Sign in to follow this  
  • entries
    27
  • comments
    0
  • views
    46,915

காலம் மாறும் காட்சிகள் மாறும்

Sign in to follow this  
PSIVARAJAKSM

590 views

இந்திய ஒருமைப்பாட்டின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களுக்கும் அது ஏதோ ஒரு சிலரின் உடமை என்று ஆன பிறகு அதற்க்குள் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கும் ஏனைய எம் எளிய சகோதரர்களுக்கும் வணக்கம்.

சுதந்திரா அவர்களின் வினாக்களுக்கு யூகத்தின் மூலமே சரியாக பதில் தந்திருக்கும் திரு பாண்டியன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து விட்டு தொடர்கிறேன்.

மூர்க்கத்தனமான ஜெர்மனியின் தாக்குதல்! இத்தாலி முழுதும் இடி ஓசை கேட்கிறது, பீரங்கிகள் முழங்குகின்றன. துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை பிளக்கின்றன. அந்த சமரில் காசினோ என்றொரு களம். அங்கே கண்ணி வெடிகளை கவனமாக அப்புற படுத்தி கொண்டிருந்தனர் பலர். அச்சமயம் நாயக் ஒருவனின் கால் கண்ணி வெடி மீது இடரவே தீப்பிடித்து தீய்ந்தது அது, அவன் உணரவில்லை அதை. ஆனால் அருகில் இருந்தவன் கவனித்துவிட்டான். நாயக் அசைந்தால் அடுத்த வினாடி அவன் உயிர் அவனுக்கு சொந்தமில்லை, உடலும் உருகுலைந்துவிடும். அருகிலிருந்த ஒருவன் அதை பார்த்துவிட்டான் ஆனாலும் அவன் அச்சப்படவில்லை, அதிர்ச்சியடைந்து எச்சரிக்கவில்லை, "நாயக்" விலகு ஓடு தப்பிப்பிழை சுரங்க வெடி என்று கூவவில்லை. மரணம் தன்னை தொட்டு இழுப்பதை தெரியாத அந்த நாயக்கை ஒரு வினாடியும் தாமதியாது தள்ளிவிட்டு அந்த குண்டின் மீது பாய்ந்து அதனை கட்டி பிடித்து அதன் மீது படுத்துவிட்டான். குண்டு வெடித்தது அவன் உடல் சிதறியது, சின்னாபின்னமானது. தப்பினான் நாயக்! தன்னுயிரை விட்டான் வீரன் ஒருவன். பிறிந்தது உயிர்! பிறந்தது புகழ்! தன்னுயிர் விட்டேனும் தடுத்து காப்பது தரணியில் தமிழர் பண்பு! ஆம் ஆபத்து நேரத்தில் அஞ்சா நெஞ்சம் கொள்ளும் ஆண்மை அவன் பெயர் சுபேதார் சுப்பிரமணி! செங்கல்பட்டை அடுத்த வாலாஜாபாத்துக்கு அருகில் உள்ள குக்கிராமம. கடல் கடந்து சென்றும் காசினோ களத்தில் தமிழ் மரபை வீரத்தை தரணிக்கு உணர்த்தினான். நெஞ்சில் நினைக்கும் தோறும் கண்ணீரும் புன்னகையும் கலந்தே வரும். சுபேதார் சுப்பிரமணியின் வீரத்தை வியந்து போற்றுகிறது உலகம். அந்த சுப்பிரமணிபோல் ஆயிரம் ஆயிரம் அடலேறுகள் ஆர்த்தெழுகின்றனர், அகிலம் வியக்கிறது! ஆச்சரியத்துடன் நோக்குகிறது! இத்தனை சின்னஞ்சிறு தேசத்தில் ஈழத்தில் உலக நாடுகள் அனைத்தும் தடை செய்த பின்பும் சுதந்திர வேள்வித்தீ சுடர்விட்டு பிரகாசிக்கிறது, அந்த வெளிச்சத்தில் பீடு நடை பயிலுவாள் சுதந்திர தேவி! அதில் எங்களுக்கு அய்யமில்லை. தியாகிகள் பற்றி பேசுவதும், எழுதுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும், வீரத்தை பண்பை தரணிக்கு உணர்த்துமே? அதனால்தான் அதை நாங்கள் சொல்கிறொம் செய்கிறோம். ஆனாலும் நான் ஈழத்தில் பிறந்தவனல்ல எனினும் இதயத்தால் நாங்களும் அவர்களும் வேறு வேறு அல்ல.

ஈழத்தமிழரை பிழைக்கச் சென்றவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள் அதை பிறகு பார்ப்போம்.

