Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • entries
  27
 • comments
  0
 • views
  47,087

குணத்தின் குற்றம்


PSIVARAJAKSM

981 views

இந்த பரந்த உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும் தமது இராணுவத்துக்கு அதன் மேம்பாட்டிற்க்கு செலவிடும் பணமும் பொருளும் அளவிட முடியாததும் ஆண்டுக்கு ஆண்டு அதிகறிக்கிறது என்றால் இராணுவம் என்பதே பொருளாதரம் சார்ந்தது என்பது புலனாகிறது. ஊதியமற்ற வீரர்கள் அல்லது ஊதியம் குறைந்த விரர்கள் எதிரியின் வஞ்சக வலையில் சிக்க வாய்ப்பிருக்கிறது, சிக்கிய வரலாறும் இருக்கிறது, இன்றும் அது தொடர்கிறது. உலக வல்லரசுகள் தன் பொருளாதரத்தை வளர்ப்பதற்க்கு தம் இராணுவங்களுக்கு தாராளமாக செலவிடுகின்றன. இப்படி பொருளால் கட்டமைக்கபடும் இராணுவத்தில் சேருபவர்கள் அனைவரும் கட்டுபாடுகளுடன் கடமை கருதி உணர்வுடன் உள்ளன்புடன் மட்டிலுமே சேர்வார்கள் என்பதற்க்கு எந்த உத்திரவாதமுமில்லை! பொருளுக்காகவும் இருக்கலாம்! என்பது பொய்யாய் இருக்க வேண்டும் என்றாலும் பொய்யாய் இருக்கும் என்பதும் நிச்சயமில்லை! நிச்சய மற்ற நிலைமை நீண்டு கொண்டே போகும் நிறைய நாடுகளில்.....இங்கு கூலிக்கு மாறடிக்க வாய்ப்பிருக்கிறது!

அதிகார வர்க்கத்தின், ஏகாதிபத்தியத்தின், ஆக்கிரமிப்பாளர்களின் சர்வாதிகார பிடியில் அகப்பட்டு அடிமைப்பட்டு அல்லல் பட்ட மக்களின் விடியலுக்காக தன்னுயிரை தாமே உவந்து தத்தம் செய்யும் தத்தம் செய்ய தயாராகும் தன்னலம் போற்ற உணர்வுள்ள போர்ப்படையை இப்படைத் தோற்க்கின் எப்படை ஜெயிக்கும் என்று அகிலத்து நாடுகளுக்கு அறிவித்து நிற்க்கும் அவர்களை கூலிப்படை என்று குதற்க்கம் பேசுவார் சிலர் அது அவர் குணத்தின் குற்றம்! குணமற்ற அவரின் கூற்றுக்கெல்லாம் அறமே கூற்றம்!

களம் சென்றால் வெற்றியன்றி வேறொன்றும் அறியா! தமிழ் குலத்தின் மானம் காக்கும் மறவர் அவரை நாத்தழும்பேறி நாலும் நாளும் பேசுவார் சிலர், அவர் வான்மீது தொங்குவதாக கூறும் சொர்க்கம் காட்டுவதாக வையகத்தை நாசமாக்கி நரகமாக்கி வதைத்தவரே ஆவார்! அவர் யார் வெற்றி பெற்றாலும் அவர் பக்கம் சாய்ந்தே நடந்திடுவார்! அவர் உலைக்களத்து இரும்பு உறிஞ்சிய நீர்த்துளியாய் போவார் நம் தீந்தமிழின் தமிழரின் தியாகத்தில்! கனல் கக்கும் கடும்பார்வையால்!

மானமும் வீரமும் போற்றி வாழ்ந்த நம் மறக்குல மக்கள் தமக்குள்ளே எழுந்த போட்டியால் பொறாமையால், சிறிய மனம் கொண்ட சிறுமதியாளர் சூழ்ச்சியால் தமக்குள்ளே சகோதர சண்டையிட்டு சிறுத்து சின்னாபின்னமாகி சிறப்பு குன்றியபோது தடுமாறி தடம் மாறி பரிசம் போட்டனர் பக்கத்து நாட்டு பகைவனிடம் பாழ்பட்ட குடும்ப பகையால் குலப்பகைவனிடம். அந்த நிகழ்வுகளை அவ்வப்போது சொல்லி நம் நெஞ்சில் நாம் அறியாமலே நஞ்சை கலப்பர் சிலர். அவர் மொழியை அலட்சியப்படுத்துவோம்! அதற்க்காக நாணிடுவோம்! நாணுவதும் நாநிலத்தில் நல்ல பண்புகளில் ஒன்றுதானே!

நாணுவதற்க்கும் நாம் போற்றி வளர்ப்பதற்க்கும் இருவேறு பண்புகளை இப்போது பார்ப்போம், இவைதான் இமயம் முட்ட நம்மை வளர்க்கும்.

