய கூட்டமைப்பின் நடுவன் அரசைப் பொருத்தவரை மகன் பிறந்தால் தனக்கு பிரச்சனை என்று கருதி பிள்ளை பெற்றுக்கொள்ளாத பேதையை ஒத்து இயங்குகிறது ஏனெனில் அவர்களுக்கு ஆரூடம் கூறுவது சோவும் சிங்கள ரத்னா ராமும் தானே! ஏற்க்கனவே கண்ணனை அழிக்க முயன்று கானாமல் போன கம்சன்கள் பலர் என்பதை இந்தியா உணரவேண்டும். இன்னும் வெளிப்படையாக பார்ப்போமேயானால் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால் தமிழகத்திலும் பிரிவினைவாதம் மேலோங்கும் அதற்க்கு தமிழீழம் உந்து சக்தியாக அமைந்துவிடக் கூடும் என்று சோவும் ராமும் ஜோதிடம் கணிக்கக்கூடும். அவர்களுக்கு சொல்லுவோம்! கேட்போம்! மனசாட்சியுடன் கூறுங்கள் காவிரியை தடுத்து நிற்க்கும் கண்ணடரைவிட, பெரியாரில் பிரச்சனை செய்யும் மலையாளியைவிட பாலாற்றுக்கும் பால் ஊற்ற துடிக்கும் ஆந்திர சகோதரனைவிடவா எம் எளிய தமிழீழச் சகோதரர்கள் இந்திய ஒருமைபாட்டுக்கு ஊரு செய்துவிடுவார்கள்?

காலல் மடைதிறந்த காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாகும்போது , பாலாறு பால்படும்போது பெரியாறு பெரிய பிரச்சனையாகும் போதுதான் ஒருமைப்பாடு குறித்து கேள்வி எழும் அதற்க்கு பதில் சொல்ல அதைகளைய ஆவன செய்வதைவிடுத்து கண்ட கண்ட பிரச்சனைகளையெல்லாம் ஈழப் பிரச்சனையை தொடர்பு படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

அழுதழுதாலும் அவள்தான் பிள்ளைபெற வேண்டுமானாலும் அதற்க்கான மருத்துவ மருத்துவமணை வசதிகளையும் ஆறுதலும் கூற வேண்டியது அருகில் இருப்பது கடமையாகும்போது சுற்றத்தின் கடமை மேலும் அதிகமாகும். அப்படிதான் தமிழர்களே நாமும் தமிழீழ தமிழர்களுக்கு சுற்றமாகிவிட்டதனால் நம்து கடமையில் தவறினால் காலம் முழுதும் பழி சுமப்போம்!

உலக வல்லரசுகளின் ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாக அங்கிகரிக்கப்பட்ட நாடுகளே மாறியிருக்கும் போது வல்லரசுகளே பல நாடுகளின் அரசுகளை நிர்ணயிக்கும் புறச்சூழலில் இன்றும் அங்கீகாரம் வேண்டி நின்றாலும் ஆதிக்க சக்திகளின் அடிபணியாமல் , தொடர்ந்தும் தொய்வில்லாமல் தமிழர்களின் தாகமென தமிழீழத்தை நோக்கி நடக்கும் நடத்துவிக்கும் பிரபாகரனார் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றே கருதுகிறேன். அங்கீகாரம் பெறும் வரையில் எவ்வித அச்சத்திற்க்கும் ஆட்படாமல் அவரவர் அவர்பணி செய்யதான் வேண்டும். அங்கீகாரத்திற்க்கு பின்னான அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அவர்கள் அமைத்திருக்கும் அரசியல் பிரிவே அந்த அச்சத்தை போக்க போதுமான சான்றாக கருதுகிறேன்.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.