இதோ இன்னும் ஒரு திங்களில் ஆடி பிறக்கப்போகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கன்று தஞ்சை தரண்யெங்கும் நதிகளில் எல்லாம் வெள்ளம் இரு கரையையும் தொட்டு ஓடியதும். அதில் பெற்றத் தண்ணீரில் ஏரிகள் நிரம்பி அலைமோதியதும் வரலாறு. பதினெட்டாம் பெருக்கன்று காவிரித்தாயை வணங்க பெண்களும் குழந்தைகளும் கும்பல் கும்பலாக கூடி கொட்டாங்கொட்டுவது தமிழர் பண்பாடு. தென்னங்குருத்துகளால் சப்பரம் சோடித்து இழுத்து வரும் குழந்தைகள், தென்னங்குருத்துகளை காவிரி மதகின் ஒரு புறம் விட்டு அது நீர்ச்சுழலில் சிக்கி, சிக்கி சுழன்று சுழன்று மறுபக்கம் வருவதை பார்த்து கைக்கொட்டி சிறித்து மகிழ்ந்ததெல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனதோ!

முப்பத்திரண்டு போர்களங்களின் தொண்ணூற்று ஆறு விழுப்புன் சுமந்து சோழர் சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த விஜயால சோழனும் அவன் மகன் கவிரியின் இருகரைகளிலும் காவிரியின் தொடக்கம் முதல் இருதிவரை கடலில் கலக்கும் இடம் வரை அறுபத்து நான்கு சிவாலங்களை எடுப்பித்து ஆண்டதும். அது கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது வேறுகதை! அவன் மகன் பராந்தக சோழ மகராசா ஈழத்துக்கு படையெடுத்து வெற்றி நாட்டியதும் (குறித்துக் கொள்ளுங்கள்) அந்த சோழர்கள் வரிசையில் வீர லட்சுமியும், ஜய லட்சுமியும் ஒருங்கே கொண்டு இன்றைய இந்திய கூட்டமைப்பின் பெரும் பகுதியை சற்றேறக்குறைய 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சோழர் வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றிம் ஏன் உலகவரலாற்றிலும் இல்லாத நிர்வாகம், குடவோலை வாயிலாக சனநாயகம் என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஈழம் கொண்ட (குறித்துக் கொள்ளுங்கள்) இராஜராஜனும் இராஜேந்திரனும் அரசு செய்த சோழ நாட்டை தஞ்சை தரணியை சேர்ந்தவன் நான்.

எங்களுக்கும் காவிரிக்கும் உள்ள தொடர்பு போல்தான் எங்களுக்கும் ஈழத்திற்க்கும் உள்ள தொடர்பு காலங்காலமானது அது அய்ம்பது ஆண்டு சொந்தமல்ல ஆண்டாண்டு சொந்தம். அது உணர்வு பூர்வமானது உள்ளப்பூர்வமானது. சோழநாடு சோறுடைத்து, தமிழ்நாட்டின் நெற்க்களஞ்சியம் என்றெல்லாம் புகழ்பெற்று சோழர்காலத்தில் பொற்க்காலமாக இருந்த்தெல்லாம் இன்று காலமாகி இன்று எங்கள் மக்கள் எலி கறி சாப்பிடுவதற்க்கு யார் காரணம்? எது தடுத்து நிற்க்கிறது தண்ணீரை? காலங்காலமாக எங்களுடன் தொடர்புடைய காவிரிக்கும் ஈழத்திற்க்கும் எங்கள் குரல் இணைந்தே ஒலிப்பதில் ஆச்சரியமென்ன? அதில் தவறுதான் என்ன? இது எவ்வாறு இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊரு செய்யும்?

நாங்கள் என்ன? இன்போசிஸ் நாராயனமூர்த்திகளைப்போல் நாட்டுப்பண்னை அவமதித்தோமா? நாட்டு பாதுகாப்புக்கு வாங்கிய ஆயுதத்தில் ஊழல் செய்தோமா? செய்ய சொன்னோமா? அல்லது உடந்தையாகத்தான் இருந்தோமா? இல்லை பா ஜ க எம்பிக்களை போல் இந்த நாட்டு இளம் பெண்களை அயல் நாட்டிற்க்கு கடத்தினோமா? அயல் நாடு சென்று அவர்கள் நம்மை அடிமை கொண்டிருந்ததற்க்கு நன்றி சொன்னோமா? ஆனால் இவர்கள் எல்லாம் இந்நாட்டில் பிரதமர்கள்?! எம்பிக்கள்?! எங்கள் உயிர் பிரச்சனையான கவிரிக்கும் எங்கள் உறவுகள் உயிர்வாழ உரக்க குரல் கொடுத்தால் விரோதிகள்?! என்ன கொடுமை இது? எப்படி சொல்லத் துனிந்தீர்கள்? மருந்துக்கும் மனசாட்சி கிடையாதா? இந்திய ஒருமைப்பாடு என்று இன்று கூச்சலிடும் நீங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆற்றிய பணியை பாரதி படம்பிடித்து காட்டவில்லையா? வெற்று பேச்சில் மனநிறைவு கொண்டு சொல்லம்பரின் வெல்லப் பேச்சுக்கு மயங்க மாட்டார்கள் வருங்காலத் தமிழர்கள்.பிரச்சனைகளை தீர்க்க முயலாமல் பிரச்சனையை பேசுபவரை கொச்சை படுத்தாதீர்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும்

Sign in to follow this  


0 Comments


Recommended Comments

There are no comments to display.