"நகை வர நாணுட்கொண்டான்" இது கம்ப நாட்டாழ்வானின் காவிய வாக்கு! எங்கு எழுதினான்? ஏன் எழுதினான்? இராமன் மறைந்திருந்து எய்த அம்பில் அடிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த போது தன் மனைவி தாரையை பார்த்து வெட்கித் தலைகுனிகின்றான் வாலி! ஏன்? சுக்ரீவன் வாலியை போருக்கு அழைத்தபோது வெகுண்டெழுந்த வாலியை தடுத்துச் சொன்னால் தாரை, அவன் இரமன் என்பவனின் சகாயம் பெற்று வந்திருக்கிறான் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று, ஆனாலும் அப்போது வாலி சொன்னான் இராமன் அறத்தின் வழி நடப்பவன்! என் தம்பியும் நானும் சண்டையிடும் போதா என்னை கொள்வான்? குடும்ம சண்டையை பெரிதாக்கி குழிபறிப்பானா? பண்பாட்டுச் செல்வன் பரதனுக்கு மூத்தவனல்லவா? அவன் என்றான். ஆனாலும் நடந்தது என்ன? அதற்க்குத்தானே நாணினான் வாலி. அப்படித்தான் சகோதர சண்டையை நமக்குள்ளே மூட்டி விடுவர் சிலர்! அதற்க்கு மறைந்திருந்தே இராமனைப்போல் கள்ள கதைகளையும் அம்பனைய எய்திடுவர் அவர் மொழியில் எச்சரிகையுடன் இருப்போம்! இனத்துக்குள்ளே தமிழினத்துக்குள்ளே சண்டையென்றாலும், பிரிந்தாலும், பட்டும் படாமல் இருந்தாலும் நமக்கழிவு நிச்சயமாய் காத்திருக்கும்! நமனே ஆவார் நம்மவர் போல் நடிப்பவர்கள்! நாம் நல்ல வழிநடந்திட நமக்கு வழி காட்டினார் நம் முன்னோர் வாருங்கள் அவர் வழி நடப்போம்! நாநிலம் நமைப் போற்றும்!

"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றாய்! நின்னிலும் நல்லான் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப் புகழ் உலக மெய்திப்

புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே!"

இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில் வெண்ணியில் போர் நடக்கிறது, சேரன் சேரலாதனும், சோழன் கரிகால் வளவனும் மோதுகின்றனர், வாளும்! வாளும்!, வேலும்! வேலும்! மோதுகின்றன, வீரர்கள் பலர் வீழ்ந்துபட்டனர். செந்நீர் தண்ணீர் போல் காவிரி வெள்ளத்துடன் போட்டி போடுகிறது! கண்ணிமைக்கும் நேரத்தில் கரிகாலன் எறிந்த வேல் சேரலாதன் மார்பில் தைத்து முதுகில் எட்டி பார்த்தது! வீழ்ந்துவிட்டான் சேரன்! மாண்டும் விடவில்லை மயங்கிவிட்டான், விழித்தான், விழித்தவன் விரைந்திட்டான் வடக்கிருக்க! ஆம் உண்ணாமல் உயிர் துறக்க! உண்ணா விரதத்தை பட்டினிப் போரை பாருக்குனர்த்தினான் அன்றே! புறமுதுகிடவில்லை அவன், ஆனாலும் புறத்தே வேல் முனை வெளிப்பட்ட காயம் கூட போரில் தமக்குற்ற அவமானமாக கருதினான்! விழுப்புண் என்று அகமகிழவில்லை! அகிலம் போற்ற வீரமும் மானமும் போற்றிய தமிழருக்கு அவனே சான்று. அதனால் தான் வெண்ணிகுயத்தியார் கரிகாலனைப் பார்த்து சொன்னார், கரிகாலா! நீ போரில் வென்றாய், வென்றாலும் உன்னிலும் அவனே சிறந்தவன் என்று!

முரசு ஒலிக்க மறந்தது

யாழ் இசைக்க மறந்தது

வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன

தேனைத் தீண்டுவாரில்லை

உழவர் யாரும் கழனிக்கு செல்லவில்லை

ஊர்புற வெளிகள் அனைத்தும்

வெறிச்சோடிவிட்டன

எங்கள் சேர மன்னன், மானம் காக்க

வடக்கிருந்து உயிர் விட சென்றதாலே!

என்று புலவர் காழத்தலையார் பாடினான் அன்று! அந்த தமிழர் மானமும் வீரமும் மீண்டும் நிலைநாட்டப்படுகிறது ஈழத்தில். அதை குறைத்து மதிப்பிடுவார் பலர், கூலிப்படை என்பார் சிலர், அது அவர் குணத்தின் குற்றம், அவரின் கூற்றுக்கொல்லாம் அறமே கூற்றம்

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.